Beware during the Birthday Party Celebrations-பயமுறுத்தும் பலூன்கள் பதற வைக்க&#300

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பயமுறுத்தும் பலூன்கள் பதற வைக்கும் ஸ்பிரேக்கள்

ஹேப்பி பர்த் டே!

குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு டிரண்டாகவே மாறிவருகிறது. போட்டோ கேக்குகள், பிரமாண்ட பலூன்கள், ஸ்பிரேக்கள், பட்டாசுகள் என தங்கள் மகிழ்ச்சியை பெற்றோர் வெளிப்படுத்துவது சந்தோஷமானதுதான். ஆனால், இத்தகைய கொண்டாட்டங்கள் எந்த அளவு பாதுகாப்பானவை என்ற சந்தேகத்தை சமீபத்திய விபத்து ஒன்று எழுப்பியிருக்கிறது.

பெங்களூருவில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் பலூன்கள் திடீரென வெடித்துச் சிதறி குழந்தைகளும் பெரியவர்களும் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள். விபத்துக்கான காரணம் என்ன என்பதை விசாரித்தபோது பலூன்களில் ஹீலியம் வாயுவுக்கு பதிலாக ஹைட்ரஜன் வாயுவை நிரப்பியிருந்தது தெரிய வந்திருக்கிறது.

ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால் மலிவாக கிடைக்கும் ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி அதிக லாபத்துக்காக விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோல ஆபத்தான ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி பல பலூன் விற்பனையாளர்கள் லாபம் சம்பாதிப்பதாகவும் தகவல் வெளியாகி திடுக்கிட வைத்திருக்கிறது.

பார்ட்டி கொண்டாட்டங்களில் இதுபோல இன்னும் என்னென்ன ஆபத்துகளை தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம் என்று சுவாச நோய் சிறப்பு மருத்துவரான திருப்பதியிடம் கேட்டோம். ‘‘ஹீலியம் வாயு ஆக்ஸிஜனை விட எடை குறைவானது என்பதால், பலூனை பறக்க வைக்கப் பயன்படுத்துகிறார்கள். ஹைட்ரஜன் வாயு வெடிக்கும் அபாயம் கொண்டது.

அதனால் ஹீலியம் பலூன்கள் பயன்படுத்துவது தவறில்லைதான். ஆனாலும், ஹீலியம் பலூன்களையும் கவனமாகவே பயன்படுத்த வேண்டும். பலூனை நிரப்பும் ஹீலியம் வாயு பிஸ்டலை சிறுவர்கள் வாய்க்குள் அடித்து விளையாடுகிறார்கள். இதுபோல் ஹீலியம் வாயுவை சுவாசித்தால் ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் அளவு குறைந்து நுரையீரல் பாதிக்கும். கீச்சுக் குரலும் ஏற்படும். ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறும்போது ஏற்படும் துகள்கள் பிறந்தநாள் கேக்கில் விழுந்தால் அதை சாப்பிடக்கூடாது.

சிலர் Foam Sprayயையும் அடித்து விளையாடுவார்கள். இதில் இருக்கும் வேதிப்பொருட்களால் சரும ஒவ்வாமை, மூச்சு இரைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
சமீப காலமாக, போட்டோ கேக் பிரபலம் அடைந்து வருகிறது. அச்சிடப்பட்டிருக்கும் படத்தில் என்னென்ன வேதிப்பொருட்கள் உள்ளன என நமக்கு தெரியாது. அதனால் பல பிரச்னைகள் வரலாம்.

கேக் வெட்டும் பழக்கமும், மெழுகுவர்த்தி அணைக்கும் பழக்கமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியானவை. இந்தக் கலாசாரத்துக்கு பெரும்பாலானவர்கள் அடிமையாகி இருக்கிறோம் என்பதே உண்மை. உணர்வுப்பூர்வமாகப் பார்த்தால், பிறந்த நாள் அன்று குழந்தையின் புகைப்படத்தை வெட்டும் பழக்கமும் தவறானதுதானே!

பக்கத்து வீட்டில் கேக் வெட்டினால் நாமும் இவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கொண்டாட்டங்களை எளிமையாக்கிக் கொண்டாலே எந்த ஆபத்துகளும் குழந்தைகளுக்கும் வராது. நாமும் பாதுகாப்பாக இருக்கலாம்’’ என்கிறார் திருப்பதி.கொண்டாட்டங்களின் போது தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு தீயணைப்புப் படை மீட்புத்துறையின் துணை இயக்குநரான ப்ரியா விளக்குகிறார்...

‘‘பெரும்பாலான தீ விபத்துகளுக்கு கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. இந்த சம்பவத்தில்கூட விலை குறைவாக கிடைக்கிறது என்பதாலேயே ஹைட்ரஜன் பலூன்களை தெரியாமல் வாங்கியிருப்பார்கள். பலூன்களில் ஹைட்ரஜன் நிரப்பி இருந்தால் விளக்குகளின் வெளிச்சம் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இருந்தால் வெடிக்க ஆரம்பித்துவிடும். வாங்கும் பொருட்களின் விலையைப் பார்ப்பது போலவே தரத்தையும் கவனித்தே வாங்க வேண்டும். குறிப்பாக, ஹீலியம் பலூன்களை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்.

ஹீலியம் பலூன்களை முறையாகப் பயன்படுத்த தெரிந்தவர் ஒருவர் உடன் இருப்பது அவசியம். தீ விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்கும் விதத்தில் முன் எச்சரிக்கையாக தீயணைப்பு கருவிகள், அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் இருப்பதும் அவசியம்.தீ விபத்து ஏற்பட்டால் கீழே படுத்து உருண்டால்தான் தீ அணையும். ஓடினால் தீ அதிகமாக பரவும். அடுத்தவர் தீ விபத்தில் மாட்டியிருந்தால் அவரை கீழே தள்ளிவிட்டு உருளச் செய்து முடிந்தால் ஒரு ஈரமான சாக்கு போட்டு தீயை அணைக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின் போதும் அதிக தீ விபத்துகள் தரச்சான்றிததழ்
இல்லாதவர்களால் விற்கப்படும் போலி பட்டாசுகளால்தான் நடக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டும். சின்னதாக தீ பிடித்தால் உடனே தண்ணீரை வைத்து அணைத்துவிடலாம்.

அணைக்க முடியாத அளவில் தீ பெரிய அளவில் பரவுவதை உணர்ந்தால் உடனடியாக 101க்கு போன் செய்து தீயணைப்பு படையினரின் உதவியை கோர வேண்டும். இந்த முன்னேற்பாடுகளை செய்ய முடியாதபட்சத்தில் இம்மாதிரியான ஆபத்தான கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.

குறிப்பாக, குழந்தைகள்தான் இத்தகைய விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்!’’ என்கிறார் ப்ரியா.

தீ விபத்து ஏற்பட்டால் கீழே படுத்து உருண்டால்தான் தீ அணையும். ஓடினால் தீ அதிகமாக பரவும். அடுத்தவர் தீ விபத்தில் மாட்டியிருந்தால் அவரை கீழே தள்ளிவிட்டு உருளச் செய்து முடிந்தால் ஒரு ஈரமான சாக்கு போட்டு தீயை அணைக்க வேண்டும். ஹீலியம் வாயுவை சுவாசித்தால் ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் அளவு குறைந்து நுரையீரல் பாதிக்கும். கீச்சுக் குரலும் ஏற்படும்.
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#2
Re: பயமுறுத்தும் பலூன்கள் பதற வைக்கும் ஸ்ப&#30

ellorum purinchakkanum aadambarama panromnu namaku naamale vinayai thedikkirom nu ithu moolama solirukenga fnd ...............
thanks to sharing................
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Beware during the Birthday Party Celebrations-பயமுறுத்தும் பலூன்கள் பதற வைக்க&

நமது பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இத்தினங்களை கொண்டாடினாலே மகிழ்ச்சி கிட்டும் . இதெல்லாம் தேவையா என்பதை பெற்றோர் தான் உணரவேண்டும் . தங்கள் குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.