Can pregnant women drink coffee

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் 'காப்பி' அருந்தலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கியமானது, 'உபசரிப்பு'! யார் வீட்டுக்கு வந்தாலும் 'தண்*ணீர் குடிக்கிறீங்களா?' என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து 'காப்பி குடிக்கிறீங்களா?' என்பார்கள். இது உண்மையிலேயே உபசரிப்பு என்ற நிலையிலிருந்து இப்போது 'சம்பிரதாயமாக' மாறிவிட்டது! ஆனாலும், வீட்டில் என்றாலும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது 'காப்பிதான் குடிக்கிறார்கள்'. தமிழ்நாட்டிலிருக்கும் டீ, காபி கடைகளே இதற்குச் சான்று! சாதாரணமாக, 'காப்பி' குடித்தால் பெரிதாக உடற்பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், அதனை அளவுக்கு மீறி குடித்தால், ஒரு சில பாதிப்புகள் ஏற்படும்.
இதே போல,

கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு 'காப்பி' குடித்தால் என்னவாகும்?
  • கருச்சிதைவு பாதிப்பு ஏற்படும். குறைப்பிரசவம் தோன்றும்; பல்வேறு உடற்பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கும் என்று பல கருத்துக்கள் நிலவின. காப்பியிலுள்ள 'பாராசாந்தீன்' என்ற பொருளே (paraxanthine) கருவை பாதிப்பதாகக் கருதினார்கள். காப்பியிலுள்ள 'காஃப்பின்' என்ற பொருளும் கேடு விளைவிப்பதாகக் கருதினார்கள்.
  • 'காஃப்பின்' என்ற பொருள் காப்பியில் மட்டுமில்லை.
  • 'டீ' (தேனீரீலும்) உள்ளது. 'கோலா' வகை திரவங்களிலும், 'சாக்லேட்களிலும்' கலந்துள்ளது.
  • எனவே ஒரு காப்பியை பருகாமல் இருந்தபோதிலும், மேற்கூறிய பானங்களையும், சாக்லேட்டையும் உட்கொண்டாலும் அவர்களது உடலிலும் 'காஃப்பின்' உட்புகும்.
  • ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக, ஒரு நாளைக்கு 150 மில்லி கிராம் அளவிற்கு மிகுதியாகத் தொடர்ந்து காப்பியைப் பருகி வந்தால் தான், 'கரு' ஓரளவு பாதிக்கப்படலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • எனவே, கர்ப்பிணிகள் முழுமையாக 'காப்பியை' நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும் போது, இடையிடையே 'காப்பி' குடிப்பதால் கண்டிப்பாக 'கரு' பாதிக்கப்படுவதில்லை.
  • மேலும், 'தலைவலி' மாத்திரைகள் பலவற்றிலும் 'காஃப்பின்' உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஏனென்றால் மருந்தையும் கர்ப்பத்தையும் பற்றித்தானே பேசுகிறோம், ஏன் காப்பியை குறித்துப் பேச வேண்டுமென்று! இங்கு காப்பியிலுள்ள 'காஃப்பின்' என்ற பொருள் குறித்து தான் நாம் பேசியிருக்கிறோம். அது ஒரு மருந்து தான்!
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#2
Good one sakthi... Sodas thavirpathu nAllathu.. But sometimes we feel like drinking soda.. At that time we can have sprite or 7 up.. It has no artifical color and no caffeine.
Decaf cofee powder kooda ippo indiala vikkuthu... If you are a real cofee lover... You can have this choice...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.