Cardiac, Heart MRI - இதய பாதிப்பை எடுத்துச் சொல்லும் கார்&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இதய பாதிப்பை எடுத்துச் சொல்லும் கார்டியாக் எம்.ஆர்.ஐ.

முழுமையான உடல் பரிசோதனையை செய்யும் எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, இதயத்தை மட்டும் நுட்பமாக பரிசோதனை செய்யும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி இதய மருத்துவர் டாக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம்...



எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. (சிணீக்ஷீபீவீணீநீ விஸிமி) பரிசோதனைக்கும் என்ன வித்தியாசம்?

‘‘எம்.ஆர்.ஐ. பரிசோதனையில் பரம்பரையாக வரும் நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், விபத்துகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என உடலின் எல்லா பகுதிகளையும் பரிசோதனை செய்ய முடியும். கார்டியாக் எம்.ஆர்.ஐ. என்பது இதயத்தை மட்டும் பரிசோதித்துப் பார்க்கும் நுட்பமான சோதனை முறை.

இதய ரத்தநாளங்களில் இருக்கும் அடைப்பு களைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம், இதயத்தின் தசைகளில் இருக்கும் பாதிப்புகள், இதயத்தின் நான்கு அறைகளான ஆரிக்கிள்கள், வென்ட்ரிக்கிள்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், இதயத்தைச் சுற்றியுள்ள பெரிகார்டியல் உறையில் இருக்கும் பாதிப்புகள், இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் அயோட்டாவில் இருக்கும் அடைப்புகள், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வரும் ரத்தநாளங்களில் இருக்கும் அடைப்புகள், பிறவியி லேயே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்று இதயம் தொடர்புடைய பல வகை பாதிப்புகளை நுட்பமாக இதில் கண்டறிய முடியும்...’’ என்ன செலவாகும்?

‘‘இப்போது தமிழகத்தில் சென்னையில் மட்டுமே, 2 தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. வசதி இருக்கிறது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சோதனையைப் பொறுத்து கட்டணம் மாறும். ஒருசில மருத்துவமனைகளில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கட்டணத்தில் சோதனை செய்யப்படுகிறது...’’

எம்.ஆர்.ஐ. கருவிக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. கருவிக்கும் என்ன வித்தியாசம்?


‘‘ஒரு கணிப்பொறியில் மென்பொருள் சேர்ப்பதைப் போல, வழக்கமான எம்.ஆர்.ஐ. கருவியில் இதயத்தை பரிசோதிக்கும் மென்பொருளைச் சேர்த்தால் அது இதயத்தையும் பரிசோதிக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. கருவியாகிவிடும். இதயத்தில் வலி இருப்பதாக உணர்பவர்கள் முதலில் ஒரு இதய நல மருத்துவரைத்தான் அணுக வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த பின்னரே கார்டியாக் எம்.ஆர்.ஐ. செய்ய வேண்டும்.’’
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#2
Re: இதய பாதிப்பை எடுத்துச் சொல்லும் கார்டி&#29

Very useful info. Thanks Lakshmi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.