Daily Interesting News! -2

vijigermany

Well-Known Member
#1
வாழைத்தார் மண்டியில் விலை போகாமல் உள்ள வாழை தார்கள்.

 

vijigermany

Well-Known Member
#2
Re: Daily interesting News --October 2014 !!

வங்கி ஏ.டி.எம். முன்பு நூதன ஆர்ப்பாட்டம்

 

vijigermany

Well-Known Member
#3
Re: Daily interesting News --October 2014 !!

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவர்கள்.

 

vijaykumar12

Well-Known Member
#4
Re: Daily interesting News --October 2014 !!

[h=1]கறுப்புப் பணத்தை மாற்றியதா ஸ்டேட் பேங்க்?[/h]

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்டேட் பேங்க் அதிகாரிகள், கோடிக்கணக்கில் டாஸ்மாக் வசூல் பணத்தை தனியார்களின் கறுப்புப் பணத்துக்கு பரிமாற்றம் செய்ததாக, சிஐடியூ சார்பில் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதனால், வங்கி வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
 

vijaykumar12

Well-Known Member
#5
Re: Daily interesting News --October 2014 !!

[h=1]ஆந்திர சிறையில் உள்ள 32 தமிழர்களுக்கு ஜாமீன்[/h]

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி 32 தமிழர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர வனத்துறை மற்றும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் இவர்கள் ஜாமீன் வேண்டி ஆந்திர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த திருப்பதி அமர்வு நீதி மன்றம், கைது செய்பட்டு சிறையில் உள்ள 32 தமிழர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் 32 தமிழர்களும் தமிழ்நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

vijaykumar12

Well-Known Member
#6
Re: Daily interesting News --October 2014 !!

[h=1]முதல்வர் நாராயணசாமி அபார வெற்றி: அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார்[/h]

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் மேலிடம். தேர்தலில் போட்டியிடாத ஒருவர் முதல்வராக பதவியில் அமர்ந்தால் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தேர்தல் விதி. அதன்படி நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள், இந்திய கம் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. அவரை எதிர்த்துப்ப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக போன்றவை ஆதரவளித்தது. 19ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்த வாக்குப் பதிவில் மொத்தமுள்ள 31,362 வாக்காளர்களில் 26,985 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். இதில் ஆண்கள் 12,551 (83.99%) பேரும், பெண்கள் 14,344 (87.37%) பேரும் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு பதிவான வாக்குகளின் மொத்த விகிதம் 85.76%. இது கடந்த மே மாதம் இந்த தொகுதியில் நடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட 0.33 விகிதம் அதிகம்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முதல்வர் நாராயணசாமியே முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் 3,961 வாக்குகளிலும், இரண்டாவது சுற்றில் 7,538 வாக்குகளிலும் முன்னிலையில் இருந்த நாராயணசாமி இறுதி சுற்றான மூன்றாவது சுற்றில் 18,709 வாக்குகள் பெற்று 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இறுதி சுற்று நிலவரம்:

நாராயணசாமி(காங்கிரஸ்) - 18,709
ஓம்சக்தி சேகர்(அதிமுக) - 7,565
ரவி அண்ணாமலை (நாம் தமிழர்) - 90
நாராயணசாமிக்கு ஆதராவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், திட்டமிட்டு வாக்குப்பதிவு சாதனங்களையும் அவருக்கு சாதகமாகவே மாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டிய அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர், இரண்டாவது சுற்று எண்ணிகையின் போதே வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறினார். நாராயணசாமி வெற்றி பெற்றிருப்பதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 18,506 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 6,365 வாக்குகள் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Well-Known Member
#7
Re: Daily interesting News --October 2014 !!

[h=1]வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றிவிட்டார்' - தேர்தல் ஆணையர் மீது அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு[/h]

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல் சுற்றில் 3,961 வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து முனினிலையில் இருந்து வந்த அவர் வெற்றி பெற்றுள்ளார்.


இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் நாராயணசாமிக்கு ஆதரவாளர் என்பதால், அனைத்து வாக்குகளும் அவருக்கே விழுவது போல வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றிவிட்டார் என அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#8
Re: Daily interesting News --October 2014 !!

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த, நான்கு சட்டசபை தொகுதிகளில், பதிவான ஓட்டுக்கள் எண்ணும்பணி துவங்கியது. இதில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார். அவர் 18,709 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஓம்சக்தி சேகர், 7,526 ஓட்டுக்கள் பெற்றார். இந்த வெற்றி மூலம் முதல்வர் பதவியை நாராயணசாமி தக்க வைத்து கொண்டார்.

நெல்லித்தோப்பில் 3 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது. அரவக்குறிச்சியில் 18, திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுக்களாகவும், தஞ்சாவூரில் 20 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. இங்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.

முன்னதாக, அரக்குறிச்சி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து மையம் முன் பா.ஜ. மற்றும் தே.மு.தி.க.வினர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இந்த அறையை அதிகாரிகள் திறக்க முற்பட்ட போது, சுயேட்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. தி.மு.க., வேட்பாளர் சரவணன், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கண்காணிப்பு கேமரா :


ஒவ்வொரு தொகுதியிலும், 225 பணியாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜையில், ஒரு மைக்ரோ பார்வையாளர் இருப்பார். மேற்பார்வையாளர், உதவியாளர், மைக்ரோ பார்வையாளர், ஓட்டு எண்ணும் பணியாளர், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நபர், தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர்கள், முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை, வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜை ஒவ்வொன்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காலை, 9:00 மணியில் இருந்து, முடிவுகள் வெளிவரத் துவங்கும்.

மொபைல் போனுக்கு தடை :ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவை அறிவிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதி பார்வையாளரிடம் இருந்து, ஒப்புதல் பெற வேண்டும். அத்துடன், வட மாநிலங்களில், நான்கு லோக்சபா தொகுதிகளுக்கும், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 19ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளும், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகின்றன.
 

vijaykumar12

Well-Known Member
#9
Re: Daily interesting News --October 2014 !!

ஒடிசா வங்கியில் ரூ.1 கோடி கொள்ளை

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பழைய நோட்டுகள் :


ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, தென்கனல் மாவட்டத்தில், ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது.மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில், இங்கு வைக்கப்பட்டிருந்தன; இவற்றின் மதிப்பு, 8 கோடி ரூபாய்.


பெட்டியை உடைத்து கொள்ளை :


இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின், நேற்று காலை வங்கியை திறந்த அதிகாரிகள், அந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.


ஊழியர்களின் உதவியுடன்..?


இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கூறுகையில், 'வங்கியில் பணியாற்றுவோரின் உதவி இன்றி, இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

vijaykumar12

Well-Known Member
#10
Re: Daily interesting News --October 2014 !!

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டு எண்னும் பணி தொடங்கியது

 

vijigermany

Well-Known Member
#11
பார்லிமென்டில் பிரதமர் ஏன் பேசவில்லை: ராகுல்

டிவியில் பேசும் பிரதமர், பார்லிமென்டில் ஏன் பேசவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.


அமளி:

ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளிலும் எந்த அலுவல்களும் நடப்பதில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ஓட்டெடுப்புடன் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள், ராஜ்யசபாவில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது. ஓட்டெடுப்பில்லாமல் விவாதம் நடத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் பதிலளிப்பார் என கூறி வருகிறது. இதனை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.


கண்டனம்:

பார்லிமென்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டிவி மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பேசும் பிரதமர், பார்லிமென்டில் பேசாமல் இருப்பது ஏன்? அவர் ஏன் பார்லிமென்ட் வருவதில்லை எனக்கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இசை நிகழ்ச்சியில் பேசுவதற்கு பிரதமருக்கு நேரம் கிடைக்கும் நிலையில், பார்லிமென்டில் பேச முடிவதில்லை என்றார்.


சபாநாயகர் வருத்தம்:

லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், லோக்சபா சுமூகமாக நடக்காமல் வருத்தமளிக்கிறது. அவையை சுமூகமாக நடத்த முயற்சி செய்கிறேன். எதிர்க்கட்சியினர் அவையை சுமூகமாக நடத்த அனுமதிப்பதில்லை என்றார்.
 

vijigermany

Well-Known Member
#12
தமிழகத்தில் நடந்த 3 தொகுதி தேர்தலில் அதிமுக வெற்றி

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டசபையில் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்கிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. நெல்லித்தோப்பில் 3 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அரவக்குறிச்சியில் 18, திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுக்களாகவும், தஞ்சாவூரில் 20 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே அ.தி.மு.க., வேட்பாளர்களே மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர்.


தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் ரங்கசாமி, தி.மு.க., வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை தோற்கடித்தார். ரங்கசாமிக்கு 1,01,362 ஓட்டுக்களும், அஞ்சுகம் பூபதிக்கு 74,488 ஓட்டுக்களும் கிடைத்தன. பா.ஜ., வேட்பாளருக்கு 3,806 ஓட்டுக்களும், தே.மு.தி.க., வேட்பாளருக்கு 1,534 ஓட்டுக்களும், நோட்டாவிற்கு 2,295 ஓட்டுக்களும் கிடைத்தன.


திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றார். தேர்தலில், அவருக்கு 1,13,032 ஓட்டுக்கள் கிடைத்தன. திமுக வேட்பாளர் சரவணனுக்கு 70,362 ஓட்டுக்களும், பா.ஜ., வேட்பாளருக்கு 6,930 ஓட்டுக்களும், தே.மு.தி.க., வேட்பாளர் 4,105 ஓட்டுக்களும் கிடைத்தன. நோட்டாவிற்கு ஆதரவாக 2,214 ஓட்டுக்கள் கிடைத்தன.

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 23,873 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், 88,068 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வின் பழனிச்சாமி, 64,395 ஓட்டுக்கள் பெற்றார்.


நெல்லித்தோப்பு:

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார். அவர் 18,709 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஓம்சக்தி சேகர், 7,526 ஓட்டுக்கள் பெற்றார். இந்த வெற்றி மூலம் முதல்வர் பதவியை நாராயணசாமி தக்க வைத்து கொண்டார்.


போராட்டம்:

முன்னதாக, அரக்குறிச்சி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து மையம் முன் பா.ஜ. மற்றும் தே.மு.தி.க.வினர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தே.மு.தி.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இந்த அறையை அதிகாரிகள் திறக்க முற்பட்ட போது, சுயேட்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. தி.மு.க., வேட்பாளர் சரவணன், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


புகார்:


பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை, சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து, அரவக்குறிச்சியில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 

vijigermany

Well-Known Member
#13
[h=1]ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் ’ட்ரிபிள் 7’ அதிவேக பீரங்கிகள் விரைவில்...![/h]

இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்த கையடக்கமான அதிவேக M-777A2 அல்ட்ரா ஒளி பூவுரங்கிகள் (Ultra-Light Howitzers) இறக்குமதியாக உள்ளன. பூவிரங்கிகள் (Howitzers) என்பது நவீன ரக பீரங்கிப் படைத் துப்பாக்கிகள் ஆகும்.

இந்த மாத துவக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் “Triple Seven” என்று அழைக்கப்படும் M-777A2 ஹோவிட்ஸெர்களை அமெரிக்காவிடம் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவிற்கு பீரங்கிகள் கொள்முதல் செய்ய ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இவ்வகை அதிவேக பீரங்கிகளை வாங்க, 2010 ஆம் ஆண்டு முதலே வல்லுனர்கள், இந்திய பாதுகாப்பு துறையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தியா தாமதித்ததால், 2010 ஆம் ஆண்டு 4,407 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆன பீரங்கிகள், தற்போது 5,107 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.


 

vijaykumar12

Well-Known Member
#14
[h=1]அருண் ஜேட்லியிடம் முறையிட்ட அ.தி.மு.க எம்.பி.க்கள்[/h]


இன்று டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க எம்.பி.க்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
வர்த்தக வங்கிகளைப் போல கூட்டுறவு வங்கிகளும் டெப்பாசிட் பெற அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 3,000 கோடி ரூபாய் பயிர்க்கடனாக தர வேண்டும் என்றும் முறையிட்டனர்.
மேலும், பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் கூட்டுறவு வங்கிகள் கடனைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
 

vijaykumar12

Well-Known Member
#15
[h=1]இந்திய ராணுவ வீரர்கள் மூவர் பலி - கடும் கோபத்தில் இந்தியா[/h]

பாகிஸ்தானின் பார்டர் ஆக்‌ஷன் டீம், மச்சில் பகுதியில் முன்று இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது. அவர்களில் ஒரு வீரரின் உடலை சிதைத்ததால் கடும் கோபத்தில் இருக்கிறது இந்திய ராணுவம்.
இதற்கான பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள் ராணுவ அதிகாரிகள். பாக்., தரப்போ தங்கள் வீரர்கள் இதைச் செய்யவில்லை என்கிறது.
ஜோத்பூரைச் சேர்ந்த பிரபு சிங் (31) என்ற வீரரின் உடல்தான் சிதைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மற்ற இரண்டு வீரர்கள் மனோஜ் கே குஷ்வா மற்றும் சஷங்க் கே சிங் ஆகியோர். ஒரே மாதத்தில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
 

vijaykumar12

Well-Known Member
#16
[h=1]சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் - இன்று மாலை முடிவு அறிவிப்பு![/h]

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாயிலாக, தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இளநிலை, மூத்த செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலுக்கான உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வழக்கறிஞர் வட்டாரங்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யக் கூடாது, உணவு பொட்டலங்களை வழங்கி நீதிமன்ற வளாகத்தை அசுத்தம் செய்யக்கூடாது, வழக்கறிஞர்களின் பிரசாரத்தை கண்காணிக்க கேமிரா என ஏக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளராக இருந்த அறிவழகன், விஜயகுமார், காசி ராமலிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் போட்டியிடுகின்றனர். செயலாளார் பதவிக்கு சிவசங்கர், இளங்கோவன், கிருஷ்ணகுமார், சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிடுகின்றனர், தலைவர் பதவியைப் போல செயலாளர் பதவியும் செல்வாக்கானது என்பதால் அதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் பதவிக்கு சிவ சண்முகம் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 6 மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு, மாலையே முடிவுகள் வெளியாகும்.
- அ.பா.சரவண குமார் (மாணவப் பத்திரிகையாளர்)
படம்: அ. சரண் குமார் (மாணவப் பத்திரிக்கையாளார்)

 

vijigermany

Well-Known Member
#17
[h=1]வங்கிப் பணம் ஒரு கோடியுடன் மாயமான வேன்[/h]

பெங்களூருவில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக, வங்கிப்பணம் ரூ.1.37 கோடியுடன் சென்ற வாகனம் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சொந்தமான அந்த வேன் பெங்களூரு கேஜி சாலை வழியாக சென்றபோது மாயமானதால், அவ்வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேன் டிரைவர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 

vijigermany

Well-Known Member
#18
[h=1]துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் சென்னை பல்கலைக்கழக பட்டமா?[/h]

சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுவதற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழா டிசம்பர் முதல் நாள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக கிடக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லாமல் விழா நடைபெறும், துணைவேந்தர் ஒப்பமின்றி பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.


இந்தியாவின் எந்த பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதோ, துணைவேந்தரின் கையெழுத்தின்றி பட்டம் வழங்கப்பட்டதோ கிடையாது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த 10 மாதங்களாக நிரப்பப்படாமல் கிடக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மறைப்பதற்காக, பல்கலைக்கழக பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் இப்படி ஓர் ஏற்பாட்டை உயர்கல்வி செயலர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. துணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு அல்லது வெளிமாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக அமைப்புச் சட்டத்தின் 20-வது பிரிவின்படி, பட்டச் சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம் துணைவேந்தருக்கு மட்டுமே உண்டு. துணைவேந்தர் இல்லாதபட்சத்தில் ஆட்சிக்குழுவால் (சிண்டிகேட் குழு) நியமிக்கப்படும் ஒருவர் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திடலாம்.


சென்னை பல்கலைக்கழகம் மட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 9.4.2015 தேதி முதல் 20 மாதங்களாகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஜூன் முதல் 5 மாதங்களாகவும் காலியாக உள்ளன. காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால், அங்கு படித்த மாணவர்கள் பட்டம் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் தமிழக உயர்கல்வித்துறை சீரழிந்து விடும். எனவே, சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நிறுத்த ஆளுநர் ஆணையிட வேண்டும். 3

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை ஒரு மாதத்துக்குள் நிரப்பி, அதன்பின்னர் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஆணையிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

vijigermany

Well-Known Member
#19
[h=1]அன்று 32 இன்று 18.. நெருக்கடியில் தமிழர்கள்![/h]

செம்மர கடத்தல் வழக்கில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருப்பதி நீதிமன்றம் 32 தமிழர்களை ஜாமீனில் விடுதலை செய்தது. 32 தமிழர்களை விடுதலை செய்த வேகத்தில் மீண்டும் இன்று 18 தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திர காவல் துறை மற்றும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ள 18 தமிழர்களிடமிருந்து, ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

vijigermany

Well-Known Member
#20
[h=1]மோடியை புகழ்ந்ததால் மைக் பிடுங்கப்பட்டது...[/h]

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பிரசாரக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மாயாவதியின் முன்னிலையில் மோடியை புகழ்ந்துள்ளார் கட்சியின் பிரமுகர் ஒருவர்.
இதனால் அவர் கையிலிருந்த மைக் பேசிக் கொண்டிருக்கும்போதே பிடுங்கப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


‘தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முதல் முறையாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.’ என்று புகழ்ந்த அவர், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்காகவும் மோடியை புகழ்ந்துள்ளார்.