Brain death மூளை இறக்குமா?

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#1
BRAIN DEATH மூளை இறக்குமா? உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்
By
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை
அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான்
பார்ப்போம், பாமரர் முதல் படித்தவர் வரை உயிர்
இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும்
உள்ள நடைமுறை இதுதான்.
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு (சுவாசம்) இருக்கின்றது!
இரத்த ஓட்டம் இருக்கின்றது!
நாடி துடிப்பு இருக்கின்றது!
இதயத்துடிப்பும் இருக்கின்றது!
இருந்தும்………

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு
இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல்
உறுப்புகளை தானம் என்ற பெயரில்
கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள்
மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு
வருகின்றது, மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது
மிகவும் வேதனைப்படக்கூடிய வெட்கப்படக்கூடிய
விசயமாகும்.

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு
தேவையான அனைத்து உறுப்புகளையும்
எடுத்துக்கொள்ளும் இந்த
கொள்ளையர்கள், மாபெரும் பல
உண்மைகளை மக்களிடம் மறைத்துவிடுகின்றார்கள்.
மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்கள்,
இவர்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை
இருக்குமானால் மனச்சாட்சி உள்ள
டாக்டர்களாக இருப்பார்களேயானால்……

மூச்சு இருக்காது
இரத்த ஓட்டம் இருக்காது
இதயத் துடிப்பு இருக்காது
நாடி துடிப்பு இருக்காது
ஏன்? ஏன்? ஏன்?

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை
உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம்,
இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம்
இறந்து விட்டது என்ற சொன்ன அந்த மூளையை
உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம்,
இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்)
நின்று விடுகின்றனவே!.
ஏன்? ஏன்? ஏன்?

:typing:
My WhatsApp

(Continued)

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#2
காரணம் மூளை இறக்கவில்லை, மூளை
இயங்கிக்கொண்டுதானிருக்கின்றது.
மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கிக்கொண்டுதானிருக்கும்.
மூளை இறக்குமா? அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை
இருக்குமா? சிந்தியுங்கள்.
இது ஒரு மாபெரும் கொலை!
பெரிய மோசடி!! இந்த கொலைக்கு
மக்களும் அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை.

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல,
இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம்
பெறுவதை நான் எதிர்க்கவில்லை. உயிரோடு
இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை
தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை.
நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய
உறுப்புகள் எல்லாம் இயங்கிக்
கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது
என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி
கொலை செய்து உடல் உறுப்புகளை
தானம் என்ற பெயரில்
கொள்ளையடிப்பதைத்தான்.

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை
வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம்
பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு
விதவைகளாக நிற்பதை வெளியில்
சொல்லுவதில்லை! பல குழந்தைகள்
பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை
வெளியில் சொல்லுவதில்லை!!
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை
வெளியில் சொல்லுவதில்லை!!!.

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள்
வரை கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன. இனி
யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட
முடியாது. அப்படியே விழுந்தாலும் இவர்களிடம்
போகக் கூடாது. காரணம் மூளை இறந்துவிட்டது என்று
சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விடுவார்கள். இவர்கள்
உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை
இவர்கள் (டாக்டர்கள்) தானமாக
(இலவசமாக) செய்யமாட்டார்கள் என்பதை
மக்களே நினைவில் கொள்ளுங்கள்!
எச்சரிக்கையாக இருங்கள்!! நோக்கம் பணமே, மக்கள்
நலமல்ல!!!.

:typing:
(Continued)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#3
நம் மக்களும் மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி
விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு
உடன்படுவதுதான் ஒரு மபெரும் வேதனை.
கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள்
Brain Death (மூளை இறந்துவிட்டது) என்று
சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல
மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து
நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து
மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள
அவர்களை அவசர அவசரமாக கொலை
செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய
கொலை என்பதால் இதை
செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை
அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க
அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம்
எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம்
கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால்
இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.
1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம்
விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில
மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும், அப்படி
விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து
ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின்
விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்.

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி,
ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை
குணப்படுத்தும் சீன மருத்துவமான அக்குபஞ்சர்,
ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர்
ஹானிமன் உலகுக்கு வழங்கிய ஹோமியோ மருத்துவம்
இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக அவர்களை
பின்பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு
இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்.
இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு
மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை
மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில
மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு
அதற்கு அரசாங்கம் சேவகம்; செய்வதால்
தான் இந்த அவலங்களை, கொடுமைகளை
நாம் அனுபவிக்கின்றோம்.

:typing:
(Continued)

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#4
இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய
மருத்துவமும் இல்லை, தமிழ்நாடு மருத்துவ
கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை மக்களே
சிந்தியுங்கள்! நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு
மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்
அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்
புரிந்து கொள்ளுங்கள்.

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில
மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும்
குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம்
மறைத்து வைக்க மட்டுமே முடியும்.
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்
(Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு
ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில
வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்தமுடி
யாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக
எச்சரிக்கிறது. அவ்வாறு ஷெட்யூல்-து 51ல்
கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம்
வைத்தியம் பார்க்க கூடாது. ஷெட்யூல்-து 51ல்
வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood
Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract).
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of
Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது
பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக
மாற்றுதல்
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக்
குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள்
(Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
(Varicose Vein).

:typing:
(Continued)

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#5
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும்
கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என
இந்தியச்சட்டம் சொல்கிறது. மக்களே!
விழிப்படையுங்கள்!! உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!!!.

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை
படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள்
வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள்
திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும்
மக்களாகிய நாமும் அரசும் தான் காரணம்.
இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை
அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும்
வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும். சமீபத்தில்
198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே
ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக
வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில்
கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி
அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.
இதுவரை நடந்ததெல்லாம் மூளை இறந்துவிட்டது
என்று பொய்யான காரணம்
சொல்லி அநியாயமாக
செய்யப்பட்ட கொலைகள்
என்பதாலும், கொலை
செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள்
என்பதாலும் அரசாங்கம் இவர்களுக்கு
கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதன்
மூலம் மட்டுமே இதனை நிரந்தரமாக தடுக்கமுடியும்,
மக்களை விழிப்படையச்செய்ய முடியும்.

எனவே மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்,
அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்,
ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை
பெற நாம் தெளிவு பெற வேண்டும்
அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை
ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக
வாழ்வது சாத்தியமாகும்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

திருக்குறள் (அறிவுடைமை #0423)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர்
எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி
ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை
ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

:typing:
- The End -


 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S
#7
அடக்கடவுளே...!! இப்படியுமா மருத்துவர்கள் இருப்பார்கள்...??
இப்போ நடப்பது எல்லாமே மருத்துவம் அல்ல... வியாபராம் தான்...!! மருத்துவ கொள்ளை...!!
தடுக்க வேண்டிய அரசே கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது உச்சக்கட்ட கொடுமை...!!

ஹோமியோ... சித்தா... இதில் இல்லாத மருந்துகளே இல்லை.. பக்க விளைவுகளும் இல்லை... ஆனால் எத்தனை பேர் இதை நம்புகிறோம்...??

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.."" --- புரிந்தவர்கள் திருந்தட்டும்...!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#8

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#9
Yes, u r correct friend.

:thumbsup

அடக்கடவுளே...!! இப்படியுமா மருத்துவர்கள் இருப்பார்கள்...??
இப்போ நடப்பது எல்லாமே மருத்துவம் அல்ல... வியாபராம் தான்...!! மருத்துவ கொள்ளை...!!
தடுக்க வேண்டிய அரசே கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது உச்சக்கட்ட கொடுமை...!!

ஹோமியோ... சித்தா... இதில் இல்லாத மருந்துகளே இல்லை.. பக்க விளைவுகளும் இல்லை... ஆனால் எத்தனை பேர் இதை நம்புகிறோம்...??

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.."" --- புரிந்தவர்கள் திருந்தட்டும்...!!
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,569
Location
Chennai
#10
Non curable diseases list ivlo persa china wall madhiri pothu nama constitution la
, ena madhiri great law makers nama country la
Enna disease thaan apo alopathy medicine cure panum???:blink::blink::blink:


"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.."" @thenuraj

Unamaiyana vaarthai sister
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.