Daily photo News

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் படலம் - பொதுமக்கள் அதிர்ச்சி

1529642055219.png

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

இந்த எண்ணெய் குழாய்கள் விளைநிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார் - ஐகோர்ட்டு கருத்து

1529642780510.png

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். ஆனால், அதே இடத்தில் மீண்டும் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.



எனவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்திவிட்டனர் என்று கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த நபர்கள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?’ என்று கேட்டார்.

மேலும், ‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று கட்சி பாகுபாடு எதுவுமின்றி சட்டவிரோதமாக அனைவரும் பேனர்களை வைக்க அனுமதிப்பது ஏன்?. டிராபிக் ராமசாமி ஒன்றும் தனக்காக போராடவில்லை. பொதுநலனுக்காகத்தான் போராடுகிறார். சட்டவிரோதமாக சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள் சரிந்து பொதுமக்கள் மீது விழுந்தால், பாதிக்கப்படுவது யார்? என்பதை அதிகாரிகள் யோசிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர், ‘எழும்பூர் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை போலீஸ் கமிஷனர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் - இன்று முதல் அமலுக்கு வருகிறது

1529642876521.png


நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
மகாராஷ்டிராவில் 5 பேர் மரணம் - விருந்து சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் சிக்கினார்

1529732022373.png

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி சுபாஷ் மானே என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், பிரத்னியா (வயது 23) என்ற பெண்ணை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சி தகவல் வெளியானது.

சுபாஷ் மானேவின் நெருங்கிய உறவினரான அந்த பெண் கோபோலியைச் சேர்ந்தவர். இவர், குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக விருந்தின்போது பறிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தை கலந்துள்ளார். விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #FoodPoisoningDeath
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்

1529733578719.png

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.

கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.


நீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட முதல் நாளிலேயே அபராதம் மூலம் 3.6 லட்சம் வசூல்
1529763247989.png


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் ‘‘பாலி தீன் பை’’ முதல் இடத்தில் இருக்கிறது. ‘‘கேரி பேக்’’ என்று அழைக்கப்படும் பாலிதீன் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. பாலிதீன் பைகளை பயன்படுத்திய பிறகு அவை குப்பையில் வீசி எறியப்படுகின்றன.

மண்ணோடு மண்ணாக மக்காத இந்த பாலிதீன் பைகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. அனைத்து வகை உயிரினங்களுக்கும் இது எமனாக மாறியுள்ளது. சுட, சுட பாலிதீன் பைகளில் கட்டி கொடுக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் உருவாகும் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே பிளாஸ்டிக், பாலிதீன்களை ஒழிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மகாரஷ்டிராவில் இன்று (சனிக்கிழமை) முதல் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மார்க்கெட்டுகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கடைகள், நடைபாதை கடைகள், கடற்கரை போன்ற இடங்களை கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஷிக்கில் 3.6 லட்சம் வசூல்


பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட முதல் நாளே, நாஷிக் மாவட்டத்தில், தடையை மீறி பயன்படுத்துவர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை துவங்கியது. நாஷிக்கில், ஆறு முனிஷிபல் டிவிசன்களிலும் சேர்த்து மொத்தம் 72 பேர் தடையை மீறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறியவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராத தொகை மொத்தம் ரூ.3.6 லட்சம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பிரச்சினைக்குரிய நிலத்தில் உழுவதை தடுக்க டிராக்டர் முன் வயதான தாயாரை தள்ளியவர் !!

1529763588558.png

மகாராஷ்டிராவின் வாஷிம் நகரில் உள்ள ஒருவர் நிலப்பிரச்சினையில் ஓடும் டிராக்டருக்கு முன்னால் அவரது தாயைத் தஞ்சம் பிடித்து தள்ளி உள்ளார்.

பிரச்சினைக்குரிய தன்னுடைய நிலத்தில் டிராக்டரால் ஒருவர் உழுது கொண்டு இருந்த போது தனது வயதான தாயாரை டிராக்டர் முன் தள்ளி டிராக்டரை நிறுத்தி உள்ளார்.பெண் காயமடைந்தாரா என்ற விவரம் தெரியவில்லை. அவரது தாயின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் செயல் உண்மையில் வெறுப்பூட்டுவதாக அமைந்து உள்ளது.

இந்த் சம்பவம் இப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அவரது கொடூரமான செயல்களுக்காக அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பீகாரில் சிறுவன் சுட்டுக்கொலை: மாங்காய் திருடியதால் காவலாளி வெறிச்செயல்

1529763697478.png

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டம், ஷெர்கார் கிராமத்தில் ஒரு தோப்பில் சத்யம் என்ற 10 வயது சிறுவன் அத்துமீறி நுழைந்து அங்கு உள்ள மாமரத்தில் மாங்காய் திருடி உள்ளான். அப்போது அங்கு வந்த காவலாளி ராம யாதவ், அந்த சிறுவனை மரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு சத்தம் போட்டும் அவன் இறங்கவில்லை.

இதில் ஆத்திரம் அடைந்த காவலாளி ராமயாதவ், சிறுவன் சத்யமை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினார்.

இதில் அந்த சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனான்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, சிறுவனை சுட்டுக்கொன்ற காவலாளி மீது நடவடிக்கை எடுத்தால்தான் அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்போம் என கூறினர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சத்யம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
`மனைவியைக் கொடூரமாக கொலை செய்த ஜெயில் வார்டன்' - சந்தேகத்தால் 25 நாளிலேயே முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!



நெல்லை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜெயில் வார்டன் அவரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார். திருமணமான 25 நாளிலேயே இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.





நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகுரு. 28 வயதான இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் இருந்து மாற்றலாகி பாளையங்கோட்டை சிறைக்கு வந்துள்ளார்.





அதன் பின்னர், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. உறவினரான வேலம்மாள் என்பவருக்கும் பாலகுருவுக்கும் இடையே கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வேலம்மாள், வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை பாலகுரு பார்த்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாலகுரு திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.


மனைவி வேலம்மாளை அழைத்து, திருச்செந்தூர் கோயிலில் இரவு தங்கிவிட்டு வரலாம் எனக் கூறி அழைத்துள்ளார். இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.





இரவு முழுவதும் மனம் வெறுத்த நிலையில் இருந்த பாலகுரு காலையில் பாளையங்கோட்டை தாலுக்கா காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று மாலை வரையிலும், தான் வார்டனாக பணியாற்றிய அதே சிறையில் கைதியாக பாலகுரு அடைக்கப்பட்ட சோகம் நடந்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
பேய், பிசாசுகள் பயத்தை போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ

1529830757493.png


ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

அந்த சுடுகாடு கடந்த பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புரணமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

திட்டம் இழுபறியாக கிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ ராம நாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப்பட்டுச்சென்றார். அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, “பேய், பிசாசு பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும்.” என கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என புகார் தெரிவித்துள்ளார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.