computer vision syndrome- கண் காக்க.

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணினி வேலை செய்கிறீர்களா


கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.

நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது?

கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தா லும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.

பார்க்கும் விதம்

பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது” என்கிறார் அபினவா மருத்துவமனையின் தலைமை கண் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

20-20-20

இதற்குத் தீர்வு என்ன? 20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். “இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்” என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.

ஏசி பற்றி யோசி

இது மட்டுமில்லாமல், இன்று பெரும்பாலான அலுவலகங்கள் செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் இயங்குவதால் சுற்றுப்புறக் காற்றைக் காட்டிலும் ஏசி அறையிலிருக்கும் காற்று வறண்ட தன்மையுடன் இருக்கும். இதனாலும் கண்கள் வறண்டுபோகும். “இப்படி இருக்கையில், நீங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவது ரொம்பவும் அவசியம்.

அதிலும் 20 நிமிடத்துக்கு ஒரு முறை மெதுவாக 10 தடவை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஈரப்பதம் கூடும், கண் தசையின் அழுத்தம் குறையும்” என்பது டாக்டர் எஸ்.காயத்ரியின் அறிவுரை. கண்கள் உலர்ந்து போவதாக உணர்ந்தால், ஒரு நாளில் இரண்டு முறை கண்கள் மீது தண்ணீரை அடித்துக் கழுவுவது நல்லது.

விழியின் நண்பனாக

கணினியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் சருமம், கண்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவர் என்றால் ஒளியைப் பிரதிபலிக்காத லென்ஸைப் பயன்படுத்துங்கள். அதேபோல, காண்டாக்ட் லென்ஸை விடவும் மூக்குக் கண்ணாடி நல்லது. ஏனென்றால், கண்ணில் ஈரப்பதம் குறைந்துபோனால் காண்டாக்ட் லென்ஸ் மேலும் பல அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

வேலை சூழல்

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற ஒளி அமைப்பு கண்களைப் பாதிக்கும். கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையம் (Godrej Interio ErgonomicsCell) நடத்திய ஆய்வின் முடிவுகள் கூறுவதாவது: 68 சதவீதம் அலுவலகங்கள் சீரற்ற ஒளி அமைப்புடன் இயங்குகின்றன.

அவற்றில் 58 சதவீதம் போதுமான வெளிச்சம் இல்லாமலும், 42 சதவீதம் அதிகப்படியான ஒளியுடனும் இருக்கின்றன. “240 முதல் 400 லக்ஸ் அளவிலான ஒளி அமைப்புதான் கணினி அலுவலகத்துக்குச் சரியான ஒளி அமைப்பு” என்கிறார் கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையத்தின் தலைவரான சாஸ்த்ரி.

எங்கே உட்கார வேண்டும்

நாற்காலி அமைப்பும் மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ். கணினி வைக்கப்பட்டிருக்கும் மேஜையும், நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலியும் சவுகரியத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது. கணினித் திரையின் மேல்புறம் உங்கள் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது பார்வையிலிருந்து 10 முதல் 15 டிகிரி வரை கீழே இருத்தல் நல்லது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 20 முதல் 24 அங்குலம் தொலைவில் மானிட்டரை வைப்பதும் முக்கியம்.

எல்.சி.டி. நல்லது

அதிக ரெசல்யூஷன் கொண்ட, ஒளியைப் பிரதிபலிக்காத எல்.சி.டி. (L.C.D.) திரைகளைப் பயன்படுத்துவது அவசியம்

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
computer vision syndrome- கண் காக்க.
[h=2]Dr.ரோஹிணி க்ருஷ்ணா[/h]
விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த போது, ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒன்றரை வயதிலிருந்து இரண்டுக்குள் இருக்கும் ஒரு சிறு குழந்தை. கையில் ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்துக் கொண்டு, இரவு பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை சுறுசுறுப்பாக, ஒரு வினாடி இடைவெளியின்றி அலைபேசியை ஸ்க்ரோல் செய்து நோண்டிக் கொண்டிருந்தது. அது மட்டுமில்லாமல், எட்டிப் பார்த்த இன்னொரு குழந்தையை “டப்” பென்று, ஒன்று போட்டது. விபரீதம் என்னவென்றால், தாய், பெருமையுடன் அகமகிழ்ந்து இரண்டையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

கண்ணின், அகாமடேஷன் தசைகளே வலுப்பெற்றிருக்காது. அந்த வயதில் பூப்போன்றிருக்கும் குழந்தையின் விழித்திரையில், நேரடியாகப் பாயும் LED வெளிச்சம் எத்தனை கெடுதல்! விளையாட்டுச் சாமான் போல் எலெக்ட்ரானிக் சாமன்களை, குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு, அதைப் பெருமையோடு எல்லோரிடமும் சொல்லிப் பூரிக்கும் பெற்றோரை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

கணினிக் கண் கோளாறு, எனப்படும் computer vision syndrome இன்று பெருநகர, கண் மருத்துவர்கள், மிக அதிகமான எண்ணிக்கையில் மருத்துவம் பார்க்கும் ஒரு வியாதி.

சாஃப்ட்வேர் துறையில் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குள் டாக்டரிடம் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கண்களில் வலி, கண் சோர்வு, எரிச்சல், தலைவலி, மங்கலாக, இரண்டிரண்டாக சில நேரங்களில் மட்டும் தெரிவது, எல்லாமே இதன் அறிகுறிகள்.

காரணம் என்ன?
சாதாரணமாகப் புத்தகம் படிக்கும் போது, குறுக்கு வாட்டில் படிக்கிறோம். Horizontal viewing. கணினித்திரையோ மேலிருந்து கீழே, ஸ்க்ரோல் செய்து வாசிக்கிறோம், vertical viewing. Palpebral fissure, எனப்படும் மேல், கீழ் இமைகளுக்கான இடைவெளி, கொஞ்சம் விரிந்தே இருப்பதால், கண்ணின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. ஆழ்ந்த கவனத்தினால், கண் சிமிட்டுவதும் இல்லை. தசைகளும் தொடர் வேலையால், முறுக்கிக் கொள்கின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட தொடர் வேலை நேரங்கள். இயற்கைக்குப் புறம்பான தூக்கம் மற்றும் வேலை நேர மாற்றங்கள். இவை எல்லாமாகச் சேர்ந்து உண்டாக்குவது தான் கணினிக் கண் கோளாறு.

என்ன செய்யலாம்?
முதலில் கண் மருத்துவரிடம் சென்று, லேசான ஆஸ்டிக்மாடிசம் பவர் எதுவும் இல்லையா என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். லேசான பவர் இருப்பவர்களுக்கு, பார்வை நன்றாகத் தெரியும். ஆனால், கண்சோர்வு அறிகுறிகளும், தலைவலியும் அதிகமாக இருக்கும்.. பவர் இருக்கும் பட்சத்தில், கண்ணாடி அணியாமல், கணினித்திரையைப் பார்க்கவே கூடாது.

பவர் இல்லாதவர்களுக்குக் கூட, கணினி பயன்பாட்டுக்கென, anti-glare கண்ணாடிகள் கிடைக்கின்றன. முழு நேரக் கணினிப் பணியில் இருக்கும், நாற்பது வயதுக்கு மேலாகி, பைஃபோகல் பவர் இருப்பவர்கள், அண்ணாந்து, அட்ஜஸ்ட் பண்ணிப் பார்த்து, கழுத்தையும் கண்ணையும் ஸ்ட்ரெயின் செய்து கொள்வதை விட, கணினிக்கென, கண் மருத்துவர் பரிசோதனையுடன், ஒரு தனி கண்ணாடி வைத்துக் கொள்வது நலம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
கருத்தில் கொள்ள வேண்டியவை:

கணினித்திரை, கண் பார்வை சற்றே கீழ் நோக்கிப் பார்க்கும்படியான உயரத்தில் இருக்க வேண்டும். அண்ணாந்து பார்க்கும் படியான உயரமான மேஜையில் கணினி இருக்குமானால், கண் பிரச்சினைகளோடு, கழுத்து வலியும் உத்தரவாதம்.

1. குறைந்தது, ஒன்றரை அடி தூரத்தில் திரை இருக்க வேண்டும்.

2. கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

3. இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, சில வினாடிகள் கண்களை மூடி ஓய்வு கொடுக்க வேண்டும்.

4. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, இருக்கையிலிருந்து எழுந்து, சற்றே உலவி விட்டு வரலாம். இது முதுகுப் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.

5. கூர்ந்து நோக்காமல், தூரத்துப் பச்சையைப் பார்ப்பதே கண் தசைகளுக்கான ரிலாக்*ஸேஷன். இது எப்படி சாத்தியம் என்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, குளிர்ந்த நீரில் நனைக்கப்பட்ட கைக்குட்டையை, கண்களின் மேல் மூடிக்கொண்டு, கண்களுக்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்கலாம்.

இவை போக, dry eyes க்கான, கண்களுக்கு நீர்ச்சத்துக் கொடுத்து, எரிச்சலைக் குறைக்கும் மருந்துகளை, மருத்துவர் ஆலோசனைக்குப்பின் உபயோகப்படுத்தலாம்.

முப்பது வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை முறையை நினைத்துப் பாருங்கள். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், வெள்ளிக்கிழமை ஒலியும்- ஒளியும், வார இறுதி திரைப்படம் தவிர, வேறு எதுவும் கிடையாது. படிக்கும் குழந்தைகள் மாலை நேரங்களில் விளையாடுவார்கள். வேலைக்குச் செல்பவர்களும், வீட்டிலிருக்கும் பெண்களும் கூட, மாலை நேரங்களை நண்பர்களோடும், குடும்பத்தோடும் செலவழிப்பார்கள். கண்கள் சந்தோஷமாக இருந்தன.

குடும்ப உறவுகளைப் பற்றி, நான் பேசிக்கொண்டிருக்கவில்லை. கண்களின் கதியை நினைத்துப் பாருங்கள். இன்றோ, வேலை நேரம் போக மீதி நேரமும், அலைபேசிகள், கணினியில் சமூகத் தளங்கள், அல்லது கேம்ஸ்கள், தொடர் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.

கண்கள் “ஓய்வு, ஓய்வு”, என்று கெஞ்சுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். ஒரு நாளைக்கு, பதினெட்டு மணி நேரம் கண்களுக்கு வேலை கொடுப்போம், ஆனால் ஒரு தொந்தரவும் இருக்கக்கூடாது, என்று நினைப்பது பேராசையல்லவா!

சரியான பழக்கவழக்கங்கள், சரியான ஓய்வு, பாதுகாப்பான ஸ்கிரீன்களுடன் கூடிய கணினிகள், கண்களின் மேல் நேரடியாகப் படாமல், சரியான அளவு இருக்கும் அறையின் வெளிச்சம், வசதியான இருக்கை அமைப்பு, இடையிடையே ஓய்வு, இவை எல்லாவற்றையும் மேற்கொண்டால் மட்டுமே, வருடக் கணக்கில், இந்தத் துறையில் பணி புரிய முடியும்.
குழந்தைகளுக்கும், பள்ளியிலும், வீட்டிலும், பாடங்களின் பளு அதிகம். தவிர, ட்யூஷன்கள், ஸ்மார்ட் க்ளாஸ்கள், கணினியில் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகள் என்று கண்களுக்கான வேலை அதிகம். ஆகவே, குழந்தைகள் அலைபேசி மற்றும் கணினியில் விளையாடுவதையும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும், தொலைகாட்சி பார்ப்பதையும், பெருமளவு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

எல்லா வயதினருக்குமே, திறந்தவெளி மைதான விளையாட்டுகள் ஒரு வரப்ப்ரசாதம். பாதிப் பிரச்சினைகளிலிருந்து அது விடுதலை அளித்து விடும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
very good suggestions you have given to save our eyes! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.