Daily science !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
The milky way and meteors of the April Lyrids annual meteor shower are seen in the night sky over Burg auf Fehmarn on the Baltic Sea island of Fehmarn, northern Germany
1524641487242.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்- இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

1524894294298.png

பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு ‘வாஸ்ப்-104 பி’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

புதிய கிரகம் மிகவும் அடர்ந்த கருப்பாக உள்ளது. அதாவது நிலக்கரியை விட கருப்பாக இருக்கிறது.

பொதுவாக கிரகங்கள் பக்கத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை உமிழும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக அந்த கிரகங்கள் ஓரளவு வெளிச்சம் கொண்டதாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகத்துக்கு உமிழும் தன்மை மிகவும் குறைவாக உள்ளது. நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஒளியில் 99 சதவீதத்தை உள்வாங்கிக்கொண்டு ஒரு சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

இதனால் தான் அந்த கிரகம் இவ்வளவு கருப்பாக உள்ளது. நமது பூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகம் 70 சதவீத ஒளியை உமிழ்கிறது.

வியாழன் போன்ற கிரகங்களில் வாயுக்கள் அதிகம் உள்ளன. இதனால் ஒளியை ஈர்ப்பது அதிகமாக உள்ளது. இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள கிரகமும் வியாழனை போன்ற அதிக வாயுக்கள் கொண்ட கிரகமாக இருக்கலாம், இதனால்தான் அதிக ஒளியை ஈர்த்து கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்த கிரகம் தனது வட்ட பாதையில் சுற்றுவதற்கு 1.76 நாட்கள் எடுத்துக்கொள் கிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
பூமி உருவானது எப்படி? செவ்வாய் கிரகத்தில் இருந்து ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள்

1525552060328.png

பூமி உள்ளிட்ட திடப்பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்துக்கு ’இன்சைட்’ செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவியது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயலாற்றி, பல்வேறு புதிய தகவல்களை பூமியில் இருக்கும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்தவாறு அதன் அடிப்பகுதி மற்றும் பூமி உள்ளிட்ட திடப்பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை ஆய்வு செய்ய ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ திட்டமிட்டது.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்தின் மூன்றாவது முனையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.05 மணியளவில் அட்லஸ் V ராக்கெட் மூலம் ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்ப்பட்டது.

விண்னில் செலுத்திய நான்காவது நிமிடத்தில் ராக்கெட் என்ஜினின் பூஸ்டர் அணைக்கப்பட்டு, அடுத்தபடி நிலையை நோக்கி இந்த செயற்கைகோள் உயரச் சென்று கொண்டுள்ளது.



சுமார் 625 கிலோ எடையுள்ள இந்த ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ செயற்கைக்கோள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் செவ்வாய் கிரகத்தின் உள்வட்டப்பாதையை சென்றடையும். பின்னர், அங்கு நிரந்தரமாக நிலைகொண்டு தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பல தகவல்களை நாசா மையத்துக்கு அனுப்பி வைக்கும்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
"10 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் இப்படித்தான் அழியும்!” - கணிக்கும் விஞ்ஞானிகள்


னிதனுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே அதன் அழிவு பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டு. பல்வேறு மதங்களும் கூட உலகம் தோன்றியதைப் பற்றி மட்டுமன்றி அதன் அழிவு எப்படி இருக்கும் என்றும் கூறுகின்றன. விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூட தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்வதற்கு பல காலமாக முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போதும் புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.


இப்படித்தான் அழியப்போகிறது நமது சூரியன்







உயிர்ப்போடு இருக்கும் சூரியன் அதனுள்ளே இருக்கும் எரிபொருள் தீர்ந்த பிறகு இறக்கப்போகிறது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் எப்படி அழியப்போகிறது என்பதில்தான் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சூரியனின் இறுதிக்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் முன்னரே கணித்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் முன்பு இருந்ததை விடவும் தற்பொழுது தெளிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சூரியனுக்கு 4.5 பில்லியன் வயதாகிறது, நடுத்தர வயதை அடைந்திருக்கும் சூரியன் இன்னும் பத்து பில்லியன் வருடங்களில் அதன் இறுதிக்காலத்தை நெருங்கி விடும். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன்தான் அதை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதுதான் உயர் வெப்பநிலையில் ஹீலியமாக மாறி ஆற்றலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மொத்த ஹைட்ரஜனும் தீர்ந்துபோகும் போது சூரியன் ரெட் ஜெயன்டாக (அப்ப படம் எடுக்குமான்னு கேட்காதீங்க பாஸ்) மாற்றமடையும். அப்பொழுது சூரியன் விரிவடையத் தொடங்கும், அதன் பருமனும், சுற்றளவும் தற்போழுது இருப்பதை விடவும் 250 மடங்கு பெரியதாகும். அப்பொழுதே புதன், வெள்ளி ஆகிய கிரகங்களை சூரியன் விழுங்கியிருக்கும். அதே வேளையில் ரெட் ஜெயன்ட் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் நெருங்கலாம் அல்லது பூமியையும் சேர்த்தே விழுங்கிவிடும் என்றும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எது நடந்தாலும் அது பூமியின் அழிவு என்பது உறுதி செய்யப்பட்டுவிடும்.





ஒரு நட்சத்திரம் அதன் இறுதிக்காலத்தில் பல்வேறு பரிணாமங்களாக மாற்றமடையும். உதாரணமாக சூப்பர் நோவாவாகவோ, கருந்துளையாகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ மாறலாம். ஆனால் அது நட்சத்திரத்தின் நிறையைப்பொறுத்து மாறுபடும். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா (Albert Zijlstra) மற்றும் சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு சூரியன் அதன் இறுதிக்காலத்தில் எப்படிமாறக்கூடும் எனப் புதிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். வேறுவேறு நிறைகளைக் கொண்ட பல்வேறு வாழ்க்கைச் சுழற்சி இருக்கும் நட்சத்திரத்தின் மாதிரிகளைப் புதிதாக கணினியில் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு கிடைத்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலமாகவும் தாங்கள் உருவாக்கிய மாதிரியை ஆராய்ந்ததன் மூலமாகவும் இதை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி நமது சூரியன் அதன் இறுதிக்காலத்தில் ரெட் ஜெயன்டாக மாறப்போவது உறுதியானது என்றும் ஆனால் அது அப்படியே இருந்து விடப்போவதில்லை என்றும் சொல்கிறார் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா.





ரெட் ஜெயன்ட் நிலைக்குப் பிறகு சூரியன் அதன் உட்பொருட்களை நொடிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் வெளியே தள்ளும், அப்படி அதன் நிறையில் பாதியளவிற்கு வாயு மற்றும் தூசியை வெளியே தள்ளப்பட்டுவிடும். எஞ்சியிருக்கும் நடுப்பகுதி புற ஊதா கதிர்களையும், எக்ஸ்-ரே கதிரையும் வெளிப்படுத்தும். அதன் காரணமாக மாபெரும் ஒளிரக்கூடிய வாயு மற்றும் தூசுக்கள் அடங்கிய விண்மீன் நெபுலாவாக மாறும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்கள் 2 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஆண்ட்ரோமேடா கேலக்ஸியில் வாழ்ந்தால் அங்கிருந்து கூட நமது சூரியனின் விண்மீன் நெபுலாவைப் பார்க்க முடியும் என்று ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா கூறுகிறார். எஞ்சியிருக்கும் நட்சத்திரத்தின் உட்பகுதி அடுத்த பத்தாயிரம் வருடங்களுக்கு அதைச் சுற்றி இருப்பவற்றை ஒளிரச் செய்யும். சூரியனை விட 1.1 மடங்கு குறைவான நிறையுள்ள நட்சத்திரம் மங்கலான நெபுலாவாக உருமாறுகிறது. சூரியனை விட 3 மடங்கு நிறை அதிகமுள்ள நட்சத்திரம் பிரகாசமான நெபுலாவாக உருமாறுகிறது என்பதையும் தங்களது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.




இது போன்ற ஆய்வுகள் எப்போது நடந்தாலும் அதன் குறிக்கோள் இரண்டாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஒன்று நமது தோற்றத்தை பற்றி அறிந்துகொள்ளவது மற்றொன்று இந்தப் பூமி அழிந்துவிடும் முன்பு வேறு கிரகத்தில் குடியேறிவிட வேண்டும் என்பது. ஆனால் இந்த இரண்டு இலக்குகளையும் மனிதர்களால் எளிதில் அடைந்துவிட முடியாது என்பது உறுதி. இயற்கையில் சூரியனின் அழிவும் கூட அழகாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால், அதைக் காண்பதற்கு மனிதர்கள்தாம் யாரும் இருக்கப்போவதில்லை.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் ‘நாசா’ அனுப்புகிறது

1526200651882.png

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.

‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
நிலவின் இருண்ட பகுதியில் ஆய்வு: செயற்கைக்கோள் அனுப்பியது சீனா





நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான புதிய செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
"நிலவின் இருண்ட பகுதிகள்' என்று கூறப்படும், இதுவரை ஆய்வுகள் மூலம் அதிக உண்மைகள் அறியப்படாத மர்மம் நிறைந்த பகுதிகளில் முதல் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று சீனா திட்டமிட்டிருந்தது.

அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நாடு வடிவமைத்த குயீகியாவ் செயற்கைக்கோள், திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

400 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள், நிலவை 3 ஆண்டுகளாக சுற்றி வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் ஷிசாங் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டதாக (படம்) சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 25 நிமிடங்களுக்குப் பிறகு, தனியாகப் பிரிக்கப்பட்ட செயற்கைக்கோள், நிலவை நோக்கியப் பயணத்துக்கேற்ற சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

மேலும், மடக்கி வைக்கப்பட்டிருந்த அதனது ஆன்டனாக்கள் விரிக்கப்பட்டன.

பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான சுற்றுவட்டப் பாதையில், பூமிக்கு 4,55,000 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது சுழி ஈர்ப்புப் புள்ளியை இந்த செயற்கோள் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது நிறைவேறினால், அந்தப் புள்ளியை அடைந்த முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக குயீகியாவ் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
Nasa's Curiosity rover drilling Mars rocks again






Nasa's Curiosity Mars rover has successfully collected the first rock samples on the red planet in over a year, using a new way to drill rocks and extract powder from them.

Curiosity tested percussive drilling this past weekend, penetrating about two inches into a target called "Duluth."

Nasa's Jet Propulsion Laboratory (JPL) in the US has been testing this drilling technique since a mechanical problem took Curiosity's drill offline in December 2016.

This technique, called Feed Extended Drilling, keeps the drill's bit extended out past two stabiliser posts that were originally used to steady the drill against Martian rocks.

It lets Curiosity drill using the force of its robotic arm, a little more like the way a human would drill into a wall at home.

"The team used tremendous ingenuity to devise a new drilling technique and implement it on another planet," said Steve Lee, Curiosity Deputy Project Manager at JPL.

"Those are two vital inches of innovation from 60 million miles away. We're thrilled that the result was so successful," said Lee.

Drilling is a vitally important part of Curiosity's capabilities to study Mars. Inside the rover are two laboratories that are able to conduct chemical and mineralogical analyses of rock and soil samples. The samples are acquired from Gale Crater, which the rover has been exploring since 2012.

Curiosity's science team has been eager to get the drill working before the rover leaves its current location near Vera Rubin Ridge. Fortunately, it was near enough to drill targets like Duluth to drive back down the ridge.

Sunday's drill sample represents a quick taste of the region before Curiosity moves on.


Demonstrating that Curiosity's percussive drilling technique works is a milestone in itself. But that doesn't mean the work is over for engineers at JPL.


"We've been developing this new drilling technique for over a year, but our job isn't done once a sample has been collected on Mars," said Tom Green, a systems engineer who helped develop and test Curiosity's new drilling method.


"With each new test, we closely examine the data to look for improvements we can make and then head back to our test bed to iterate on the process," said Green.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
First probe to 'touch' the Sun will carry 1.1 million names: Nasa

Nasa's Parker Solar Probe - humanity's first mission to 'touch' a star - will carry over 1.1 million people's names to the Sun this July, the US space agency said.

Throughout its seven-year mission, the probe will swoop through the Sun's atmosphere 24 times, getting closer to our star than any spacecraft has gone before.

"Parker Solar Probe is going to revolutionise our understanding of the Sun, the only star we can study up close," said Nicola Fox, project scientist for Parker Solar Probe at the Johns Hopkins Applied Physics Lab in the US.

"It is fitting that as the mission undertakes one of the most extreme journeys of exploration ever tackled by a human-made object, the spacecraft will also carry along the names of so many people who are cheering it on its way," said Fox.

In March, the public were invited to send their names to the Sun aboard humanity's first mission to 'touch' a star. A total of 1,137,202 names were submitted and confirmed over the seven-and-a-half-week period, and a memory card containing the names was installed on the spacecraft on May 18 - three months before the scheduled launch on July 31.

The card was mounted on a plaque bearing a dedication to and a quote from the missions namesake Eugene Parker, who first theorised the existence of the solar wind. This is the first NASA mission to be named for a living individual.

This memory card also carries photos of Parker, professor at the University of Chicago, and a copy of his ground-breaking 1958 scientific paper.

Parker proposed a number of concepts about how stars - including our Sun - give off material.


He called this cascade of energy and particles the solar wind, a constant outflow of material from the Sun that we now know shapes everything from the habitability of worlds to our solar system's interaction with the rest of the galaxy.


Parker Solar Probe will explore the Sun's outer atmosphere and make critical observations to answer decades-old questions about the physics of stars.


The resulting data may also improve forecasts of major eruptions on the Sun and subsequent space weather events that impact life on Earth, as well as satellites and astronauts in space.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

1528015388744.png


அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 9.48 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.