Daily Interesting News! -2

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
குமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி

1526841813157.png

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆதரவை பெற்று வெற்றி பெறுவாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் ராஜினாமா திருப்பத்தை ஏற்படுத்தியது.
3 நாளில் அவர் பதவி இழந்தது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேசமயம் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடியூரப்பா ராஜினாமா செய்ததால் கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டார்.
குமாரசாமி ஏற்கனவே கவர்னரை சந்தித்து தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்து இருந்தார். இதனால் நேற்று புதிதாக கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்தார்.
கவர்னரை சந்தித்த பின்பு குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றார். கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்துள்ளார். அதற்கு முன்னதாகவே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்றும் கூறினார்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை பெங்களூரிலேயே தங்கி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஜே.டி.எஸ் தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பதவி ஏற்பு விழாவை முதலில் நாளை (திங்கட்கிழமை) வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார். நாளை ராஜீவ்காந்தி நினைவுநாள் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 23-ந்தேதி பதவி ஏற்பு விழா வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

புதிய மந்திரிசபை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டார்.
இதில் மந்திரி பதவிகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு குழு அமைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து ஆட்சி அதிகாரத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரி ஆகிறார். முதல்- மந்திரியாக பதவி ஏற்கும் குமாரசாமி நிதித்துறையையும் கூடுதலாக வைத்துக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஜே.டி.எஸ். கட்சியுடன் கூட்டணி வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று மகேஷ் என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படுகிறது.
மேலும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் மந்திரி சபையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர காங்கிரஸ், ஜே.டி.எஸ். சார்பில் யார்- யார்? மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் வருமாறு:-
விஸ்வநாத் (ஜே.டி.எஸ்.)- கல்வித்துறை.
புட்டராஜூ (ஜே.டி.எஸ்.)- விவசாயத் துறை.
ரேவண்ணா (ஜே.டி.எஸ்.) - பொதுப்பணித்துறை
ஜார்ஜ் (காங்கிரஸ்)- பெங்களூரு நகர வளர்ச்சி துறை
கிருஷ்ணப்பா (காங்கிரஸ்) - விளையாட்டுத் துறை
கிருஷ்ண பைரே கவுடா (காங்கிரஸ்)- தகவல் மற்றும் விளம்பரத்துறை
மகேஷ் (பகுஜன் சமாஜ்)- சமூக நலத்துறை
ஜி.டி.தேவகவுடா (ஜே.டி. எஸ்.) - கூட்டுறவு துறை
பண்டேப்பா கசேம்பூர் (ஜே.டி.எஸ்.) - ஜவுளி மற்றும் அறநிலைய துறை
தம்மன்னா (ஜே.டி.எஸ்.)- தொழிலாளர் நலத்துறை
தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்)-கலால் வரி
சுதாகர் (காங்கிரஸ்)- சுகாதாரத்துறை
தன்வீர் சையது (காங்கிரஸ்) - உயர் கல்வித்துறை
ரோசன் பெய்க் (காங்கிரஸ்) -வனத்துறை
எம்.டிபாட்டீல் (காங்கிரஸ்)- உணவு மற்றும் நுகர் பொருள் வினியோகத் துறை
ஆர்.வி.தேஷ்பாண்டே (காங்கிரஸ்)-சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை
சதீஷ் ஜர்கிகோலி (காங்கிரஸ்) -சிறுதொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
அஜய் (காங்கிரஸ்) -அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
சிவசங்கரப்பா (காங்கிரஸ்)- வருவாய் துறை
ராமலிங்கரெட்டி (காங்கிரஸ்)- போக்குவரத் துறை
ராமசாமி (ஜே.டி.எஸ்.)- தொழில் துறை
நரேந்திரா (காங்கிரஸ்)- கால்நடை துறை.
காதர் (காங்கிரஸ்) -சுகாதாரம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
குமாரசாமி பதவி ஏற்பு விழா - மு.க.ஸ்டாலினுக்கு தேவேகவுடா அழைப்பு

1526841922622.png

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை அழைத்து கவர்னர் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினிடம் பேசி உள்ளார். இதை ஏற்று பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
மத்தியப்பிரதேசம் காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவராக திக்விஜய் சிங் நியமனம்

1526990563999.png


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் பல மாநிலங்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை மாற்றி அமைத்து வருகிறார்.

அவ்வகையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

இதேபோல், தேர்தல் பிரசாரக்குழு தலைவராக ஜோதிராதித்யா சிங் மற்றும் தேர்தல் திட்டக்குழு தலைவராக சுரேஷ் பச்சவுரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
தமிழகத்தில் 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான பணிகள்- இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்

1526990921143.png

இந்திய தொழில் கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டல நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாடு அரசு சார்பில் எளிதான தொழில் செயல்பாடுகளுக்கான ஒரு இணையதளத்தை தயார் செய்ததற்காகவும், அது நல்லமுறையில் இருப்பதற்காகவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத்தின் நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம். மேலும் இந்த இணையதளம் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தோம்.

இந்த இணையதளத்தை 29 நிறுவனங்கள் ஏற்கனவே உபயோகிக்கின்றனர். அதில், அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனவே, அதை தொடரலாம். சி.ஐ.ஐ.யின் மாடல் கேரியட் சென்டர் மூலம் 4 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் இதுபோல ஒரு இணையதளம் தயார் செய்துள்ளனர். அதுவும் நல்லமுறையில் உள்ளது. மேலும், அதனுடைய செயலாக்கத்தை இன்னும் சிறப்பாக உயர்த்தப் போவதாக கூறினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஆர்.தினேஷ் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- எளிதாக தொழிலாற்றுவதற்காக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் ஒரு இணையதளம் தயார் செய்துள்ளதாக கூறினீர்களே, அதன் மூலம் சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- ரூ.10 கோடி முதலீட்டிற்கு குறைவாக உள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது. இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும். இதில், விண்ணப்பிக்கும்போது, பல துறைகளுக்கு ஒப்புதலுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு இடத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அனைத்துத்துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு வந்துவிடும்.

முதல்-அமைச்சர் தொடங்கியதை, சிறு தொழில் முனைவோர்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். எளிதாக தொழிலாற்றுவது குறித்து நாங்கள் சென்றமுறை வழங்கிய ஆலோசனைகளையும் சேர்த்துள்ளனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி:- தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு இருக்கிறதா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதா?

பதில்:- இப்போது, தொழில் வழிச் சாலைகள், சாலைகள், விமான போக்குவரத்து போன்றவற்றில் அரசால் செய்யப்பட்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இணைப்பு என்று பார்த்தால், துறைமுகங்கள், சாலைகள், ரெயில், விமானம் ஆகியவை உள்ளன. இப்போது சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட, இரவிலும் விமானங்களை இயக்கும் வசதிக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம். அனைத்து வகையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசித்து, வழிவகுத்து கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தால் கைகளை வெட்டுவேன் - உ.பி. மந்திரியின் மகன் ஆவேசம்

1526991390345.png
உத்தர பிரதேச மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான அரவிந்த் ராஜ்பர் சண்டவ்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.

‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற குற்றவாளிகளை இல்லாமல் செய்துவிடுவோம்’ என்று அரவிந்த் பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கடுமையான சட்டம் வந்தால் ஒழிய, இந்த அழுக்கு மனப்பான்மை கொண்ட மக்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பார்கள் எனவும், அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிடும் வகையில் கடுமையான சட்டம் வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

ர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தனது தன்மானப் பிரச்னையாக நரேந்திர மோடி நினைத்தார். எந்தவொரு பிரதமரும் ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு இத்தனை நாள்கள் பிரசாரம் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்குக் கர்நாடகாவில் இருந்தார் மோடி. மத்திய அமைச்சரவையே கர்நாடகாவில்தான் இருந்தது. எடியூரப்பா - சித்தராமையா ஆகிய இருவருக்கு இடையிலான தேர்தல் என்பது மாறி, நரேந்திரமோடி - சித்தராமையா ஆகிய இருவருக்கான தேர்தலாக இது மாறியது. காங்கிரஸின் வாக்குகளை தேவகவுடா உடைப்பார், பி.ஜே.பி வெல்லும் என்பதுதான் மோடி போட்ட கணக்கு. ஆனால், 38 இடங்களை வென்று, தனது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை தேவகவுடாவும் குமாரசாமியும் உருவாக்கினார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருக்கும் என்றும் மோடி நினைத்தார்.



ஆனால், 104 இடங்களில் வென்ற பி.ஜே.பி-யை விட, 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளது. இதனை மிக மோசமான சிக்னலாக பி.ஜே.பி தலைமை பார்க்கிறதாம். மக்களின் மனோபாவம் பி.ஜே.பி-க்கு எதிராக இருக்கிறது என மத்திய உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளதாம்.

வரும் டிசம்பர் மாதத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோன்ற தேர்தலை, ‘மினி பார்லிமென்ட் தேர்தல்’ என்பார்கள். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள்தான் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அப்படிச் சொல்வார்கள். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்குத் தயாராக வேண்டியதுதான் என்று டெல்லி பி.ஜே.பி மேலிடம் நினைத்ததாம். அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள நினைத்தார்களாம். ஆனால், கர்நாடகாவில் வாங்கிய வாக்குகள் மூலமாக இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த நிலைமைதான் எதிரொலிக்கும் என்று நினைத்த மோடி, மனம் மாறிவிட்டார் என்றும் சொல்கி றார்கள். மேலும், பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் அனைத்தும் மனரீதியாக ஒன்றுசேர்ந்திருக்கும் இந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதும் நல்லதல்ல என்றும் பி.ஜே.பி தலைமை நினைக்கிறதாம்.

தேசிய அளவில் சில வாரங்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளிடம் மோதல் போக்கு இருந்தது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா, இல்லையா என்பதே இந்த மோதலுக்குக் காரணம். காங்கிரஸைச் சேர்த்துக்கொண்டு சிலரும், காங்கிரஸ் இல்லாமல் சிலரும் கூட்டணிக்கான முயற்சிகளைச் செய்து வந்தார்கள். ‘இவர்களெல்லாம் எங்கே ஒன்றுசேரப் போகிறார்கள்?’ என்ற சந்தேகத்தைத்தான் இவர்களது வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுத்தின. இந்த நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்தது. எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கொடுக்க, ‘நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு’ என்று தேவகவுடாவும் அறிவித்துவிட்டார். பி.ஜே.பி-க்கு எதிரான முக்கியக் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர தேவகவுடா முயற்சி செய்துவருகிறார். இதனையும் பி.ஜே.பி எதிர்பார்க்கவில்லை. எனவே, கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவு என்பது அகில இந்தியத் திருப்பங்களை உருவாக்குவதாக அமைந்து விட்டது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
கர்நாடகாவில் குமாரசாமி, துணை முதல்வர் மட்டுமே பதவியேற்பு?!

1527045961037.png

ர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அமைவதற்கு முன்னரே, இந்த அரசு நீடிக்குமா என்ற விவாதங்கள் உருவாகத் தொடங்கி விட்டன.



குழந்தை பிறக்கும் முன்னரே, இந்தக் குழந்தை எத்தனை நாள்கள் அல்லது வருடத்திற்கு உயிரோடு இருக்கும் என்று பெற்றோரிடம் பலரும் கேட்பதைப் போன்ற கூற்றுகள் உலவத் தொடங்கியுள்ளன.

பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா ஒருபடி மேலேபோய், எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கர்நாடக மாநில சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தரப்புக்கு துணை முதல்வர் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்கள் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணி அரசு அமைப்பது குறித்தும், அரசில் இடம்பெறுவோர் பற்றிய விவரங்கள் குறித்தும், குமாரசாமி டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அதிகாரப் பகிர்வு என்பதை விடவும், விரிவான கூட்டணி குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியுடன், சட்டசபை சபாநாயகர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தாலும், கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமையட்டும் என்று ராகுல், சோனியாவுடனான சந்திப்பின்போது குமாரசாமி தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் குமாரசாமி பதவியேற்பு விழாவும், அதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்வும், குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே அமைச்சர்கள் பற்றிய இறுதி முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் - ஜே.டி. (எஸ்) வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காங்கிரஸ் - ஜே.டி. (எஸ்) கூட்டணி அரசு தொடர்ந்து நீடிக்காது என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகி வருவதால் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே கர்நாடகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து மூத்தத் தலைவர்களுடன் ராகுல் காந்தி விவாதித்து முடிவெடுத்து விட்டதாகவும், காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, காங்கிரஸ் மேலிடத் தலைவர் வேணுகோபால், குமாரசாமியைச் சந்தித்துப் பேசிய பின்னரே அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளைய பதவியேற்பு விழாவின்போது, அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

தலித் தலைவரான ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. குமாரசாமியுடன் பரமேஸ்வராவும் பதவியேற்க வாய்ப்பிருக்கிறதாகக் கூறப்படுகிறது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இரண்டாவது துணை முதல்வராகப் பதவியேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதுகுறித்து உறுதியாகத் தெரியவரவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் உள்பட 20 அல்லது 21 அமைச்சர்கள் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 38 உறுப்பினர்களைக் கொண்ட ஜே.டி.(எஸ்)-க்கு முதல்வர் குமாரசாமி தவிர 12 அல்லது 13 அமைச்சர்கள் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) இடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டாலும், முக்கிய இலாகாக்களான உள்துறை, வருவாய், மின்சாரத்துறை, நிதி போன்ற துறைகளை காங்கிரஸ் கட்சி கோருவதாகவும், அந்தத் துறைகளை விட்டுத்தர ஜே.டி (எஸ்) மறுப்பதாகவும் பெங்களுருவில் இருந்து வரும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கூட்டணிக்குள் சிறு பூசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தவிர, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.ஆர். நகர், ஜெயநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்க இரு கட்சிகளின் சார்பில் குழு அமைக்கப்படும் என்றும், இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்தக் குழு இறுதி யோசனைகளைத் தெரிவிக்கும் என்றும், ஒருங்கிணைப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சித்தராமையா தொடர்ந்து நீடிப்பார் என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அவரை கர்நாடகத்தில் முக்கியத் தலைவராக முன்னிறுத்தப்படுவார் என்றும் காங்கிரஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்வதில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிகிறது. குமாரசாமி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான ரமணாகரா உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்தத் தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா அல்லது மகன் நிகில் போட்டியிடக்கூடும் என்று பரவலாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, குமாரசாமி தலைமையில் அமையவிருக்கும் கூட்டணி அமைச்சரவை தொடர்பாக சிறு சிறு பூசல்கள் இருந்தாலும், அது எந்தவிதத்திலும் கூட்டணிக்கு பாதகமாக அமையாது என நம்பலாம்....
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
ஸ்டெர்லைட் ஆலையில் கீதா ஜீவன், வைகோ மருமகன் காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தகவல் - அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லா பிரச்சினைக்கும் தமிழக அரசு தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் சற்று கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை எனும் நிலைப்பாட்டை எடுத்தார். அவரின் அந்த நிலைப்பாட்டையே நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். எனவே எப்படி தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்? என்பது தெரியவில்லை.



அந்த ஆலையை வைத்து அரசியல் தான் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது அந்த ஆலைக்கு எதிரான பேரணிக்கெல்லாம் தலைமை தாங்கி வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் அங்கு 600 வண்டிகள் ஓடுவதாகவும் ஒரு தகவல். அதேபோல மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவேன் என்று அடம்பிடித்து வரும் வைகோவின் மருமகனும் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாக ஒரு தகவல்.

ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி வருபவர்கள் இப்படியாக இருக்க, அந்த ஆலையை மக்கள் நலனுக்காக தேவையில்லை என்று முடிவில் உள்ள தமிழக அரசின் மீது குற்றம் சாட்டப்படுவதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். எது உண்மை, யார் நல்லவர்? என்று மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.