Daily Interesting News! -2

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசுவது ஏன்? - பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம்

உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்தியாவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து லண்டனில் பேசி இருக்கிறார். கருப்பு பணம் மற்றும் ஊழல்கள் குறித்தும் பேசியுள்ளார்.

உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் வேறொரு நாட்டில் தனது நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசுவது சரியா? இந்தியா குறித்து ஊழல் மற்றும் கற்பழிப்பு நிறைந்த ஒரு பிம்பத்தை எதற்காக வெளிநாடுகளில் ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தினர் மீது முன்விரோதம் இருக்கலாம்.

அதற்காக வெளிநாடுகளில் வைத்து நாட்டு நடப்புகளை பேசுவது முறையாகாது. வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா இங்கிலாந்தில்தான் பத்திரமாக உள்ளார். பிரதமர் மோடி இது போன்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
கர்நாடக சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி சித்தராமய்யா இரு தொகுதிகளில் போட்டி

1524335678542.png

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கலும், பிரசாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல் மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதி தேர்தல் அலுவலரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள படாமி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. இதை நேற்றுவரை உறுதிப்படுத்தாத சித்தராமைய்யா படாமி தொகுதியில் வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் வெங்கடேசன் (37). சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் போலி பணி நியமனங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட சமையலர்களை முறைகேடாக பணியமர்த்தியதற்கு வெங்கடேசன் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

மேலும் உயர் அதிகாரிகள் பெயரை சொல்லி விடுதி வார்டன்கள், தலைமை ஆசிரியர்களிடம் வசூலில் ஈடுபட்டதுடன், பள்ளிக்கும் சரியாக செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வந்த புகாரின் பேரில் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வெங்கடேசனிடம் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவர் விரைவில் சஸ்பெண்டு செய்வார் என்று கூறப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்

1524336285780.png


தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடைவிதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.

ஆனால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி கோர்ட்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான கூட்டுறவு சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
கர்நாடக தேர்தல்- 3 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் 12-5-2018 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காந்தி நகர், ஹனூர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கட்சி தலைமை விருப்ப மனுக்களை பெற்றது. இந்த விருப்ப மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக எம்.பி.யுவராஜ் (காந்தி நகர்), ஆர்.பி.விஷ்ணுகுமார் (ஹனூர்) மற்றும் மு. அன்பு (கோலார் தங்கவயல்) ஆகியோர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
ரே பரேலியில் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்

1524337088214.png

உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்தர்நாத் பாண்டே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்ட மேடையில் மகேந்தர்நாத் பாண்டே பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் ஒரு பகுதியில் மின்சார கசிவால் புகையும் தீப்பொறியும் கிளம்பியது. காற்றின் வேகத்தில் மேடையின் பின்புறம் இருந்த அலங்கார துணியில் தீபிடித்தது.

இதனால் மேடையின் மீதிருந்த தலைவர்கள் மற்றும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

சிறிது நேர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால், சில நிமிடங்கள் வரை அங்கு பரபரப்பு நிலவியது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அவசர சட்டம்

கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லைய்யா பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு வங்கிகளில் கடனாக பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். ஐ.பி.எல்.கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஊழல் செய்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த லலித் மோடி போன்றோரும் இந்திய அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து, விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடித்து வருகின்றது. மேலும், இவர்களுக்கு எல்லாம் சொந்தமாக உள்நாட்டில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்வதிலும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் தடைக்கற்களாக இருந்து வருகின்றன.

இதை எல்லாம் தகர்த்து பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வகை செய்யும் மசோதா கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கிப் போட்டதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதைதொடர்ந்து, இந்த அவசர சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக அறிமுகப்படுத்தி, சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு முழு உயிர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
தமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்

திருச்சியில் இன்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய , மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை. ஆனால் அவர்கள் இதற்காக பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக பல நாட்கள் யோசித்துள்ளார்கள். மக்கள் இதை புரிந்து உள்ளார்கள். அவர்களை அப்புறப்படுத்துவார்கள்.

தமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை. அரசாங்கமும் சரியில்லை. தேர்தல் வந்தால் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். ஆளுனரால் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவரே திரும்ப செல்ல வேண்டும். ஆளுனரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் யார்?அவர் எந்த மாதிரியான மனிதர் என்பது விரைவில் வெளிவரும். என்னுடைய சிலிப்பர் செல்கள் யார் என்பது சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவரும். தமிழகத்தில் தரம் தாழ்ந்த மனநிலை உள்ளவர்கள் அநாகரீகமாக பேசுகிறார்கள். அவர்களின் உண்மை சொரூபம் வெளியில் தெரிகிறது. தமிழிசை சவுந்தரராஜன் , எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் தமிழகத்தில் வளர முடியவில்லை என்ற விரக்தியில்பேசுகிறார்கள்.

இந்தியாவில் கொடூரமான கொலைகள் , கற்பழிப்புகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அப்போதுதான் அதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,422
Likes
3,100
Location
India
அடுத்த பிரதமர் யார் என்பதை ஆந்திர மாநிலம் முடிவு செய்யும் - சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதியில் நடந்த சதிகாரா மித்ரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகவும் மற்றும் பல்வேறு உறுதி மொழிகளையும் அளித்தார்கள்.

ஆனால், இதில் எதையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு ஆந்திராவுக்கு துரோகம் செய்து விட்டது. ஆந்திராவுக்கும் ஒரு காலம் வரும். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை நாம் தான் முடிவு செய்வோம்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருப்பதால் நமது பிரச்சினைகளை பற்றி பேசினால் காது கொடுத்து கேட்பதில்லை.

கடந்த தேர்தலில் மட்டும் ஒன்றிரண்டு தொகுதிகளில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தாலும் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு இருக்கும். அப்படி நடந்து இருந்தால் நமது கோரிக்கையை கவனிப்பார்கள்.

நான் இப்போதே ஆந்திர மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போதே நீங்கள் முடிவு எடுத்து கொள்ளுங்கள்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளிலும் தெலுங்குதேசம் வெற்றி பெற நீங்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம்தான் இருக்கும்.

ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டு வைத்து கொண்டு மாநிலத்துக்கு அநீதி அளித்து வருகின்றன.

மோடியுடன் சேர்ந்து கொண்டு இங்கு முழு அடைப்பு நடத்தினார்கள். இதன் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சியை பாதிக்க செய்து இருக்கிறார்கள்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம். சாதித்து காட்டுவோம்.

மோடியும் ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தவர். இப்போது அவர் பிரதமர் ஆகி இருக்கிறார். அவர், நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்கும் உரிய நீதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
மனிதசங்கிலி; ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு

1524513324270.png

காவிரி மேலாண் வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (ஏப்.,23) மனித சங்கிலி போராட்டம் நடந்தது.மாலை ஒரு மணி நேரம் நடந்த இந்த புதுக்கோட்டை போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சென்னையில் நடந்த போராட்டத்தில் திமுக எம்.பி., கனிமொழி பங்கேற்றனர்.

திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களில் இந்த போராட்டம் நடந்தது.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.