Cataract

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
கண் புரை.
கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணம்ôக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாக தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும் கண் புரை.

c2.jpg


c3.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
கண்புரையின் காரணங்கள்
கண்புரை பொதுவாக முதியவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்சனை என்றாலும் எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியதுதான்.
1. சூரிய ஒளியில் அதிகமாக வேலை செய்வோர்
2. நீரிழிவு நோய்
3. கண்களில் நோய்த் தொற்று
4. பரம்பரை இயல் காரணத்தால்
5. பிறக்குமுன்பே தாய்க்கு பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் அம்மை நோய் ஏற்பட்டிருந்தால்.
6.நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்தல்
7. கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருத்தல்
8. கண்களில் காயம்
9. கண் சார்ந்த நோய்கள்
10. புரோட்டின், வைட்டமின்கள், மேலும் செனியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
அறிகுறிகள்
* பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பிண்ணனியுடன் பொருள் மங்கலாகவும் தெரிவது.
*வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம்.
* சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பது மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவது.
* தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.
* பொருட்கள் இரண்டு பிம்பங்களாக தெரிவது.
*அடிக்கடி கண்ணாடிகளை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுவது.
* சில வெளிச்சங்கள் மிகவும் குறைவாகவும் சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.
*படிப்பதற்கும் வாகனம் ஒட்டுவதற்கும் சிரமப் படுவது.
* வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
நவீன அறுவை சிகிச்சை
கண்ணில் உள்ள இயற்கையான லென்ஸ் அகற்றுவதற்கு கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப் பட்டு பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக் கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்படும்.

c5.jpg

இந்த முறையில் நோயாளி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை தவிர்க்கப் படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையில் தையல் போடுவதும் தவிர்க்கப்படுகிறது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒருவார காலமே போதுமானது.


c4.jpg
அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப் பட்டிருந்தால் அவர்கள் உடனடியாக இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
கண்புரை மருத்துவ சோதனைகள்
* பொதுவான மருத்துவ விவரங்கள்
* கண் பிரச்சனைகள் மற்றும் அறிகுறிகள் பற்றிய முழுமையான விவரங்கள்
* பார்வை தள சோதனை விவரம்
* பக்கவாட்டு பார்வை சோதனை விவரம்
* கண்களை அசைக்கும் முறைகுறித்த சோதனை விவரம்
* கண் நீர் அழுத்த விவரம்
* ஸ்லிட் லேம்ப் எனப்படும் உபகரணத்தின் மூலம் பரிசோதனை
* கண்களின் பாப்பா விரிவதற்காக சொட்டு மருந்திட்டு கண்ணின் உட்புறப் பகுதிகள் மற்றும் பார்வை நரம்பின் பரிசோதனை
* கண்கள் வெளிச்சத்தை எந்த அளவிற்கு தாங்குகிறது என்பதை குறித்த பரிசோதனைகள்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
அறுவை சிகிச்சையின்போது இரத்தம் வெளி யேறுவது. மேலும் சுமார் 3 சதவீதம் நோயாளிகளுக்கு கண் உள்ளே இருக்கக்கூடிய விட்ரியஸ் ஹூமர் என்றதிரவம் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக உண்டாகக் கூடியபிரச்சனைகள்
காயத்தில் இருந்து கசிவுகள், இரத்த ஒழுக்கு மற்றும் நோய்த் தொற்று. இவை உடனடியாக கவனிக்கப்பட்டு சரி செய்யப்படுகின்றது.

c6.jpgஇயற்கையான லென்ஸின் பின்புற மென் தோல் நீக்கப்படாமல் அவற்றின் மீது செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. பின்புறமென்தோல் கடினமாக இருந்தால் ஒளிக்கதிர் விழித்திரையில் குவிவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பார்வை தெளிவற்றதாக இருக்கும். இந்த நிலை இரண்டாம் நிலை கேட்ராக்ட் எனப்படும்.
சிறு துளையிட்டு பேக்கோ எமல்சிபிகேஷன் எனப்படும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் போது விரைவில் குணமாவதற்கும், பின் விளைவுகள் ஏதுமின்றி பார்வையை மீட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய மான குறிப்புகள்
கண் ஷீல்டு :
கண் ஷீல்டை உறங்கும்போது பாதுகாப்பு கருதி கண்டிப்பாக பயன்படுத்தவும். பகல் நேரங்களில் கறுப்பு கண்ணாடி அணிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் கண் ஷீல்டையும் கறுப்பு கண்ணாடியையும் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து காய வைத்து பின்னர் பயன்படுத்தவும்.
முகம் கழுவுதல்:
முகத்தின் மற்றபாகங்களை சுத்தமான ஈரமான துண்டை வைத்து துடைக்க வேண்டும். முகத்தின் மீது தண்ணீரை அடித்து முகம் அலம்புவதை தவிர்க்கவும்.
ஷேவ் செய்தல் :
முகச்சவரம் செய்து கொள்ளலாம். ஆனால் முகச்சவரம் முடிந்த பிறகு தண்ணீரை அடித்து முகம் அலம்புவதை தவிர்க்கவும். சுத்தமான ஈரமான துண்டை வைத்து துடைக்க வேண்டும்.
குளித்தல்:
அறுவை சிகிச்சை நடந்த மறுநாள் முதற்கொண்டு கழுத்திற்குக் கீழே தண்ணீரில் குளிக்கலாம். ஆனால் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தலையில் தண்ணீர் விடுவதை தவிர்க்கவும்.
அழகு சாதனப் பொருட்களை நான்கு வாரங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உடற்பயிற்சி :
சாதாரணமாக நடத்தல், பேசுதல், தொலைக் காட்சி பார்த்தல் போன்றசெயல்களில் அறுவை சிகிச்சை செய்த நாள்முதலே ஈடுபடலாம். ஆனால் மற்றஉடற்பயிற்சிகளான ஓடுதல், நீச்சல், கடும் வேலைகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை நான்கு முதல்ஆறு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
வேலைக்குச் செல்லுதல் :
பொதுவாக நான்கு முதல் ஆறு வாரங்கள் கழித்து வேலைக்கு திரும்பலாம்
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
பொதுவாக ஓரளவு கண் சிவத்தல், நீர் வழிதல், தூசுகள் விழுந்தது போன்ற உணர்வு மற்றும் கண் கூசுதல் போன்றவை சாதாரணமான அறிகுறிகளே. இந்த அறிகுறிகள் நாளடைவில் நான்கு முதல் ஆறு வாரங்களில் படிப்படியாக குறையலாம்.
ஒரு வேளை மிகவும் கவலைப்படத்தக்க வகையில் குறிப்பாக கண் மிக அதிகமாக சிவந்து போதலும், மிக அதிகமாக பார்வை குறைவது போலவும் தோன்றினால் உடனடியாக கண் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
கண்ணை சுத்தம் செய்யும் முறை
* ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்
* கண்ணை சுத்தம் செய்ய நோயாளியின் உதவியாளர் தனது கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலம்பியபின் சுத்தமான துண்டில் துடைத்துக் கொள்ள வேண்டும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
முக்கியமான ஆலோசனைகள்
* கண்களை கசக்கக்கூடாது
* அதிக பாரமுள்ள பொருட்களை தூக்கக்கூடாது
*கண்களில் விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
* நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சந்திக்க வரும் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தவும். குறிப்பாக கண் வலி மற்றும் ஜலதோஷம் போன்ற தொற்று நோய் உள்ளவர்கள் சந்திக்க வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
* குழந்தைகளுடன் விளையாடும்போது கண்களை பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் கூடுமானவரை அதனை தவிர்ப்பது நல்லது.
* சிரமப்பட்டு மலம் கழிப்பதை தவிர்க்கவும். தேவையெனில் இளம் பேதி மருந்துகளை பயன்படுத்தலாம்.
* பொடி போடும் பழக்கத்தை தவிர்க்கவும்
* புகைப்பிடித்தலை கண்டிப்பாக தவிர்க்கவும்
* மதுபானங்களை தவிர்ப்பது நல்லது.
* கைக்குட்டை மூலம் கண்களை துடைப்பதை தவிர்க்கவும். தேவையெனில் சுத்தம் செய்யப்பட்ட திசு பேப்பர்களை அல்லது சுத்தமான பஞ்சினை பயன்படுத்தவும்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.