Change your Sanitary Pads often during Menstruation-மாதவிடாய் காலத்தில் அடிக்கடி ச&#3006

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]மாதவிடாய் காலத்தில் அடிக்கடி சானிட்டரி பேடை மாற்றுங்கள்[/h]

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும். இரத்தப் போக்கும் சராசரியாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும்.


இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம். அவை வீக்கத்தையும், மிகுந்த வலியை தருவதாக அமைகின்றது. சொறி மற்றும் புண்களால் அரிப்பு ஏற்படுகின்றது. நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்சனைகள் வருவது இயல்பு.


ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும். மாதவிடாய் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். இந்த பருவத்தில் தோன்றும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுவதும் இவை நமக்கு அரிப்பை ஏற்படுத்தும்.


சுத்தமாக நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. இதுவே முதல் குறிப்பாகும். அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகும். நிறைய தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இவை நுண் கிருமிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.


அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீன்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது. ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும்.


இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள். அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள்.

 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#2
Re: மாதவிடாய் காலத்தில் அடிக்கடி சானிட்டர&#300

hi @chan thanks for sharing a useful message ithu ella ladieskkum romba athiyavasamaanathu
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#3
Re: Change your Sanitary Pads often during Menstruation-மாதவிடாய் காலத்தில் அடிக்கடி ச&a

Very useful info.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Change your Sanitary Pads often during Menstruation-மாதவிடாய் காலத்தில் அடிக்கடி ச&a

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
thank you friend
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.