Breast Sizes' details-மார்பக வளர்ச்சி-அளவு குறித்த அனாவசிய

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அளவு குறித்த அனாவசிய குழப்பம் வேண்டாம்!

‘‘பருவ வயதுப் பெண்களின் தூக்கம் கெடுக்கும் விஷயங்களில் முக்கியமானது அவர்களது மார்பக வளர்ச்சி. அளவில் சிறுத்தாலும் பிரச்னை... அதிகரித்தாலும் பிரச்னை. ஆரோக்கியமான மார்பகம் என்பது அளவால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை அறியாதவர்கள் அவர்கள்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அளவின் பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணங்களையும் விளக்குகிறார் அவர்.

‘‘வயதுக்கு வந்த சில நாட்களில், பெண்களின் மார்பக வளர்ச்சியானது முழுமையடைந்து விடும். அரிதாக இருபதின் தொடக்கத்தில் இருக்கும் சில பெண்களுக்கு மார்பக வளர்ச்சி என்பது இன்னும் சற்று மேம்பட்டு, அந்த வயதுக்கே உரித்தான வளைவு, நெளிவுகளுடன் மாறும்.

மார்பக வளர்ச்சியை வைத்தே ஒரு மருத்துவர் பூப்பெய்தும் பருவத்தை கண்டுபிடித்து விடுவார்.பெண்களின் மார்பக அளவு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பல பெண்களுக்கு பூப்பெய்திய 2 - 3 ஆண்டுகளுக்குப் பிறகே மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு 20-25 வயதில்கூட மார்பக வளர்ச்சி இருப்பதாகச் சொல்வதுண்டு. சீக்கிரமே பூப்பெய்திய பெண்களுக்கு, பதின்ம வயதில் மார்பகங்களின் வளர்ச்சி முழுமையடைவதை உணரலாம்.

மார்பக அளவுகளில் காணப்படுகிற வித்தியாசத்துக்கு முக்கிய காரணம், அந்தப் பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களே. கர்ப்ப காலத்தில் மார்பகங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். பால் சுரப்பிகள் மற்றும் சுரப்புக் குழாய்களின் வளர்ச்சியே இதற்குக் காரணம். பருவ வயதில் உள்ள பெண்களின் மார்பகங்கள் பெரும்பாலும் கொழுப்பு நிறைந்தது. கருவுற்றிருக்கும் போதோ, அந்த கொழுப்பு மறைந்து பால் சுரப்புக்கு இடம் அளிக்கும்... காம்புப் பகுதிகள் அடர் நிறத்துக்கு மாறும்.

குழந்தைக்கு அதன் உணவு உள்ள இடம் அதுதான் என்பதை சுட்டிக் காட்டுவதற்கான ஓர் அறிகுறி அது. கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் மார்பகங்கள் பால் சுரக்க ஏதுவாக முழு வளர்ச்சியுடன் தயாராக இருக்கும்.சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரொம்பவும் ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள், எடை கூடினால் அதன் விளைவாக மார்பக அளவிலும் மாற்றத்தை உணர்வார்கள்.

சிறிய மார்பகங்கள் எப்படிக் கவலை தருகின்றனவோ அதுபோல பெருத்த மார்பகங்கள் குறித்தும் கவலைப்படுகிற பெண்கள் உண்டு. பெரிய மார்பகங்கள் சீக்கிரமே தொய்வடையும் என்கிற பயமும் சேர்ந்து கொள்ளும். அதுவும் அனாவசியமானது. மார்பகங்களின் தளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.மார்பகங்களின் அளவு என்பது ஜீன்களையும் உடல்வாகையும் பொறுத்தது.

ஏற்கனவே சொன்னது போல, ஒல்லியான உடல்வாகுள்ளவர்களுக்கு, மார்பகங்களில் கொழுப்புத் திசுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றின் அளவும் சிறியதாக இருக்கும். பருமனானவர்களுக்கு கொழுப்புத் திசுக்களின் காரணமாகவே மார்பகங்களும் பெரிதாகக் காணப்படுகின்றன.

எடையைக் குறைப்பவர்களுக்கு, உடலின் பல பகுதிகளிலும் உள்ள கொழுப்பு கரைவதைப் போல, மார்பகக் கொழுப்பும் குறையும். விளையாட்டு வீராங்கனைகளின் உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதாலேயே அவர்களுக்கு மார்பகங்கள் சிறுத்துக் காணப்படுகின்றன. மார்பகங்களைப் பெரிதாக்கவென எந்த உடற்பயிற்சியும் கிடையாது. ஏனென்றால், அந்தப் பகுதிகளில் தசைகள் கிடையாது.

தூங்குகிற நிலையோ, உள்ளாடை அணிவதாலோ, அணியாமலிருப்பதாலோ, பால், வேர்க்கடலை போன்றவற்றை உண்பதாலோ மார்பகங்களின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியாது. ஆனால், சத்தான உணவு என்பது உடல் ஆரோக்கியத்தைப் போலவே மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கும் அவசியம்.

மெனோபாஸ் காலத்திலும் மார்பகங்களின் அளவுகளில் மாற்றம் உண்டாகும். பால்சுரப்பு இயக்கமும் பால் சுரப்பிகளும் சுருங்கத் தொடங்கும். அதன் விளைவாக மார்பகங்களின் அளவும் சிறியதாக மாறும். சில பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு மார்பகங்கள் பெருத்துப் போவதும் உண்டு. பால் சுரப்பிகளுக்குப் பதிலாக நிறைய கொழுப்புத் திசுக்கள் இருந்தால், மார்பகங்கள் மென்மையாக இருக்கும்.

மேலும் இணைப்புத் திசுக்கள் பலவீனமடைவதால், மார்பகங்கள் உறுதித் தன்மையை இழந்து, தளர்ந்து போகும்...’’மார்பகங்களைப் பெரிதாக்க எந்த உடற்பயிற்சியும் கிடையாது... எந்த மருந்தும் கிடையாது!
 

Priyathozhi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 11, 2011
Messages
453
Likes
635
Location
coimbatore
#2
Re: மார்பக வளர்ச்சி-அளவு குறித்த அனாவசிய கு&#2

Hai pa

I have big breasts but I can't feed my baby after 6 months . In that 6 months also my baby didn't get enough from me. Someof them told in your breast you have cholesterol so that you can't feed. Is it true? And my question was any exercise can reduce my breast size? Please help me. Thank you
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#3
Re: Breast Sizes' details-மார்பக வளர்ச்சி-அளவு குறித்த அனாவசி&#2

Thanks for the details.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Breast Sizes' details-மார்பக வளர்ச்சி-அளவு குறித்த அனாவசி&#2

கவர்ச்சியைத் தாண்டிய அறிவியல்!

“கவர்ச்சிக்கான அடையாளமாக மட்டுமே கவனிக்கப்படுகிற பெண்களின் மார்பகங்கள், பல விஞ்ஞான விஷயங் களையும் வித்தியாச குணங்களையும் உள்ளடக்கியவை. அதன் கவர்ச்சியில் காட்டும் அக்கறையில் கொஞ்சம், அது பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வதிலும் காட்டலாமே அனைவரும்!” என்கிறார் டாக்டர் நிவேதிதா.


“மார்பக வளர்ச்சியின் ஆரம்பமே பெண் பூப்படையும் பருவத்தின் முதல் கட்டம். அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சியும் மார்பக வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறும். பெண்கள் பூப்படையும் காலத்துக்கு ஓராண்டு முன்பாகவே மார்பக வளர்ச்சி தொடங்கிவிடும். இந்த முன்னேற்றம் பல வருடங்கள் தொடரும்.

குழந்தைப் பருவத்தில் மார்பகங்கள் தட்டையாக வளர்ச்சியின்றி இருக்கும். அடுத்ததாக மார்பகங்கள் உருவாகும் பருவம். இந்த நிலையில் மார்புக்காம்புகளும் மார்பகங்களும் சிறிது பெரிதாகி, அங்கே கொழுப்பு செல்கள் உருவாகும்.

அதையடுத்து மார்பகக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதியும் பெரிதாக ஆரம்பிக்கும். தொடக்கத்தில் இந்த மாற்றத்தை நம்மால் காண இயலாது. ஏனெனில், மார்பக வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும். ஒரே ஒரு வித்தியாசம்... காம்புப் பகுதி லேசாக துருத்திக் கொண்டு காணப்படும். ஆனாலும், அவை தட்டையாகவே இருக்கும்.அடுத்த நிலையில் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கும். தொடக்கத்தில் கூம்பு வடிவத்திலும் பிறகு உருண்டை வடிவத்திலும் காணப்படும். காம்புகளைச் சுற்றிய பகுதி கருமையாகவும் பூரிப்புடனும் மாறும்.

அந்தப் பகுதிகள் துருத்திக் கொண்டு தெரிந்தாலும், பூப்படையும் பருவம் வரை தட்டையாகவே இருக்கும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பகக் காம்புகள் விரைப்பு நிலையில் காணப்படும்.மார்பக வளர்ச்சியின் இந்த ஆரம்ப நிலைக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் செயல்பாடே முக்கியக் காரணம். அதன் விளைவாக மார்பகத்தில் கொழுப்புச் சத்து சேர்கிறது. பால் சுரப்புக்கான குழாய்கள் வளர்கின்றன. இதுதான் மார்பகங்கள் பெரிதாக வளர்வதற்கேற்ற தருணம்.

பெண் மாதவிலக்கு ஆன காலங்களில் அவளது கருப்பை புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனை சுரக்கின்றன. அது சில மாற்றங் களை உண்டாக்குகிறது. பால் சுரப்புக் குழாய்களில் பால் சுரப்பிகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணம்.

இந்த மாற்றம் நிகழும்போது, மார்பகங்களின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை உணர முடியாது. என்றாலும், இது மிக முக்கியமான ஒன்றாகும். மார்பகங்களின் முதல் கட்ட வளர்ச்சி முதல், பூப்படையும் காலத்து வளர்ச்சி வரையிலான இந்த மாற்றங்கள் சில பெண்களுக்கு 3 முதல் 5 வருடங்களும், இன்னும் சிலருக்கு 10 வருடங்கள் வரையிலும் தொடரும்.

மார்பக வளர்ச்சி நடைபெறும் போது வலியும் உறுத்தலும் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். இது இயற்கையானதே. சருமத்தில் அரிப்பும் இருக்கக்கூடும். இது தோல் விரிவடைவதை காட்டும் அறிகுறிதான்.மார்பக வளர்ச்சியின் போது ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியமான அயோடின் தேவை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான மார்பக வளர்ச்சி யில் அயோடினின் பங்கு முக்கியமானது. மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதியில் திசுக்களை விடவும் அயோடினின் அளவே அதிகம். பெண்களின் உடலி லேயே தைராய்டு சுரப்பிகளுக்கு அடுத்தபடியாக மார்பகத் திசுக்களில்தான் அதிக அயோடின் உள்ளது.

பெண்களின் மார்பக வளர்ச்சி கூடக் கூட, அவர்களது அயோடின் தேவையும் அதிகரிக்கும்.பூப்படையும் பருவத்தில் உண்டாகும் மார்பக வளர்ச்சியை முழு வளர்ச்சி என்றோ, முதிர்ந்த வளர்ச்சி என்றோ சொல்ல முடியாது. கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பக வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் முழுமையாக நடைபெறும்.மார்பக வளர்ச்சி 8 வயதில் ஆரம்பிக்கும்.

சிலருக்கு 13 வயதில் கூட தாமதமாகத் தொடங்கலாம். 14 வயதைத் தொட்டு விட்ட நிலையிலும், பூப்படைவதற்கான அறிகுறிகளான மார்பக வளர்ச்சியோ, அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சியோ இல்லாவிட்டால், அதற்கு மேலும் தாமதிக்காமல் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

15 வயது வரை பூப்பெய்தாத பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்.கருவுற்றிருக்கும் போது மட்டுமே மார்பக வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் முழுமையாக நடைபெறும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: Breast Sizes' details-மார்பக வளர்ச்சி-அளவு குறித்த அனாவசி&am

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
thank you friend
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.