Coconut Water Benefits For Pregnancy - கர்ப காலத்தில் இளநீரின் மகத்துவம&

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
கர்ப காலத்தில் இளநீரின் மகத்துவம்



  • கர்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம்.
  • இளநீர் மின்பகுபொருள்(electrolyte ) அதிகமாக கிடைக்க கூடிய பொருள்.
  • இளநீரில் குளோரைட்டு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
  • இளநீரில் மிதமாகவே சர்க்கரை,உப்பு மற்றும் புரத சத்து உள்ளது.
  • பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது.
  • இளநீரில் நார் சத்து,மேங்கநீஸ்,கால்சியம், riboflovin , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
  • இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவு உலராமல்(dehydration ) லும் , உங்கள் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது.
  • வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ்.
  • இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. சில ஆராய்ச்சிகள் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த இளநீர் உதவுவதாக கண்டுபிடிக்க பட்டு இருக்கிறது.
  • வெயில் அதிகமாக உள்ள நாட்களில், கடையில் விக்கும் சொடாக்களை வாங்கி குடிப்பதை விட(கோலா வகைகளை கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது) இயற்கை அளித்த இளநீர் பருகுவது சால சிறந்தது. இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டது. எனவே தூயமைகேடு(contamination ) மற்றும் infection பற்றி கவலை படமால் அருந்தலாம்.
  • இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மல சிக்கல்,உப்பசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது.
  • இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட்,நம் உடம்பில் மனோளுரின் என்ற நோய் எதிர்ப்பு fatty acid சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , Anti -fungal ,Anti -bacterial ,Anti - viral தன்மை அதிகமாக உள்ளது. இது கர்பகாலத்தில் நோய் எதிருப்பு சக்தியை அதிக படுத்தி, நோய் எதிர்த்து போராட உதவுகிறது.
இளநீரின் இந்த இயற்கை மரத்துவ குணத்தினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது.



 
Last edited by a moderator:

Anujapira

Friends's of Penmai
Joined
Oct 5, 2011
Messages
141
Likes
38
Location
Chennai
#2
Re: Coconut Water Benefits For Pregnancy - கர்ப காலத்தில் இளநீரின் மகத்துவம&

good information for the pregnant women

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.