Daily Interesting News! -2

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,456
Likes
20,836
Location
Germany
காவிரி மேலாண்மை ஆணையம்: மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது- குமாரசாமி கோபம்


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார். இதேபோல் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்காக அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அறிவித்து மத்திய அரசு நேற்று இதற்கான அரசாணையை வெளியிட்டது.

கர்நாடக அரசு இதுவரை தனது பகுதிநேர உறுப்பினரை நியமிக்கவில்லை. அதுபோல் இதுவரை கர்நாடக அரசு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு தனது உறுப்பினரை நியமிக்கவில்லை.

இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் என்றார் குமாரசாமி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,456
Likes
20,836
Location
Germany
பயணத்தில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை சீன பயணத்தை ரத்துசெய்தார் மம்தா பானர்ஜி

சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மம்தா பானர்ஜிக்கு கடந்த மார்ச் மாதம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்தார். ஏப்ரல் மாதம் அழைப்பை ஏற்ற மம்தா பானர்ஜி கலந்துக்கொள்வதாக தெரிவித்தார். மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழு சீனாவுக்கு இரவு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. இந்த குழு அங்கு நடைபெறும் இந்திய மற்றும் சீன அரசியல் தொடர்பான பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவருடைய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுபற்றி மம்தா பானர்ஜி தனது முகநூல் பதிவில், ‘‘இரு நாடுகளுக்கும் இடையே சீனாவில் நடைபெறுவதாக இருந்த அரசியல் நிலை குறித்த பரிமாற்ற நிகழ்ச்சி உயர் மட்ட அளவில் உறுதி செய்யப்படவில்லை என்று சீனாவுக்கான இந்திய தூதர் தெரிவித்து இருக்கிறார். அதனால் எனது சீன பயணத்தில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே கடைசி நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக எனது பயணத்தை ரத்து செய்கிறேன்’’ என்று தெரிவித்து உள்ளார். மாநில நிதி மந்திரி அமித் மித்ரா கூறுகையில், ‘சீன பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பது பற்றி வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் - முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை - சேலம் விரைவு சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிக்கும் போது, சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

போராட்டத்தில் ஈடுபடுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாலே கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சேலம் இரும்பாலை தனியார்மயம் ஆவதை பிரதமர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
தினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் என அமைச்சர் பரபரப்பு புகார்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது:-

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி மிரட்டலுக்கு பயந்து முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்க தவறிவிட்டார். அப்போது முதல் கர்நாடகா அரசு தண்ணீரை தர மறுத்து விட்டது.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழி காட்டுதலின்படி முதல்- அமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கை நேர் திசையில் எடுத்துச் சென்று சட்டப் போராட்டங்களை நடத்தி 177 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் காவிரி நீருக்காக பாராளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தோம்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் இந்த ஆட்சியை கலைக்கலாம் என்ற நோக்கத்தில் சதிகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.




செயலற்ற தலைவராக விளங்கி வரும் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அந்த மக்களை எல்லாம் தூண்டி விட்டு அதில் பல்வேறு விதமான சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை போர்க்களமாக மாற்றி விட்டனர்.

18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்தி சென்று அவர்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை டி.டி.வி.தினகரன் வழியாக மு.க.ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.

ஆசை காட்டி மோசம் செய்து இன்றைக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதற்கு கருவியாக விளங்கியவர் டி.டி. வி.தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வெகு விரைவில் தீர்ப்பு வரும். இடைத்தேர்தல் வரும்.

இதுவரை நடந்த 110 அரசு விழாக்களில் ஒரே ஒரு விழாவில் மட்டும் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டுள்ளார். திருவாடானை தொகுதியில் மக்கள் குறைகளை நாங்கள் போக்கி வருகிறோம். அந்த தொகுதி மக்கள் புலம்புகின்றனர். தொகுதிக்குள் செல்வதற்கு பயமாக இருந்தால் நான் கூட்டிச் செல்கிறேன் தகுதி இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.

மு.க.ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து அறிவுரை வழங்குவதாகவும், அதன்படி செயல்படுவதாகவும் தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுக்கும். துரைமுருகனுக்கும் அதிகாரப்போட்டி நடக்கிறது. தடை செய்யப்பட்ட குட்காவை சட்ட சபைக்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் நிலை பரிதாபமாக உள்ளது. காலம், நேரம் கருதி சரியான நேரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை இருக்கும்.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு தடைபோடும் வகையில் தி.மு.க. விவசாயிகளை தூண்டி விடுகிறது. மிகப் பெரிய சாலைகளை போட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். அப்போது தான் தொழில் வளர்ச்சிகள் பெருகும். மத்திய அரசு தரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
`அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது" காவல்துறையை எச்சரித்த தினகரன்!


“எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். தீர்ப்பு எப்படி வந்தாலும், இந்த ஆட்சி இன்னும் ஓரிரு நாள்களில் கலைவது உறுதி” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.டி.வி தினகரன் பேசினார்.


தி.மு.க-விலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகள் இணையும் விழா ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது . டி.டி.வி தினகரன் தலைமையில் 3 ஆயிரம் தி.மு.கவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைவதாகக் கூறினர். ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் இருந்த மொத்த கூட்டத்தின் எண்ணிக்கையே அதில் பாதிகூட இல்லை.









“இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காகத் தான், நம்முடைய கழகத் தொண்டர்களையே இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்றேன். அதற்குப் பதிலாக, அந்தந்தப் பகுதிகளில் வந்து என்னைக் கழக நிர்வாகிகள் வரவேற்றுவிட்டுச் சென்றனர். நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் தி.மு.க விலிருந்து நம்முடைய கட்சியில் இணையும் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டால் மட்டும் போதும் என நான்தான் சொன்னேன்” என நிகழ்ச்சி அரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததைக் கண்டு தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பேச்சை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசிய தினகரன், “சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆளும்தரப்பு மற்றும் போலீஸாரிடம் இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. நசியனூர் தொட்டிபாளையத்தில் கட்சி அலுவலகத்தை திறந்துவிட்டு அங்கிருந்து நாம் கிளம்புகையில், ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தான பாண்டியன் என்னிடம் வந்து, ‘சேலத்திலிருந்து முதலமைச்சர் வந்துகொண்டிருக்கிறார். எனவே, நீங்கள் காலம் தாழ்த்திச் செல்லுங்கள்’ என்று சொன்னார். அதுமட்டுமல்லாமல், சாலையின் குறுக்கே காவல்துறை வாகனங்களை நிறுத்திவைத்து எங்களுக்கு வழிவிட மறுத்தனர். ரவுடிகள்தான் இதுபோன்று சாலையை மறித்து மிரட்டுவார்கள். ஆனால், அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படிச் செய்தால் என்னாவது?... இன்னும் எத்தனை நாள் இப்படி பண்ணப் போறீங்க. இந்த ஆட்சி இன்னும் 2 மாசத்துல கலைந்து போனா, ஏ.டி.எஸ்.பி சந்தான பாண்டியன் என்ன வேலையை ரிசைன் பண்ணிட்டு ஓடிடுவாரா!... அப்படி ரிசைன் பண்ணினாலும் தமிழ்நாட்டுல தானே இருக்கணும். இல்ல வெளிநாட்டுக்குப் போனாலும் தமிழ்நாட்டுக்கு வந்துதானே ஆகணும். நாங்க வர வைப்போமே!’ எனப் பேசினார்

தொடர்ந்து பேசியவர், “போக்கிரிகள், ரவுடிகள்போல் செயல்படுவது காவல் துறைக்கு வெட்கக் கேடாக இல்லையா. போலீஸார் எங்களிடம் நடந்துகொண்டதை நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். அதை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், உங்களை மக்கள் என்னவென்று நினைப்பார்கள். ஏற்கெனவே, காவல்துறை மீது மக்களுக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அதை இன்னும் தரம் தாழ்த்திக்கொண்டு செல்கிறீர்களே. ஆட்சி வரும் போகும். ஆனால், நீங்கள் அதிகாரிகள். உங்களுடைய வேலையை நீங்கள் சரியாக செய்யவில்லை எனில், நாளைக்கு அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்ற சூழல் வரும்” என போலீஸாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.


அடுத்து அ.தி.முக மீதான விமர்சனத்தை தொடங்கியவர், “அரசு இயந்திரம், காவல்துறை என எல்லாத்தையும் பயன்படுத்தி, எடப்பாடி அரசு ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் எனக் கிட்டத்தட்ட 200 கோடி செலவு செய்தார்கள். இருந்தும் 48 ஆயிரம் ஓட்டுதான் வாங்க முடிந்தது. இரட்டை இலையைத் தோற்கடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சேன்னு எனக்கே வருத்தமாகத்தான் இருந்தது. கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டி அன்றைக்கு இரட்டை இலையைத் தோற்கடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் ஆளானோம். ஒருவேளை அந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் இருந்திருந்தால், உதயசூரியன் ஜெயித்திருக்கும். இவர்கள் (அ.தி.மு.கவினர்) அசிங்கப்பட்டுப் போயிருப்பார்கள். எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்கம் சம்பந்தமான வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும். தீர்ப்பின் முடிவு எப்படி வந்தாலும், இந்த ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும். சபாநாயகர் கொடுத்த தீர்ப்புதான் செல்லும் என தீர்ப்பு வந்தால், 18 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு நமது அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெறுவார்கள். அப்போது இந்த ஆட்சிக்கு முடிவு வரும்” என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
கர்நாடக ஹஜ் பவனுக்கு அப்துல்கலாம் பெயர் - எடியூரப்பா யோசனை

பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்ட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக ஹஜ் மற்றும் வக்ப்போர்டு மந்திரி ஜமீர் அகமதுகான் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்புசுல்தான் பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாடியது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மடிகேரியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தற்போது மந்திரி ஜமீரின் முடிவை ஏற்று ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டினால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பா.ஜனதா பொது செயலாளர் ஷோபா எச்சரித்துள்ளார்.

முன்னாள் முதல்- மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி எடியூரப்பா கூறியதாவது:-

ஹஜ் பவனுக்கு திப்பு பெயர் சூட்டுவதற்கு இப்போது என்ன அவசரம். மந்திரி ஜமீர் தேவையில்லாமல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார். ஹஜ் பவன் நான் முதல் மந்திரியாக இருந்த போது கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறுகையில் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் வைப்பது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
ஆய்வுப்பணியை தடுத்தால் 7 ஆண்டு சிறை - கவர்னரின் மிரட்டலுக்கு தலைவர்கள் கண்டனம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு.

வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.

ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்:-

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநிலங்களின் உரிமைகளிலும், மக்களின் உரிமைகளிலும் தலையிடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, என் வீட்டிற்குள் நுழைந்து நான் என்ன சமைக்கிறேன்? என் குழந்தைக்கு என்ன சட்டை வாங்கி கொடுக்கிறேன்? என்ன மொழியில் பாடம் கற்பிக்கிறேன்? என்பதையெல்லாம், எனக்கு உரிமை இருக்கிறது நான் கட்டாயம் கேட்பேன் என்று ஆளுநர் வருவாரேயானால், என் வீட்டு வாசலில் அவரை நிறுத்துவதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது.

இதை ஆளுநரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியும் புரிந்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் தலைமை அதிகாரியும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதுபோல, குடிமக்களுக்கும் தங்களை தனி உரிமையில் பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தை விட அதிக பலம் பெற்றது.

1947-ம் ஆண்டு முதல் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதும் இல்லாத அளவிற்கு இவர் சுற்றிச் சுற்றி சடுகுடு ஆடுவது போல வலம் வருகிறார், ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு காரணம், எங்களை அத்தனை பேருமே திருடர்கள் என்றும், நீங்கள்தான் காவலாளர் என்றும் வருகிறீர்களா? தமிழகம் ஒன்றும் டெல்லிக்கு அடிமைப்பட்டு இல்லை. நீங்கள் நுழைவதும் இந்த கேள்விகளை கேட்பதற்கே அதிகாரம் இருக்கிறது என்று வருவதால், உங்களால் தமிழகம் தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமை இழந்திருக்கிறது. இதனால் டெல்லிக்கு தமிகம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாகத் தான் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

எங்களை பொறுத்த வரையில் ஆளுநர் என்ற ஒரு பதவி அவசியம் தானா என்று நாங்கள் நெடுநாட்களுக்கு முன்பே எழுப்பிய கேள்வி. இதனை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பில் வைத்திருக்கிறது. அது மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் இருக்க வேண்டுமே அன்றி, அதனை அசிங்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுமே ஆனால், டெல்லி அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரியை கட்டாயம் நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஆளுநராக தொடர்வதற்கே தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

எந்த வகையிலும் சட்ட வரம்பிற்குள் உட்படாத ஒருவர் ஆளுநராக நீடிப்பது நியாயமா? என்ற ஒரு கேள்வி தமிழகத்தில் நீடிக்கும்போது, அவர் நான் சட்டப்படி மாவட்டங்களுக்குப் போய் ஆய்வு செய்கிறேன் என்கிற போது, மாநில அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

ஒரு ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். அதுதான் ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரம்.

மாநில அமைச்சர்-அதிகாரிகளின் செயல்பாட்டில் இவர் சென்று ஆய்வு செய்தால், தமிழகத்தில் ஒரு இரட்டை அரசாங்கம் செயல்படுகிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-


தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாக போராடுவோம். ‘‘ஆளுநர் சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றன’’ என்கிற முறையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

ஆளுநர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை எதிர்த்து தீவிரமாக போராடுவோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:-

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,456
Likes
20,836
Location
Germany
இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜேட்லி







இந்திரா காந்தி 43 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தான் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். 21 மாதங்கள் நீடித்த இந்த எமர்ஜென்சி காலத்தின் வடு இன்று வரை ஆராமல் இருக்கிறது.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி எமர்ஜென்சி காலம் குறித்து 3 பாகங்களாக கட்டுரை எழுதி வருகிறார். அதில், இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட 2-ஆம் பாகத்தில் அவர் இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.

அதில் அவர் எழுதியிருப்பதாவது,
"இந்திரா காந்தியும், ஹிட்லரும் அரசியலமைப்பை ரத்து செய்யவில்லை. அவர்கள் குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றிக்கொண்டனர்.

அரசியலமைப்புச் சட்டம் 353-இன் கீழ் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தினார். 359-இன் படி அடிப்படை உரிமைகளை நீக்கினார். இதற்கு எதிர்க்கட்சிகளின் சீர்குலைவை காரணமாக சுட்டிக்காட்டினார்.

ஹிட்லர் ஜனவரி 30,1933 ஜெர்மனியின் தலைவராக பொறுப்பேற்றார். அரசியலமைப்பு பிரிவு 48-ஐ அதிபரின் உதவியுடன் பயன்படுத்தி நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எமர்ஜென்சி அதிகாரங்களை அதனுள் கொண்டுவந்தார்.

எமர்ஜென்சியின் அதிகாரங்கள் தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை போன்றவற்றுக்கு தடை விதித்தது. பிப்ரவரி 27-ஆம் தேதி 1933 எமர்ஜென்சி கொண்டு வருவதற்கான பொய் காரணம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஜெர்மனியின் நாடாளுமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டது.

அரசாங்க கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு தீ வைப்பது கம்யூனிஸ்ட்களின் சதித் திட்டம் என்று ஹிட்லர் கூறினார். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீ வைப்புக்கு காரணம் நாசிக்கள் மற்றும் நாசி அமைச்சர் கோயபெல் தான் என்பது தெரியவந்தது.
ஹிட்லர் பெரும்பாலான எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை கைது செய்தார். இந்திரா காந்தியும் எதிர்க்கட்சி மக்களை உறுப்பினர்களை கைது செய்தார். இதன்மூலம் 3-இல் 2 பங்கு உறுப்பினர்களின் வருகைப்பதிவை வைத்து, அந்த வாக்குகளை வைத்து, பல அருவருக்கத்தக்க அரசியலமைப்பு திருத்தங்களை அவர் கொண்டுவந்தார்.

42-ஆவது திருத்தம் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யும் அதிகாரத்தை அழித்தது. இதனை இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆத்மா என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு பிரிவு 368 திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தத்தை நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக்கினர். ஹிட்லர் செய்யாத சில காரியங்களை இந்திரா காந்தி செய்தார்.

பெரோஸ் காந்தி சட்டம் என்று பிரபலாக அழைக்கப்படும் சட்டத்தின் படி ஊடகங்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து வெளியிட வேண்டும். இந்திரா காந்தி நாடாளுமன்ற செயல்பாடுகளை ஊடகங்களில் வெளியிட தடை விதித்தார்.

மக்கள் பிரநிதித்துவச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு இரண்டிலும் இந்திரா காந்தி திருத்தங்களை கொண்டுவந்தார்.

அரசியலமைப்பு திருத்தம் செய்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நீதிமன்றத்தில் நீதிக்கு புறம்பானவர் ஆனார். மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தம் மூலம் தவறான தேர்தல் மூலம் தேர்வான இந்திரா காந்தி சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்து அதனை சரி செய்தார்.
எமர்ஜென்சியில் கொண்டு வந்த திருத்தங்களை ஜனதா கட்சி அரசு திரும்பப் பெற்றது."
இவ்வாறு அருண் ஜேட்லி தனது 2-ஆவது கட்டுரையில் எழுதியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,456
Likes
20,836
Location
Germany
ஏழை மக்களுடனான தொடர்பை பாஜக துண்டித்தது: சிவசேனா குற்றச்சாட்டு






பாஜக 'சம்பார்க் சே சமார்தன்' என்ற புதிய வழிமுறையை கடைபிடித்து வருகிறது. அதாவலது, 2019 தேர்தலை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அதன்படி பாஜக தலைவர்கள் பிரபலங்களை சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

இதனை குறிப்பிட்டு தாக்கும் வகையில் சிவசேனா கட்சி தனது செய்தித்தாளில் குற்றம்சாட்டியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
" மாதுரி தீக்ஷித், சல்மான் கான், ரத்தன் டாடா, அம்பானி மற்றும் அதானியிடம் ஆதரவை கோருபவர்கள் ஏழை மக்களின் தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மகாராஷ்டிர மாநிலம் வறுமை மற்றும் பசியால் பாதித்துள்ளது. அது மக்களை குடும்பத்துடன் தற்கொலைக்கு இழுத்துச் செல்கிறது. பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு ஏதாவது செய்வார் என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.

வெளிநாட்டு நிதிகள் மாநிலத்தில் உள்ள ஏழைகளின் நிலைமையை மேலும் மோசமடையவைத்துள்ளது. புல்லட் ரயில், மெட்ரோ மற்றும் ஹைபர் நகர திட்டம் போன்ற ஆடம்பர திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி விவசாயிகளின் முன்னேற்றம் புறக்கணிக்கப்பட்டுள்ளது."
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,792
Likes
3,187
Location
India
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது - யஷ்வந்த் சின்கா

பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-



இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர்.

அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள்.

பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.58 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் இயக்குனராக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளார். எனவே, இவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணைக்கு யார் உத்தரவிடுவார்?

நீதித்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.