Confidence Corner

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,502
Location
chennai
#1
Very Good morning Friends.

இந்த நியூ இயர்ல எல்லாருமே நிறைய resolutions எடுத்திருப்போம். அதெல்லாம் workout ஆக என்னோட வாழ்த்துக்கள்... இப்போ நான் எதுக்கு வந்தேன்னா, சமீபத்துல என்னோட புகுந்த வீட்டுல ஒரு புக் பார்த்தேன்.

"நமது நம்பிக்கை "

நிறைய பேருக்கு அது பரிட்சையமான புத்தகமா இருக்கலாம் ,ஆனா எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு... அதுவும் ஒவ்வொரு பக்கத்துக்கும் கான்பிடன்ஸ் கார்னர் ன்னு ஒரு குட்டிக்கதை இருக்கும் ..அதை படிக்கும்போது அப்படி ஒரு positive energy எனக்குள்ள .போன வருஷம் எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது அந்த பகுதிகள் மூலமா......so அதை ஏன் எல்லாருக்கும் ஷேர் பண்ணக்கூடாதுன்னு தோனுச்சு... அதுக்குதான் இந்த திரி ....


நான் டெய்லி ஒவ்வொரு பகுதியா போடுறேன். படிச்சு நீங்களும் உங்களோட positive energyய வளர்த்துக்கோங்க friends ....
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,502
Location
chennai
#2
கான்பிடன்ஸ் கார்னர் – 1:


நெருக்கடி காலங்களில் பக்கத்துக் கடைகளில் பண்டமாற்று செய்து கொள்வது வணிகர்களின் இயல்பு. அடுத்த கடையைச் சேர்ந்த இளைஞன் தன் வாசலில் வந்து நின்ற போது அந்த முதலாளி சொன்னார், ”உனக்குத்தான் பொருட்கள் எங்கெங்கே இருக்குமென்று தெரியுமே! நீயே எடுத்துக் கொள்”. விரைந்த இளைஞன் சில நிமிடங்களில் பொருட்களுடன் வந்து பட்டியலை எழுதிவிட்டு காற்றைப்போல விரைந்தான். தன் நண்பரிடம் கடைக்காரர் சொன்னார், ‘இவன் ஊதிய உயர்வை எதிர் பார்க்கிறான். நிச்சயம் கிடைக்கும்”. எப்படிச் சொல்கிறீர்கள் என்றபோது, ”அவனுடைய முதலாளி தராவிட்டால் நான் தருவேன்” என்றார்.
உண்மையான உழைப்புக்கு உலகெங்கும் வாசல்கள் திறந்தே இருக்கும்.


 

Attachments

Last edited by a moderator:

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,502
Location
chennai
#5
கான்பிடன்ஸ் கார்னர் – 2
புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஜான் வுடனின் வாழ்க்கை வாசகம் என்ன தெரியுமா? ”ஒவ்வொரு நாளையும் உங்கள் உன்னதமான நாளாக ஆக்குங்கள்” என்பதுதான். அதற்கான வழியையும் அவரே சொன்னார். ”தீர்மானித்தல்! திடமாய் இருத்தல்!”

சில தீர்மானங்களை உறுதியாய் எடுப்பதும், அந்தத் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதில் திடமாய் இருப்பதும் சாத்தியமானால் ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்தானே!


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#6
Wonderful thread which will be very useful to all of us. Thanks Suji for starting this . pls.continue this .
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,502
Location
chennai
#8
கான்பிடன்ஸ் கார்னர் – 3


சிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருடைய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத்

தழுவியிருக்கிறேன். திரும்பத் திரும்ப விழுந்திருக்கிறேன். ”இதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்றார்.
விழுந்தவர்கள்தானே எழ முடியும்.



 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.