Child development stages - குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்ன&#3

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
3 மாதங்களில் கண் சிமிட்ட வேண்டும்!


விழியே கதை எழுது!

விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்


சுகப்பிரசவமோ, சிசேரியனோ, ஆயுதப் பிரசவமோ... குழந்தை பிறந்ததும் அதன் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியும் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க அருகிலேயே ஒரு குழந்தை நல மருத்துவர் இருப்பார்.


உறுப்புகள் எல்லாம் சரியாக வளர்ச்சியடைந்திருக்கின்றனவா, ஏதேனும் குறைகள் உள்ளனவா என்றும் பார்ப்பார். குழந்தை அழுகிறதா என்று பார்ப்பார். அதே நேரம் குழந்தையின் கண்களிலும் டார்ச் அடித்துப் பார்த்து அதன் கண்கள் முழுமையாக உருவாகியிருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.

சில குழந்தைகள் கண்களின் வளர்ச்சி சரியின்றியும் பிறப்பதுண்டு. அதற்கு Anophthalmos என்று பெயர். An என்றால் இல்லை என அர்த்தம். அதாவது, கண்களே இல்லாமல் பிறக்கும் நிலை அல்லது Microphthalmia பிரச்னை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதாவது, குழந்தைகள் கண்கள் குட்டியாக பிறப்பார்கள். கருவிழியில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். சில நேரம் குழந்தைகளுக்கு கண்ணின் வெள்ளைப் பகுதியே நீல நிறமாக இருக்கும். அதை Sclerocornea என்று சொல்வோம்.

அதே போல கருவிழியும் வெள்ளையாக இருக்கும். கண்களில் டார்ச் அடித்துப் பார்த்தால் உள்ளே உள்ள பாப்பா தெரியும். டார்ச் அடித்ததும் அது உடனே சுருங்கும்.சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சிலருக்கு பிறக்கும் போதே கண்களில் ஊளை தட்டிக் கொண்டே இருக்கும். பிறப்புறுப்பு வழியே வரும் போது தொற்று உருவாகியிருக்கும்.

அது உடனே தெரியாவிட்டாலும் சில குழந்தைகளுக்கு சில மணி நேரம் கழித்துத் தெரியும். அதற்குப் பெயர் Ophthalmia neonatorum. சில நேரம் இந்தக் குழந்தைகளுக்குக் காய்ச்சல்கூட வரும். முறையாக கவனித்துக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தத் தொற்றானது மூளைக்குப் பரவி அங்கேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம். நரம்பு வழியே ஆன்டிபயாடிக் கொடுக்கும் அளவுக்குத் தீவிரமாகக் கூடும்.

சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கண்களுக்குள் வெள்ளையாக இருக்கும். அப்படி இருந்தால் கேட்டராக்ட் எனப்படுகிற கண்புரை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். குழந்தையின் அம்மாவுக்கு ருபெல்லா பாதித்திருந்தாலோ, அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் விளைவினாலோ குழந்தைக்கு கேட்டராக்ட் வரலாம். சிலருக்கு அது பரம்பரையாகவே தொடரும். உறவுகளுக்குள் திருமணம் செய்திருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அப்பிரச்னை தொடரலாம்.

சில நேரங்களில் கண்களின் பின்பகுதியான ரெட்டினா சரியாக வளர்ச்சியடையாவிட்டாலும்கூட அது கேட்டராக்ட் மாதிரி தெரியும். ரெட்டினாவே வெள்ளையாகத் தெரிந்து, அதை கேட்டராக்ட் என நினைத்துக் கொண்டு நிறைய குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வருகிறார்கள்.

முதலில் அது கேட்டராக்ட் தானா அல்லது வளர்ச்சியடையாத ரெட்டினாவா என்பதை கண் மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும். தேவைப்பட்டால் இந்தக் குழந்தைகளுக்கு நரம்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள B Scan என ஒரு ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். அதில் கேட்டராக்ட் இருந்தால் தெரிந்துவிடும்.

ஒருவேளை குழந்தைக்கு கேட்டராக்ட் இருந்து, அதிலும் இரண்டு கண்களிலும் அதிகமாக இருந்தால், அக்குழந்தையின் கண்கள் சோம்பேறிக் கண்களாக மாறிவிடும். எனவே, இப்படிப்பட்ட பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சைதான் பரிந்துரைக்கப்படும்.

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்கிற போது பெரியவர்களைப் போல லென்ஸ் வைக்க மாட்டோம். ஒரு வருடம் கழித்துதான் லென்ஸ் வைப்போம். ஏனென்றால், குழந்தையின் கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அதில் லென்ஸ் வைத்தால் கண்களின் பவர் இன்னும் அதிகமாகி விடும். எனவே மறுபடி அந்த லென்ஸை எடுத்துவிட்டு வேறு லென்ஸ் வைக்க வேண்டியிருக்கும்.

கேட்டராக்ட் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையை செய்யச் சொல்வோம். ஏனென்றால், கண்களில் இருந்து மூளைக்கு காட்சிகள் சென்றால்தான் வளர்ச்சி சரியாக ஒழுங்காக இருக்கும். மூளைக்கு அனுப்பப்படாவிட்டால், பிறகு கண்கள் நன்றாக மாறிய பிறகு மூளைக்குக் காட்சிகள் அனுப்பப்பட்டாலும் மூளை அவற்றை எடுத்துக் கொள்ளாது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கண்களிலும் கேட்டராக்ட் இருந்தால் ரொம்பவே சிரமம்.

அதை உடனே அகற்றியாக வேண்டும். மயக்க மருந்து கொடுத்துதான் இதைச் செய்ய வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு முறை செய்தாலே போதுமானதாக இருக்கும். சிலருக்கு மறுபடி தடிமனான சவ்வுப்பகுதி வளரக்கூடும். அப்படி வளரக்கூடாது என்பதற்காக இப்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம்தான் சிகிச்சை அளிப்போம். அதையும் மீறி வளர்ந்தால் லேசர் மூலம் சரிப்படுத்தலாம். பிறகு 1 வருடத்துக்கு மேல் கண்களுக்குள் பெரியவர்களுக்கு வைப்பது போல இன்ட்ராக்குலர் லென்ஸ் வைக்க வேண்டும்.

ஒரு வருடம் வரை குழந்தைக்கு தடிமனான கண்ணாடி போட்டாக வேண்டும். அதைப் போட முடியாவிட்டால் குழந்தைக்கு கான்டாக்ட் லென்ஸ் போட வேண்டியிருக்கும். அதை உபயோகிக்கிற முறை பற்றி பெற்றோருக்கு சொல்லித் தந்து விடுவோம்.

கண்ணுக்குள் லென்ஸ் வைத்தாலும் குழந்தை படிக்க, எழுதவெல்லாம் கண்ணாடி போட்டுத்தானாக வேண்டும். அதிலும் முழு பவர் உள்ள கண்ணாடியை பரிந்துரைக்க மாட்டோம். குழந்தை வளர வளர, அதன் கண்களின் பவர் மாறும். பிறந்த குழந்தைக்கு கண்ணாடியா என மலைக்க வேண்டாம். மிக மிக மென்மை யாக, பொம்மை மாதிரி குட்டியாக இருக்கும் அந்தக் கண்ணாடி.

அடுத்து குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை சிறப்பு மருத்துவர் வந்து பார்க்க வேண்டும். Retinopathy of Prematurity (ROP) எனப்படுகிற பிரச்னை இருக்கிறதா என்பதை அவர் கண்டறிவார். இதை குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஒரு கண்ணில் இருந்தோ, இரண்டு கண்களிலுமோ ஊளை தட்டிக் கொண்டே இருக்கும். கண்களையும் மூக்கையும் இணைக்கிற ஒரு குழாய் இருக்கும்.

அது அடைபட்டால் கண்ணீரானது கண்களுக்குள் சேர்ந்து இன்ஃபெக்*ஷனை உண்டாக்கும். அதற்குப் பெயர் Congenital nasolacrimal duct obstruction. இதற்கு lid massage என ஒன்றை அம்மாக்களுக்குக் கற்றுத் தருவோம். கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள இணைப்பில் மூக்கு திறக்கும் இடத்தில் ஒரு சின்ன சவ்வுப் பகுதி இருக்கும்.

அங்கேதான் கண்ணீர் சேர்ந்து இன்ஃபெக்*ஷன் ஆகும். எனவே, இந்த சவ்வுப் பகுதியை மசாஜ் செய்கிற போது அந்த அழுத்தத்தில் சவ்வுப்பகுதி உடைந்து, அடைப்பு சரியாகும். Probing என்கிற குச்சி மாதிரியான கருவியை உள்ளே செலுத்தி மயக்கம் கொடுத்து சரியாக்க வேண்டும். அதுவும் தோல்வியடைந்தால் பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படும்.

ஆனால், இந்த லிட் மசாஜ் மிகவும் அருமையான விஷயம். அந்தக் காலத்தில் பாட்டிகள் எல்லாம் பிறந்த குழந்தைகளின் மூக்கை வெளியே நீவி விடுவதைப் பார்த்திருப்போம். சப்பை மூக்கை சரியாக்க செய்யப்படுவதாக சொல்லப்பட்டாலும் அதன் உண்மையான காரணம் இதுதான்.

இன்னும் சில குழந்தைகளுக்கு பாப்பா உள்ள இடம் கருப்பாக இருப்பதற்கு பதில் மஞ்சளாகத் தெரியலாம். கண்கள் வீங்கிப் போய் பிறக்கலாம். கட்டிகள் இருக்கலாம். அதை Retinoblastoma என்கிறோம். இது தீவிரமாகும் போது கண்களையே எடுக்க வேண்டி வரலாம்.

குழந்தை பிறக்கும் போது அதற்கு பார்வை நல்லபடியாக இருக்கிறதா என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியாது. நிறை மாதங்களில் பிறக்கும் குழந்தைக்கும் இப்படித்தான். அதற்கு பிறந்த உடன் பார்வை மங்கலாகத்தான் இருக்கும்.

3 மாதங்களில்தான் அது கண்களை சிமிட்டுவதையும், நேராகப் பார்ப்பதையும் வைத்து பார்வை சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும்.இதையெல்லாம் குழந்தை நல மருத்துவரே கவனித்து விடுவார். ஒருவேளை பிரச்னை தீவிரமாக இருப்பது தெரிந்தால் கண் மருத்துவர்களுக்குத் தகவல் சொல்வார்கள்.கேட்டராக்ட் இருப்பது உறுதி செய்யப்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையை செய்யச் சொல்வோம். ஏனென்றால், கண்களில் இருந்து மூளைக்கு காட்சிகள் சென்றால்தான் வளர்ச்சி சரியாக ஒழுங்காக இருக்கும்.


(காண்போம்!)
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: 3 மாதங்களில் கண் சிமிட்ட வேண்டும்!

Thanks for the info ji
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#4
Re: 3 மாதங்களில் கண் சிமிட்ட வேண்டும்!

TFS lashmi................
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும். பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன.

2 மாதங்களில்

பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.

குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை தலையை ஒரு புறமாகத் திருப்பியவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் குழந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

அப்போது குழந்தையின் உடல் விலுக்கென்று சிலிர்த்துக் கொள்ளும். கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஒன்றரை மாதத்தில் குழந்தையின் கழுத்து உறுதியாகும். பொருட்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுபார்க்கும்.

3 மாதங்களில்

மூன்று மாதங்களில் குழந்தைகள் மல்லாந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிபடுத்தும் வகையில் குரலை உயர்த்துதல் போன்றவற்றை தொடரும். இந்த கால கட்டத்தில் குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிபடுத்தும். கைவிரல்களை முன்புபோல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக் கொள்ளும்.

6 மாதங்களில்

6 மாதங்களில் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் அந்த பக்கமாக குழந்தை தனது தலையைத் திருப்பும்.

படுத்த வாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும். எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும். குழந்தை நிற்கும்பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.

9 மாதங்களில்


குழந்தைகள் 9 மாதங்களில் கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ, உதவியோ இல்லாமல் உட்காரும். அப்புறமாய் குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.

12 மாதங்களில்

12 மாதங்களில் குழந்தை எழுந்து நிற்கத் தொடங்கும். நடக்க பழகும். அத்தை, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.

2 வயதில்

2 வருடங்களில் கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும். கீழே விழாமல் ஓடிச்செல்லும். புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆர்வப்படும். தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும். பிறர் சொல்லுவதை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.

3 வயதில்

குழந்தைகள் 3 வயதை அடைந்தால் தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்."பையனா, பெண் பிள்ளையா" போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும். உடல் பாகங்களின் பெயரைக் கேட்டால் சொல்லி விடும். பொருட்களை இங்கேயும், அங்கேயும் வைப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளில் உதவி செய்யும். மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும். புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.

5 வயதில்

குழந்தைகள் 5 வயதில் துணிகளை உடுத்திக் கொள்ளும்போது ஒரு சில பட்டன்களையாவது போட்டுக் கொள்ளும். குறைந்தபட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும். படிக்கட்டுகளில் பெரியவர்களை போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச்செல்லும். குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும்.

அந்தந்த காலகட்டத்திற்கும் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

குழந்தை நடப்பதற்கு தயாராக இல்லாத நேரத்தில் நடக்க வைத்து வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுப்பது எந்தவித பலனையும் தராது.
குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி, பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் ஏற்படும்.

சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையைவிட சில செயல்பாடுகளில் குறைவான வளர்ச்சியோ அல்லது அதீத வளர்ச்சியோ பெற்று இருக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது நலம்.[/FONT]
[/FONT]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்&a

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்


பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீராக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது. ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம். குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள்

இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல், 6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

4. தனியாக விளையாடுதல்.

5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும்.
[/FONT]
[/FONT]
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#7
Re: உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங&#302

Good sharing ji :thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
Re: உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங&#302

Useful suggestions
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.