Daily photo News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
4 மாத குழந்தையை கற்பழித்துக் கொன்ற காமுகனுக்கு கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் தர்ம அடி

1524335822824.png

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நவீண் காட்கே என்ற காமக் கொடூரன் கடந்த 19-ம் தேதி தூக்கிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இரக்கமின்றி குழந்தையை தலையில் அடித்து கொலை செய்தான்.

அந்த குழந்தையின் பெற்றோர் ஊர் ஊராக சென்று பலூன் விற்கும் தொழில் செய்து பிழைத்து வருகிறார்கள். ராஜ்வாடா பகுதியில் உள்ள கோட்டை திடல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை இவர்கள் தங்கி இருந்தபோது, அந்த குழந்தையின் தாயிடம் வந்த அவரது உறவினரான நவீண் காட்கே என்பவன், தன்னுடன் சண்டை போட்டுகொண்டு பிரிந்து சென்ற மனைவியை சமரசம் செய்து சேர்த்து வைக்குமாறு கூறினான்.

இதற்கு அந்தப் பெண் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த காமுகன் அன்றிரவு பெற்றோர் அருகில் தூங்கி கொண்டிருந்த 4 மாத கைக்குழந்தையை தூக்கிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இரக்கமின்றி குழந்தையை தலையில் அடித்து கொன்றான்.

குழந்தையின் பிணம் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரை தளத்தில் கிடந்தது. இச்சம்பவம் தொடர்பாக அந்த காமுகனை கைது செய்த போலீசார் இன்று இந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதியின் முன்னர் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து செல்வதற்கு முன்னரும், திரும்பிவரும்போதும் கோர்ட் வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அந்த காமுகனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.

சில பெண்கள் செருப்பால் அடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து அவனை காப்பாற்றி அழைத்து செல்வதற்கு போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் நவீண் காட்கேவுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என மத்தியப்பிரதேசம் மாநில வழக்கறிஞர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.17 கோடி டீசல் - சென்னை துறைமுகத்தில் பறிமுதல்

1524336534560.png

வெளிநாடுகளில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் இந்தியாவுக்கு பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. இதனால், வேறுவகை திரவங்கள் என்னும் போலி அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் இருந்து சிலர் கள்ளத்தனமாக பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் விற்று, லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

இதற்காக அந்நாடுகளில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, அவற்றுக்கான தொகை ஹவாலா பரிமாற்ற முறையில் வழங்கப்படுகிறது. மேலும், சுங்கவரி விதிப்பை ஏய்க்கும் வகையில் மிக குறைந்த விலை மதிப்பில் ரசீதுகள் தயாரிக்கப்படுகின்றன.

அவ்வகையில், சென்னையில் உள்ள சிலரால் தாது எரிச்சாராயம் (mineral spirit) என்ற போலி அடையாளத்துடன் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் மூன்றரை லட்சம் லிட்டர் டீசல் தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் கடந்த 17-ம் தேதி நடத்திய அதிரடி சோதனையில் பிடிபட்டது.

துபாயில் இருந்து கப்பல் மூலம் 14 கண்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட டீசலை பறிமுதல் செய்த அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
பிரதமரை தரக்குறைவாக பேசிய என்.டி.ஆர். மகன் மீது போலீசில் புகார்

1524336615966.png

பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய ஆந்திர மாநில தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா மீது பா.ஜ.க.வினர் இன்று போலீசில் புகார் அளித்தனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து தனது பிறந்தநாளான ஏப்ரல் 20-ம் தேதி (நேற்று) தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் மறைந்த ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகனும், ஆந்திர சட்டசபை உறுப்பினருமான பாலகிருஷ்ணா மிகவும் ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் அவர் தாக்கிப் பேசினார்.

ஆந்திர மக்களை நேரில் வந்து சந்தியுங்கள். அவர்கள் உங்களை அடித்து ஓட விடுவார்கள். நீங்கள் எங்கேயும் போய் ஒளிந்துக்கொள்ள முடியாது. பதுங்கு குழிக்குள் நீங்கள் மறைந்திருந்தாலும் பாரதமாதா மண்ணைத்தள்ளி உங்களை புதைத்து விடுவாள் என பிரதமரை நேரடியாக குறிப்பிட்டு பாலகிருஷ்ணா காரசாரமாக பேசினார்,அவரது பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமரை தரக்குறைவாக பேசி அவமரியாதை செய்ததாக ஆந்திர சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. தலைவர் ராமச்சந்திர ராவ் தலைமையில் அக்கட்சியினர் ஓஸ்மானியா காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுக்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
ருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

1524336972308.png

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆற்காடு குப்பம், சோளீஸ்வரசுவாமி திருக்கோயிலில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5,700 சதுர அடி பரப்பளவில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 200 நபர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, தேவசம் மேல்நிலைப் பள்ளியில் 2,641 சதுர அடி பரப்பளவில் 175 மாணவ- மாணவிகள் பயிலும் வகையில் 54 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகள்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் 1,706 சதுர அடி பரப்பளவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 பக்தர்கள் உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் 570 சதுர அடி பரப்பளவில் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் வாகனங்களை பாதுகாக்க கட்டப்பட்டுள்ள திருப்புறை வாகன மண்டபம் என மொத்தம் 1 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயில் - 23-ந்தேதி முதல் இயக்கம்

1524337392766.png

செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரெயிலில் என்றால் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இறங்கி வேறு ரெயிலில் மாற வேண்டும்.

தற்போது செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயிலை தென்னக ரெயில்வே இயக்குகிறது. இதன் மூலம் கடற்கரை ரெயில் நிலையத்தில் இறங்காமல் நேரடியாக கும்மிடிப்பூண்டிக்கு சென்று விடலாம்.

செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி நேரடி மின்சார ரெயில் சேவை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். சனி, ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படாது.

இந்த ரெயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை, தாம்பரம் வழியாக சென்று செங்கல்பட்டை காலை 9.50 மணிக்கு சென்றடையும்.

செங்கல்பட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கும்மிப்பூண்டிக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.

இதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்று அடையும்.

கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையே வார விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி செல்லும்.

வேளச்சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்று அடையும்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் இன்று மாலை புகார் மனு பெறப்படும்- சந்தானம் பேட்டி

1524337754466.png

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் மதுரை வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் நாள் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தினார்.

2-வது நாளான நேற்று அருப்புக்கோட்டை சென்று பேராசிரியை நிர்மலா தேவி வேலை பார்த்த தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார்.

இன்று தனது 3-வது நாள் விசாரணையை மதுரை விருந்தினர் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் அதிகாரி சந்தானம் தொடங்கினார்.

ஏற்கனவே இந்த வழக்கில் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 21-ந் தேதி (இன்று) மனு அளிக்கலாம் என அவர் அறிவித்திருந்தார். ஆனால் இன்று பகல் 1 மணி வரை யாரும் புகார் மனு அளிக்க வரவில்லை.

தொடர்ந்து விசாரணை அதிகாரி சந்தானம், நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார்கள் தொடர்பாக நாங்கள் தொடங்கிய விசாரணையில், அருப்புக்கோட்டை கல்லூரியில் எங்கள் விசாரணை முடிந்து விட்டது.இன்று பொதுமக்கள் மனுக்கள் அளிக்க அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் யாரும் மனு கொடுக்கவில்லை. இன்று மாலை 3 மணிக்கு மேல் காமராஜர் பல்கலைக்கழம் சென்று விசாரணை நடத்த உள்ளேன்.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக உறுப்பினர்களிடம் புகார் மனு பெறப்படும். இத்தோடு எங்களின் முதல் கட்ட விசாரணை முடிகிறது.

எங்களது 2-ம் கட்ட விசாரணை வருகிற 25, 26-ந் தேதிகளில் மதுரை விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது புகார் தெரிவிப்பவர்கள் மனு கொடுக்கலாம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டுள்ளோம். அவர்களது பதிலுக்கு பின் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

1524338107194.png
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய செயலாளர் அண்ணாமலை திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் எங்கள் கோரிக்கையை அரசு இது வரை ஏற்கவில்லை. மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதனையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

தமிழக அரசு கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் போராட்டம் மேலும் தீவிரபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
நிர்மலா தேவியிடம் சந்தானம் விசாரிக்க முடியுமா?

1524413533796.png

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு புறமும், கவர்னர் நியமனம் செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் மற்றொரு புறமும் விசாரித்து வருகிறார்கள்.

நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரித்து வருகிறார்கள். செவ்வாய் கிழமை (24-ந்தேதி) வரை நிர்மலா தேவி போலீசார் வசம் இருப்பார்.

இதற்கிடையே சந்தானம் கடந்த வியாழக்கிழமை மதுரை சென்று விசாரணையை தொடங்கினார். அவருக்கு உதவ பேராசிரியைகள் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பலகட்ட விசாரணையை நடத்தினார்கள். மாணவிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் உள்பட 20 பேரிடம் விசாரணை நடத்தி முடித்தனர்.

மதுரை சுற்றுலா மாளிகையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தினார்.

நேற்று மாலை பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். புகார் மனுக்களும் பெற்றார். அத்துடன் சந்தானம் குழுவின் முதல்கட்ட விசாரணை முடிந்தது.

சந்தானம் குழுவினர் தங்களது 2-வது கட்ட விசாரணையை வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறார்கள். அப்போது பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி உள்ளார். அவரை உறவினர்களும், வக்கீலும் சந்திக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

எனவே விசாரணை அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் பேராசிரியை நிர்மலாதேவியிடம் தற்போது விசாரணை நடத்த முடியாது. வருகிற 25-ந்தேதி பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அதன் பிறகு விசாரணை அதிகாரி சந்தானம் தரப்பில் சாத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

எனவே 26 அல்லது 27-ந் தேதிகளில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

சந்தானம் குழுவினர் மீண்டும் 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 2-வது கட்ட விசாரணையை நடத்த உள்ளனர். நிர்மலா தேவியிடம் விசாரித்து விட்டால் அவர்களது விசாரணை முழுமை பெற்று விடும் என்று கூறப்படுகிறது.

எனவே திட்டமிட்டபடி 30-ந்தேதிக்குள் கவர்னரிடம் சந்தானம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
தனியார் வங்கியில் திருப்பதி கோயில் பணம் - பொதுநல வழக்கில் 24-ம் தேதி விசாரணை

1524413622614.png


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பல்வேறு முறைகளில் காணிக்கையாக செலுத்திய பணத்தை அரசு வங்கிகளில்தான் முதலீடு செய்து பாதுகாத்து வர வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இன்டஸ் இன்ட் வங்கியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் திருப்பதி - திருமலா தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகத்தினர் போட்டு வைத்துள்ளதாக தெரிய வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா போராட்ட சமிதி என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் ரெட்டி என்பவர் ஆந்திரா - தெலுங்கானா மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அரசு விதிமுறைகளை மீறிய வகையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான பணம் தனியார் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஆகட்டும், முதல் மந்திரி ஆகட்டும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக அளிக்கம் பணத்தை தவறாக பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஏழுமலையானின் தீவிர பக்தரான நான், கடவுளின் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்தும், ஏழுமலையானின் தூண்டுதலின்பேரிலும் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன் என நவீன்குமார் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

இந்த பொதுநல மனுவை கடந்த 19-ம் தேதி ஆந்திரா - தெலுங்கானா மாநில ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

இந்நிலையில், இவ்வழக்கின் பிரதிவாதிகளாக அரசின் சிறப்பு தலைமை செயலாளர், மாநில அறநிலையத்துறை ஆணையாளர், திருப்பதி - திருமலா தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஆகியோரை இணைத்து ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 24-ம் தேதி இவ்வழக்கின் முதல் விசாரணையின்போது அவர்கள் ஆஜராக வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
ராஜஸ்தான் - வருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை

1524413962398.png

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். பின்னர், அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர்.

பெட்டகத்தின் உள்ளே இருந்த சுமார் 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.