Calm down from tension - மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

"டென்ஷன்."

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சகட்டத்துக்குப் போய் கை கால்களெல்லாம் உதர ஆரம்பித்து விடுகின்றன! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக் கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக் கொள்கிறது.

எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் !

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால் தான் !

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள்.போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டி விட்டது.ஆற்றை கடந்து தான் மறு கரைக்கும் போக வேண்டும்.எனவே பரிசல்காரனைத் தேடினார்கள்.அவனைக் காணவில்லை.ஆனால் பரிசல் மட்டும் இருந்தது.பரிசலை தாங்களே ஓட்டிச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில், பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரமானது.. இரண்டு மணி நேரமானது..மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை ! அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து.. போதையும் மெல்லத் தெளிய ..அப்போது தான் கரையில் இருக்கும் மரத்தில் பரியல் கட்டப்பட்டிருப்பதை அந்தக் குடிகாரர்கள் கவனித்தார்கள் !

குடிகாரர்கள் கண்களிப் போதையும் இருட்டும் மறைத்தது போல பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்து விடுகிறது.

இப்படித் தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விசயங்களிக் கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன ! நாம் பதட்டத்தில் இருக்கும் போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி, அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத் தான் இருக்கும் !

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது !

ஓர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதி பெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால், ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார். ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து, "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞான பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்,அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச் சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒரு சில ஓலைச் சுவடிகளை புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில். .கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள் .எதிரே அரசர் வீற்றிருந்தார்.பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்து.கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால்,கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை! தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சர்யம் ! பூட்டு பூட்டப்படவே இல்லை .சாவியே இல்லாமல்,சூத்திரமே இல்லாமல் வர பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமன்றால், முதலில் பிரச்னையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்
 

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#2
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

nalla story latha.. ana rendavathu story padikkum pothu yeanakku school days niyabagam.. yeallorum vidiya vidiya padisuttu vanthu exam yealuthuvanga.. nan padikka kastappattu thungittu.. next day examla pittu adisu pass panniduven.. but vidiya vidiya padisathelam mark kuransu poittanga.. athu mathiri irukke ithu.. appo nanum munneriduvono...????.
 

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#3
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

நம்மோட வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிடுச்சு அதனால நிறைய டென்ஷன், கோபம் எல்லாம் அதிகமாயிடுச்சு.நம்ம வீட்ல இருக்கறவங்ககூட பேசக்கூட டைம் இல்ல.இந்த சூழல்ல நாம நம்மள ரெப்ரெஷ் பண்ணிக்கிறது ரொம்ப அவசியம்.எப்படி?நிறைய வழிகள் இருக்கு.நமக்கு புடிச்ச சினிமாவுக்கு போகலாம்,கோவிலுக்கு,பார்க்,பீச் இப்படி நமக்கு பிடிச்ச வெளி இடங்களுக்கு அடிக்கடி போயிட்டு வரலாம்.வீட்ல இருக்குற நேரத்துலயும் டிவிலே மூழ்கிடாம குடும்பத்தினரோட சேர்ந்து பேசலாம்,கருத்துக்கள பறிமாறிகொள்ளலாம்.அப்பப்போ சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம்.யார் மேலயாவது கோபம் வந்தால் அவங்க செஞ்ச தப்ப நினைக்காம அவங்க நமக்கு முன்னாள் செஞ்ச நல்லதை எல்லாம் நினைச்சு பார்க்கணும்.இது பல பிரிவினைகள் அதனால வர்ற பிரச்சினை எல்லாம் தீர்க்கும்.ஏதோ சூழ்நிலை நமக்கு நெருக்கமானவங்களைகூட தப்பா நினைக்கவச்சிடும்.அதுக்கெல்லாம் நாம இடம் கொடுக்க கூடாது.சும்மா இருக்கற நேரத்தை உங்க மனசுக்கு பிடிச்ச விஷயங்கள செய்ய யூஸ் பண்ணலாம்.சிலருக்கு வரைய பிடிக்கும்,சிலர் சமையல் கலையில் ஆர்வமா இருப்பாங்க, இப்படி நம் மனச ரிலாக்ஸ் பண்ற எந்த விஷயத்தையும் தயங்காம அதுக்கும் டைம் ஒதுக்கி செய்யலாம். மனுஷங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க பழகிக்கணும்.அதுதான் உண்மையான சந்தோஷத்த கொடுக்கும்.பணம்,பதவி எல்லாம் பறந்து போய்டும்.பழகின மனுஷங்கதான் நம்மோட இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி கை கொடுப்பாங்க.அதனால, சந்தோஷமா நிம்மதியோட எல்லாரோடவும் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்வோம்!வாழ்க்கை வாழ்வதற்கே!எல்லோரையும் வாழ்த்தி நாமும் நலமுடன் வாழ்வோம்.
 

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#4
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

நம் அனைவருக்கும் வாழ்வில் துன்பம் வருவது இயற்கை.சிலர் தமக்கு நேரும் துன்பம் போல் உலகில் வேறு எவருக்கும் வருவதில்லை என புலம்புவதை நாம் கேள்விபட்டிருபோம். உண்மையாகவே சிலருக்கு அடுக்கடுக்கான பிரச்சினைகள் வருவதுண்டு.இதை நாம் நம் மனதை பக்குவபடுத்தும் நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.துன்பம் இல்லை என்றால் இன்பத்தின் அருமையை நாம் எவ்வாறு அறியமுடியும்?கடவுள் நமக்கு துன்பங்கள் கொடுக்கிறார் என்றால் அவர் நமக்கு உதவி செய்ய தயாராக உள்ளார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்மால் மட்டுமே இத்தகைய துன்பங்களை எதிர் கொள்ள முடியுமென்று நம்புகிறார்.வாழ்க்கை நாம் நினைப்பது போல் போட்டி அல்ல வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும்; வாழ்க்கை ஒரு வரம் நாம் வாழ்ந்து பார்க்க,இயற்கையை ரசிக்க,வியக்க,....இன்பம் வரும்போது சந்தோஷமாக ஏற்றுகொள்ளும் நாம் துன்பத்தில் மட்டும் புலம்புவது எந்த விதத்திலும் சரி ஆகாது.இரண்டையுமே சமமாக பார்க்க பழகி கொள்ள வேண்டும்.இன்பமோ துன்பமோ இரண்டுமே நம் மனதில் மட்டுமே இருக்கிறது.சுற்றுசூழல் இன்பமாக இருந்தாலும் நம் மனதில் நிம்மதி இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்க இயலாது.நம்
மனதை பூவனம்போல் வைத்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
 

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#5
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

nalla story latha.. ana rendavathu story padikkum pothu yeanakku school days niyabagam.. yeallorum vidiya vidiya padisuttu vanthu exam yealuthuvanga.. nan padikka kastappattu thungittu.. next day examla pittu adisu pass panniduven.. but vidiya vidiya padisathelam mark kuransu poittanga.. athu mathiri irukke ithu.. appo nanum munneriduvono...????.
Suji # 1,

Bit adipeengala? hmm.. periya aaluthan neenga.. Soon neenga muneereiduveenga..
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#6
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

ippollam bit adikkaravangathan suji munneraranga...
 

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#7
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

hmm.. aaan athukum theyriyam venuma ka..
 

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#8
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

correct sujathasuji.. (ungalukku butterfly nu name vaikalamnu iruken pidisurukka... ) bit adikaravanga than munneranga than latha.. ana antha bit ah thairiyama adikka theriyanum mathavanga kitta mattama.. பரீட்சை ஹாலில் ஆர்யா பிட் அடித்து மாட்டிக்கற மாதிரி மாட்டினா அதோ கதி தான்..
 

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#9
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

correct sujathasuji.. (ungalukku butterfly nu name vaikalamnu iruken pidisurukka... ) bit adikaravanga than munneranga than latha.. ana antha bit ah thairiyama adikka theriyanum mathavanga kitta mattama.. பரீட்சை ஹாலில் ஆர்யா பிட் அடித்து மாட்டிக்கற மாதிரி மாட்டினா அதோ கதி தான்..
butterfly ah? ithu enna peyar kaaranama? :)
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#10
Re: மனசே ரிலாக்ஸ்..ப்ளீஸ்...

Butterfly pidichirukka suji...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.