Beauty Tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.
முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.
குட்டை முடி
உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.
அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.
குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.
தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி "சி" வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.
நீளமான முடி
பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.
ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.
நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.
சதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.
குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.
உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.
குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.
எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.
பொட்டு
உடைக்கேற்ற டிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.
உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.
குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.
நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.
சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.
ஜீன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
"டயட்" என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலிவிழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் "மேக்-அப்" செய்தாலும் பயனில்லை.
இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் அப்பி, உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.
முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக்கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே.
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் "ஸ்க்ரப்" செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது "ப்ரூட் பேக்" எடுத்துக்கொண்டு "பேஷியல்" செய்துகொள்வது அவசியம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப்படுகின்றன.
தற்பொழுது வேலை பார்ப்பவர்களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே "நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பேக்" அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப்படும் சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக்கிறது.
கூலிங் ஐ மஸாஜ்:
இரவு, பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட "ஜெல் மாஸ்"கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது.
மைக்ரோ டெர்மா சிகிச்சை:
இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயிலில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.
ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:
சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளையம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்கலாகக் காணப்படும். இச்சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடைவில் மறையும்.
சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் அவசியம்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#3
பலர் தங்கள் கைப்பையில் அளவுக்கு அதிகமான மேக்கப் சாதனங்களை வைத்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. இதனால் தேவையில்லாத பளுவை சுமப்பதுடன், தேவையான பொருளை எடுப்பதற்கு படும்பாடு அப்பப்பா!! எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ:-
ஹவெட் கிளென்சிங் டிஸ்ஷூ:
முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான ஹவெட் கிளென்சிங் டிஸ்ஷூ போல் வேறு எதுவும் இல்லை!!
முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.
மஸ்காரா:
மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.
லிப்ஸ்டிக்:
இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். தேவைப்பட்டால் இதை ப்ளஷராகவும் உபயோகிக்கலாம். உதடுகளுக்கும் கண்ணங்களுக்கும் நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.
காம்பேக்ட்:
மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.
எப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டாம்!
முகம் பொலிவு பெற
சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.
மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.
சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.
பேருந்தில் போகும்போதும், ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.
பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.
அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.
உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.
வேகமாகப் போகிறவன் முகம் கவர்ச்சியாகவோ, அருளானதாகவோ இருக்க முடியாது என்பதை உணருங்கள்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.