Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு &#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வராது

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோய் வராது என்று சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை தெரிவித்தார். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கம் எழும்பூர் அரசு மகப்பேறு தாய்சேய் நல மருத்துவமனையில் நேற்று நடந்தது.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், “தாய்ப்பால் கொடுப்பதினால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு அதிகரிக்கும். மார்பக, கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் வராது. 3 வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதில் சட்டீஸ்கர் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதில், தமிழகம் 33.3 சதவீதம் பெற்று 20வது இடத்தில்தான் இருக்கிறது’’ என்றார். மருத்துவமனை டீன் தகவல்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு புற&#302

[h=1]தாய்ப்பால் தருவதால் அழகு பாதிக்காது[/h]பிறந்த குழந்தைகளுக்கு நாம் என்னதான் பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்தாலும் அவை தாய்ப்பாலுக்கு கொஞ்சம் கூட நிகராகாது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது. ஆனால் இது பற்றி சரியான விழிப்புணர்வு இந்த காலத்து பெரும்பாலான தாய்மார்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் தாய்மார்களிடம் நிலவுகிறது. இதை காரணம் காட்டி தங்கள் குழந்தைகளுக்கு பாக்கெட் பாலையே சில பெண்கள் கொடுத்து வருகின்றனர். இதனால் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. போதிய எதிர்ப்பு சக்தி இல்லாததால் எளிதில் நோய்கள் தாக்கும் நிலை ஏற்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு இணை உணவு, காய்கறிகளை நன்றாக வேகவைத்து வழங்குவது ரொம்ப அவசியம். தாய் பால் கொடுத்தால் மார்பக புற்று நோய் வராது. தாய் பால் தருவதால் அழகு அதிகமாகுமே தவிர உங்கள் அழகு பாதிக்காது. அதனால் அனைத்து தாய்மார்களும் தாய்பால் கொடுத்து குழந்தைகளை வளருங்கள். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
Re: Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்க&#3009

Very useful thread for new moms, thanks for sharing such a nice article.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.