Daily photo News

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
ஒழுகிய பேருந்து... டிரைவருக்கு குடைபிடித்து உதவிய நடத்துநர்...!


மழையின் காரணமாக பேருந்து ஒழுகியதால் டிரைவருக்கு குடைபிடித்து நடத்துநர் உதவியுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.







தென்மேற்கு பருவமழையின் காரணமாகக் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருகின்றன. மேலும் மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே சாலைகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே, அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் தமிழகம் வந்தடைந்துள்ளது. இந்நிலையில், மழையின் காரணமாக பேருந்து ஒழுகியதால் டிரைவருக்கு குடைபிடித்து நடத்துநர் உதவியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அப்போது, கனமழை பெய்ததால் பேருந்து முழுவதும் ஒழுக ஆரம்பித்தது. இதில் பயணிகள் அவதிப்பட்டனர். இதற்கிடையே, கனமழையால் டிரைவரால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடத்துநர் குடைபிடிக்க டிரைவர் பாதுகாப்பாக பேருந்தை இயக்கினார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர அது வைரலாகியுள்ளது. பலரும் பேருந்தின் அவலநிலை குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
சிட்டிக்குள் ஓவர் டிராஃபிக்’ - குதிரையில் ஆபீஸுக்குச் சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர்..!

போக்குவரத்து நெரிசலால், வாகனத்துக்குப் பதிலாகக் குதிரையில் ஆபீஸுக்கு வந்த இளைஞரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.







பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராகப் பணியாற்றிவருபவர், ரூபேஷ்குமார். இவர், தினமும் தனது வாகனத்தில் அலுவலகத்துக்கு வந்துசென்றார். ஆனால், பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலால் தினமும் அலுவலகத்துக்கு வந்துபோவதில் ரூபேஷுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். நேற்று கடைசி நாள் அலுவலகத்துக்குக் கிளம்பிய அவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக `last working day as a software engineer' என்ற பலகையை மாட்டிக்கொண்டு குதிரையில் அமர்ந்து அலுவலகம் சென்றுள்ளார்.

ரூபேஷ்குமார் குதிரையில் ஆபீஸ் செல்வதைப் பார்த்த பலரும் அதைப் படம் பிடித்து சோஷியல் மீடியாக்களில் உலவ விட்டனர். இது, சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவியது. இதுகுறித்து அவர், ``பெங்களூருவில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைபார்த்துவருகிறேன். இங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால், காற்று முற்றிலுமாக மாசடைந்து சுவாசிக்க ஏற்றதாக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, குதிரையில் அலுவலகம் வந்தேன். இதற்காக, முறையாகக் குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
நிலச்சரிவில் குடும்பமே மண்ணில் புதைந்தது! கேரளாவில் நடந்த சோகம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பருவமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 6 உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.







கேரள மாநிலத்தில் உயரமான மலைப்பாங்கான பகுதிகளும் ஆழமான நிலப்பரப்பும் ஒருங்கே அமைந்திருக்கின்றன. இதனால் சிறிய அளவில் மண்சரிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். வட கேரளம் பகுதியில் இப்போது பருவமழை தீவிரம்காட்டி வருகிறது. இதன்காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மலைப்பாங்கான கருஞ்சோலை பகுதியில் நேற்று காலை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 6 வீடுகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. அந்த வீடுகளில் இருந்த சுமார் 14 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியைக் கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது. நேற்று முழுவதும் நடந்த மீட்புப்பணியில் அப்துல் ரஹ்மான் (60), அவர் மகன் ஜாபர் (35), ஜாபரின் மகன் முகமது ஜாசின் (5), தில்னா செரின் (9), முகமத்சனாபாஸ் (3), ஹசன் (65), ஹசனின் மகள் ஜன்னத் (17) ஆகிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்று நடந்த மீட்புப்பணியில் நஸ்ரத் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை ரிபா மரியம் உடல் மீட்கப்பட்டது. இனி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்கள் மீட்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.






இதுகுறித்து கருஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "மண் சரிவில் சிக்கி இறந்த 4 குழந்தைகள் உட்பட 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 6 பேர் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் பசு பண்ணை அமைப்பதற்காக 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க குளம் அமைக்கப்பட்டது. மழை காரணமாக நீர்த்தேக்கம் உடைந்தது. மேலும், குளம் தோண்டப்பட்ட மண், கல் போன்றவையும் சேர்ந்து வீடுகளை மூடிவிட்டன. ஒரு குடும்பத்தில் தாத்தா, மகன், பேரன் என மொத்தமாக இறந்துபோனதுதான் சோகம்" என்றனர்.

கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி பகுதியில் மழைக் காரணமாகக் கடந்த புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டன. இதையடுத்து 71 பேர் மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது பல இடங்களில் மண் சரிவு காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இப்போதுதான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஆனால், மழை பாதிப்பால் பொதுமக்கள் மீண்டும் சிரமத்துக்குள்ளாயினர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
தந்தையின் கவனக்குறைவால் பலியான குழந்தை! தந்தையர் தினத்தில் சோகம்

காரை பின்பக்கமாக செலுத்திய தந்தையின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது.






நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு அக்‌ஷிதா என்ற மகளும், லெக்சை என்ற மகனும் இருந்தனர். லெக்சை-க்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது. இன்று ஞயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் ஜெகன் தனது காரை சர்வீஸுக்கு விட முடிவு செய்தார். அவரது மகன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் காரை பின்புறமாக எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் குழந்தை மீது மோதியது. குழந்தையின் அழுகை சப்தம்கேட்டு காரை நிறுத்திவிடு இறங்கிய ஜெகன் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.

அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலக தந்தையர் தினமான இன்று தந்தையின் கவனக்குறைவால் ஒன்றரை வயது மகன் பலியான சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகினர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
மேகமலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்! 33 பேர் படுகாயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலையில் இன்று மாலை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்தனர்.







சின்னமனூரை அடுத்த உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்கள் வேன் ஒன்றின் மூலம் மேகமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மேகமலை பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த 33 பேரும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்களில் ஒன்றான மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் 500 அடி பள்ளத்தில் கழிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அவர்களில், 5 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
இந்திய ஆதார் அட்டையுடன் சீனா, நேபாள நாட்டினர் மேற்கு வங்காளத்தில் கைது

பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக நுழைவதற்கு மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டம் நுழைவு வாயிலாக உள்ளது.

இந்நிலையில், இந்த மாவட்டத்தின் செவோக்கே சாலையில் இருக்கும் ஒரு ஓட்டலில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

அப்போது, சீனாவை சேர்ந்த புஹு வாங் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் என்பவர் மூலமாக இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், புஹு வாங் மற்றும் கணேஷ் பட்டாராய் ஆகியோர் தங்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய இந்திய ஆதார் அட்டைகளை வைத்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால், நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோரை கைது செய்துள்ள அதிகாரிகள், சீனாவை சேர்ந்த புஹு வாங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதான பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
எத்தனை பாஸ்போர்ட் கொடுத்துள்ளோம் என்ற கணக்கு இல்லை - அதிர வைத்த வெளியுறவு அமைச்சகம்

1529347925376.png

தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையராக இருந்தவருமான ஷைலேஷ் காந்தி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார்.

அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?, அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?, தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஆகிய கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி கடந்த 15-ம் தேதி பதில்களை அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை எனவும் மற்ற கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதியை சுட்டிக்காட்டி பதில் தெரிவிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றாலோ, பொதுமக்களின் தகவல்கள் கசியும் என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்க தேவையில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.

மாறாக, கடந்த 2015-ம் ஆண்டு மனோரஞ்சன் ராய் என்பவர் 2012 முதல் 2013 வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களுக்கு, 2012-ல் 73,89,558 பாஸ்போர்ட்கள் மற்றும் 2013-ல் 58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் முறையான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
86 வயதில் உடற்பயிற்சி: பிரதமர் மோடிக்கு சவால் விடும் தேவேகவுடா

1529349565168.png


பிரதமர் மோடி சமீபத்தில் தான் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தார்.

அதற்கு குமாரசாமி, நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். எனது பிட்னசை விட கர்நாடகாவின் பிட்னஸ்தான் முக்கியம் என பதில் அளித்து இருந்தார். ஆனால் குமாரசாமி இது தொடர்பாக போட்டோ, வீடியோ எதுவும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சவால்விடும் வகையில் 86 வயதான தேவேகவுடா, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தேவேகவுடா பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஜிம் அமைத்து தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், நடைபயிற்சி செய்து வருகிறார்.

அவருக்கு கார்த்திக் என்ற பயிற்சியாளர் உடற்பயிற்சி பயிற்றுனராக இருந்து உதவி வருகிறார்.



இதுபற்றி தேவேகவுடா கூறுகையில், “எனக்கு வயதாகி விட்டதால் இயல்பாகவே சில பிரச்சினைகள் வந்து விட்டன. அதை உடற்பயிற்சியினால் சரி செய்து வருகிறேன். சைவ உணவையே சாப்பிடுகிறேன். மது, புகைபழக்கம் கிடையாது. நீண்ட நாள் வாழ எனக்கு ஆசை இல்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே உடற்பயிற்சி செய்கிறேன்” என்றார்.

பயிற்சியாளர் கார்த்திக் கூறும்போது, “தேவேகவுடாவுக்கு 86 வயது. ஆனாலும், 40 வயதானவர்களுக்கு இணையாக ஆரோக்கியமாக உள்ளார்” என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
இந்திராணி முகர்ஜிக்கு விவாகரத்து அளிக்க 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி சம்மதம்

1529349825903.png

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.


கொலை செய்யப்பட்ட ஷீனா போரா

இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய், மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 46 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஆர்த்தர் சாலை சிறையில் அடைபட்டுள்ள மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், இந்திராணிக்கு விவாகரத்து அளிக்க பீட்டர் முகர்ஜி சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திராணியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பீட்டர் முகர்ஜியின் வழக்கறிஞர் பதிவு தபால் மூலம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். சம்பந்த்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விவாகரத்து பெருவதில் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை ரசித்து மகிழும் மும்பைவாசிகள். இடம் : மும்பை கடற்கரை
1529351996766.png
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.