BigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘&#2

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
13:பூனம் பாஜ்வா:





`சேவல்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பூனம் பாஜ்வா, `தெனாவட்டு’, `கச்சேரி ஆரம்பம்’, `ரோமியோ ஜூலியட்’, `அரண்மனை - 2’ போன்ற படங்கள் மூலம் மக்களுக்குப் பரிச்சயமானவர். இவர் வாசகர்களிடமிருந்து 3.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.


12: `பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்:





பவர் ஸ்டாருக்கு அறிமுகம் தேவையில்லை. இவரை பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து அழகு பார்க்க பல வாசகர்கள் ஆசைப்படுகிறார்கள். 3.8 சதவிகித வாக்குகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
11: பரத்:





பரத், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் படங்களில் நடித்த கதாபாத்திரத்தைத் தாண்டி பரத்தைப் பற்றி பல விஷயங்கள் மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள 3.8 சதவிகித வாக்குகளை அளித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள் வாசகர்கள்.


10.சாந்தனு:





பிரபலத்தின் மகன் என்றாலும் சினிமாவில் தனக்கென ஓர் இடம் கிடைக்காமல் போராடி வருபவர் சாந்தனு. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தால் ஒரு நல்ல மாற்றம் வரும் என நினைத்த வாசகர்கள் இவருக்கு 4 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
9.`ஜித்தன்’ ரமேஷ்:





நடிகர், சூப்பர் குட் ஃபிலிம்ஸின் இணை தயாரிப்பாளருமான `ஜித்தன்’ ரமேஷ், தற்போது அதிக படங்கள் நடிக்காமல் இருந்தாலும், மக்கள் இவரை மறக்கவில்லை. 4.2 சதவிகித வாக்குகளை இவருக்கு அளித்துள்ளனர்.


8.ராய்லட்சுமி:





பிக் பாஸின் முதல் சீசனுக்கே ராய்லட்சுமியை அழைத்திருந்தார்கள் என ஒரு தகவல் வந்தது. அப்போது `ஜூலி -2’ படத்தில் பிஸியாக இருந்த ராய்லட்சுமி, இந்த சீசனில் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டு 4.2 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
7.பிளாக் பாண்டி:





விஜய் டிவியின் கண்டுபிடிப்பான பிளாக் பாண்டி, `கனா காணும் காலங்கள்’ சீரியலுக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் தங்களை என்டர்டெயின் பண்ணுவார் என எதிர்பார்த்து 4.3 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர் வாசகர்கள்.


6.படவா கோபி:





விஜய் டிவியால் மக்கள் நன்கு அறியப்பட்டவர்களில் படவா கோபியும் ஒருவர். மிமிக்ரி, காமெடி, சமையல் என விஜய் டிவியின் பல ஷோக்களில் இவரை நாம் பார்த்திருப்போம். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என நினைத்து 4.6 வாக்குகளை அளித்திருக்கிறார்கள்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
5.ஷாம்:





`12B’ படத்தின் மூலம் ஹீரோவாக பரிச்சயமான ஷாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். நல்ல படங்கள் மூலம் மக்களை கவர்ந்த ஷாம், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அவருக்கு 4.6 வாக்குகளை அளித்துள்ளனர்.


4.இனியா:





`வாகை சூட வா’ படம் மூலம் விருதுகளையும் மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றவர் நடிகை இனியா. படவா கோபி, ஷாம், இனியா என மூவருக்கும் 4.6 சதவிகித வாக்குகளை வாசகர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
3.கஸ்தூரி:





கஸ்தூரி தற்போது அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும், அரசியல், சமூகப் பிரச்னை எனப் பல விஷயங்களை தொலைக்காட்சியிலும், ட்விட்டரிலும் பேசி வருகிறார். இவரையும் முதல் சீசனுக்கு அழைத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. இந்த சீசனில் இவர் கலந்து கொள்ள வேண்டும் என 4.7 சதவிகித வாக்குகளை அளித்து டாப் 3 லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.


2.சொர்ணமால்யா:





`இளமை புதுமை’ நிகழ்ச்சி மூலம் பல இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்த சொர்ணமால்யா, பல படங்களில் நடித்து, தற்போது பரதநாட்டிய கலைஞராக இருக்கிறார். இவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என நினைத்த நாஸ்டால்ஜிக் விரும்பிகள் 4.8 சதவிகித வாக்குகள் அளித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேற வைத்திருக்கிறார்கள்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
1.`தாடி’ பாலாஜி:





நடிகர், நகைச்சுவை கலைஞர்கள் என்பதையெல்லாம் தாண்டி பல பிரச்னைகள் மூலமா சமீபத்தில் வைரலானவர் பாலாஜி. இந்த 15 நபர்களில் இவருக்கே அதிக வாக்குகளாக 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவரால் பல சர்ச்சைகள் வரும் என மக்கள் நினைத்திருப்பார்கள் போல.


இந்த டாப் 15 லிஸ்டில் தேர்வான நபர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாசகர்கள் அளித்திருக்கும் வாக்குகள்: ரக்‌ஷிதா - 3.1, ஜான் விஜய் - 3.1, அமித் பார்கவ் - 2.9, பிரேம்ஜி - 2.7, நந்திதா - 2.7, நாஞ்சில் சம்பத் - 2.7, ஆலியா மானசா - 2.6, ப்ரியா ஆனந்த் - 2.5, பால சரவணன் - 2.4, அசோக் செல்வன் - 2.4, விஜய் வசந்த் - 2.3, சாரு நிவேதிதா - 2.2, லட்சுமிமேனன் - 2, கீர்த்தி சாந்தனு - 2, டேனியல் ஆனி போப் - 1.4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் யார் யார் பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் வருகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்...
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
Big Boss 2 | Promo 2 | 20.05.2018| Coming Soon |
<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
மீண்டும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாரா?





விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியின் 2-ம் பாகம் வரும் ஜூன் 11 தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் 2 வில் பங்கேற்கவிருக்கும் இன்மேட்ஸ் யார் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நடிகை ஓவியா அதில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சில சானல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தான் 100 நாட்கள் தங்கப் போவதில்லை நட்பின் நிமித்தமாக ஒரே ஒரு நாள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியிருக்கிறாராம் நடிகை ஓவியா.

நடிகை ரம்பா பங்கேற்கவிருப்பதாக முன்பு ஒரு தகவல் வந்தது. ஆனால் அண்மையில் மூன்றாவது குழந்தைக்குத் தாயான நடிகை ரம்பாவால் 100 நாட்கள் வெளியில் தங்க முடியாது எனவே தவிர்த்துவிட்டார். மேலும் நடிகை கஸ்தூரி, சிம்ரன், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி நேரலையில் வந்தபின்னர் தான் இவை உறுதிப்படும் என்கிறது மீடியா தரப்பு.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
24-ல் துவங்குகிறது மலையாளம் '' பிக்பாஸ்''

1528003878066.png

நடிகர் மோகன்லால் நடத்தும் மாலையாள 'பிக் பாஸ்'' நிகழ்ச்சி வரும் ஜூன் 24-ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடிகர் கமலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக பலதரப்பினரை இழுத்துக்கொண்டார் பின்னர் அரசியலில் குதித்து கட்சியையும் நடத்தி வருகிறது.

.தொடர்ந்து பிக் பாஸ்-2 வையும் நடத்த ஆயத்தமாகி வருகிறார்.

இந்தநிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை நடிகர் மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதி்காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி வரும் ஜூன் 24-ம் தேதி துவங்க உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.