Daily Interesting News! -2

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி - எடப்பாடி பழனிசாமி

1533833343330.png

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள நிவாரனங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்

1533881909192.png

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.


எனவே, கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.

சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969-ல் காலமானார். அதன்பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுக தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘’மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்’’ என்றார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
முதல்முறையாகத் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் 5 மதகுகள் - கேரளாவை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையின் வரலாற்றில் முதல் முறையாக 5 மதகுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.





கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அங்குள்ள 24 அணைகள் நிரம்பியதால், அவற்றின் மதகுகள் (ஷட்டர்கள்) திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணையும் கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதியன்று இடுக்கி அணையின் ஒரு மதகுமட்டும் திறக்கப்பட்டது. அப்போதே, அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.





தற்போது, வரலாற்றில் முதல் முறையாக இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பெரியாறு நதியின் நீர்மட்டமும் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இடுக்கி அணைக்கு மிகுதியான நீர் வந்துகொண்டிருக்கிறது. இடுக்கி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் செறுதோணி ஆற்றில் பாய்ந்து எர்ணாகுளம் மாவட்டம் வழியாக அரபிக் கடலை சென்றடையும்.




வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ராணுவத்தினர் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் சுமார் 53,500 மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவால் இதுவரையிலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட நாளைக் கேரளா செல்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
இடைத்தேர்தலில் களமிறக்கப்படுவாரா அழகிரி? தி.மு.கவில் புதிய திருப்பம்

கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள்



ந்தியாவுக்கான சுதந்திரதினம் ஆகஸ்ட் 15-ம் தேதி என்றால், தி.மு.க.வுக்கான சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் என்ற நம்பிக்கையோடு, உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கட்சியின் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும், அவசர செயற்குழுக் கூட்டத்தின் முடிவுதான் கட்சிக்கான எதிர்கால விடியல் என்று அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். தி.மு.க தலைவராக ஐம்பதாண்டு காலம்வரை பொறுப்பில் இருந்த கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதியன்று காலமானதை அடுத்து, கட்சியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு கட்சித் தலைமைக்கு ஏற்பட்டு இருக்கிறது. கருணாநிதி இருந்த போதே கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவர், மு.க.ஸ்டாலின். ஸ்டாலினின் சகோதரர், மு.க. அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பும் முன்னரே பறிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடே பெரிதும் எதிர்பார்த்த சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூட அழகிரியின் பங்களிப்பு இருக்கவில்லை. இந்தச் சூழலில்தான், கட்சிக்குத் தலைவராகவும், ஸ்டாலினுக்குத் தந்தையாகவும் இருந்த கருணாநிதியின் மறைவு, அழகிரியிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக மூத்த உடன்பிறப்புகள் உறுதியாக நம்புகின்றனர்.





"கருணாநிதியின் இறுதிச் சடங்கின்போது, அவர் மீது போர்த்தப் பட்டிருந்த மூவர்ணக் கொடியை, ராணுவ அதிகாரிகள் அழகிரியிடம் கொடுக்கலாமா என்ற போது, 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள். கட்சியில் இன்னொரு தரப்போ, "அழகிரியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், தீவிர ஆதரவாளர்கள் பலர், இப்போது கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அழகிரிக்கு 'முக்கியப் பொறுப்பு' கொடுத்து அவரைக் கட்சிக்குள் கொண்டு வரும்போது, அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் பழைய பொறுப்புகளை வழங்க நிர்ப்பந்திக்கப்படலாம். அது குறித்தெல்லாம் அழகிரியிடம் கலந்து பேசிவிட்டு, இப்போது பொறுப்பில் இருப்பவர்களையும் பாதிக்காத அளவிற்குத்தான் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. அதுதான் சரியான நடவடிக்கையாகவும் இருக்கும். தளபதியும் அதைத்தான் விரும்புவார். தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியர் அன்பழகனும் அதைத்தான் விரும்புவார்" என்றனர். செயற்குழு ஆலோசனைக்குப் பிறகு, பொதுக்குழு என்று ஒன்று இருக்கிறது. இறுதி முடிவுகளை பொதுக்குழுதான் தீர்மானிக்க முடியும் என்ற நிலையும் இருக்கிறது. 'செயற்குழு ஆலோசனைக் கூட்டத்திலேயே, அழகிரிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா இல்லையா' என்ற முதல் தீர்ப்பு வெளியில் வந்துவிடும். ஆக, தி.மு.க.வுக்கான சுதந்திரநாள் ஆகஸ்ட் 14-ம் தேதிதான்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம்..! தமிழக அரசு அறிவிப்பு

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கனமழையால் இதுவரை 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சவாலான மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், கேரள அரசு உள்ளது. மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.




இதுகுறித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், 'கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரிலிருந்து கேரள மக்கள் மீண்டெழுவதற்கு நாம் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்' என்று பதிவிட்டுள்ளார்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
அம்பேத்கரின் கனவுகள் நிறைவேறும் வரை இட ஒதுக்கீடு தொடரும்" -பிரதமர் மோடி திட்டவட்டம்!

அம்பேத்கரின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை. அதுவரை இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும் எனப் பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.





பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ஜி.எஸ்.டி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.





இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “இது தொடர்பாக ஏற்கெனவே நான் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது விரிவாகப் பேசினேன். மீண்டும் சொல்கிறேன், நாட்டின் பொருளாதாரம் உயரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உயராமல் போகும்? புதிய சாலைகள், புதிய மின்சார திட்டங்கள், புதிய ரயில் பாதைகள் என உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படும் போது வேலை வாய்ப்பு கிடைக்க தான் செய்யும். புதிய தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதன்மையாக உள்ளது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்காதா? புதிதாக தொழில் தொடங்க சுமார் 13 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.5 கோடி கடன்கள் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்காதா? இவை அனைத்தும் வெறும் எடுத்துக்காட்டுகள் தான். இவை அனைத்தும் கடந்த ஓராண்டு மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காலம் வந்துவிட்டது” எனப் பதிலளித்தார்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் மாநில முதல்வராக இருந்த போது எதிர்த்த நீங்கள் பிரதமர் ஆனதும் அதையே செயல்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு, “ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நிதி அமைச்சர் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற மாதிரி மாநிலங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் செயல்பட்டார். அப்போது குஜராத் மட்டுமல்ல, பல மாநிலங்கள் இதை எதிர்த்தது. நாங்கள் கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது . காரணம் நாங்கள் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதன்படி செயல்பட்டோம். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை நாங்கள் வழங்குவதாகத் தெரிவித்தோம். இதனால் அவர்கள் எங்களை நம்பினார்கள். ஏன் இன்னும் நான் மாற்றிப் பேசுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட வேண்டும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கிடைத்தால் மாறுவதில் தவறு இல்லை தானே? நான் எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என எதிர்க்கிறார்கள். யோகா, தூய்மை இந்தியா, ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் என எதைக் செய்தலும் எதிர்ப்பார்கள். ஜி.எஸ்.டி வரியால் சூரத் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசினார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஏன் அவர்களைப் புறக்கணித்தார்கள்? மக்கள் முழுமனதாக ஜி.எஸ்.டி முறையை ஏற்றுக்கொண்டனர். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 66 லட்சம். ஆனால், ஜி,எஸ்.டி கொண்டு வந்த பின்னர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? இந்த அரசாங்கம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய சரியான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, ”இந்திய அரசியலமைப்பு மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் நோக்கங்கள் இன்னும் முழுமையடையவில்லை. அவரது கனவுகள் நிறைவேற்றுவது நம் அனைவரது கடமையும் கூட. அதனை நிறைவேற்ற இட ஒதுக்கீடு அவசியம். அதுவரை இட ஒதுக்கீடு அமலில் இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அம்பேத்கரின் கனவுகள் இந்த நாட்டின் பலம். அதனை நிறைவேற்ற நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். முக்கிய தேர்தல் காலத்தில் சிலர் பாஜக இடஒதுகீட்டை ரத்து செய்து விடும் எனப் பரப்புகிறார்கள். சில ஊடகங்ளும் இதனை பூதாகரமாக்கும். இதனைச் செய்பவர்கள் தான் அம்பேத்கரின் கனவுகளை உடைப்பவர்களாக உள்ளனர். அவர்கள் பலவீனமாக சமூகத்தினரிடம் அவநம்பிக்கையை விதைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் புத்திசாலிகள். அதனை நம்பமாட்டார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி போன்ற பிரிவுகளில் இருந்து அதிகப்படியான எம்.பி, எம்.எல்.ஏ க்கள் கொண்ட கட்சி பாஜக தான்” என்றார்


நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “அது குழந்தைத்தனமான ஒன்றா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அப்படி முடிவு செய்ய முடியவில்லை என்றால், அவர் கண்சிமிட்டுவதை மீண்டும் பாருங்கள். உங்களுக்கு விடை கிடைக்கும். நான் ஒரு சாதாரண தொழிலாளி. இதில் நான் என்ன சொல்ல?” என்றார்.


மேலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு, “பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக பெரும் கவனம் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு பெண் மத்திய அமைச்சர்கள் உள்ளனர். பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற பாஜக பல முயற்சிகள் செய்துள்ளது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் 70% லோன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறையை ரத்து செய்வதும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பானது தான். புதிய ஹஜ் கொள்கை மூலம் பெண்கள் தனியாகப் புனித யாத்திரை மேற்கோள்ள முடியும். அது அவர்களுக்கான உரிமை” என்றார்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
திரிணாமுல் காங்கிரஸை வேரோடு அகற்றுவோம்’ - மேற்குவங்கத்தில் அமித் ஷா சூளுரை

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட அமித் ஷா, மம்தா பானர்ஜியை வெளியேற்றுவது தான் எங்களின் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.





மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடந்த சில காலங்களாக கடுமையான மோதல் நிலவிவருகிறது. மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அசாம் தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான வாதம் நிலவியது. நேற்று கொல்கத்தா வந்த அமித் ஷாவை வரவேற்று நகர் முழுவதும் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இடையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோ பேக் அமித்ஷா என்ற பதாகைகளை வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.





இந்நிலையில், பாஜக சார்பில் நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “ நாம் அனைவரும் இங்குக் கூடியிருப்பது மம்தா பானர்ஜி மற்றும் அவரது தலைமையிலான ஆட்சியை வேரோடு அகற்றுவதற்காகத்தான். அசாமில் தங்கியுள்ள வங்க தேச மக்களை வெளியேற்றினால் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் அதற்காகத் தான் அவர்களை வெளியேற்ற மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாடு தான் முக்கியம். தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். மேற்குவங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது” என மிகவும் கடுமையாக பேசினார்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் வாஜ்பாய்..! நேரில் சந்தித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.





முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில், நேற்று மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஏற்கெனவே, பிரதமர் மோடி ஒரு மாதத்துக்கு முன்னர் வாஜ்பாயை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்திருந்தார்.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
No tickets to 'parachute candidates' in Rajasthan polls: Rahul

Congress

president

Rahul Gandhi

on Saturday said he will make sure that party workers have their say and no “parachute candidate” gets nominated in the next assembly elections in Rajasthan.

“I can guarantee you this time that not a single parachute candidate will be able to get the ticket. If any such candidate comes, I will cut the rope,” Gandhi said here at the launch of the party's election campaign in the state.

“Congress party workers will be heard and will get the tickets,” he said.

He said the party is in a good position to form the government in Rajasthan, Chhattisgarh and Madhya Pradesh, the three states where assembly elections will be held this year.

“Party men are working on the ground and their voice will be heard by the Congress government formed after the elections,” Gandhi told party workers at the Ramlila Ground rally.

Gandhi reached the venue after a 13-km ride in a special bus from Jaipur airport, in a show of strength by the Congress.

Congress workers waited along the route to welcome him, waving party flags.

The Congress chief waved at them, and at times got off the bus to meet them. There were drummers and folk artists at some places.

Vehicles, with posters carrying his pictures, followed.

Gandhi was accompanied by All India Congress Committee general secretaries Ashok Gehlot and Avinash Pande, state unit chief Sachin Pilot and other leaders.



His cavalcade halted when he saw a person on a wheelchair waiting near the Laxmi Mandir crossing to welcome him.



At the rally, Sachin Pilot accused chief minister Vasundhara Raje of using the taxpayers' money to fund her ongoing ‘Rajasthan Gaurav Yatra'.



Gehlot said Raje had objected to another BJP leader Gulab Chand Kataria's proposed yatra when the party was in the opposition.



He also referred to the recent lynching of a Muslim man in Alwar after vigilantes suspected that he was smuggling cows.
 
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
கேரளத்துக்கு ரூ.100 கோடி நிதியுதவி: ராஜ்நாத் சிங்





மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் விமானத்தில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். உடன் முதல்வர் பினராயி விஜயன்.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.100 கோடி உடனடி நிதியுதவி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக மத்திய அரசு சார்பில் கேரள அரசுக்கு வழங்க வேண்டியிருந்த ரூ.80.25 கோடியை வழங்கவும் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் இருந்தபடி ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன், கூடுதல் தலைமைச் செயலாளர் பி.ஹெச்.குரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், முதல்வர் விஜயன் உள்ளிட்டவர்களோடு, எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரவூர் தாலுகாவில் முகாம்களில் தங்கியிருந்த மக்களை நேரில் சந்தித்து ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார்.

அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். வெள்ளத்தினால் வீடுகளிலும், நிலங்களிலும் சேதத்தை எதிர்கொண்ட மக்கள் தங்களது குறைகளை ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக் கூறினர்.
உடனடி நிதியுதவி: பின்னர், கேரள பயணம் குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாக உள்துறை அமைச்சகம் சார்பில் சுட்டுரையில் தொடர்ச்சியாக பல பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில், கேரள மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படுவதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த இக்கட்டான சூழலில், கேரள மக்களின் இழப்புகளை எதிர்கொண்டு வரும் மாநில அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக மற்றும் கலாசார இயக்கங்களும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்பாராத நெருக்கடி காரணமாக கேரள மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சேதங்களை மதிப்பீடு செய்வதற்கு சில காலம் தேவைப்படும் என்ற நிலையில், உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும்.

கேரள அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் விதமாக, இங்கு வருவதற்கு முன்பு, மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக இரண்டாம் தவணையாக வழங்க வேண்டியிருந்த ரூ.80.25 கோடியை வழங்கவும் ஒப்புதல் அளித்தேன். முன்னதாக, கடந்த மாதம் முதல் தவணையாக ரூ.80.25 கோடி வழங்கப்பட்டிருந்தது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியபோது இங்கு பேரிடர் மீட்புக் குழுவினரின் மூன்று பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களுடன் மேலும் 11 பிரிவுகள் இணைந்த நிலையில், தற்போது 14 பிரிவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்பட்டால், கூடுதல் படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துயர் மிகுந்த சூழலில், ஒட்டுமொத்த தேசமும் கேரள மக்களுக்கு ஆதரவாக இருக்கும். இங்குள்ள சூழ்நிலைகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. எதிர்பாராத பேரிடரை எதிர்கொள்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் தவற விடமாட்டோம் என்று
ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கேரள அரசு கோரிக்கை
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கேரளத்துக்கு ரூ.1,220 கோடி வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில், கேரளத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்கட்டமாக மதிப்பீடு செய்ததில் ரூ.8,316 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச் சீட்டுகள் புதுப்பிக்கப்படும்
கேரள மழை வெள்ளத்தில் சேதமடைந்த கடவுச்சீட்டுகள் அனைத்தையும் எந்தவித கட்டணமும் இன்றி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், எதிர்பாராத வெள்ளத்தால் கேரளத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இயல்புநிலை திரும்பிய பிறகு, வெள்ளத்தில் சேதமடைந்த கடவுச்சீட்டுகளை கட்டணமின்றி புதுப்பித்து தருவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடைய கடவுச்சீட்டு மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.