Boiled Rice - புழுங்கல் அரிசி

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
மிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள்.

பச்சரிசி உணவை சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால்தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வளரும் குழந்தைகளுக்கு பச்சரிசி உணவுதான் ஏற்றது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது.

புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால், அதில் உள்ள சர்க்கரை மெதுவாகத்தான் ரத்தத்தில் கலக்கும்.

அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. அந்த நிறம்தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது, தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
முன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பர்.
அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பர்.
இப்பொழுதெல்லாம் நெல்லை நேரடியாகவே நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது.

அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்துக் கள், இப்போது நீராவியில் வேக வைப்ப தால் முழுவதுதாக கிடைக்கின்றன.

இந்த முறையில் இன்னும் கூடுமான உயிர்ச் சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கு
ம் வாய்ப்புள்ளது.
இதனால்தான் உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசியையும்,

உடலுழைப்பு குறைவானவர்கள் பச்சரிசியையும் சாப்பிடும் முறையை நமது முன்னோர்கள் வகுத்தனர்.

nandri;siruvar malar/dinamalar
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.