Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
அறிவைப் பெருக்கும் தாய்ப்பால் - ஆய்வு
By
சிங்கப்பூர் தமிழ் முரசு


அதிக நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும் பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது.


குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் அறி வாற்றல் குறியீடு, அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற் கான குறியீட்டு முறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக ‘தி லன்சேட் குளோபல் ஹெல்த்’ மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்து உள்ளன.


ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறி வாற்றல் குறியீடு, சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எனவே, தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங் களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.