Child Cries About Going to School - குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்க&#

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=2]குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்கை தான்![/h]
சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆரம்ப பள்ளிக் கல்விக்கு முன், "கிண்டர் கார்டன்' எனப்படும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கமாகி விட்டது. தங்களின், மூன்று வயது பிள்ளைகள், தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதை காண்பதற்கும், "டீச்சர்' சொல்லித் தரும் பாடல்களை, அவர்களின் மழலை மொழியில் கேட்பதற்கும், பெற்றோருக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.

ஆனால், அதே பிள்ளைகள், பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தால், அவர்களை சமாளிப்பது, பெற்றோர் மற்றும் டீச்சர்களுக்கு, பெரும் சவாலாகி விடுகிறது. பள்ளி செல்ல அடம் பிடிக்கும் பிள்ளைகளை கையாள்வது குறித்து, ஆலோசனை வழங்குகிறார் மனநல மருத்துவர் சபீதா.

பிறந்ததில் இருந்து, மூன்று ஆண்டுகள், தாயின் அரவணைப்பிலேயே வளரும் பிள்ளைகள், எல்.கே.ஜி.,க்கு செல்லும்போது, முதல்முறையாக, பிரிவை சந்திக்கின்றனர். பள்ளி, "கேட்'டிற்குள் நுழையும்போது, தன் தாயிடமிருந்து, தன்னை, நிரந்தரமாக பிரித்து விடுவரோ... இனி அம்மாவை, பார்க்கவே முடியாதோ என்பது போன்ற எண்ணங்கள், பிஞ்சுகளின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

அதோடு, புதிதான பள்ளிச் சூழலை எதிர்கொள்ள முடியாமல், பிஞ்சுகளின் நெஞ்சில், இனம் புரியாத பயம் பற்றிக் கொள்ளும். அதை அவர்களால் வார்த்தைகளாக வெளிப்படுத்த முடியாது என்பதால், "அம்மா... அம்மா...' என்று மட்டும் அழும்.

பிள்ளைகளின் இந்த பயத்தை போக்க பெற்றோர், குறிப்பாக, இளம் அம்மாக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

* அக்கம் பக்கம் வீட்டில் உள்ள, சக வயது குழந்தைகளுடன், தன் பிள்ளை விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை அவ்வப்போது, பூங்கா, கடற்கரை, கோவில் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, வெளிச்சூழலை பழக்க வேண்டும்.

* விளையாடும்போது கீழே விழுவது, தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொள்வது போன்ற குழந்தைகளின் சிறு சிறு செயல்களுக்கும், பதற்றப்படாமல், கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும்.

* சமைப்பது, துணி துவைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, பிள்ளைகளின் கையில் விளையாட்டு பொருட்களை கொடுத்து, அவர்களை வீட்டின் வரவேற்பறையில் தனியாக விட்டு, பிரிவை பழக்க வேண்டும்.

* பிள்ளைகளை பள்ளியில் விடும்போது, உணர்ச்சி வசப்பட்டு அழும் தவறை, கண்டிப்பாக அம்மாக்கள் செய்யக் கூடாது.

* "பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும், அம்மாவை பார்க்கலாம்' என்பதை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.

டாக்டர் சபீதா,
மனநல மருத்துவர், சென்னை,

[/FONT]


 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
Re: குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்கை தான&#302

Very good tips to young mother/parents.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
Re: குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்கை தான&#302

useful tips..
 
Joined
Aug 31, 2011
Messages
94
Likes
113
Location
Moncton, Canada
#4
Re: குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்கை தான&#302

very good and useful tips
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#5
Re: குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்கை தான&

Useful sharing Guna sir, thanks :).
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: Child Cries About Going to School - குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்&#296

very useful tips. Really very much helpful to the young mothers. thank you for sharing.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
Re: Child Cries About Going to School - குழந்தைகள் அடம்பிடிப்பது வாடிக்&#296

தாய்மார்களுக்கு மிக நல்ல உத்திகளை சொல்லி இருக்கிறீர்கள்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.