BigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘&#2

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா

மாணவக் கண்மணிகளின்’ சேட்டைகளும் கற்றல்களும் இன்றும் தொடர்ந்தன. ‘பாடகி’ ரம்யாவை ஆசிரியராக வைத்து சங்கீதம் சொல்லித் தரும் விளையாட்டை இன்று உருவாக்கியது நல்ல விஷயம். இதைப் போலவே அந்தந்த துறையினரின் அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படும்படியான டாஸ்க்குகளை ‘பிக்பாஸ்’ இனி உருவாக்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் வராது என்பது ஒரு குறை.


இன்றைய நிகழ்ச்சியின் ‘நாயகி’ என ஐஸ்வர்யாவைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ‘நான் பேபி இல்ல’ என்று அவர் பொதுவாக சொல்லும் சமயங்களில் சிரிப்பு வந்தாலும் வேறு சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அப்படியொரு தினம் இன்று. தங்களின் பிரியமானவர்களுக்கு கடிதம் எழுதும் பகுதியில் ‘தன் உயிர் நண்பனுக்கு’ என்று அவர் எழுதிய கடிதத்தில் மொழித் தகராறு இருந்தாலும் உண்மை இருந்தது. எனவே அது சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
தான் வாசித்த கடிதத்தால் எங்கே ஷாரிக் புண்பட்டிருப்பாரோ என்று நினைத்து அவரிடம் அதை தெளிவுப்படுத்தியது அபாரம். வந்த சில நாட்களில் ஷாரிக் மீது இவருக்கு தன்னிச்சையாக ஈர்ப்பு ஏற்பட்டாலும் ‘அவருக்கு இன்னொரு பெண் தோழி இருக்கிறார்’ என்பதை அறிந்தவுடன் முதலில் துயருற்று பின்பு விலகி நிற்கிறார் ஐஸ்வர்யா. என்றாலும் இவருடைய நோக்கில், ஷாரிக் மீது வைத்திருக்கும் அன்பு ‘உள்ளே’ அப்படியே இருப்பதால், தன்னுடைய கடிதத்தின் வார்த்தைகளால் ‘ஷாரிக்’ தன்னிச்சையாக புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக ‘அவன் என் பெஸ்ட் பிரெண்டு. வேற ஒண்ணுமில்ல’ என்று தெளிவுப்படுத்தியது, ஒரு நல்ல காதல் திரைக்கதையின் அற்புதமான பகுதி.

பெண்கள் ஆண்களை காதலிப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு எளிதாக கழற்றி விட்டு விட்டு போய் விடுவார்கள்’ என்கிற விஷயம் நகைச்சுவையாகவும் தீவிரமான தொனியிலும் திரைப்படங்களில் மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. நடைமுறையில் கூட இளைஞர்கள் அதை நம்புகிறார்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பது போல சில பெண்கள் அப்படி இருக்கலாம். ஆனால் காதல் என்கிற உணர்வில் மிக உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் பெண்களே என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். அவர்கள் ‘உண்மையாக’ நேசித்த மனிதரை அவர்களால் ஆயுள் முழுக்க மறக்க முடியாது. ஒரு பெண் தன் காதலை விட்டு விலகுகிறாள் என்றால் குடும்ப அழுத்தம் முதற்கொண்டு அதற்கு பல்வேறு வகையிலான நியாயமான காரணங்கள் இருக்கும். இந்த நடைமுறைச் சிக்கல்களை ஆண்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது. ‘மச்சான்.. ஏமாத்திட்டாடா…’ என்று புலம்பி, தண்ணியடித்து அதிலும் ஒருவித சுகம் காண்பார்கள்.

**


“ஆடுங்கடா.. மச்சான் ஆடுங்கடா” என்கிற ‘நாடோடிகள்’ திரைப்படப்பாடலோடு 31-ம் நாள் காலை விடிந்தது. காலையில் ஒலிக்கும் திரையிசைப்பாடல் முடிந்தவுடன் ‘உலக நீதி’ பாடலை சொல்ல வேண்டும் என்று சிநேகன் சொன்னதற்கு மாறாக, மக்கள் காஃபி அருந்தி, உலவிக் கொண்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ரித்விகா இவர்களை ஒருங்கிணைத்தார். கார்டன் ஏரியாவில் கூடி, ஒவ்வொரு வரியையும் ரித்விகா சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொன்னார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
“நீ வெள்ளந்தியா நடிக்கறேன்னு சில பேர் நினைக்கறாங்க.. நீ அப்படித்தான்னா… அப்படியே இரு.. யாரா இருந்தாலும் ரொம்ப நாளைக்கு நடிக்க முடியாதில்லையா.. மத்தவங்க ஹர்ட் பண்ணாம நாம நாமா இருந்தா போதும்” என்று சென்றாயனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.. “நான் எப்பவுமே இப்படித்தாங்க.. ஜனனிக்குத் தெரியும். கேட்டுப்பாருங்க” என்று சென்றாயன் சொன்னதை ‘ஆமாம். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இவர் இப்படித்தான்” என்று பாதுகாப்பாக சாட்சியம் சொன்னார் ஜனனி.

காமிரா முன் நின்று பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘நித்யா.. எப்படி இருக்கீங்க? குழந்தை ஸ்கூல் போயிட்டாங்களா.. நீ இங்க இருந்த வரைக்கும் சப்போர்ட்டா இருந்த மாதிரி இருந்தது. மத்தவங்களும் ஆதரவு தெரிவிக்கறாங்க.. இருந்தாலும் ஏதோவொண்ணு குறையுது. நீ உன் வேலையை சிறப்பா செய்.. நான் கூட நிப்பேன்” என்று ‘புதிய’ பாலாஜியாக உருமாறிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், வெளியே வந்து நித்யா அளித்த பேட்டிகளை, பாலாஜி பார்க்கும் போது என்னாகப்போகிறதோ.


பாடல் ஆசிரியை ‘ரம்யா’வின் வழிகாட்டுதலில் மாணவர்கள் அடிப்படை சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு வந்தது. ‘தொண்டைத்தண்ணி போக பாட வேண்டும்’ என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காகவோ என்னமோ ‘தண்ணி பாட்டில்லாம் எடுத்து வெச்சுக்கங்க’ என்று நினைவுப்படுத்தினார் தலைமை ஆசிரியை ரித்விகா.

சங்கீத வகுப்பிலும் தன் சேட்டையை ஆரம்பித்தார் மஹத். தாமதமாக வந்து விட்டு ‘வெளியே நிற்க வேண்டும்’ என்று ஆசிரியை சொன்னதும் ‘சுச்சு’ போகணும் என்று அலப்பறையை துவங்க.. ‘அதெல்லாம் முன்னாடியே போகணும்’னு சொன்னேனா இல்லையா?” என்று கண்டிப்பான குரலில் ரித்விகா சொல்ல, ‘அதை முன்னாடிதான் போக முடியும்’ –னு சொல்வான் மிஸ்’ என்று வில்லங்கமான ஜோக் ஒன்றை அடித்தார் டேனி. வகுப்பறையே வெடித்து சிரித்தது. இதனால் ‘பெஞ்ச்’ மீது நிற்கும் தண்டனையை அடைந்தார் டேனி.


கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையான ஏழு ஸ்வரங்களான.. ‘ஸரிகமபதநி’ யை ஏறுவரிசையில் பாடுவது ஆரோகணம். இறங்குவரிசையில் பாடுவது அவரோகணம். இதை மிக எளிமையாக சொல்லித் தந்தார் ரம்யா. மற்றவர்கள் ஏறத்தாழ இதைப் பாடி விட்டாலும் சென்றாயன்தான் சற்று சிரமப்பட்டார். இதற்கிடையில் மற்றவர்களின் சேட்டையைத் தாங்க முடியாமல் ரம்யாவும் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் தன்னிச்சையான ஒத்திசைவுடன் பாடிய சேர்ந்திசை நன்றாகவே இருந்தது. என்னவொன்று “மேல் ஸ்தாயியை எட்டிப்பிடிக்க’ டேனிதான் அவ்வப்போது பெஞ்ச்சின் மீது ஏறி நிற்க வேண்டியிருந்தது.

சங்கீதத்திற்கு ஏற்பட்ட அடுத்த சோதனை. வீட்டு உறுப்பினர்கள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு திரையிசைப்பாடல்களை பாட வேண்டும். அணி 1. பாலாஜி – வைஷ்ணவி (‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்) அணி 2. சென்றாயன் மற்றும் மும்தாஜ் (செல்ஃபி புள்ள). அணி 3. ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் பொன்னம்பலம் (அழகு மலர் ஆட). அணி.4. டேனி, மஹத், ஜனனி மற்றும் ஷாரிக். (என் வீட்டுல நான் இருந்தேனே).


மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாடல்களை ‘பயிற்சி’ செய்து கொண்டிருந்தார்கள். இட்லித்தட்டு, ஸ்பூன், பிளாஸ்டிக் சேர், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வாத்தியங்களாக உபயோகித்து ‘டேனி’ டீம் ‘என் வீட்டுல நான் இருந்தேனே’வை சிறப்பாக பாடிக் கொண்டிருந்தது.

பொன்னம்பலத்தோடு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை அணியாக சேர்த்தது பிக்பாஸின் ‘வில்லங்கமான நோக்கம்’ என்று முதலில் தோன்றினாலும் இதன் காரணமாக அவர்களுக்குள் இணக்கமும் நட்பும் தோன்றியது நல்ல விஷயம். ‘சிலம்பொலிகள் புலம்புவதை கேள்’ என்ற வரிகளை ஐஸ்வர்யா மென்று தின்னும் போது தமிழன்னையும் ஒருபக்கம் புலம்பியிருக்கக்கூடும்.


‘செல்ஃபி புள்ள’யை கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருந்தார் சென்றாயன். ‘ரொம்ப மேலே போகாதே.. ஹார்ட் வெடிச்சுடும்’ என்கிற வடிவேலு காமெடியை டைமிங்காக வைஷ்ணவிக்கு காட்டிக் கொண்டிருந்தார் பாலாஜி.


தங்களின் திறமையை மேடையில் அரங்கேற்றும் நேரம் வந்தது. ‘சுந்தரி நீயும் பாடலுக்கு பாலாஜியும் வைஷ்ணவியும் பாடி ஆடி அந்தப் பாடலின் மரியாதையை கீழிறிக்கினர். வைஷ்ணவி பார்க்காத சமயத்தில் ஜாலியாக தலையில் அடித்துக் கொண்டார் பாலாஜி. ‘செல்ஃபி புள்ள’ பாடலுக்கு சமந்தாவாக மும்தாஜை கற்பனை செய்து பார்க்க அசாத்தியமான தைரியம் வேண்டும். இங்கும் பாடலை கொத்துப் பரோட்டா ஆக்கினார் சென்றாயன்.

பொன்னம்பலத்திற்கு குரு வணக்கம் வைத்து விட்டு பாடலைத் துவங்கினர் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். ‘தகதகதோம்..’ என்று பொன்னம்பலம் ஆவேசமாக ‘ஜதி’ சொல்ல .. இருவரும் ‘குதி குதி’யென்று குதித்துத் தீர்த்தனர். ‘போதும் வந்துடுங்க.. இதுக்கு மேல தாங்காது’ என்று பாடலை முடித்தார் பொன்னம்பலம். பாடல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைதட்டிக் கொண்டதோடு பொன்னம்பலம் அமர பக்கத்தில் இடம் தந்தனர், ஐஸ்வர்யாவும் யாஷிகாவும்.


எதிர்பார்த்தது போலவே ‘டேனி’ இசைக்குழு தங்களின் பாடலை சிறப்பாக பாடியதோடு, ‘சிறந்த அணியாகவும்’ தேர்வாகியது.


‘கோபத்தை குறைத்துக் கொள்கிறேன்’ என்று வாக்களித்திருந்தாலும் அவ்வப்போது ‘அந்நியன்’ மோடுக்கு போய் விடுகிறார் பாலாஜி. சென்றாயனுடன் அமர்ந்து பேசும் போது ‘முணுமுணுவென்ற’ குரலில் எவரையோ திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். நிறைய ‘ம்யூட்’கள். ‘நித்யா கத்தப் போகுது’ என்கிற பாவனை வேறு.

“யார் யார் என் கிட்ட எப்படி பழகறாங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்.. சென்றாயன் கிட்ட எஸ்.ஐ. பத்தி விளக்கம் கேட்டது பிரச்னையாச்சில்ல.. அவனோட பொறுப்பை பத்தி அவனுக்கு யாருமே சரியா சொல்லித் தரலை. எல்லோரும் அவனை வெச்சி காமெடி பண்ணாங்க.. பாலாஜி என்ன பண்ணார்னா... அவனோட பேன்ட்டை இழுக்கறது.. –தொப்பியை தட்றது..ன்னு என்னென்னமோ பண்ணிட்டு இருந்தாரு” என்று சொல்லிக் கொண்டிருந்த டேனியை இடைமறித்த ரம்யா.. “அந்த விஷயத்துல எனக்கும் கூட உன் மேல கோபம்தான். சென்றாயன் நடிக்கறாரான்னு சொல்றாங்க. எனக்குத் தெரியல. நான் அதை உணர்ற வரைக்கும் அதுக்கான benefit of doubt-ஐ அவருக்கு தந்துதான் ஆகணும்” என்று பேசிக் கொண்டிருந்தார்.


அடுத்த பகுதி கடிதம் எழுதுவது. ‘தங்களுக்கு நெருக்கமாக இருக்கும் உறவிற்கு தற்காலிக பிரிவினால் ஏற்பட்டிருக்கும் உணர்வை அன்பு, இரக்கம், கோபம், வருத்தம் ஆகிய உணர்வுகளின் மூலம் கடிதமாக எழுதி தெரிவிக்க வேண்டும்.

‘என் உறவினர்களை சந்திக்காதது எத்தனை பெரிய தவறு என்பதை இங்கு வந்த பிறகு உணர்கிறேன். அவர்களின் அருமை இப்போதுதான் புரிகிறது. இனி சந்திப்பேன்” என்று இந்தப் பகுதியை துவங்கினார் ஜனனி. ‘தன்னுடைய ‘பெஸ்ட்’ பிரெண்டை மிஸ் செய்வதாக வருத்தப்பட்டார் ரம்யா. ‘தன்னுடைய தங்கை, உறவினர்கள் ஆகியவர்களை மிஸ் செய்வதாக சொன்ன சென்றாயன் ‘மக்களும் என் நண்பர்கள்தான்’ என்று ஐஸ் வைத்தார். (பொழச்சுக்குவே மக்கா!)


‘எழுதத் தெரியாது.. படிக்கத் தெரியாது’ன்னு சொல்லிட்டு எப்படி சூப்பரா எழுதியிருக்காரு” என்று சென்றாயனின் கடிதத்திற்கு மகிழ்ந்து போனார் ரித்விகா. (சென்றாயன், திட்டமிட்டு வெள்ளந்தி மனிதர் போல் நடிக்கிறார் என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது போல).


மறைந்த தன் தந்தைக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதியிருந்தார் டேனி. ‘வானத்துல இருந்து, வீட்ல இருக்கிற அம்மாவைப் பார்த்துக்கங்க.. உங்கள் ‘செல்லா’ என்று அவர் எழுதியிருந்தது நெகிழ்வானதாக இருந்தது. ஷாரிக்கின் கடிதமும் ஓகே. ‘அப்பா.. அம்மா. நல்லாயிருக்கீங்களா.. இதுவரைக்கும் உங்களுக்கு நான் நன்றி சொன்னதில்ல..இந்த உலகத்திலேயே நீங்கதான் பெஸ்ட்’ என்று நெகிழ்வாக சொல்ல, ‘பேட்டா’வை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மும்தாஜ் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார்.


‘Hi Angel’ என்று துவங்கிய ஐஸ்வர்யாவின் உணர்வுபூர்வமான கடிதம் சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘தங்களின் மகள் ‘போஷிகா’வை பார்த்துக் கொண்டவர்களுக்கு நன்றி’ என்று எழுதியிருந்தார் பாலாஜி. (‘என் நினைவே அவனுக்கு வரலை.. பார்த்தீங்களா..” என்று பாலாஜியின் அம்மா விகடன் நேர்காணலில் குறைப்பட்டிருந்தார். இந்தக் கடிதத்தில் அம்மாவையும் பாலாஜி குறிப்பிட்டிருந்தது நல்ல விஷயம்).

தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அத்தைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் பொன்னம்பலம்.


தன்னுடைய கடிதத்தால் ஷாரிக் ‘ஏதேனும்’ புண்பட்டிருந்தால் மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘நீ ஒருவேளை ஹர்ட் ஆவலாம். ஆனா நான் இதைச் சொல்லியே ஆகணும். அவன் அத்தனை உதவி செஞ்சிருக்கான். என் அப்பா அம்மா கூட முக்கியமில்ல.. அவன் அத்தனை முக்கியமானவன். நீ ஃபீல் பண்ணாத” என்றெல்லாம் ஐஸ்வர்யா ஆறுதல் சொல்ல.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. I feel happy for you’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஷாரிக்.


**


பிக்பாஸ் வீட்டில் தாங்கள் சந்தித்த பிரசனைகள். மனவருத்தம் போன்றவற்றைப் பற்றி ‘கவுன்சிலிங்’ எடுக்க வேண்டும் என்கிற அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்தார். கவுன்சிலிங்’ அளிப்பவரின் பெயரைக் கேட்டவுடன் தலை சுற்றியது. வைஷ்ணவியாம்.


“நீங்க எந்தப் பிரச்னையா இருந்தாலும் என் கிட்ட பேசலாம்.. பேர் சொல்லியோ.. சொல்லாமலோ.. சொல்லலாம். இது நம்ம ரெண்டு பேர்க்குள்ளதான் இருக்கும்” என்று உளவியல் மருத்துவராகவே மாறியிருந்தார் வைஷ்ணவி. ‘ரகசியம் காக்கப்படும்’ என்று அவர் மறுபடி மறுபடி சொல்லும் போதுதான் சந்தேகமே வந்தது.

கவுன்சிலிங் பெற முதலில் வந்த டேனி சொன்ன பிரச்னையே ‘வில்லங்கமாக’ இருந்தது. ‘பாலாஜி வாயு பிரச்னை காரணமாக அவ்வப்போது ‘டர்புர்’ரென்று சத்தம் போடறாராம். சொன்னாலும் ‘நான் என்னப்பா பண்றது.. அதுவா வருது’ ன்றாராம். இது ஆரோக்கியம் தொடர்பான பிரச்னையும் இல்லையா?” என்று டேனி சொல்ல.. ‘கடவுளே.. மொதல் கேஸே.. “கேஸ்’ பிரச்னையோடவா துவங்கணும்.. என்று வைஷ்ணவி நொந்து போயிருப்பார். “ஜனனி சொன்னா.. அவர் கேட்பார். மருந்து மாத்திரை எடுத்துக்கச் சொல்லலாம்.. சரியா…” என்று ஆலோசனை சொன்னார் வைஷ்ணவி.


வைஷ்ணவியின் இந்த ‘கவுன்சிலிங்கைத்’ தாண்டி இன்னொருபுறம் வேறொரு ‘கவுன்சிலிங்கும்’ நடந்து கொண்டிருந்தது. மஹத்திற்கு சில உபதேசங்களைத் தந்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.. யாஷிகாவிற்கும் மஹத்திற்குமான உறவைப் பற்றி அது இருந்தது என்பதாக யூகம். “ஆயிரம் இருந்தாலும் என் ‘பிராச்சி’தான் எனக்கு முக்கியம். அவ ஸ்பெஷல்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் மஹத்.


அவர் ஏதோவொரு மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வைஷ்ணவியிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்த விஷயமும் இதுதான். “நான் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமான ஆசாமி.. நான் நம்பறவங்க, மத்தவங்களைப் பத்தி எது சொன்னாலும் அதை உடனே நம்பிடுவேன். அவங்க சொல்ற வார்த்தைகங்லாம் விஷம் மாதிரி எனக்குள் ஏறிடும். அவங்க யாரைப் பத்தி சொன்னாங்களோ.. அவங்களைப் பார்க்கும் போது எனக்கு தன்னாலே கோபம் வருது.. ஆனா நான் நம்பினவங்களே.. அவங்க கூட கொஞ்சி பேசிட்டு இருக்கறது பார்க்கும் போது.. யாரை நம்பறதுன்னு தெரியல’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

மஹத் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக இருக்கிறார்’ என்பதே இதன் சுருக்கம். ‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதே இதற்கான மருந்து.


‘அம்மாவைப் பார்க்கணும்’ என்கிற குழறலான வார்த்தைகளுடன் பிற்பாடு மஹத் அழுது கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ‘ஹோம் சிக்னெஸ்’ காரணமாகவோ அல்லது ஏதோவொரு குற்றவுணர்ச்சியில் அவர் அல்லாடுகிறார் என்று தோன்றுகிறது. ‘ஏதோதோ சொல்லி குழப்பி விட்டுடறாங்க’ என்று புலம்பிக் கொண்டிருந்த மஹத்தை, ரம்யா, ஐஸ்வர்யா மற்றும் ஜனனி ஆகியோர் சமாதானப்படுத்தினார்கள். மனதளவில் ஆண்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட தருணம் இது.


இன்னொருபுறம் வைஷ்ணவியின் ‘கவுன்சிலிங்’ விடிய விடிய விடாமல் நடந்தது. “இங்க சில பேர் எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்ணிக்கறாங்க.. உதாரணத்திற்கு ஷாரிக் எந்த எமோஷனையும் வெளியே காண்பிக்க மாட்டேங்கறான். இது என்னை கன்ப்யூஸ் பண்ணுது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா.

இன்னொரு பக்கம், மும்தாஜிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. ‘சிநேகன் கிட்ட திரும்பத் திரும்ப கேள்வி கேட்டது தொடர்பா சென்றாயனை நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன். மஹத் என்னைக் கூப்பிட்டு ‘அவனை அப்படில்லாம் சொல்லாதடா.. ஹர்ட் ஆகிடப் போறான்’னு அட்வைஸ் பண்றான். என்னைப் பத்தி என்னை நெனக்கறாங்க.. அவ்ள மந்தம்-னா.. சென்றாயனை குரங்கு.. சொறிநாய்.. ன்னு என்னென்னமோ சொன்னது இவன்.. நான்தான் இவனை கரெக்ட் பண்ணேன். இவன் வந்து இப்ப எனக்கு அட்வைஸ் பண்றான். “எனக்கும் சென்றாயனுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு’ன்னு சொன்னப்புறம்தான் அடங்கினான். இவன் இன்னாவோ.. ஹீரோ மாதிரியும்.. நான் என்னமோ வில்லன் மாதிரியும்.. என்னங்கடா நடக்குது இங்க” என்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் டேனி.


“மஹத் உங்களைப் பத்தி சொன்ன ஒரு கமெண்ட்.. என்னை ரொம்ப அஃபெக்ட் பண்ணிச்சு.. ஆம்பளைங்க தங்களுக்குள்ள கிண்டல் பண்ணிக்கறது வேற… பொம்பளையைப் பத்தி பேசறது வேற..நீங்களும் அதுக்கு இடம் தர்றீங்க..” என்று வைஷ்ணவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்..


“என்னடா.. இது! மத்தவங்க பிரச்னையைப் பத்தி விசாரிக்கலாம்னு வந்தா.. நம்மளயே பிரச்னையாக்கறாங்க” என்று மனதிற்குள் வைஷ்ணவி நினைத்துக் கொண்டாரோ என்னமோ.. ‘இதுக்கு சொல்யூஷன் என்னன்னா.. என்று தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பிக்க.. ‘அதெல்லாம் தேவையில்ல.. டைம் வேஸ்ட்’ என்று பொன்னம்பலம் கதவைச் சாத்தியது நல்ல காமெடி. ‘நான் சொல்லித்தான் தீருவேன்.. ஒரு மருத்துவரா.. அது என் கடமை’ என்று வைஷ்ணவி அடம்பிடிக்க.. “சுருக்கமா சொல்லுங்க’ என்று இன்னொரு பவுண்டரியை விளாசினார் பொன்னம்பலம். வைஷ்ணவியை போதுமான அளவிற்கு வெறுப்பேற்றியவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லியபடி விடைபெற்றுச் சென்றார் பொன்னம்பலம்.

“அவர் பண்றது.. அதாவது ‘அவங்க’ பண்றதால நெறைய பேர் இங்க பாதிக்கப்படறாங்க.. இரிட்டேட்டா இருக்கு.. படிக்காததற்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன்” என்று சொன்ன சென்றாயனுக்கு.. “அவங்க உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தலையே.. எல்லோருக்கும்தானே…’ என்று வைஷ்ணவி தந்த மகத்தான ஆலோசனையைக் கேட்டு தலைசுற்றியபடி கிளம்பினார் சென்றாயன்.


அடுத்த பேஷண்ட் மும்தாஜ். “யாரு கேரக்ட்டரையும் யாரும் மாத்த டிரை பண்ணக்கூடாது.. நான் அப்படித்தான் இருக்கேன்” என்று மும்தாஜ் கெத்தாக பேச ‘தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க.. நான்தான் உங்க கிட்ட கவுன்சிலிங் வரணும்’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் வைஷ்ணவி.. (பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கற வைத்தியருக்கே.. பைத்தியம் பிடிச்சா…..’மோமெண்ட்’ இது).


“நெறய பேர் இன்னமும் comfort zone-லதான் இருக்காங்க.. இன்னமும் வெளியே வரலை” என்ற பிரச்னையை ரித்விகா சொல்ல.. ‘I think’ என்று ஆரம்பித்து என்னமோ சொன்னார் வைஷ்ணவி. (இதை சாய்ஸ்ல விட்டுடலாம்.. அப்படி ஒண்ணும் முக்கியமானதில்லை).
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
எல்லோரும் இங்க போலியா இருக்கறாங்க” என்றார் பாலாஜி. (இப்படியே ஒவ்வொருத்தரும் சொல்லிட்டிருங்க!) “உங்களுக்கு யார் கூட பிரச்னையோ.. அவங்க கிட்ட நேரா பேசிடுங்க’ என்பதுதான் வைஷ்ணவியின் பெரும்பாலான மருத்துவமாக இருந்தது. (அதுக்கு எதுக்கும்மா .. உங்க கிட்ட வந்தோம்’ என்பது பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.)


மற்றவர்களுக்கு வைத்தியம் பார்த்தவருக்கும் ‘வைத்தியம்’ தேவைப்படும் அல்லவா?, எனவே வைஷ்ணவிக்கு ‘கவுன்சிலிங்’ தர பிக்பாஸ் முன் வந்தார். பொன்னம்பலம் சொன்னதைப் போலவே ‘சுருக்கமா சொல்லுங்க’ என்று பிக்பாஸூம் வைஷ்ணவியை வெறுப்பேற்ற முயன்றது அராஜகம்.


“முதல் சில நாட்கள்ல.. நான் இங்கும் அங்குமா பேசினது என்னமோ நெஜம்தான். சும்மா பேசணுமேன்னு அதைப் பேசினேன்.. ஆனால் என்னை ‘புறம் பேசுகிறவள்’-னு நிரந்தர முத்திரை குத்திட்டாங்க.. அது எனக்கு ஃபீல் ஆகுது.. ‘கலாய்க்கறேன்’ற பேர்ல டேனி என்னை டார்க்கெட் பண்ணி குத்திக் காண்பிச்சுக்கிட்டே இருக்காரு.. ஹர்ட் ஆகுது” ஆகிய இரு பிரச்னைகளைச் சொன்னார் வைஷ்ணவி.

புறம் பேசுதல்’ மனிதர்களின் நிரந்தர குணம். இதற்காக வைஷ்ணவியை மட்டும் சுட்டுவது நியாயமில்லைதான்.


நள்ளிரவு 01:30 – ஷாரிக்குடன் பேசிக் கொண்டிருந்தார் மும்தாஜ். “போன சீஸனை விட இந்த சீஸன்தான் டஃப்பா இருக்கும் னு பிக்பாஸ் முதல்லயே சொல்லிட்டாரு.. ஆனா சிநேகன் வந்தப்ப.. ‘நாங்கதான் இங்க ரொம்ப கஷ்டப்பட்டோம்’ன்ற மாதிரி சொன்னது சரியில்லை’


ஆக மொத்தத்தில் .. இன்றைய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நாம்தான் எங்காவது ‘கவுன்சிலிங்’ போக வேண்டும் போலிருக்கிறது. செல்வதற்கு முன் டாக்டரின் பெயர் ‘வைஷ்ணவி’ என்று இல்லைதானே என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
பிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்!

நியூ லைஃப், நியூ ஹோப்’ மற்றும் ‘குட்லைஃப்’ ஆகிய சாரிட்டி அமைப்புகளில் இருந்து ஆதரவற்ற சிறார்கள் பிக் பாஸ் இல்லத்துக்கு வருகை புரிந்ததுதான் இன்றைய நாளின் ‘ஹைலைட்’. பொதுசமூகம் அறியாத அல்லது கவனிக்க விரும்பாத பல உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதரவற்ற சிறார்களின் உலகம். தற்காலிமாக இதில் எட்டிப் பார்த்து விட்டு ‘ச்ச்ச்ச்… ரொம்ப பாவம்ல’ என்று உச்சுக்கொட்டிவிட்டு தங்களின் செளகரிய வாழ்க்கைக்கு திரும்பிவிடுபவர்களே நம்மில் அதிகம். மாறாக அர்ப்பணிப்பு உணர்வுடன் குறிப்பாக ஆதாய நோக்கமில்லாமல் இந்தச் சேவையில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரையும் ‘கடவுள்’ எனலாம்.

ஒவ்வொரு சிறாரும் புன்னகையுடனும், இயல்பாகவும் சிறிது கலங்கியும் கூறிய கதைகள் பிக்பாஸ் வீட்டை மட்டுமல்லாது நம்மையும் கலங்க வைத்தன. அடிப்படையான வசதிகள் இருந்தும், பல்வேறு போதாமைகளுடனும் அது குறித்த அதிருப்திகளுடனும் முணுமுணுத்துக் கொண்டே வாழும் நம்முடைய வாழ்க்கை எத்தனை ‘செளகரியமானது’ என்பதை அவர்களுடைய துயரமான பின்னணிகள் உணர வைத்தன.

**

யுவனின் அட்டகாசமான, நாட்டுப்புற இசையில் உருவான ‘ஊரோரம் புளியமரம்’ என்கிற உற்சாகமான பாடலோடு 32-ம் நாளின் பிக்பாஸ் வீடு எழுந்தது. எத்தனை உலக நீதிகளை வாசித்தாலும் நமக்குள் இருக்கும் சில ஆதாரமான கீழ்மைகளை விட்டு நாம் விலகவே மாட்டோம் என்பதை, ‘ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல மாட்டோம்’ என்று பாடிய மறுநிமிஷமே அவர்கள் புறணி பேசுவதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

வாஸ்து’ சரியில்லாத கிச்சன் ஏரியாவில் இம்முறை ‘டீ’ பிரச்னை. இதன் விதை நேற்றே விழுந்தது. நேற்று காலையில் எழுந்தவுடனேயே வைஷ்ணவியிடம் ‘டீ’ கேட்டார், சென்றாயன். சிலருக்கு காலையில் எழுந்த மறுநிமிடமே டீ, காஃபி சாப்பிடாவிட்டால் தலைவெடித்து விடும். இந்த நோக்கில் சென்றாயனின் அவசரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘உலகநீதி’ பாடலுக்கான நேரம் அது என்பதால் ‘அஞ்சே நிமிஷத்துல முடிஞ்சுடும். வந்து போட்டுத்தர்றேன்’ என்றார் வைஷ்ணவி.


இன்றும் அதே போல் சென்றாயன் அவசரப்படுத்த வைஷ்ணவி எரிச்சல்பட்டார். “கொஞ்சம் வெயிட் செஞ்சாதான்.. டீ வரும். ஆர்டர் போடறா மாதிரி கேட்டா எப்படி?” என்று பதிலுக்கு வைஷ்ணவியும் எரிச்சல்பட்டார்.


இது சமையல் உலகத்தை அறியாத ஆண்களின் பொதுவான கெட்ட பழக்கம். ‘மாஸ்டர், ஸ்ட்ராங்கா ஒரு டீ” என்று தேநீர்க்கடைகளில் உத்தரவிடும் வழக்கம் காரணமாகவோ, என்னவோ. வீட்டிலும் கேட்ட மறுநிமிடமே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு தேநீர் தயாரிப்பதற்கு பின்னால் எத்தனை வேலைகள் உள்ளன என்பதை செய்து பார்த்தால்தான் தெரியும்.

“தங்கம்.. நான் இப்ப என்ன கேட்டுட்டுடேன்.. டீ கேட்டது ஒரு குத்தமா?” என்று சென்றாயன் ஆதங்கப்பட, ‘சென்றாயன் சரியான தொனியில் கேட்கவில்லை’ என்பதற்கான சாட்சியத்தை ‘மாமா’ பாலாஜியும் சொன்னார். (சமையல் டீமில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது ‘நல்லது”).


“அடுத்த முறை சென்றாயனை கிச்சன் டீம்ல போடணும்.. அப்பதான் கஷ்டம் தெரியும்!” என்று ரித்விகாவும் இடையில் வர, “எல்லா வேலையும் கஷ்டம்தான். நானும் பாத்ரூம் க்ளீன் பண்றேன்..அதையும் செஞ்சி பார்த்தாதான் தெரியும்” என்று சென்றாயனும் பதிலுக்கு மல்லு கட்டினார். சென்றாயனை இதுவரை பாத்திரம் கழுவும் மற்றும் பாத்ரூம் கழுவும் அணியில் மட்டுமே சேர்க்கும் ‘உளவியல்’ காரணங்களைப் பற்றி முதல் வாரத்திலேயே பார்த்தோம்.


‘சமையல் வேலையை சென்றாயன் சுத்தமாக செய்ய மாட்டார்’ என்கிற முன்தீர்மான கருத்து மற்றும் ‘சமையல் டீமில் இருந்த டேனி சுத்தமாக செய்யவில்லை’ என்று பிறகு சொன்ன மும்தாஜின் புகாரில் இந்தப் பின்னணியிலான ‘பாரபட்ச’ உணர்வுதான் இருந்தது.


“நான்தான் கேப்டன்.. நான்தான் கேப்டன்’ என்று ‘நாட்டாமைத்தனத்துடன்’ மஹத் இந்தப் பிரச்னைக்குள் வர.. “ஓ.. இவர்தான் தலைவர்ல.. ‘ என்கிற விஷயமே அப்போதுதான் நினைவிற்கு வந்தது. வரும் சனிக்கிழமை ," ' நான் தான் தலைவர் ; நான் தான் முதல்வர் ' னு சொல்லி மக்களுக்கு நினைவூட்டற நிலைல தான் தலைவர்கள், தமிழர்களையும், தமிழகத்தையும் வச்சு இருக்காங்க" என கமல் அரசியல் நையாண்டி செய்ய வாய்ப்புண்டு

**


அடுத்த பிரச்னை ‘ரேஷன்’ வடிவில் வந்தது. பழைய திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளை நிறையப் பார்த்திருத்திருப்போம்... ஒரு குடும்பத்தின் வறுமையை பார்வையாளர்களுக்கு ஆழமாகவும் உருக்கமாகவும் உணர்த்த ஒரு ‘டிராஜிடி’ காட்சியை வைப்பார்கள். ‘பாத்திரத்தில் கரண்டி உரசும் சத்தத்தோடு வீட்டின் தாய் சோற்றை சுரண்டிக் கொண்டிருப்பார். ‘இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா, பசிக்குதும்மா” என்று அங்குள்ள பிள்ளையொன்று அழும். பொங்கி வரும் கண்ணீரை மறைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தாய் விழிக்க, நிலைமையைப் புரிந்து கொண்டு சிலர் சாப்பிடாமல் எழுந்து செல்வார்கள். பின்னணியில் ஷெனாய் சத்தம் உரக்க அலறி உருக்கத்தைக் கூட்டும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germanyபிக் பாஸ் வீட்டிலும் ஏறத்தாழ இதேதான் நிகழ்ந்தது. அரிசியின் இருப்பு குறைவாக இருந்தது. தயாரிக்கப்பட்ட சோறு பற்றாக்குறையுடன் இருக்க, ‘தியாகம்’ செய்ய ‘தாய்க்கிழவி’ ரம்யா முன்வந்தார். “காலையிலேயே “டீ”க்கு பிரச்னை பண்ண ஆளு” என்பதின் காரணமாக சென்றாயனுக்கு தனியாக உணவு எடுத்து வைத்தார்கள்.


“மற்றவர்களுக்கும் உணவு வேண்டும்’ என்கிற அக்கறை இல்லாமல் அதிகமாக சிலர் சாப்பிட்டுவிடுகிறார்கள் என்கிற புகாரை மறுபடியும் விவாதித்தார்கள். இதுவும் ஆண்கள் தரப்பில் உள்ள பொதுவான குறை. பல சமயங்களில் வீட்டுப் பெண்மணிகள் போதாமைகளுடன் தங்களின் உணவை முடித்துக்கொள்வார்கள். சமையலில் ஈடுபடுபவர்களுக்கு கடைசியில் உணவு கிடைக்காது என்பது உலக நடைமுறை.


“காய்கறி வெட்டும் போது ஜனனிக்கு கைல வெட்டிக்கிச்சு.. அதான் கிச்சனுக்கு போனேன்” என்று பாலாஜி சொல்ல.. ‘கரெகட்டா விரலை வெட்டிக்க வேண்டியதுதானே” என்று கொடூரமான ஜோக் அடித்தார் பொன்னம்பலம். ‘ஆளே விரல் சைசுலதான் இருக்கா” என்கிற மொக்கை ஜோக்கை ஷாரிக் உதிர்த்தார்.


பாலாஜி, மஹத், ஷாரிக் ஆகிய மூவரும் ‘டேனியின்’ மீது ரகசியக் கடுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களின் புறணியிலிருந்து அறிய முடிகிறது. எல்லாவற்றிலும் சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் டேனியின் அணுகுமுறை இவர்களை எரிச்சலூட்டியிருக்கலாம். இதைப் போலவே, ‘வெள்ளந்தியாக நடிக்கும்’ சென்றாயனின் மீதும் இவர்களின் எரிச்சல் பாய்ந்தது. சென்றாயனுக்கு நெருக்கமான தோழரான பாலாஜி “எத்தனை நாளைக்கு பழைய வறுமைக் கதையையே சொல்லி ஓட்டப் போறான்” என்று புறம் பேசினார்..


கிச்சன் ஏரியாவில் இன்னொரு சிறு பிரச்னை ரம்யாவிற்கும் ஜனனிக்கும். “சமையல் டீமில் இருப்பவர் கிச்சன் அருகேதான் இருக்க வேண்டும். அப்போதுதான் சட்டென்று அவரை உதவிக்கு அழைக்க முடியும்” என்கிற ரம்யாவின் கருத்து நியாயமானது. இதை ஜனனிக்குப் புரிய வைப்பதற்குள் அவருக்கு தாவு தீர்ந்தது.

‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கின் இறுதிப்பகுதி (அப்பாடா!). இந்த விளையாட்டில் செயல்பட்டதற்கு ஏற்ப ‘ரிப்போர்ட் கார்ட்’ வழங்கப்பட்டது. நேரந்தவறாமை, ஒழுக்கம், அணுகுமுறை, சுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது.


மறுபடியும் ‘முயல் –ஆமை’ கதைதான். இதில் சென்றாயன் முதல் ரேங்க் பெற்றதை பலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வெளிப்படையாகவே தங்களின் அதிருப்தியை தெரிவித்தார்கள். ‘தோற்றம் மற்றும் பின்னணி’ காரணமாக ஒருவர் உயர்பதவிக்கு வரவே முடியாது மற்றும் வரக்கூடாது என்கிற சமூகத்தின் மேட்டிமைத்தனமான உணர்வு பிக் பாஸ் வீட்டிலும் பிரதிபலிப்பதில் ஆச்சரியமில்லை.


‘சென்றாயனுக்கு’ முதல் பரிசு தரப்பட்டது குறித்தான அதிருப்தியை பிறகு ‘ஷாரிக்கிடம்’ தெரிவித்துக் கொண்டிருந்தார் டேனி. ‘அவரை ஊக்கப்படுத்துவதற்காக தந்திருக்கலாம்” என்று ஷாரிக் சொல்ல ‘அதுக்காக மத்தவங்களை கீழே இறக்கக்கூடாதுல்ல.. ‘பாவம்’ பார்த்தா பரிசு கொடுப்பாங்க.?” என்றார் டேனி. சென்றாயனுக்கு ‘திறமை’ என்கிற ஒன்று இல்லவே இல்லை என்றே அனைவரும் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது.


“ஏம்ப்பா.. நீங்க பேசும் போது நான் அமைதியா இல்ல. பேச விடுங்கப்பா’ என்று மனத்தாங்கலுடன் ‘பிக் பாஸ்’ஸிற்கு நன்றி சொன்னார் சென்றாயன். தனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது ரேங்க்கை மும்தாஜால் ஏற்க முடியவில்லை. ‘ஒத்துழைக்கவில்லை’ என்கிற காரணத்திற்காக அவருக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட ‘அதிருப்தி’யை மறைத்துக் கொண்ட எரிச்சலுடன் வெளிப்படுத்தினார். ஆனால் – ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில் பிரச்னையுள்ள சென்றாயன் உடனான கூட்டணியில் மும்தாஜ் சிரமப்பட்டார் என்பதை கடந்த காட்சிகளில் பார்த்தோம். இந்த நோக்கில் மும்தாஜின் அதிருப்தியை புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் பரிசிற்காக சென்றாயன் தேர்ந்தெடுக்கப்பட்டதின் காரணத்தை ரித்விகா விளக்கியும் ‘சரிப்பா.. ‘அவங்க’ பார்வைல இருந்து தேர்ந்தெடுத்திருக்காங்கலாம். அப்ப நம்ம மேல தப்பு இல்ல’ என்று சர்காஸ்டிக்காக கிண்டலடித்தார் டேனி. “எதுக்கு அவன் மேல பாவம்.. பாவம்.. னு பரிதாப்படறீங்க.. அதனாலேயே அவன் மேல கோபம் வருது… முதல்ல இதை நிறுத்துங்க” என்று சென்றாயனை வைத்துக் கொண்டே தன் கோபத்தை பாலாஜி வெளிப்படுத்த, முகம் சுருங்கினார் சென்றாயன். பாலாஜி குறிப்பிடுவது ஒருவகையில் சரிதான். அனுதாபத்தை சம்பாதிப்பது ஒருவகையில் இழுக்குதான். ஆனால் இதை வயிற்றெரிச்சலுடன் அல்லாமல் புரியும் வகையில் நிதானமாக பாலாஜி சொல்லியிருக்கலாம்.


‘கனா காணும் காலங்கள்’ எனும் லக்ஸரி டாஸ்க் முடிந்ததற்கான அறிவிப்பு வந்தவுடன் ‘ஹோ’வென்ற சத்தத்துடன் சிறார்கள் உள்ளே வந்தார்கள். அவர்களில் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது. (இது தப்பாச்சே...?). வந்தவுடனேயே பலரையும் அடையாளம் கண்டு கொண்டு துள்ளிக் குதித்தார்கள். பிக்பாஸ் வீடும் அவர்களின் உற்சாகத்தை பிரதிபலித்து ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டார்கள்.


முதலில் உற்சாகம் காட்டிய பாலாஜி, பிறகு ஏனோ ஒதுங்கியே இருந்தார். ‘டல்’லாக இருப்பதால்தான் அவர் பேர் ‘டல்கோ’ என்கிற காரணத்தைச் சொல்லியது ஒரு வாண்டு. ஆடை தேர்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம்தான் என்றாலும், குழந்தைகளின் முன்னால் யாஷிகாவின் உடை சற்று கண்ணியமாக இருந்திருக்கலாம் என்று தோன்றிற்று. (சிறார்கள் வருவது முன்னமே அறிவிக்கப்படாமல் ‘இன்ப அதிர்ச்சியாக’ அமைந்ததோ, என்னமோ!).


‘கபாலி’ என்கிற ஒரு சிறுவனை தூக்கிக் கொண்ட டேனி.. “வாங்க. ஒளிச்சு வெச்சிருக்கற ஆப்பிள் எடுத்து தர்றேன்’ என்று அழைத்துச் சென்றார். (மனுஷன் இன்னமும் ‘திருடன்’ டாஸ்க்கில் இருந்து வெளியே வரவில்லை போலிருக்கிறது).

எந்தச் சிறுமியின் பெயரைக் கேட்டாலும் ‘காவியா’ என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள். (துயர காவியம்!). வந்திருப்பவர்களிலேயே பெரிய பெண்ணாக இருந்த ‘காயத்ரி’ ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று ஜனனியைப் பாராட்ட, “நீயும்தான் அழகா இருக்கே” என்று பதிலுக்கு சொன்னது ‘தேன்பாட்டில்’. சிறுவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்ல முற்படும் போது ‘உள்ள ஜட்டி போடலையே, என்ன பண்றது’ என்று தன் மானப் பிரச்னையை சொன்னான் ஷாரிக்கின் மீது தோள் மீது அமர்ந்திருந்த சிறுவன். மஹத்தின் உதவியுடன் நீச்சல் குளத்தில் இரு சிறுவர்கள் உற்சாகமாக ஆடித்தீர்த்தார்கள். இவர்களுக்காக ‘பாயாசம்’ வரவழைத்திருந்தார் பிக்பாஸ்.


சில சிறுவர்கள் உற்சாகம் தரும் ‘கானா’ பாடல்களைப் பாடி அசத்தினார்கள். ‘ஆலுமா டோலுமா பாட்டைப் போடச் சொன்னேன்ல.. ஏன் இன்னமும் போடலை?” என்று பிக்பாஸை மிரட்டியது ஒரு வாண்டு. ஓவியம் மற்றும் கலைப் பொருட்களுக்கான பொருட்கள் அவர்களுக்கு தரப்பட்ட குழந்தைகளின் கற்பனைத்திறன் அபாரமாக வெளிப்பட்டது. ஓர் அழகான ‘பூ’வை உருவாக்கியிருந்தாள் காவியா. அசோக் வரைந்திருந்த ஓவியம் நன்றாக இருந்தது. ‘காவிய ஸ்ரீ’ கிருஷ்ண சீதை ஓவியத்தை வரைந்திருந்தாள். இளம் வயதில் அவளது அம்மா சசிகலா கற்றுக் கொடுத்ததாம். ‘love you mom’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது நெகிழ்வடைய வைத்தது. இவர்களுக்கு உற்சாகத்துடன் உதவியது பிக்பாஸ் வீடு.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
கார்டன் ஏரியாவில் அனைவரும் வட்டமாக அமர்ந்திருக்க, ஒவ்வொருவரும் தங்களின் பின்னணிகளைப் பற்றி இயல்பாக சொல்லியது கலங்க வைத்தது.


பாடகர் ஆக விரும்பும் காயத்ரி, இன்ஜினியர் ஆக விரும்பும் சின்னா, (எந்த இன்ஜினியர்? என்று சிறுவனிடம் ஜனனி கேட்டது அபத்தம்) வெளிநாடு செல்வதற்காக ராணுவத்தில் சேரவிரும்பும் முத்து, ஆசிரியையாக விரும்பும் கவிதா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ‘டாக்டர்’ ஆக விரும்பும் அசோக் தன் பின்னணியைப் பற்றி கூறும் போது தன்னிச்சையாக கண்கலங்க அந்த சோகம் நம்மையும் பற்றிக் கொண்டது. கலெக்டர் ஆக விரும்பும் ஆகாஷ், வெள்ளந்தியான சிரிப்புடன் தன் குடும்ப பின்னணியைச் சொன்னான். பிறகு இவன் பாடிய கானா பாடலுக்கு ‘இறங்கி’ குத்தி ஆடினார் பொன்னம்பலம். அருமையான காட்சியாக இருந்தது அது. ‘பால்வாடிக்கு’ செல்லும் தங்கச்சிதான் ‘எம் அம்மாவைப் பார்த்துக்கறா’ என்று சொன்னான் முத்து.

எதற்காகவோ கலங்கிய காயத்ரியை அனைவரும் சமாதானப்படுத்தினார்கள். ‘ஸ்டோர் ரூம்’ அலார்ம் பெல் அடிக்க சென்று பார்த்ததில் குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் இருந்தன. பென்சில், பேனா என்று அவர்களின் படிப்பிற்கான பொருட்கள் இருந்தன். அவற்றை குழந்தைகள் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டார்கள். “எனக்கு சிவப்பு கலர் டப்பா வேணும்’ என்றான் ஒரு சிறுவன். குழந்தைகளின் உலகத்தின் களங்கமின்மைகள்.


“நாங்க நிச்சயமாக வந்து உங்களைப் பார்ப்போம்” என்று பிக்பாஸ் வீடு அவர்களுக்கு உறுதியளித்தது. பிக்பாஸ்ஸிடமிருந்து ‘பிரியா விடைக்கான’ அறிவிப்பு வர, அனைவரும் வருந்தினார்கள். சிறுவன் முன்னர் போட்ட அதட்டலுக்கு தாமதமாக எதிர்வினை புரிந்தார் பிக்பாஸ். ‘ஆலுமா டோலுமா’ பாடல் அதிரடியாக ஒலிக்க சிறார்களின் நடனத்தில் வீடே ரகளையானது. மனமே இல்லாமல் குழந்தைகளை வழியனுப்பி வைத்தார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
சிறார்களின் சிக்கலான குடும்ப பின்னணியும் அவர்களின் களங்கமில்லாத தன்மையும் ஒவ்வொரு போட்டியாளரையும் கலங்க வைத்ததில் ஆச்சரியமில்லை. ‘சிறிது காலத்திற்கு உறவுகளைப் பிரிந்திருப்பதே நமக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறதே.. அவர்களின் வாழ்க்கையே அப்படித்தானே அமைந்திருக்கிறது!’ என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கலங்கினார்கள். வைஷ்ணவியின் உருக்கம் சற்று மிகையாக இருந்தது போல் பட்டது. ‘பிக்பாஸ்’ போட்டியில் இருந்து விலகிய பிறகு ‘அவர்களை’ சென்று பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். முத்துவின் தாயாரின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் பேசிக் கொண்டது நல்ல விஷயம்.


ஆனால் இதற்கு இன்னொருபுறமும் இல்லாமல் இல்லை. ‘காமிராவின் முன்னால் நடித்தவர்கள் யார்?” என்பதை பாலாஜி வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தார். ‘டேனி காமிரா முன்பு பயங்கரமாக நடிக்கிறார்’ என்பது அவருடைய புகார். ‘ஒரு குழந்தையாவது இவங்க தத்தெடுத்துக்கட்டும்.. பார்க்கறேன்’ என்பதும் அவரது எரிச்சலான அபிப்ராயங்களில் ஒன்றாக இருந்தது. ‘ஒரு பையன் ரொம்ப அழுதிட்டு இருந்தான். என்னன்னு விசாரிச்சா… வைஷ்ணவி.. ‘உஷ்.. உஷ்..’னு என்னை அடக்குது.. “நீ அன்னை தெரசாவாகவே இரும்மா’ ன்னு நெனச்சிக்கிட்டேன்’ என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார் பாலாஜி. ‘ரேஷன் பிரச்னை காரணமாக இந்த வாரம் பெரிய பஞ்சாயத்து வெடிக்கும்’ என்பது அவருடைய ஆருடம்.


piபாலாஜி சொன்னதைப் போல மற்றவர்களுக்காக இரங்குவது போல் போலித்தனமாக நடிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சக உயிரின் துன்பத்தைக் கண்டு தன்னிச்சையாக இரங்குவதும், உதவி செய்ய முன்வருவதும் மானிட குலத்திற்கு ஆதாரமாக இருக்கிற, இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளுள் ஒன்று. பாசாங்குகளை மீறியும் இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


ஆதரவு அற்ற சமூகத்திற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருந்தால் அதுவே இன்றைய நாள் நிகழ்ச்சியின் வெற்றியாக இருக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!

பிக்பாஸின் கடந்த சீஸனில் முழுமையாகவும் சரி, இந்த சீஸனில் இதுவரையும் சரி, இப்படி நடந்ததேயில்லை. வீட்டுக்குள் எத்தனை அடித்துக் கொண்டாலும் சனி, ஞாயிறுகளில் கமல் முன்னால் பள்ளிப்பிள்ளைகள் போல் அமர்வதுதான் போட்டியாளர்களின் வழக்கம். (சண்டையா?! அது எங்கேயாவது தூத்துக்குடியிலோ.. திருநெல்வேலியிலோதான் இருக்கும்!). ஆனால் இன்றைய தினம் நேர்மாறாக தாறுமாறுடன் அமைந்தது. ஒவ்வொருவருமே உணர்ச்சிப்பிழம்பமாக இருந்தார்கள். ‘உள்ள வராத.. இது ரத்த பூமி’ என்பதை கலவரம் செய்து நிரூபித்தார்கள்.


‘நான் கேக்கறேன்.. பஞ்சாயத்தாடா..இது.. பஞ்சாயத்தே இல்ல.. மரியாதை இல்லாத இடத்துல எனக்கும் வேலையும் இல்ல” என்கிற தேவர் மகன் ‘சிவாஜி’ மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கமல் கிளம்பி விடுமளவுக்கு இன்றைய தினம் ரணகளமாக இருந்தது. ஆனால் ஒன்று, ஒவ்வொருவரின் உணர்ச்சியிலும் எத்தனை உண்மை இருந்தது பாருங்கள்! நடிப்பிற்கும் அசலுக்கும் இதுதான் வித்தியாசம். இந்த துல்லியமான உணர்ச்சிகளை அவர்களால் படப்பிடிப்பில் தரவே முடியாது.
இந்தப் பஞ்சாயத்தில் பேசப்பட்ட சர்ச்சைகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.


‘ஒருவரின் ஆளுமையை தீர்மானிப்பதில், உருவாக்குவதில் அவர் படித்த கல்விக்கூடம் முக்கிய பங்கை வகிக்கிறது’ என்கிற உண்மையை பொன்னம்பலத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய முரட்டு முகத்தின் பின்னால் இருந்த, நாம் அறியாதிருந்த பின்னணியை அறிந்து கொள்ள முடிந்தது. ‘அப்பா..இல்ல.. அம்மா வரல.. நானேதான் போய் ஏவிஎம் செட்டியார் பள்ளிக்கூடத்துல போய் சேர்ந்தேன்’ என்று பொன்னம்பலம் சொன்னது உருக்கமானது. (‘எதிர்க்க இருந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன்’ என்றார் கமல் டைமிங்காக). வணிக நோக்கமின்றி கல்விக்கூடங்கள் அமைவது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆதாரமான சமூக விஷயம் என்று கமல் ஆதங்கப்பட்டதும் கலங்கியதும் உண்மையானது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
பொன்னம்பலத்திடம் இரண்டு பிரச்னைகள் இருப்பதாகப் படுகிறது. ஒன்று, தலைமுறை இடைவெளி. இளையவர்கள் அடிக்கும் லூட்டிகளை பெரியவர்களால் சகித்துக் கொள்ளாமல் எரிச்சல் அடைவது. எனவேதான் ‘டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா’ ஆகியோரின் கூத்தும் கும்மாளமும் இவரை எரிச்சல் அடைய வைக்கின்றன. இன்னொன்று, தமிழ்நாடு, கலாசாரம், பண்பாடு என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி அற்ப விஷயங்களை ஊதிப்பெருக்குவது. இதுவும் தலைமுறை இடைவெளியின் இன்னொரு வடிவமே. இதில் ஆணாதிக்க உணர்வும் கலந்துள்ளது. “பொம்பளைங்க பொம்பளைங்களா இருக்கணும்” என்பது போன்ற திரைப்பட வசனங்களின் நடைமுறை பாத்திரங்கள் இவர்கள்.

தன்னருகே அமர்ந்திருந்த ஐஸ்வர்யா, தன் மேல் படும்படியாக கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தார் என்பது இவர் முன்வைக்கும் பிரச்னைகளுள் ஒன்று. ‘தன் உடை காரணமாகவும் மிக முக்கியமாக காலில் அடிபட்டிருந்தாலும் அப்படி உட்கார நேர்ந்த காரணத்தை ஐஸ்வர்யா விளக்கியும் பொன்னம்பலத்தால் ஏற்க முடியவில்லை. கமல் சுட்டிக் காட்டியது போல் இதில் கலாசார பிரச்னையும் கலந்தே உள்ளது. கால்மேல் கால் போட்டு அமர்வது மேலை நாடுகளில் இயல்பான பழக்கம். ஆனால் இங்கு அது அவமரியாதையாக பார்க்கப்படுகிறது.


ஒரு பழைய சம்பவம். கமல்ஹாசனின் ரசிகர்கள் கூட்டத்தில், கமலின் வேண்டுகோளுக்கிணங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். தன் இயல்புக்கேற்ப ஜெயகாந்தன் மேடையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த போது, ரசிகக் குஞ்சுகளில் ஒருவர் கோபப்பட்டு ‘என் தலைவன் முன்னாடியா கால் போட்டு உட்கார்ந்திருக்க? காலை கீழே போடு’ என்று கத்த, கமல் இதில் உடனே தலையிட்டு கூச்சல் போட்ட ரசிகரை அழைத்து கோபித்து ஜெயகாந்தனிடம் மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது.


இன்னொன்று, ஒரு படப்பிடிப்பில் மூத்த முன்னணி நடிகர் ஒருவர் உள்ளே நுழையும் போது, அனைவரும் மரியாதை கலந்த பக்தியுடன் எழுந்து நிற்க, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நடிகை சிலக் ஸ்மிதா, அப்படியே அமர்ந்திருந்தாராம். “ஏங்க இப்படி பண்ணீட்டீங்க?” என்று பிறகு ஒருவர் விசாரிக்கும் போது “நான் அணிந்திருந்த கவர்ச்சியான உடை விவகாரமாக இருந்தது. கால் மீது கால் போட்டு மறைத்துக் கொண்டிருந்தேன்’ என்று அவருடைய நோக்கில் சொல்லப்பட்ட காரணத்திலுள்ள நியாயம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

‘இளம் வயதுகளில் நாமும் அப்படித்தானே ஜாலியாக இருந்தோம்” என்கிற நோக்கில் இளம் தலைமுறையினரின் மனவோட்டங்களைப் புரிந்து கொண்டு முதிர்ச்சியாக நடக்கும் பொறுப்பும் பெருந்தன்மையும் பெரியவர்களுக்கு வேண்டும். இளையவர்களிடம் நிதானமாக அவர்களின் பிரச்னைகளைச் சுட்டிக் காட்டினால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். பலருக்கு இந்தப் பொறுமையும் முதிர்ச்சியும் இருப்பதில்லை. இதன் மறுமுனையில், பெரியவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்ப்பதில் இளையவர்களின் பங்கும் இருக்கிறது. இதற்காக தங்களின் தனித்தன்மைகளில் இருந்து, இயல்புகளிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டியதில்லை. “இது என் நேச்சர்” என்று ஐஸ்வர்யா பொங்குதவற்கும் இதுதான் காரணம்.


இப்படி பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதில்தான் ‘குடும்பம்’ என்கிற நிறுவனத்தின் அழகும் பெருமையும் இருக்கிறது. ஆனால் ‘பிக்பாஸ்’ வீடு செயற்கையாக உருவாக்கப்பட்ட, தற்காலிகமான வீடு என்பதால் ‘இவர் தங்களின் குடும்ப உறுப்பினர்’ என்கிற எண்ணம் அவர்களுக்குள் படியவில்லை. அப்படி உடனே படிந்து விடும் என்று எதிர்பார்க்கவும் முடியாதுதான் . ஆனால் – இவை சார்ந்த சகிப்புத்தன்மையோடு இந்த விளையாட்டை விளையாடுவதுதான் இதிலுள்ள அடிப்படை சவாலே. இது பலருக்குப் புரியவில்லை. தங்களின் செளகரிய எல்லைகளில் இருந்து இறங்கி வரும் சகிப்புத்தன்மை இங்கு பலருக்கு இல்லை.


தமிழ்நாடு, கலாசாரம் என்று தொடர்ந்து பேசும் பொன்னம்பலம் அதற்கு முன்னுதாரணமாகவும் இல்லை. பெண்கள் குறித்து கொச்சையாக பேசுவது, இளையவர்களின் பிழைகளை கோபத்துடன் சுட்டிக்காட்டுவது, இது குறித்து தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டும் புறம்பேசிக் கொண்டும் இருப்பது’ என்று எதிர்மறையான விஷயங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார். இதுவா தமிழ் கலாசாரம்? ‘வந்தாரை வாழ வைப்பதும்’ தமிழ் கலாசாரம்தான்’ என்பதை ‘பொன்னம்பலம்’ போன்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

**


எளிமையான உருவம் மற்றும் பின்னணி காரணமாக இந்த வீட்டில் சென்றாயன் பல்வேறு விதங்களில், பல சமயங்களில் சிறுமைப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இத்தனைக்கும் எடிட் செய்யப்பட்ட, நாம் காணும் சுருக்கமான காட்சிகளிலேயே இதனை உணர முடிகிறது என்றால் 24 மணி நேரத்தில் அவர் என்ன பாடுபடுகிறார் என்பதை நன்றாகவே யூகிக்க முடிகிறது. (பாலாஜி சென்றாயன் குறித்து செய்யும் மிகையான கிண்டல்களை டேனி குறிப்பிட்டது ஓர் உதாரணம்).


ஆனால் சென்றாயன் இன்று குறிப்பிட்டது அவருக்கு வலு சேர்க்கும் காரணமாக அமையவில்லை அவருக்கு ஏற்பட்டிருந்த பல அழுத்தங்கள் இந்தப் புள்ளியில் வந்து வெடித்தது என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


நீச்சல் குளத்தில் சென்றாயனின் மூக்குச்சளி விழுந்ததால் அருவருப்படைந்து விலகினோம் என்று மற்றவர்கள் சொல்வதை ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘எளியவர்களின் சார்பாக பேசுகிறோம்’ என்று இதை பூசி மெழுக முடியாது. (‘பயங்கரமான quantity’ என்ற வைஷ்ணவி போல் மிகைப்படுத்தவும் தேவையில்லை). நம் வீடுகளில், நம் நெருங்கிய உறவுகளிடம் இருந்து வெளிப்படும் இம்மாதிரியான விஷயங்களுக்கு நாம் தன்னிச்சையாக அருவருப்படைவோம் என்பதுதான் நிஜம் மற்றும் யதார்த்தம். ஆனால் அவர்கள் உறவுகள் என்பதால் மிதமான கோபத்தை வெளிப்படுத்துவோம். அந்நியர்கள் என்றால் வெளிப்படையான அருவருப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவோம். இதுதான் சென்றாயன் விஷயத்திலும் நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம். ‘மஹத் தன்னை தலைகீழாக தள்ளி விட்டதால்தான் அப்படி நடந்தது’ என்று சொன்ன சென்றாயனின் தரப்பையும் கவனிக்க வேண்டும்.

இதில் சென்றாயனின் தவறு ஏதுமில்லை. மேலும் இது இயல்பாக கடந்திருக்க வேண்டிய பிரச்னைதான். ‘நியாயமாகவே இருந்தாலும் கூட தம் செயலால் ஒருவர் ஆழமாக புண்பட்டிருக்கிறார்’ என்றால் அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் நாகரிகம். அந்தச் சபையில் இதற்காக சென்றாயனிடம் மற்றவர்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் அவர்களின் முதிர்ச்சி வெளிப்பட்டிருக்கும்.


கமல் சொன்னது போல நதிக்கரை நாகரிகத்தில் பல்வேறு அழுக்குகளுடன் கலந்துதான் சில விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன. எவ்வித பொறுப்பும் இல்லாமல் இயற்கையை மாசுபடுத்தும் மனிதகுலம்தான் இதற்கு பிரதான காரணம். சில விஷயங்களை நேரடியாக கண்டால் நம்மால் அதை நுகரவே முடியாது. உதாரணத்துக்கு பல ஹோட்டல்களின் சமையல் கூடங்களைச் சொல்ல முடியும்.

அடிப்படை விஷயங்களில் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்தான். ஆனால் மிகையான சுத்தத்தை எதிர்பார்த்தால் வாழ்க்கையே நரகமாகி விடும். தங்களின் செளகரிய எல்லைக்குள் வெளியே வரும் போது இவர்களைப் போன்றவர்கள் தவிக்க வேண்டியிருக்கும். ஆனால் இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ‘எல்லாவற்றிலும் சுத்தம் பார்ப்பது’ என்கிற பாவனையும் ஒரு மேட்டிமைத்தனமே. ‘நான் ஆச்சாரமாக இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்வதின் மூலம் சக மனிதனை விட நான் உயர்ந்தவன்’ என்கிற ஆபத்தான செய்தியும் இதனுள் ஒளிந்திருக்கிறது. பல்லாண்டு கால சமூகப்படி நிலைகளின், பாரபட்சங்களின் ஊற்றுக்கண்களில் மேட்டிமைத்தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே இது சார்ந்த சமநிலையும் சகிப்புத்தன்மையும், மிக குறிப்பாக இன்னொருவர் புண்படும் படி நடந்து கொள்ளக்கூடாது என்கிற முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.


இன்னொன்று, குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் அசுத்தங்களுக்கும் தவறான பழக்கத்தின் காரணமாக பெரியவர்கள் தன்னிச்சையாக செய்யும் அசுத்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (சாலையில் முன்னால் செல்லும் ஒருவர் ‘கர்… ரென்ற சதத்தத்துடன் மூக்கைச் சிந்தி சளியை எறிந்தால் நிச்சயம் அருவருப்பாகத்தான் இருக்கும். அது ஆரோக்கிய கேடும் கூட).அடுத்தது, ‘டேனி’ கடைந்தெடுக்கப்பட்ட விவகாரம். இந்த சீஸனின் வலுவான, இறுதி வரைக்கும் வரக்கூடிய போட்டியாளர் என்று டேனியை கணிக்க முடிகிறது. அவருடைய வயதுக்கேற்ற விளையாட்டுத்தனங்களையும் தாண்டி, பல விஷயங்களை மிக முதிர்ச்சியாக கையாள்கிறார். ஒரு சர்ச்சையை அதிகம் பெரிதாக்காமல் இயல்பாக அவர் கட்டுப்படுத்த முனைவது பல சமயங்களில் கவர்கிறது. அவர் திறமையான போட்டியாளராக இருப்பதாலேயே பலரின் பகைமைகளைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிறது.

குறிப்பாக பாலாஜியைச் சொல்லலாம். டேனியுடன் நேரடியாக மோத முடியாத பாலாஜி, மஹத் மற்றும் ஷாரிக் போன்ற பலியாடுகளின் மூலமாக தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்று தோன்றுகிறது. பொன்னம்பலத்திடம் இருப்பது தலைமுறை இடைவெளி பிரச்னைதான். ‘நல்ல குதிரைகளை டேனி கெடுக்கிறார்’ என்று பொன்னம்பலம் பாவனையாக கவலைப்படுவதற்கு காரணம், யாஷிகா, ஐஸ்வர்யா மீதுள்ள அக்கறையால் அல்ல. டேனி மற்றும் இளையதலைமுறை மீதான பொதுவான எரிச்சலே என்று யூகிக்கத் தோன்றுகிறது. இது பல முதியவர்களிடம் உள்ள பிரச்னை.


தான் உரக்க பேசுவதும், கிண்டல் செய்வதும் சிலரைப் புண்படுத்துகிறது, அசெளகரியமாக்குகிறது என்றால் தன்னுடைய இயல்பு கெடாமல் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதுதான் டேனியின் சரியான எதிர்வினையாக இருக்க முடியும். ஒரு பிரச்னையை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசாமல் சமயங்களில் புறம் பேசுவது டேனியிடம் உள்ள பலவீனங்களுள் ஒன்று.

ஒரு கூட்டத்தில் குழு அமைவது என்பது தன்னிச்சையானதொன்று. எதைக் கொண்டும் அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இந்த நோக்கில் பிக்பாஸ் வீட்டில் அமைந்திருக்கும் குழு என்பது முதியதலைமுறை x இளைய தலைமுறை என்கிற வகையில் அமைந்திருப்பதை காண முடிகிறது. தோற்றம், வர்க்கம், கலாசாரம் போன்ற வகையில் அமைந்த பிரிவுகளும் இடையில் கலந்துள்ளன.


**


கமலின் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்த போன இன்றைய நிகழ்ச்சியின் சம்பவங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.


முப்பது நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், போட்டியாளர்கள் “அரைக்கிணறு தாண்டிடாங்கன்னு சொல்வாங்க.. இவங்க மூன்றில் ஒரு பங்கு தாண்டிட்டாங்களா. இல்ல.. தங்கிட்டாங்களா’ என்கிற ஆதாரமான சந்தேகத்தை கமல் எழுப்பினார். ‘அன்புல முங்கணும்.. ஆனா சண்டைல தொங்கிக்கிட்டிருக்காங்க’ என்று பார்வையாளர்களில் ஒருவர் சொன்னதை கமல் வழிமொழிந்தார். ‘இவர்கள் எப்போது நண்பர்களாகிறார்கள், எப்போது பகைவர்களாகிறார்கள்’ என்பது புரியவில்லை” என்றார் கமல். (“நான் சினிமாவைச் சொல்லலை’ என்கிற நையாண்டி வேறு).

இந்த வாரச் சம்பவங்களின் recap முடிந்த பிறகு, பார்வையாளர்களிடமிருந்து (பிக்பாஸிற்கு சம்பந்தமில்லாதவையும் சேர்த்து) சில கேள்விகள் வந்தன. ‘உங்க கவிதையும் அதை நீங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்குப் பிடிக்கும்” என்று ஒருவர் ஆரம்பித்தார். (பார்வையாளர்களையும் கமலே கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார் போலிருக்கிறது).


‘எத்தனை சாதனை கதிரவனுக்கு! / குந்தியை கருவுறுத்தி கர்ணசிருஷ்டி செய்தது முதல்/ என் சோலார் வாட்ச்சுக்கு சாவி கொடுத்த வரை. (எண்ட்டர் அடிச்சா கவிதை!) சிறுவயதில் எழுதிய இந்தக் கவிதையை சுஜாதா போன்றவர்கள் பாராட்டியதால் கமல் தொடர்ந்து கவிதை எழுதுகிறாராம்.


‘இந்தியன் 2 எப்ப வரும்?” என்றொரு முக்கியமான கேள்வியை இன்னொரு பார்வையாளர் கேட்டார். (விட்டா.. மருதநாயகம் எப்ப வரும் –ன்ற நூற்றாண்டு கேள்வியையும் கேட்டு இம்சை பண்ணிட்டே இருப்பாங்க போலிருக்கு!). ‘Wild card entry’ எப்ப வரும்?” னு உண்மையாகவே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஒரு பார்வையாளர். (இது சார்ந்த எதிர்பார்ப்பு நமக்கே இருக்கிறது. அந்தளவிற்கான சலிப்பு நிகழ்ச்சியில்). ‘அடுத்த நிமிட ஆச்சரியங்கள்தானே இந்த நிகழ்ச்சியின் அடிப்படை. எப்ப வேணா வரும்! நானும் போட்டியாளர் கிட்ட இதை சொல்லி அவங்க ஏதாவது புரிஞ்சுக்கறாங்களான்னு பார்க்கறேன்’ என்றார் கமல்.

‘பிக்பாஸ் மேடையை நீங்கள் அதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?’ என்றொரு விவகாரமான கேள்வி வந்தது. (எதிர்க்கட்சிக்காரன் போலிருக்கிறது!). “பிக்பாஸ் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார். மக்களோடு அளவளாவ நான் இந்த மேடையை பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று வழக்கமான புராணத்தைப் படித்தார் கமல். ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளையும்’ கமல் உருக்கத்துடன் நினைவுகூர்ந்தார். (அவரைப் பற்றி தெரியாமல் பிறந்த தலைவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம்!).


இதைத் தொடர்ந்து 34-ம் நாளின் நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. ஒரே திரைப்படத்தின் பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் ஒலிபரப்புவது பிக்பாஸ் வீட்டின் வழக்கம் அல்ல. விதிவிலக்காக ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது. (இளையராஜாவின் தீவிரமான ரசிகர் அங்கே ஒருவர் இருக்கிறார் போலிருக்கிறது) ‘வதனவதன வடிவேலனே’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது.


“எதுக்காக பாலாஜியை உள்ளே போட்டே” என்று டேனியிடம் காலையிலேயே பஞ்சாயத்தை துவக்கி வைத்தார் வைஷ்ணவி. அந்தப் பகுதியின் தலைப்பு ‘நேர்மையாகவும் துணிச்சலாகவும் பதில் சொல்கிறவர்களைப் பற்றியது”. எனில் இந்த நோக்கில் பாலாஜி நேர்மையாகத்தானே பதில் சொன்னார்! என்பது வைஷ்ணவியும் ரம்யாவும் முன்வைக்கும் நியாயமான கேள்வி. ‘என் இஷ்டம். அதனால்தான்” என்று மழுப்பலாக, மொண்ணையான பதிலைத் தந்தார் டேனி. “தவறு என்று தெரிந்த பிறகும் புறம் பேசுவதை பாலாஜி தொடர்வது நேர்மையற்ற செயல்’ என்று அவர் கருதியிருக்கலாம்.


‘பாலாஜியின் தண்டனை முடிவடைந்ததாக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. (குற்றம் செய்த அரசியல்வாதிகள் சிறைக்குப் போகாமல் ஜாமீனிலேயே தப்பிப்பதை பிக்பாஸ் அரசியல் நையாண்டியாக உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது). “நித்யா don’t cryடா.. வெளியே வந்துட்டேன்’ என்று காமிராவின் முன்னால் சொல்லிய பாலாஜி ‘என்னது.. உள்ளேயே இருடா’வா என்று வேறு தொனியில் சொன்னது ரசிக்க வைத்தது. இது போன்ற சமயங்களில் பாலாஜி மிகவும் கவர்ந்து விடுகிறார்.
‘வாஸ்து’ சரியில்லாத கிச்சனில் அடுத்த பிரச்னை உருவெடுத்தது. ‘குடமிளகாயை’ இந்த வாக்கில் வெட்டினால் எளிது என்று டேனி தந்த யோசனையை ஏற்க வைஷ்ணவி தயாராக இல்லை. ‘என்னுடைய பாணியில்தான் சமையல் செய்ய முடியும். தொந்தரவு செய்யாதே’ என்பது அவரது மறுப்பாக இருந்தது. டேனி தன்னை ‘டார்க்கெட்’ செய்து கிண்டல் செய்கிறார் என்கிற எண்ணம் அவரது மனதில் அழுத்தமாக படிந்து விட்டதால் அவர் சொல்லும் அனைத்தையுமே எதிர்ப்பு மனநிலையில் பார்க்கும் உளவியல் பிரச்னை இது.


“அவன் சொன்னது நல்ல யோசனைன்னா.. எடுத்துக்க வேண்டியதுதானே.. ஏன் ஆத்திரப்படறே?” என்று வைஷ்ணவியின் நெருக்கமான தோழியான ரம்யாவே இதைச் சுட்டிக் காட்டினார். “நம்ம கிட்ட அவன் அப்படில்லாம் நடந்துக்கறது இல்ல, பார்த்தியா” என்று ஜனனி, ரம்யாவிடம் சொன்னதில் வைஷ்ணவிக்கு முக்கியமான செய்தியுள்ளது.


பிறகு இந்தப் பஞ்சாயத்தை டேனியிடம் வைஷ்ணவி மீண்டும் எடுத்துச் செல்ல, டேனி வெடித்த அந்தக் காட்சி சுவாரசியமானது. “அனந்த் சார்.. பொன்னம்பலம்.. சில குறைகளை என்னிடம் சுட்டிக் காட்டினாங்க.. திருத்திக்கிட்டேன்.. இதான் சாக்குன்னு ஒவ்வொருத்தவரா.. வந்து எதையாவது சொல்லிக்கிட்டே இருந்தா.. எப்படி.. நானும் இனிமே கேம் ஆடப்போறேன்.. என்ன வேணா பண்ணிக்கோங்க” என்று அவர் வெடித்தது நியாயமுள்ளதாகப் படுகிறது. ‘ஒரு பிரச்னையை அப்போதே பேசி கடந்து விடாமல், நிதானமாக அசைபோட்டு தொகுத்துக் கொண்டு’ வைஷ்ணவி பஞ்சாயத்துக்கு வருவது அவரை எரிச்சல்படுத்துகிறது.
இன்னொன்று, ஒரு விஷயத்தை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லி முடிக்கும் திறமை வைஷ்ணவியிடம் இல்லை. நாடகப்பாணியில் நீட்டி முழக்கி சொல்வது சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. (டேனிக்கு வால்யூமை குறைக்கத் தெரியலைன்னு சொல்ற மாதிரி.. உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தெரியலை’ என்று கமல் நையாண்டி செய்ததும் இதைத்தான்).


“முதலில் யாஷிகா.. மஹத்’தான் என் நெருக்கமான பிரெண்ட்ஸ்ஸாக இருந்தாங்க.. இப்ப நீயும் என் க்ளோஸ் பிரெண்ட் ஆயிட்டே’ என்று டேனியிடம் உருகிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.


**


“குறள் எல்லாம் படிச்சீங்க போல.. அதுல சிலர் ‘குறள்’ உங்களை படிச்சது –ன்னு நினைச்சீங்க.. இல்லையா..’ என்று நுட்பமான கிண்டலை வைத்தபடி ‘அகம் டிவி’க்குள் நுழைந்தார் கமல். (நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. பின்றாம்ப்பா..)


“எல்லாமே நடிக்கறாங்க’ன்னு ஒரு புகார் இருக்கு. ‘நான் இயல்பாகத்தானே இருக்கேன்.. இன்னமும் என்னதான் செய்யறது’ என்று இன்னொரு பிரிவும் இருக்கு’ விளக்குங்க என்றார் கமல். ‘பெரும்பாலோனோர் நடிக்கிறார்கள்’ என்கிற முதல் பிரிவில் பாலாஜி, சென்றாயன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ‘நாங்க. நாங்களாத்தான் இருக்கோம்’ என்கிற இன்னொரு பிரிவில் மும்தாஜ், ரம்யா போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே அவரவர்களின் தரப்புகளை, காரணங்களை சொன்னார்கள்.

“சென்றாயன் வெகுளி-ன்றாங்க.. அப்படியே அவர் நடிக்கத் துவங்கி விட்டார்’ என்று உரிமையுடன் சென்றாயனை மேற்கோள் காட்டினார் பாலாஜி. ‘சொல்லப்பட்டதை மறந்து விடுவது.. விதண்டாவாதம் செய்வது’ போன்ற காரணங்கள் பொன்னம்பலத்தின் மீது சொல்லப்பட்டன. ‘சீரியஸான விஷயமா இருந்தா ஞாபகம் வெச்சுப்பேன்’ என்று விளக்கம் அளித்தார் பொன்னம்பலம். (இவருக்கு நினைவுப்படுத்தி பேசறதுக்குள்ள நான் எலிமினேட் ஆகி வெளிய போயிடுவேன்’ என்று ஜாலியாக கலாய்த்தார் பாலாஜி).


ஆக.. ‘சகிப்புத்தன்மையுடன் குடும்பமாக இயங்குவது, அதன் மீதான சவால்களை நேர்மறை உணர்வுகளுடன் கடப்பது’ போன்ற இந்த விளையாட்டின் அடிப்படைகளை பின்பற்றும் பக்குவம் இந்தப் போட்டியாளர்களில் பலரிடம் இல்லை. (ரம்யா, ரித்விகா, ஜனனி போன்றவர்கள் இந்த நோக்கில் சாத்தியமான எல்லைக்குள் ஒளிர்கிறார்கள்).


சென்றாயனின் “மூக்குச்சளி’ பிரச்னையை ‘எம்.ஜி,ஆர்’ பாணியில் எளியவர்களுக்காக வாதாடும் பாணியில் கமல் எடுத்துச் சென்ற போது மற்றவர்கள் பாதுகாப்பாக அடங்கி விட்ட சூழலில் ‘அது சரியல்ல..” என்று உறுதியாக மறுத்த மும்தாஜின் நேர்மையும் துணிச்சலும் பாராட்டத்தக்கது. (அவருடைய அதீதமான சுத்தவுணர்வு ஒருபக்கம் சரியல்ல என்றாலும்). இதைப் போலவே ஐஸ்வர்யாவிடம் பொன்னம்பலம் சத்தம் போட்ட போது, தாய்ப்பறவை தன் குஞ்சை பாதுகாக்கும் வேகத்தில் மும்தாஜ் தலையிட்டது அற்புதமான காட்சி. ‘நான் பஞ்சாயத்து செய்ய முனையும் போது நான் சொல்வதைக் கேட்டு நட” என்றதும் பின்பு கலங்கிய ஐஸ்வர்யாவைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னது.. போன்ற விஷயங்களில் மும்தாஜ் அதிகம் கவர்கிறார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
வேற்றுக்கலாசாரத்தில் இயங்குபவர்கள் ‘பாதுகாப்பாற்ற’ தன்மையுடன் அல்லல் படும் பரிதாபத்தையே ஐஸ்வர்யாவும் எதிர்கொள்கிறார். ‘எப்பப்பாரு.. தமிழ்நாடு.. பொம்பளை. இப்படித்தான் இருக்கணும். ‘என்று பொன்னம்பலம் தரும் மனநெருக்கடி அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘இங்குள்ள கலாசாரம் புரிகிறது… பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயத்தில் என் இயல்பையும் நான் கைவிட முடியாதில்லையா?” என்று எழுகிற அவரது ஆதங்கம் பெருந்தன்மையுடன் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ‘இது தமிழ் ஆடியன்ஸ்களுக்கானது. தமிழ் கலாசாரத்திற்கு ஆதரவு அதிகம் கிடைக்கும்” என்று யாஷிகா சுட்டிக் காட்டிய பாயிண்ட் மிக முக்கியமானது. பெண்களுக்கு எதிராக சர்ச்சையான வார்த்தைகளை பேசினாலும்.. சமூகத்தின் ஒரு பிரிவிடமிருந்து பொன்னம்பலத்திற்கு ஆதரவு கிடைப்பது அவர் ‘கலாசார காவலராக’ இருக்கிறார் என்பதற்காகவே.


‘சண்டே’வாவது சண்டையுடன் இல்லாமலிருக்குமா என்பதைப் பார்க்கலாம். சுவாரஸ்யமாக சண்டை போடுகிற மனநிலையில் பஞ்சாயத்து தலைவரையே புலம்ப வெச்சிட்டீங்களே. மக்களே..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.