Daily photo News

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்

1526990100398.png

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடு உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக்கள் மற்றும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகமா கிராமத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுமாறு தில்லி பேராயர் சுற்றறிக்கை: வெடித்தது புதிய சர்ச்சை






நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுமாறு தேவாலயங்களுக்கு தில்லி பேராயர் அனுப்பிய சுற்றறிக்கை, மத்திய அரசுக்கு எதிரானதா என்ற கேள்வியால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கடந்த திங்களன்று புதுதில்லி பேராயர் அனில் கவுடோ தில்லியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் இந்திய நாட்டின் நலனுக்காக கிறிஸ்துவ சமுதாயம் வெளிக்கிழமை பிரார்த்தனை நடத்த வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இது மத்திய அரசுக்கு எதிரானதா என்ற கேள்வியால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சர்ச்சைக்குக்குரிய அந்த சுற்றறிக்கையில் பேராயர் அனில் கவுடோ கூறி இருந்ததாவது:-

நமது அரசியலமைப்புக்கும், நமது நாட்டின் மதச்சார்பற்ற நிலையிலும் உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையிலும்,ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாம் தற்பொழுது பார்க்கிறோம்.

நாம் 2019 ஆம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, புதிய அரசாங்கம் வேண்டும். எனவே நமது நாட்டிற்காக ஒரு பிரார்த்தனை பிரச்சாரத்தை ஆரம்பிப்போம். நம்மையும் நம் நாட்டையும் புனிதமாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த சுற்றறிக்கையானது இந்திய மதசார்பின்மை மற்றும் ஜனநாயகம் மீதான நேரடித் தாக்குதல் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் பேராயரின் இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மோடி அரசாங்கத்தின் மீதான நேரடி தாக்குதல் எனவும் பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

1527050870819.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
சிம்லா சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புத்தகக் கடை ஒன்றிற்கு சென்று புத்தகம் வாங்கினார்.


1527058630631.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு





தமிழகம் முழுவதும் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
முலாம் பழத்தை திருடியவருக்கு மரத்தில் கட்டி வைத்து அடிஉதை

1527112095737.png

உத்தரப்பிரதேசத்தில் முலாம் பழத்தை திருடியவரை, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.




உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் முலாம் பழத்தை திருடியதாக வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து சராமாரியாக அடித்து உதைக்கப்பட்டார்.

இதை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் வைத்த காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு!

1527112942134.png



வாஷிங் மெஷினால் சட்டையில் ஓட்டை விழுந்ததை அடுத்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேஅவுட்டைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் இந்திரா நகரில் உள்ள பிரபல கடையில், கடந்த ஏப்ரல் 7, 2014ல் வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார். ஓராண்டிற்கு பின், வாஷிங் மெஷினில் துவைக்கப் போடப்பட்ட சர்ட், ட்ரவுசர்களில் சிறிய அளவிலான ஓட்டைகள் விழுவதை கவனித்துள்ளார்.

தொடக்கத்தில் துணியில் ஏதோ பிரச்சனை என்று விட்டுவிட்டார். ஆனால் படிப்படியாக துணிகளில் விழும் ஓட்டைகள் பெரிதாகிக் கொண்டே சென்றன. இதையடுத்து ஜூன் 9, 2015ல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், சசிகுமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வாஷிங் மோடில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், உரிய வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிரச்சனை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பிரச்சனையின் அளவு பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளது. இதனால் ஆகஸ்ட் 13, 2015ல் மற்றொரு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறை நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாஷிங் மெஷினில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து புதிய மெஷினோ அல்லது பணமாகவோ திருப்பி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துச் சென்றனர். பின்னர் மெஷினை நிறுவனத்திற்கு கொண்டு சென்று சோதனையிட வேண்டும் என்று கூறி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் புதிய மெஷின் அல்லது பணமாக திருப்பி அளிக்க வேண்டும் என்று சசி வலியுறுத்தியுள்ளார். ஆனால் நிறுவனம் சசியின் கோரிக்கையை ஏற்கவில்லை.

இதையடுத்து செப்டம்பர் 8, 2015ல் பெங்களூரு நகர 4வது மாவட்ட கூடுதல் நுகர்வோர் நீதிமன்றம் அணுகியுள்ளார். அதன் விசாரணையில் சசிகுமாரின் துணிகளில் ஏற்பட்ட ஓட்டைகள் உண்மையில்லை என்று நிறுவனம் வாதிட்டது. மேலும் புதிய மெஷினோ அல்லது பணம் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

வாரண்டி காலக்கட்டத்தில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், மெஷினை ஆய்வுக்கு அளிக்க சசி மறுத்துவிட்டார் என்றும் நிறுவனம் வாதிட்டது. இந்நிலையில் 32 மாத காலப் போராட்டத்திற்கு பின், கடந்த 5ஆம் தேதி, புதிய மெஷினோ அல்லது மொத்த தொகையில் 10% கழித்துக் கொண்டு மீதிப் பணத்தையோ திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற வழக்கிற்காக செலவிட்ட ரூ.1,000 அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.