Beauty Tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
முகத்துக்கு போடும் மேக்கப்பை, கழுத்து, கைகளுக்கு ஒரே சீராக போட வேண்டும். இல்லாவிட்டால் முகம் ஒரு நிறம், கழுத்து ஒரு நிறமாகத் தெரிந்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லாமல் போய் விடும்.சப்பையான மூக்கை எடுப்பாகவும், சற்று பெரிதான மூக்கை சிறியதாகவும் காட்ட சரிப்படுத்தும் மேக்-அப் மூலம் லைன்கள் வரைந்து சரி செய்து விடுவோம். கன்னத்தில் போடும் சிவப்பழகு மேக்கப் என்பது தனியாக சிவப்பாக தெரியக் கூடாது. முகத்தின் மேக்கப்போடு ஒன்றி வர வேண்டும். இதை சரியான முறையில் போடுவதால் பள்ளம் விழுந்த கன்னங்களாக இருந்தால் கூட அவற்றை உயர்த்திக் காட்ட முடியும்.
இறுதியாக நெற்றியில் வைக்கும் பொட்டு மெரூன் அல்லது பிரவுண் நிறத்தில் வைப்பது நல்லது. அதைச் சுற்றி டிசைன்கள் போட்டுக் கொள்ளலாம். அதிகமாக கல் அல்லது ஜரிகை வைத்த பொட்டுகள், வீடியோ வெளிச்சத்தில் பட்டு மினுங்கினால் நெற்றியில் பொட்டே இல்லாத தோற்றத்தை அளித்துவிடும். முன் நெற்றியிலும், கண்களின் ஓரங்களிலும் சிறிய கற்களை வைத்துக்கொள்வது தற்போது பேஷன் ஆகி வருகிறது. இது பொட்டு இல்லாத இடங்களில் வைப்பதில் மேலும் அழகு சேர்க்கிறது என்கிறார் பிரபல அழகுகலை நிபுணர்.
மணமகள் அலங்காரம் அற்புதமாக அமைய இதோ...
மொத்தத்தில் மேக்கப் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். குறிப்பாக முகத்தில் இருக்கும் புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். நாம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. அழகுப்பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால் எந்தவிதமான தொல்லைகளோ, பாதிப்போ வராமல் இருக்க வேண்டும். இதற்கு சுத்தமான, தரமான அழகுப்பொருட்களையே நாங்கள் உபயோகப் படுத்துகிறோம். இதே போன்று முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
அழகுக்கலை என்பது இன்றைய உலகில் அத்தியாவசியமாகி விட்டது. காரணம், பெண்கள் தன்னம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல அழகும் ஒரு காரணமாகி விட்டது. தான் அழகாக இருக்கிறோம் என்று மனதால் உணரப்படும் ஒவ்வொருவரும் மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்கள். தாங்கள் மேற்கொண்ட பணியில் முன்னேறியும் செல்கிறார்கள். நாம் அழகாக இல்லை என்று நினைக்கும் யாரும் தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பிறகு மனதளவில் உருக்குலைந்து போய் விடுகிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி மனதளவில் தான் அழகாக இல்லை என்று வாடும் பெண்கள், மிக எளிதாக தங்களை அழகாக மாற்றியமைத்துக் கொள்ள அழகுக்கலை நிலையங்கள் வழிவகுக்கின்றன.
[HR][/HR]முகப்பரு:

நாம் ஒருவரை பார்க்கும் போது சட்டென்று நம் மனதில் படிவது அவரது முகமாகும். அந்த முகத்தில் பருக்களோ, கரும்புள்ளிகளோ இருக்கும் பட்சத்தில் அவற்றை போக்குவது அவசியமாகும். பருக்களை போக்க ஒரு சில வாரங்கள் போதுமானது. முகத்தில் பருக்கள் இருக்கும் போது அவற்றை கிள்ளவோ, நகத்தால் நசுக்கி எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் பரு இருந்த இடத்தில் வடுக்களாக மாறி விடும். எண்ணெய் அதிகம் சேர்த்த பண்டங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சோப்பு போட்டு முகம் கழுவாமல் கடலை மாவு கொண்டு முகத்தை கழுவி வர வேண்டும். இதனால் பருக்கள் குறைந்து முகம் பள பளப்பாகும்.

[HR][/HR]கண்ணின் கருவளையம் மறைய:

சில பெண்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை நீக்க வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான மெல்லிய பருத்தி துணியை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்ணின் மீது வைத்து அதன் மீது அரைத்த விழுதுகளை போட்டு இரவு படுக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஓய்வு இன்மை, சரியான உணவு பழக்கம் இல்லாமையே இதற்கு காரணமாகும். தூக்கம் வராவிட்டால் கூட நன்றாக கண்களை மூடியபடி ஓய்வெடுக்க வேண்டும். மூடிய கண்களின் மீது ஐஸ்கட்டி அல்லது வெள்ளரிக்காயை வெட்டி வைத்து கண்களுக்கு குளிர்ச்சியைகொடுக்க வேண்டும், வாரத்திற்கு ஒரு சில நாட்கள் இப்படி செய்து வந்தால் கண்களில் கீழுள்ள கருவளையம் நீங்கும். கண்களின் கீழ் பயன்படுத்தும் சில கிரீம்களையும் இதற்காக பயன்படுத்தலாம் தவறில்லை. காய்கறி, கீரை முதலிய உணவுப்பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

[HR][/HR]கழுத்தில் கருவளையம்:

கழுத்தில் நகை போடுவதால் கழுத்து சுற்றி பலருக்கு கருத்து விடும். இதை போக்க கோதுமை மாவில் வெண்ணை கலந்து கழுத்தை சுற்றி பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் கழுத்து கருப்பு கறை அகன்று விடும். சிலருக்கு உதடு உள்வாங்கி இருக்கும். இவர்களுக்கு உதடு வெளியே தெரியும்படி கிளிப்போட்டு மாற்றி அமைக்கலாம். பெரிய உதடாக இருந்தால் சிறிய உதடுபோல லிப்ஸ்டிக் மூலம் காட்ட முடியும். உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு ரத்தம் கசியும். சிலருக்கு உதடு கருத்து இருக்கும். இதற்கு காரணம் உடம்பில் அதிகமாக சூடு இருப்பதால் தான். இதைப்போக்க வெந்தயம் 1 ஸ்பூன் இரவில் ஊற வைத்து காலை எழுந்ததும் 1 டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விட வேண்டும். இரவு வெண்ணை சிறிதளவு உதட்டில் தடவவும். ஒரு சிறு உருண்டையை முழுங்கி விடவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உதடு நன்றாக இருக்கும்.

[HR][/HR]முகத்தை பாதுகாக்கும் முறை:

ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம்.

[HR][/HR]
பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். அழகாக இருப்பதில் நம் சருமத்தின் பங்கு அதிகம். சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#3
இயற்கை பெண்களுக்கு வழங்கிய ஓர் வரப்பிரசாதம் அழகு. இது இறைவன் கொடுத்த வரம். அழகு என்பது தெய்வத் தன்மை வாய்ந்தது. மங்களகரமானது. அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவள் பெண்ணே கிடையாது. ஒவ்வொரு பெண்ணும் தான் அழகியா, அழகற்றவளா என்று பார்ப்பதில்லை. எப்படியாவது தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டாவது அழகாக வாழ வேண்டும் என்று விரும்புகிறாள். எல்லா வகையான உணவிலும் ஏதாவது ஒரு சுவை கலந்திருப்பதைப் போல எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் அழகாகவே இருக்கிறார்கள். அழகு என்பது பொதுச் சொத்து. அதில் சிலர் மிகுந்த வனப்புடையவர்களாக விளங்குவார்கள். பலர் குறைந்த வனப்புடையவர்களாக விளங்குவார்கள் அவ்வளவுதான்.
ஒரு பெண் அழகாக இல்லாமலிருப்பதற்கும் அல்லது அழகு குறைந்து போவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்ட விதமாக குறிப்பிடலாம்.
அதிகப்படியான வேலைப்பளு
திட்டமிடப்படாத உணவு முறை
கட்டுப்பாடற்ற செயல்கள்
சோம்பல்
பகல் தூக்கம்
பிரசவம்
குழந்தைகளால் ஏற்படக்கூடிய கவலைகள்
எதிர்கால அச்சம்
நோய்கள்
. தான் அழகாக இல்லையே என்ற கவலை

இப்படி பல்வேறு காரணங்களை ஒரு பெண்ணின் அழகைக் குறைக்க போதுமானவை என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
அதுபோல நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக திகழும் உடம்பே சிறந்த அழகுடையது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் அதில் முதலாவது அறிந்து கொள்ள வேண்டியது சரும பாதுகாப்பு
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.