Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற &am

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,276
Location
Bangalore
#1


ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

உலகத்துல உள்ள எல்லா மனிதர்களும் எல்லாவித உத்தம குணங்களும் நிறைந்தவங்க இல்ல . எல்லாரிடமும் நிறை , குறைகள் இருக்கத்தான் செய்யும் .

அதே போல நமக்குரிய குணங்கள் சிலதே நம்முடைய உடன்பிறந்த குணங்களாக இருக்கும் . மற்றவை (அவை நல்லதோ அல்லது கெட்டதோ ) எதுவாக இருந்தாலும் , அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தே நம்மிடம் ஒட்டிக் கொள்ளும் . இவை , பெரும்பாலும் நமது பெற்றோர்களிடமிருந்தே நமக்கு நம்மையறியாமலே மனதில் பதிந்து விடுகின்ற குணங்களாக இருக்கும் .

இவை பலவகைப்படும் .

உதாரணமாக , பொறுமை , பிறருக்கு உதவுதல் , சுத்தம் - வீடு மற்றும் சுற்றுப்புறம் (தெருவைக் கூட ), தைரியம் , எங்கும் எதிலும் நேர்மையைக் கடைபிடிப்பது , நேரம் தவறாமை (punctuality ), எதிலும் ஒரு ஒழுங்கு (perfection ), கோபம் , சண்டை போடுதல் , கோபத்தில் சாமான்களைத் தூக்கிப் போடுதல் , நிறைய பேசுவது , பேசாமல் reserved ஆக இருப்பது , பார்ப்பவரை எல்லாம் நட்பாக்கிக் கொள்வது , சாலை விதிகள் மற்றும் சட்டங்களை மதித்து செயல்படுவது , அல்லது இந்த விதிகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது , புத்தகம் படிப்பது (எந்த வகையாகவும் இருக்கலாம் ), அநியாயத்தைக் கண்டு பொங்குவது , இன்னும் பற்பல குணங்களை நம்முடைய பெற்றோரைப் பார்த்து , அவர்கள் அதை சிரமேற்கொண்டு கடைபிடிப்பதைப் பார்த்து , இவை தானாகவே நமக்கும் வந்திருக்கும் அல்லது நமது பெற்றோர் வலியுறுத்திச் சொல்லி நிறைய நல்ல பழக்கங்கள் வந்திருக்கும் .

ஆக , நீங்கள் அனைவரும் , உங்களைப் பற்றி நீங்களே அலசிப் பார்த்து , உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களுக்கு வந்துள்ள நல்ல மற்றும் கெட்ட குணங்கள் எவையாக இருந்தாலும் , அவற்றை இங்கே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

இதில் நீங்கள் பெருமைப்படும் குணமாக எதை நினைக்கிறீர்கள் என்றும் சொல்லலாம் .

அதே போல அவர்களிடம் உள்ள திறமைகள் ஏதேனும் உங்களுக்கும் அப்படியே வந்திருந்தால் (வரைவது , பாடுவது , கைவேலை போன்றவை ), அதையும் இங்கே குறிப்பிடலாம் .


கூடவே , அவர்களிடம் உள்ள , நீங்கள் விரும்பும் ஏதாவது குணங்கள் உங்களுக்கு இல்லாவிட்டால் , அதையும் குறிப்பிடலாம்
.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,276
Location
Bangalore
#2
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

முதலில் , நான் என் பெற்றோரிடமிருந்து பெற்ற குணங்களை இங்கே சொல்கிறேன் .


இரண்டு பேருமே மிக முக்கியமாக எனக்குக் கற்றுத் தந்தது தைரியம் . இதை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன் .

எதற்குமே பயப்படக்கூடாது (ஆனால் , இதையும் மீறி கரப்பான் பூச்சியைக் கண்டு நான் அலறுவது வேறு கதை . இதுக்காக வாங்கின திட்டு கொஞ்சநஞ்சம் இல்லை .இதுக்கு மட்டும்தான் பயம் எனக்கு ).


அப்பாவிடமிருந்து ,

perfection - எதையும் எடுத்த இடத்தில் மட்டுமே வைப்பது (இதனால் எதையும் தேடவே வேண்டாம் ), ஒன்றாம் தேதி காலண்டரை மாற்றி வைப்பது போல அன்று செய்ய வேண்டியவற்றை அன்றே முடித்து விடவேண்டும் -அதை இரண்டாம் தேதி கூட செய்யக்கூடாது , காலையில் எழுந்தவுடன் காலண்டரில் அன்றாய தேதி இருக்க வேண்டும் . முதல் நாள் தேதி கிழிக்கப்பட்டு இருக்க வேண்டும் .Punctuality ,
சாலை விதிகள் மற்றும் சட்டத்தை தவறாமல் கடைபிடிப்பது .


அம்மாவிடமிருந்து ,

மற்றவருக்கு உதவுவது ,

எல்லாருடைய விசேஷ நாட்களுக்கும் அவர்களை மறக்காமல் வாழ்த்துவது ,

சிக்கனம் ,

எதையுமே வீணாக்கக்கூடாது என்ற பிடிவாதம்

புத்தகங்களை மிகவும் விரும்பிப் படிப்பது

எதற்கும் உடனடியாகத் தீர்வு காண்பது

அம்மாவைப் போலவே சட்சட்டுன்னு கோபம் வந்துடும் எனக்கும் . ஆனா என்னோட கோபம் 5 நிமிஷத்துக்கு மேலே இருக்காது


ஆனால் அம்மா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவார் .

அவரைப் போல Hosting the Guest - இது எனக்கு இன்றுவரை வரவில்லை .

அப்பா யாரிடமும் பேசமாட்டார் . அதே போலவே நானும் யாரிடமும் பேசவே மாட்டேன் .

Pets என்றால் அம்மாவுக்கு கொள்ளைப் பிரியம் . ஆனா எனக்கு இது ரொம்பவே அலர்ஜியான விஷயம் .இப்போ நீங்க சொல்லுங்க பிரெண்ட்ஸ்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,024
Location
Madurai
#3
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Haha Nice Thread Aunty.. Vandavalam laam Vara Poguthu :p Most traits of Mine 're influenced Equally by both of em. And in my Case, I also Carry Some Filial Characters of My Ancestors.. Detail ah Typepittu Varen.. :thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,024
Location
Madurai
#4
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Yes Aunty, நீங்க சொன்னது போல் முதலில் தைரியம். அம்மா - அப்பா இரண்டு பேருமே செம Strong Personalities! அவ்ளோ அலட்டிக்க மாட்டாங்க. அதுனாலே நாங்களும் அப்படி இருக்கோம்ன்னு நினைக்கறேன்.

அப்புறம் கோபம்.. நானே சொல்வேன் அம்மா போல தான் இதில் நான் :lol: ஆனால் அம்மா சீக்கரமே விட்டுடுவாங்க! நான் அப்படி இல்லை, எனக்கு அவ்ளோ சீக்கரம் போகாது. அதுக்கு இப்போவரை திட்டு வாங்குவேன். என்னவோ சரி பண்ணிக்க முடியல..

நிறையவே அப்பா கோண்டு, பார்க்கவும் பழகவும் அப்பா போல் தெரிஞ்சாலும் அம்மா மாதிரி என் செயல் இருக்குன்னு அப்பா சொல்வாங்க. எப்போவும் Cool.. பிரச்னையை பிடிச்சு தொங்கிட்டு இருக்காம எப்படி சரி பண்ணனும்ன்னு பார்க்கறது, பிடிக்கலையா அப்படியே விட்டுட்டு வேலைய பாரு, உண்மையை ஒத்துகிறது, Friends.. இதெல்லாம் அப்பா's பக்கம். முக்கியமா Help கிர்ர்ர் Daddy விழுந்து விழுந்து பண்ற ஆள்.. அப்புறம் பேசணும்ன்னா Full Ears கொடுக்கறது - இதில் பாதி தான் நாங்க.. ;)

அம்மா, முன்னயே உங்களுக்குத் தெரியும்.. Arts - Crafts நல்லா வரும். அது அப்படியே எங்களுக்கும் வந்துடுச்சு. நிறைய தோணுது, ஆனா சட்டுன்னு என்ன சொல்றதுன்னு தெரியலை Aunty.. அந்த Decision Making, Confidenceலாம் அம்மாட்ட இருந்து வரதுதான். யோசிச்சு பண்ணுவாங்க.. நாங்க யோசிச்சுட்டு இருக்கும் போதே பண்ணிடுவோம் :p

என் Discipline, கொஞ்சம் திமிர், ஆட்களை Read பண்றது எல்லாமே என் தாத்தா வழில வந்தது. முன்கூட்டியே இப்படித்தான் நடக்கும்ன்னு Predict செய்வோம்ல அந்த Instinct எல்லாம் அவர்ட்ட உறுவினது தான்.

படிக்கறது, New things Learn பண்றது என் குடும்பத்துல எல்லார்க்கும் ஆர்வமுண்டு.

மத்தபடி என்னோட Peculiar Charactersலாம் யார்போலன்னு define செய்யத் தெரியலை Aunty.. "நம்ம வீட்ல யாரும் இப்படி இல்லை" ன்னு எங்கம்மா கோபமா சொல்றதோட முடிச்சுக்கிறேன்.

இப்போலாம் என் பயம்கவலையெல்லாம் நானே இப்படி இருக்கேன்னே என் கிட் எப்படி இருக்கும் அப்போ ங்கறது தான்.
:rolleyes:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#5
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

சுவாரசியமான த்ரெட் ஜெயந்தி.

ஒரு வேலையை செஞ்சா அது நேர்த்தியா இருக்கணும், எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும் என்ற எண்ணம், முக்கியமா punctuality... எங்காவது போகணும்னா முன்கூட்டியே அந்த இடத்துக்கு போய் சேர்ந்து விடவேண்டும். நமக்காக யாரையும் காக்க வைக்கக் கூடாது... இதெல்லாம் என் தந்தையின் ஜீனிலிருந்து எனக்கு வந்தவையா அல்லது
அவரைப் பார்த்துப் பார்த்து வந்தவையா என்று தெரியாது.

அதே மாதிரி கோபமும் அவரிடமிருந்து வந்தவை தான். அம்மா பொறுமையா இருப்பாங்க... அது எனக்கு வந்து இருக்கக் கூடாதோன்னு நினைச்சதுண்டு. அப்பா, அம்மா இருவருமே சிக்கனம் தான். அதே மாதிரி தான் நானும்... அனாவசிய செலவுகள் கிடையாது. அவசியத்திற்கு செலவு செய்ய தயங்க மாட்டேன்.
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,024
Location
Madurai
#6
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Hahahhahahaa.... Kaa ;) //அது எனக்கு வந்து இருக்கக் கூடாதுன்னு நினைச்சதுண்டு.//
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#7
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Hahahhahahaa.... Kaa ;) //அது எனக்கு வந்து இருக்கக் கூடாதுன்னு நினைச்சதுண்டு.//
டேய்... நன்றி டா point out பண்ணதுக்கு. அது typo error.

அது எனக்கு வந்து இருக்கக் கூடாதோன்னு நினைச்சதுண்டு.

இதைத் தான் சொல்ல வந்தேன். தப்பா டைப் பண்ணிட்டு, செக் பண்ணாம அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,024
Location
Madurai
#8
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Hahah As Far as I Knw, Neenga Rombave Porumai thaan Kaa.. Krizz ah vachu thaan Neenga Apadi ilai nu Soldreenga.. :)

டேய்... நன்றி டா point out பண்ணதுக்கு. அது typo error.

அது எனக்கு வந்து இருக்கக் கூடாதோன்னு நினைச்சதுண்டு.

இதைத் தான் சொல்ல வந்தேன். தப்பா டைப் பண்ணிட்டு, செக் பண்ணாம அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#9
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Hahah As Far as I Knw, Neenga Rombave Porumai thaan Kaa.. Krizz ah vachu thaan Neenga Apadi ilai nu Soldreenga.. :)
ஹா... ஹா... ஹா... அப்படீங்கற? ரொம்ப கஷ்டம் தான் கார்த்தி இவனோட :pray1:.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,702
Likes
151,024
Location
Madurai
#10
Re: Characters inherited from your Parents - பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்ற

Chumma Chumma Avana Sollatheenga Kaa.. :amuse: Arivu Pilla..!


ஹா... ஹா... ஹா... அப்படீங்கற? ரொம்ப கஷ்டம் தான் கார்த்தி இவனோட :pray1:.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.