Convulsion - வலிப்பு நோய்

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#1
மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நோய் அறிகுறிகள் யாவை?இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.கை, கால் இழுத்தல்வாயில் நுரை தள்ளுதல்சுய நினைவு மாறுதல்உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)கண் மேலே சொருகுதல்சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்திடிரென மயாக்கமடைந்து விழுதல்கண் சிமிட்டல்நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.வலிப்பு நோய் எதனால் வருகிறது?மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)மூளையில் காச நோய் (Tuberculoma)தலைக் காயம் (Head Injury)குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)மூளை காய்ச்சல் (Brain Fever)மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போதுமூளையில் புற்று நோய் (Brain Tumer)உறக்கமின்னைபோதைப் பொருள் உபயோகித்தல்மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்இது பரம்பரை வியாதியா?பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.இந்த நோய் எந்த வயதில் வரும்?இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள்:-முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று.தேவையற்ற மன உளைச்சல் கூடாது.மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.-கார்த்திகேயன் மதன்
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
வலிப்பு நோய் பற்றிய எல்ல தகவல்களையும்
பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ..!!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Very useful details you have provided about வலிப்பு நோய். thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.