Daily photo News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
`முதல்வருக்கு பகிரங்கக் கொலை மிரட்டல்!’ - ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பரபரப்பு ஆடியோ

முதல்வருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த ராக்கெட் ராஜா ஆதரவாளரைப் பிடிக்க நெல்லை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக வெளியான ஆடியோமூலம் முதல்வர் மற்றும் நெல்லை எஸ்.பி-க்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர், பிப்ரவரி 26-ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், ஏற்கெனவே 9 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் வேறொரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட நாடார் மக்கள் சக்தி இயக்கத் தலைவரான ராக்கெட் ராஜாவை இந்த வழக்கில் நெல்லை காவல்துறை கைதுசெய்தது. அவரை கோவை சிறையில் இருந்து அழைத்துவந்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

இதனிடையே, ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் கடந்த 15-ம் தேதி அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். பயணிகளைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோசப், ஆனந்த் ஆகிய இருவரைக் கைதுசெய்த போலீஸார், அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பதற்றத்தைத் தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டவர்களை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்துவருகிறார்கள். இதுவரை 30-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளரான எட்வின் துரைராஜ், புளியங்குடி நகரச் செயலாளர் எஸ்ரா, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கனிராஜா உள்ளிட்ட 5 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.இதனிடையே, ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் ஆபாசமாக அச்சுறுத்தும் வகையிலும் பேசி, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ’’இதுவரை எத்தனை போலீஸை போட்டுருக்கோம் தெரியுமா உனக்கு? நாங்க நினச்சா எந்தப் போலீஸையும் போடுவோம். நாங்க நினைச்சா சி.எம்-ஐ கூட போட்டுருவோம்.

போன வருஷம், போலீஸ் ஜீப்புல ஏத்திக்கிட்டுப் போன சிங்காரத்தை வெட்டினோம். இப்ப, எஸ்.பி., அருண் சக்திக்குமார் இருக்கிற தெம்புல சில பேர் ஆடுறாங்க. அவரையே போட்டுட்டா, நாங்க யாரை வேணும்னாலும் போடுவோம். எங்களை சட்டத்தால யாரும் எதுவும் செய்ய முடியாது’’ என்று பேசிய ஆடியோ, வைரலாகப் பரவிவருகிறது. முதல்வர், எஸ்.பி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவால் மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
குறி சொன்ன முதியவரை செருப்பால் தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

1526838809368.png

தற்போது ஒரு சில போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மேற்கண்ட வாசகம் சரிதானா? என்று எண்ணத்தோன்றுகிறது.

குறிப்பாக வாகன ஓட்டிகளிடமும், அப்பாவி மக்களிடமும் போலீசார் காட்டும் கெடுபிடிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றன.
இதை தட்டிக் கேட்டால் பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதே போல் ஏராளமான சட்ட மீறல்களிலும் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் இதுபோன்ற செயல்களால் ஓட்டுமொத்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

இதனிடையே தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் முனியசாமி. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்.

மேலும் ஜோசியத்திலும் இவருக்கு அதீத நம்பிக்கை உண்டு. பரமக்குடியில் கடை வாசலில் அமர்ந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி தான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், எனவே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குறி கேட்டுள்ளார்.

அவரது கையை பார்த்து குறி சொன்ன அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.

ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றினர்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முதியவரை அற்ப காரணத்துக்காக செருப்பால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
1526838977713.png

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
விமானம் தாமதமானதால் ஆத்திரம் - சென்னையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டவருக்கு சிகிச்சை

1526840855289.png

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த பயணி, தான் வைத்திருந்த பேனாவை எடுத்து தன்னைத் தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அந்த பயணியை விமான நிலைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பயணி மது அருந்தி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
100 கோடி இந்தியர்களின் இரத்தத்திலும் ஊழல் ஓடுகிறது - உ.பி மந்திரி சர்ச்சை பேச்சு

1526841675510.png

உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ம.பி.யில் ஒருவர் அடித்துக்கொலை - 4 பேர் கைது

1526842284612.png


மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் அஞ்சர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். மற்றொருவர் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து சட்னா மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஷ் ஹெங்கெர்கர் கூறியதாவது, அஞ்சர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருவர் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதாக வெள்ளி அன்று அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. அதைதொடர்ந்து, 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு விரைந்து அங்கு இறைச்சிக்காக மாட்டை வெட்டிய இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், சிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷகில் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த மாட்டின் இறைச்சியை போலீசார் கைப்பற்றி இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பவன் சிங், விஜர் சிங், போல் சிங் மற்றும் நாரயண் சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க 400 போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ராஜ்நாத்சிங் ஹெலிகாப்டர் தரை இறங்க 20 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

1526842369241.png

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மத்திய பிரதேச மாநிலம் சாட்னா பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

சிலை திறப்பு விழாவுக்காக அவர் அங்கு சென்றார்.
ராஜ்நாத் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரை இறங்க சாட்னா பகுதியில் உள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரண்டு உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்வதால் மாவட்ட நிர்வாகம் மின்சாரத்தை துண்டித்தன.

நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை 3 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் 20 கிராமங்களும் இருளில் தத்தளித்தன.

இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது “மின்சாரம், தண்ணீர் இல்லாமல் கிராமத்தை சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை” என்றார்.

12 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மின்சார அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
விளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி

1526843339148.png

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் மாவட்டத்தின் தார்குலா பகுதியில் அமைந்துள்ள கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நிஷா(10), சப்னா (7), கார்த்திக் (5).

இவர்கள் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர். வீட்டில் தாத்தா மட்டும் இருந்தார். சிறிது நேரம் கழித்து தாத்தா மாலை உணவுக்காக குழந்தைகளை தேடியுள்ளார். அவர்கள் அங்கு இல்லாததை கண்டு பதறிய அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

அவர்கள் வீட்டில் தேடும்போது, அங்கிருந்த பெரிய தானிய குதிர் ஒன்றில் மூன்று குழந்தைகளும் இருந்ததை கண்டனர். அதிலிருந்து வெளியே எடுக்கும்போது அவர்கள் இறந்துபோனது தெரிந்தது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தைகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், குழந்தைகள் மூவரும் தானிய குதிரில் ஒளிந்து கொண்டு விளையாடியதும், அங்கு சிக்கி மூச்சு திணறி இறந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
‘ஹேப்பி பர்த்டே பூஜா’ - இணையத்தை முடக்கி வாழ்த்துக் கூறிய ஹேக்கர்

டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, அதில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம், நேற்று நள்ளிரவில் முடக்கப்பட்டது. முடங்கிய இணையத்தளத்தில், ‘ஹேப்பி பர்த்டே பூஜா. யுவர் லவ்’என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு எந்தத் தனி நபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை. இந்தச் சம்பவம்குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தத் கருத்தும் கூறவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம், சட்டம் மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் போன்றவற்றின் அதிகாரபூர்வ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், அரசு இணையதளங்கள் எந்த அளவு பாதுகாப்பாக உள்ளது என்ற கேள்வியை முன்வைக்கத் தோன்றுகிறது. எனினும், இது ஒரு தொழில்நுட்ப கட்டமைப்புப் பிரச்னை என தேசியத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் வருடம் மட்டும், 199 அதிகாரபூர்வ அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சுமார் 700 இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு

1526969973518.png

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

நிபா வைரஸ் காய்ச்சல் என்பது நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் 1998-ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள நிபா என்ற பகுதியில் இருந்து பரவியதால் நிபா என்று அழைக்கப்படுகிறது.

நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வாலின் எச்சம், சீறுநீர் மூலமும் பன்றிகள் மூலமும் மனிதனுக்கு பரவுகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை போல இந்த காய்ச்சல் வேகமாக பரவாது.

நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வவ்வாலின் எச்சம், சீறுநீர் மனிதனின் உடலில் படும்போது இது பரவுவது இல்லை. மாறாக வவ்வாலின் எச்சம் மற்றும் சீறுநீர் உணவு பொருள் மற்றும் தண்ணீர் மீது படும்போது அதனை மனிதன் தெரியாமல் சாப்பிடுவதால் பரவுகிறது. எனவே பொது மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம்.

நிபா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அளவுக்கு அதிகமான வெப்பம், மற்றும் கடுமையான தலைவலி ஏற்படும். பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையை பாதித்து மரணம் ஏற்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். நிபா வைரசுக்கு மருந்து இல்லாததால் ஆரம்ப கால கட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது டாக்டர்கள் காய்ச்சலை கட்டுபடுத்த மருந்து கொடுப்பார்கள். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணம்பெறலாம்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு அமைக்கப்பட்டுள்ளதை போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்க டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே நிபா வைரஸ் பாதிப்பு உள்ளவர் சிகிச்சை பெற்று குணம்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.