both of my twins are not eating

Joined
Feb 17, 2015
Messages
1
Likes
1
Location
Chennai
#1
hi friends my twin boys are 2 year. they both not interested to eat solid foods. if i am giving anything liquid they like to drink. but they are refusing to take solid foods. i have taken them to hospital doctor asked me to leave them free if they are active with this diet. but how can i be like this. pls give me some ideas to make my kids to eat foods. [/FONT]
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Welcome to Penmai....friend.

For 2 years, if they don't take any solid food, they may continue the same for many more years too.

They need to chew the food for healthy teeth and healthy metabolism. If they are used to liquid foods, they may surely find it difficult in many ways.

So, this is not alright. What you think is right.

Hope you know to read tamil.



vomit பண்ணாலும் பரவால்லை. அப்பப்போ கொஞ்ச கொஞ்சமா கொடுத்துட்டே தான் இருக்கணும் .

நீங்க என்ன பண்ணனும் ....அவங்ககிட்ட நிறைய பேசணும் .

ஒண்ணொண்ணா காமிச்சு , இதை சாப்பிட்டா , பேச முடியும் , விளையாட முடியும் , ஓட முடியும் ...இல்லன்னா சக்தியே இருக்காது , வலிக்கும் , அப்பா மாதிரி tall ஆகலாம் . இது போல எல்லாம் பேசி பேசி தான் சாப்பிட வைக்கணும் .

சாப்பிடும்போது , பக்கத்துல வச்சுக்கிட்டு , நிறைய கதைகள் சொல்லுங்க . ராமாயணம் , மகாபாரதம் , வேற காமிக்ஸ் கதைகள் இதெல்லாம் சொல்லிட்டே ஊட்டி விட்டா , அதுல கவனம் போய் , சாப்பிடுவாங்க .

வேணும்னா , கார்ட்டூன் எல்லாம் காமிச்சுட்டே சாப்பாடு ஊட்டலாம், அதுல வர chotta bheem மாதிரி ஸ்ட்ராங் ஆகலாம்னு சொல்லுங்க .

வீட்ல மற்றவங்க சாப்பிடும்போது , அவங்களுக்கும் ஒரு தனி தட்டுல ரொம்ப கொஞ்சமா சாப்பாடு வைங்க . மத்தவங்களை பார்த்து , அவங்களும் சாப்பிட தொடங்குவாங்க .

குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.

எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும். வித்தியாசத்தை விரும்புவார்கள்.


உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.


அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.


மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.


அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.






கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணுங்க . அதுல எக்கச்சக்கமா டிப்ஸ் இருக்கு . உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கலாம் .



Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!



Attractive shapes and recipes for Kid's Food items


 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.