Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்ல

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#1
நீங்கள் நாய்ப் பிரியரா… பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கைகள் இப்போது வெளியே வந்து விட்டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத்தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்களுக்கு தொற்றுகிறது; அப்படி தொற்றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக கட்டுப்படுத்தி, ஏகப்பட்ட மூளை கோளாறுகளுக்கு காரணமாகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகள் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

சரி, இனி கொஞ்சம் ஆழ்ந்து போய்ப்பார்ப்போம்… பூனையிடம் அவ்வளவு சுலபமாக, பொறி வைக்காமலேயே சிக்கிக்கொள்கிறதே எலி…எப்படி? அதில் தான் இந்த ஒட்டுண்ணி பிறப்பு ஆரம்பிக்கிறது. எலி பிறக்கும் மூன்று மாதத்துக்கு உள்ளேயே ஒரு பாரசைட்…ஆம், ஒட்டுண்ணி அதன் மூளையில் உருவாகி விடுகிறது. இந்த ஒட்டுண்ணி, மூளையை அப்போதில் இருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒட்டுண்ணி பெயர் டெக்சோபிளாஸ்மா கோண்டீ.

எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது, எங்கே போகலாம், போகக்கூடாது என்பது முதல் பைத்தியமான காரியங்களை செய்வது வரை அவ்வளவையும் இந்த ஒட்டுண்ணி தான் கமாண்ட் செய்கிறது. எலிக்கு அதென்னவோ பூனை, பூனையின் சிறுநீர் என்றால் பிடிக்கும். அப்படி என்ன டேஸ்ட்டோ என்று எண்ண வேண்டாம். உண்மையில் இந்த ஒட்டுண்ணி வேலைதான் அது. எலிக்கு பிடிக்காமலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தியது ஒட்டுண்ணி.

அதனால் தான் தெரிந்தே, பூனையிடம் மாட்டி இரையாகிறது எலி. சரி, எலியை கடித்து சாப்பிட்ட பூனை, ஏப்…என்று ஒரு ஏப்பம் விட்டு விட்டு படுத்து விடும்.

இந்த பூனை வீட்டுப்பூனையாக இருக்கலாம். திரியும் பூனையாக இருக்கலாம். எலியை பிடிப்பதில் பாகுபாடு இல்லை. எலியை சாப்பிடுவதிலும் வேறுபாடு இல்லை. அப்படியே தூங்கி எழுந்த பின் டூ பாத்ரூம் போவதிலும் அவ்வளவு ஒற்றுமை.

அங்கு தான் பிரச்னையே. ஏற்கனவே, எலியை தின்றதால் அதன் மூளையில் உள்ள ஒட்டுண்ணி, பூனை மூளைக்கு போய் விடுகிறது. அது போகும் டூ பாத்ரூம் மூலம் ஒட்டுண்ணி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். வீட்டுப்பூனையாக இருந்தாலும், வெளிப்பூனையாக இருந்தாலும், இப்படி டூ பாத்ரூம் மூலம் மற்ற பூனைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பரவி விடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர் வெண்டி இங்க்ராம் தலைமையிலான குழு இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை செய்து பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்துள்ளது.

ஆராய்ச்சி முடிவுகளின் படி தெரியவந்த தகவல்கள்:

* டெக்சோபிளாஸ்மா கோண்டீ என்ற பாரசைட் தான் மனித மற்றும் உயிரினங்களின் மூளையை எல்லாவகையிலும் கட்டுப்படுத்துகிறது.

* இது ஒரு வகை ஒட்டுண்ணி. பிறக்கும் போதோ, மனிதன் மற்றும் சில உயிரினங்களுக்கு தொற்றுவதன் மூலமோ மூளையை அடைகிறது.

* பூனை, எலி போன்ற உயிரினங்களுக்கு அதன் பழக்க வழக்கங்கள், அணுகுமுறை போன்றவற்றில் மாற்றங்களை இந்த ஒட்டுண்ணி செய்கிறது.

* எந்த சமயத்தில் இந்த ஒட்டுண்ணி செயல்படும் என்று கூறுவது இயலாத காரியம். மூளையை கட்டுப்படுத்துவதில் வல்லமை படைத்தது.

* மனிதர்களை பொறுத்தவரை, மூளையை சீர்படுத்துவதை தவிர, மற்ற அபாய மாற்றங்களை செய்வது இந்த ஒட்டுண்ணி தான்.

* சிஸ்ரோபெர்னியா, பைபோலார் கோளாறு, அப்சசிவ் கம்பல்சிவ் சிண்ட்ரோம் போன்ற மூளைகோளாறுக்கு காரணமே இந்த ஒட்டுண்ணி தான்.

* பார்ப்பதற்கு சாதாரண மனிதராக தான் வளர்வர்; ஆனால் போகப்போக பழக்க வழக்கம் மாறும். அதற்கு இந்த ஒட்டுண்ணியே காரணம்.

* இந்த பழக்க வழக்கம் மாறுவது முதல் பல வகை மன, மூளை கோளாறு வருவது வரை இந்த ஒட்டுண்ணி வேலை தான்.

* பூனை மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மீன், பறவைகளுக்கும் கூட பரவும் ஆபத்து உண்டு.

* கொக்கு வாயில் தெரிந்தே சிக்கும் மீன். அப்படி மீன் நடந்து கொள்ள முதன் மூளையை ஆட்டிப்படைப்பதும் இந்த ஒட்டுண்ணியே.

* மனிதர்களை பொறுத்தவரை குழந்தை பருவத்தில் தொற்றவே வாய்ப்பு அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது செயல்பட ஆரம்பிக்கும்.

* பெண்களுக்கு அதிக அளவில் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஒட்டுண்ணி தொற்ற வாய்ப்பு அதிகம்.

*பூனை முதல் மனிதன் வரை மூளையில் தொற்றும் ஒட்டுண்ணி, முதலில் செய்வது மூளையை பலமிழக்க வைப்பதுதான்.

* அடுத்து, தன் வசப்படுத்தி, மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான். இவ்வாறு ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூட்டை தொங்கும் பழக்கம்… சிரிப்பே இல்லாத உர்ர்…

* ஓ.சி.டி: மூளை கோளாறுகளில் ஒன்று தான் அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர். இது 99 சதவீதம் பேருக்கு பல வகையில் இருக்கும். ஆபத்தான பழக்க வழக்கங்கள் அதிமாகும் போது தான் சிகிச்சை எண்ணமே வருகிறது.

* வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை பல முறை தொங்கிப்பார்ப்பது, 108 முறை பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு விட்டோமா என்று சந்தேகப்படுவது, சிறிய சத்தம் கேட்டாலும் கண்டபடி குழப்பம் அடைவது, ஏதாவது வாசம் வந்தால் சிலிண்டர் கேஸ் தானா என்று சந்தேகிப்பது இந்த வகை தான்.

* அவர் சிரிக்கவில்லை… நாம் ஏன் சிரிக்க வேண்டும் என்று உர்ர்ர் என இருப்பது, இவன் ஏன் சிரித்தான் என்று குழம்புவது, இவன் நமக்கு குழி தோண்டுகிறான் என்று நண்பனை சந்தேகிப்பதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான்.

* சிரிப்பு, அழுகை, பதற்றம், குழப்பம் எல்லாமே நார்மல் அளவை தாண்டிவிட்டால் உஷாராக இருக்க வேண்டும்.

* சிஸ்ரோபெர்னியா: சம்பந்தமே இல்லாமல் பேசுவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தெரியாத விஷயங்களில் பயப்படுவது போன்றவை தான் இந்த கோளாறு.

* பைபோலார் டிசார்டர்: இந்த கோளாறு பெரும்பாலும் பெரிய திறமைசாலிகளுக்கு வர வாய்ப்பு அதிகம். சிறிய வயதில் பெரும் சாதனைகளை செய்திருப்பர்; குறிப்பிட்ட துறையில் சாதித்திருப்பவராக இருக்கலாம். ஆனால், எதிர்காலம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ சிந்தனையே இருக்காது.

* பெரிய முடிவுகளை சுலபமாக எடுத்து விட்டதாக நினைத்து, பிரச்னை குழியில் விழுந்து விடுவர். நம்பி மோசம் போவதும் இந்த ரகம் தான். இப்படி பிரச்னைகளில் தவிப்போருக்கு மூளை பாதிப்பு தான் இந்த கோளாறு.

கர்ப்பிணியா, விலகி நில்லுங்க

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், பூனையிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர். இதற்கு காரணம், இந்த ஒட்டுண்ணியே. காரணம், இந்த ஒட்டுண்ணி, பிறக்கும் குழந்தை கருவிலேயே பாதிக்க வாயப்பு அதிகம்.
பொதுவாக, மனித உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் போது இந்த ஒட்டுண்ணி வேலையை ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி விட்டு கோளாறுகளை ஆரம்பிப்பதும் இதன் வேலை.
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
Re: கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்லே...!!

ஏற்கனவே பூனை என்றால் அலர்ஜி.. இப்போ இதை படித்து கிட்டே கூட போகமாட்டேன்...

thanks thenu..
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#3
Re: கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்லே...!!

ஏற்கனவே பூனை என்றால் அலர்ஜி.. இப்போ இதை படித்து கிட்டே கூட போகமாட்டேன்...

thanks thenu..

எனக்கும் தான் ப்ரியா...
நாய், பூனை ரெண்டுமே எனக்கு அலர்ஜி தான்....
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,485
Likes
148,300
Location
Madurai
#4
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&#2

Good Info Honey :thumbsup
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#5
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&am

Good Info Honey :thumbsup

Thanks karti...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&#2

நல்ல உபயோகமான பகிர்வு தேனு .

நல்ல வேளை, நான் இது பக்கமெல்லாம் கூட போக மாட்டேன் .
 

Lakschellam

Friends's of Penmai
Joined
Oct 8, 2011
Messages
342
Likes
414
Location
Coimbatore
#7
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&#2

Hi Thenu,

Thanks for the useful information.

Is it happens in the dog also.

My husband and son likes dog .

Lakschellam
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#8
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&am

நல்ல உபயோகமான பகிர்வு தேனு .

நல்ல வேளை, நான் இது பக்கமெல்லாம் கூட போக மாட்டேன் .

நானும்தான் அக்கா...
சில பேர் அது வாயோட வாய் வச்சி கொஞ்சுறத பார்த்தாலே நான் அந்த பக்கம் நகர்ந்துடுவேன்....!!
நமக்கு அதெல்லாம் சிங்கம், புலி மாதிரி....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#9
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&am

Hi Thenu,

Thanks for the useful information.

Is it happens in the dog also.

My husband and son likes dog .

Lakschellam

ஆமா செல்லம்...(உங்களை எப்படி கூப்பிடுறதுன்னு தெரியலை, so உங்க பேர்ல கடைசி யூஸ் பண்ணிக்கிட்டேன்...)


ஆமா நாய் கூட அப்படிதான்..., நிறைய குழந்தைகளுக்கு பிடிக்குது, அது ஏன்னு தெரியலை....
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#10
Re: Brain Parasite Infection From Cats - கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்&#2

enakkum naay poonaikkum rompa thooram....payam...araveruppu.....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.