Beauty tips

girija chandru

Penman of Penmai
Blogger
#1
இரவில் கட்டாயமாக மேக்கப் நீக்கியபிறகு தான் படுக்க செல்ல வேண்டும்.
சோம்பேறித்தனப்பட்டு, மேக்கப் கலைக்காமல் தூங்கி விடுவீர்களானால்,
வெகு விரைவில் சோர சொரப்பான, வறண்ட, மற்றும் பயதான சருமம் பெற்று விடுவீர்கள் !!!

எப்படி என்றால், சருமத்தின் துவாரங்கள் வழியாக மேக்கப் நுழைந்து, துவாரங்களை பெரியதாக்கும்.
எண்ணையும் , அழுக்கும், துவாரங்களை அடைத்து, அதனால் பருக்கள் ஏற்படும்.
இந்த பழக்கம் தொடர்ந்தால், வெகு விரைவில் உங்கள் சருமத்தை முதிர்ச்சி அரவணைக்கும்....

சோ, சோம்பல் படேல்.... இரவில் முகம் கழுவிய பிறகே படுக்கவும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#2
Re: அழகு மனமும், உடலும்

மேக் அப் பிரஷ்களை வெதுவெதுப்பான நீரில்
குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஷாம்பூவை கலந்து
வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
சுத்தம் செய்யாத அழுக்கு படிந்த பிரஷ்களை தொடர்ந்து
பயன்படுத்தினால், அதில் ஏற்கெனவே படிந்து உள்ள
மேக் அப் பொருட்கள் உங்கள் சருமத் துவாரங்களை அடைக்கும்;
மேலும் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது...
 

girija chandru

Penman of Penmai
Blogger
#3
Re: அழகு மனமும், உடலும்

கண்களில் செய்யப்பட்டு உள்ள மேக் அப்பை ஈரமான
பஞ்சைக் கொண்டு மென்மையாக துடைக்க வேண்டும்.
முரட்டுத்தனமாக அழுத்தி துடைத்தால் சுலபமாக சுருக்கம்
ஏற்பட்டு விடும். மேலும் இமைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்
 

girija chandru

Penman of Penmai
Blogger
#4
Re: அழகு மனமும், உடலும்

மஸ்காரா நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால், பல பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.ஆனால், அவை கண் இமைகளை வறட்சி ஆக்கும்; மேலும் அதனை நீக்கும் போது, கண்களை அழுத்தி துடைப்பதால், கண்களை சுற்றி உள்ள சருமம் விரைவில் சுருக்கம் அடைவதோடு,
இமைகளையும் உதிர செய்யும்.

(so, girija never uses mascara.... girija is a good girl!!!Rolling on the floorRolling on the floor)
 

girija chandru

Penman of Penmai
Blogger
#5
Re: அழகு மனமும், உடலும்

முகத்தின் மீது பூசும் ப்ரோன்சரை, முகம் முழுவதற்கும் மட்டும் பூசினால், முகத்திற்கும், கழுத்திற்கும் உள்ள நிற வேறுபாடு பளிச் என்று தெரிந்து விடும்.இதனால், முகம் முழுவதும் பூசாமல், உங்கள் மூக்கு, தாடை எலும்பு மற்றும் கன்னத்தின் இடுக்குகளில் மட்டும் பூசினால் முகம் எடுப்பாக தெரியும்.

:thumbsupBye
 

girija chandru

Penman of Penmai
Blogger
#6
Re: அழகு மனமும், உடலும்

அழகு சாதனப் பொருட்களைத் திறக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தீர்த்து விட வேண்டும்.
(ஸ்வீட்ஸ் தீர்க்கரா மாதிரி !!! கிரிஜா எல்லாம் ஸ்வீட்ஸ் உடனே உடனே தின்னுடுவாளேRolling on the floor !!!!)
முதிர்வு காலம் முடிந்த பின்னும் பயன்படுத்தினால் தோற்றத்திற்கும், சருமத்திற்கும் நல்லது அல்ல.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#7
Re: அழகு மனமும், உடலும்

வறண்ட சருமத்தை உடைய பெண்கள் குறிப்பாக இதனை செய்ய வேண்டும்.

முகத்தை போலவே, உடலின் மற்ற சருமத்திற்கும்
முக்கியத்துவம் அளிப்பது முக்கியமாகும்.
வெப்ப நிலை, வெந்நீர் குளியல், மாசு ஒன்றவைகள் அனைத்தும்
தலை முதல் பாதம் வரையிலான சருமங்களை பாதிக்கும்.
அதனால் தினமும் moisturiser செய்ய வேண்டும்.இல்லை என்றால் சருமம் இயற்கை பொலிவை இழந்து விடும்.
 

jv_66

Super Moderator
Staff member
#8
Thanks Girija [MENTION=15784]girija chandru[/MENTION] for all these tips. Please continue.

I have moved all these beauty tips and made as a separate thread, from your health tips thread.

Please make it separate as the readers would benefit.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#10
முக பொலிவு கூடி வர :-
======================

தேன் + எலுமிச்சை சாறு +சிறிது பால் பவுடர் மூன்றையும் கலந்து
முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகக் கருமை மறைந்து பளிச்சிடும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#11
உருளைகிழங்கை (பாதி,பெரியது ) வேக வைத்து,
பால் சேர்த்து மசித்து, கண்களை சுற்றி பற்று போட்டால்,
கண்களின் கருவளையம் மறையும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#12
சூரிய ஒளி பட்டு கருத்த இடங்களில், விளக்கெண்ணை நன்கு தடவி,
பயத்தம்பருப்பு மாவு தேய்த்து குளிக்க வேண்டும்..

(இது தான் ரியல் moisturiser !!!!)
 

girija chandru

Penman of Penmai
Blogger
#15
சிலருக்கு அதிகமாக வியர்த்து, எண்ணெய் வழியும். தண்ணீரில் வெட்டி வேரை போட்டு கொதிக்க விட்டு,அதனை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடித்து வந்தால் பயன் கிடைக்கும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#16
இளநீர் மற்றும் தேங்காயில் nitrogen பொருட்களும் கொழுப்பு சத்தும்
உப்பும், உலோக தாது பொருட்களும், நார் பொருட்களும்,
சர்க்கரை பொருட்களும், இயற்கையாகவே அமைந்து உள்ளன.

முகம் பளிச்சிட :-
================
தேங்காயை அரைத்து பூசி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு முகம் கழுவி விட, முகம் பிரகாசமாகவும், வசீகரமாகவும் தோன்றும்
 

girija chandru

Penman of Penmai
Blogger
#17
தேங்காய் எண்ணையில் வேப்பம் பூ போட்டு
காய்ச்சி வைத்து கொண்டு தலைக்கு தடவி வந்தால்
பேன் மட்டும் அல்ல, பொடுகும் நெருங்காது.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#18
பச்சை பயிறு,கஸ்துரி மஞ்சள் இவை இரண்டுமே நல்ல ஸ் கரப் .
ஆனால் இருப்பவர்கள் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும்.
சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளை தூண்டும் தன்மை
இதற்கு உண்டு என்பதால் எண்ணெய் சருமம் உடையவர்கள்
உபயோகித்தால், இன்னும் எண்ணெய் அதிகமாக சுரக்கும் என்பது மட்டும் அல்லாமல் முகத்தில் பருக்களும் நிறைய வரும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#19
எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு கடலை மாவு பாக்
தான் பெஸ்ட். இதை வறண்ட சருமம் இருப்பவர்கள் தொடர்ந்து
உபயோகித்தால் சருமம் மேலும் வறண்டு விடும்.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#20
என்ன சருமம் என்று எப்படி கண்டுபிடிப்பது? :-
===============================


காலையில் எழுந்த உடன், ஒரு திச்யு தாளினால் (tissue paper)
முகத்தை அழுத்தி துடையுங்கள்


1) அழுக்கு மட்டுமே வந்தால் , சாதாரண சருமம். (normal skin)
2) ondrumae illaamal dry aaga irundhaal , வறண்ட சருமம்.. (dry skin)
3) அழுக்கும், எண்ணெய் இரண்டும் வந்தால், எண்ணெய் சருமம்.(oily skin)
 
Last edited: