Daily science !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும் - ஆராய்சியாளர்கள் தகவல்

1528401981962.png

அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது தற்போது 24 மணி நேரமாக உள்ளது.

நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,411
Likes
553
Location
chennai
விண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்

1529061010035.png

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கிங்கின் சாம்பலுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் குரல் அடங்கிய பாடல் விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. பிளாக் ஹோல் குறித்து ஆராய்ச்சி செய்த ஹாக்கிங்கின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

6 நிமிடங்கள் அடங்கிய இந்த பாடலின் இடையில் ஹாக்கிங்கின் குரல் உள்ளது. இது ஐரோப்பா விண்வெளி நிலையத்தில் இருந்து செபிரியாஸ் ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்பப்படுகிறது. இது மிகவும் பிரபலமான பிளாக் ஹோலாகும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
அணு ஆயுத பலத்தில் இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்..!

ஸ்டாக்ஹோம் என்ற அமைதி குறித்த ஆராய்ச்சி நிறுவனம் உலகில் அணு ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைவிட பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது. பாகிஸ்தானிடம் 140 அணு ஆயுதங்கள் தற்போது இருப்பதாகக் கூறும் அந்த ஆய்வறிக்கையில் இந்தியா 130 அணு ஆயுதங்களோடு வரிசையில் அதற்கு அடுத்ததாக உள்ளது. சென்ற ஆண்டைவிட பாகிஸ்தான் 10 அணு ஆயுதங்கள் அதிகமாகத் தற்போது வைத்திருக்கிறது.










இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களது அணு ஆயுதங்களின் இருப்பைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதிலேயே முனைந்திருக்கின்றன. அதே சமயம் புது ரக நிலம், கடல் மற்றும் விண் சார்ந்த ஏவுகணைகளையும் அதிகரிப்பதிலும் முனைந்துள்ளன." என்கிறது அந்த அறிக்கை.
சீனா தனது ஏவுகணைகளைப் பல்வேறு தொழில்நுட்பங்களோடு புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. அத்தோடு அதன் ஏவுகணைச் சாலைகளையும் விரிவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 92 சதவிகிதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய ஒன்பது நாடுகளிடம் மட்டும் தற்போது 14,465 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
Mars rover still silent as red planet dust storm goes global

A dust storm at Mars is now global, keeping Nasa's Opportunity rover out of touch with Earth.





Flight controllers lost contact with the rover more than a week ago. At the time, the dust storm covered one-fourth of Mars. Nasa said Wednesday the storm now encircles the red planet, with only tall volcano peaks and the poles exposed to the sun.





Without sunlight, the solar-powered Opportunity can only hunker down and wait for the sky to clear.





Nasa's nuclear-powered rover Curiosity is unaffected and is studying the extreme weather conditions. Mars hasn't seen a storm like this since 2007.





A self-portrait of Nasa's Curiosity Mars rover in the Gale Crater on June 15, 2018




Scientists at Nasa's Jet Propulsion Laboratory in Pasadena, California, say they remain optimistic Opportunity can survive. The rover has been exploring Mars since 2004.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
In June 2018 NASA's Curiosity Rover used its Mast Camera, or Mastcam, to snap photos of the intensifying haziness the surface of Mars
1529659066698.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany


Two images from the Mast Camera (Mastcam) on NASA's Curiosity rover depicting the change in the color of light illuminating the Martian surface since a dust storm engulfed Gale Crater
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
Evidence of rare black hole spotted




Highlights

  • In a first, scientists have spotted the evidence of a rare intermediate mass black hole an elusive object whose existence has been hotly debated.
  • Scientists have been able to prove the existence of small black holes and those that are super-massive, but the existence of intermediate-mass black holes (IMBHs) was never proven.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா?


சமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர்.




இயற்கையான நிலஅதிர்வு (Natural earthquake) என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது என்ன செயற்கையான நிலஅதிர்வு (Artificial earthquake)? பூமியின் கீழ் உள்ள புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலோ அல்லது விலகிச்செல்வதாலோ இயற்கையான நில அதிர்வு ஏற்படுகிறது. மாறாக மனிதர்களால் பூமியின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் அதிர்வுகளே இந்தச் செயற்கையான நிலஅதிர்வுகளுக்கு காரணம்.
உதாரணமாக, சமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர். அதனால் அங்குச் செயற்கையான நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், கோல் விழுந்த நேரமும் நில அதிர்வு ஏற்பட்ட நேரமும் வெவ்வேறானவை எனக் கண்டறியப்பட்டது. அன்றைய நில அதிர்வுக்கு கால்பந்து காரணமல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், இப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லாமல் இல்லை. இப்படிபட்ட நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன.


இதே போன்ற நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘சியாட்டில்’ அணிக்கும் (Seattle Seahawks) ‘நியூ ஆர்லீன்ஸ்’ அணிக்கும் (New Orleans Saints) இடையே நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் வைல்டு கார்டு ப்ளேஆப் சுற்றின் இறுதியில் அந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆக்ரோஷமாக குதித்ததில் சில நொடிகளுக்கு ‘Beast Quake’ என்று வர்ணிக்கப்படும் தீவிரமான நிலஅதிர்வானது சைஸ்மோகிராஃபில் (Seismograph) பதிவானது. அதே போல 2016ஆம் ஆண்டு பார்சிலோனோவில் ‘ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன்’ (Bruce Springsteen) நடத்திய இசை நிகழ்ச்சியில் கூடியிருந்த 80,000 க்கும் அதிகமான ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போதும் செயற்கை நிலஅதிர்வு உணரப்பட்டது.



இவையெல்லாம் ஒரு சிறிய பகுதியில் கூடியிருந்த சில ஆயிரக்கணக்கான மக்களால் உருவாக்கப்பட்ட எந்தவித பாதிப்புகளும் ஏற்படுத்தாத செயற்கையான நிலநடுக்கங்கள். அப்படியானால் உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் குதித்தால் என்ன நிகழும்? இதற்கான பதிலை, உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டினைக் கொண்டு மட்டும் இப்போதைக்கு இங்கு பார்க்கலாம்.





தற்போதைய இந்தியாவின் மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 1.32 பில்லியன் (132 கோடி) என்று வைத்துக்கொள்வோம். சராசரியாக இந்திய மக்களின் உடல் எடையானது 50 கிலோ. எனவே மொத்த இந்தியாவின் எடையானது கிட்டத்தட்ட 66 × 10 ^ 9 கிலோ (அதாவது 66 மில்லியன் டன்கள்). பொதுவாக இந்த அளவுக்கு எடையுள்ள ஒரு ‘பொருளானது’ அரை மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது என்று வைத்துக்கொண்டால் கட்டாயமாக அது கடுமையான நிலஅதிர்வினை ஏற்படுத்தும். மேலும், பொருள் ஒன்றின் நிறை ( Mass), உயரம் ( height) மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) ஆகியவை தெரிந்திருப்பின் அப்பொருளினால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையாற்றலினை (Potential energy) “E = m × g × h“ என்ற ஃபார்முலாவின் மூலம் கண்டறியலாம். இதன்படி இந்திய மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அரை மீட்டர் உயரத்திற்குக் குதித்தால் வெளிப்படும் ஆற்றலினை பின்வரும் வகையில் கண்டறியலாம்.

ஆற்றல் ( E ) = 66 × 10 ^ 9 kg × 9.8 ms 2 × 0.5 m = 3.2 × 10 11 joules
ஆக இந்த ஆற்றல் அனைத்தும் பூமியின் அதிர்வுகளாக மாற்றப்படுமாயின் அது ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவு கொண்ட நிலஅதிர்வாகப் பதிவாகும். இந்த அளவீடானது ஆற்றலுக்கும் (energy) நிலஅதிர்வின் விசையினையும் (force of an earthquake (M)) இணைக்கும் ‘பாத்’ (Bath) என்ற அறிவியலாளர் உருவாக்கிய கீழ்க்கண்ட தொடர்பின் மூலம் பெறப்படுகிறது. Log E = 5.24 + 144 × M

மேலும் ஒரு தீவிரமான நிலஅதிர்வினை, இந்திய மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளடக்குவதன் மூலம் உருவாக்க முடியும். இதில் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு சதுர மீட்டர் அளவுக்கு இடம் தரப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் நம் நாட்டு மக்கள் அனைவரையும் 1320 சதுர கிலோமீட்டரில் அடக்கிவிடலாம் (இந்தியாவின் மொத்த பரப்பளவானது 32,87,000 சதுர கிலோமீட்டர் ஆகும்). இந்தப் பகுதியில் உருவாகும் நிலஅதிர்வானது எந்த வகையில் இருக்கும் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்திய மக்களைக் கொண்டே 4.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை உண்டாக்க முடியும் எனும்போது, உலகிலுள்ள அத்தனை கோடி மக்களின் ஆற்றலும் இணைந்தால் அது இப்பூமியின் சுழற்சி வேகத்தினையே பாதிக்கவும் கூடும் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள். அடேங்கப்பா!!!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

1530254041870.png



ழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்' என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்' குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.

பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகுமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும். அப்போது, சூரியன் மேற்கில் மறையும் நேரம், செவ்வாய் கிழக்கில் தோன்றும். சூரியன் கிழக்கில் தோன்றும் நேரம், செவ்வாய் மேற்கில் மறைந்துவிடும். இதனை அறிவியலில் `அப்போசிஷன்' (Opposition) என்பார்கள்.





கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் (elliptical orbits) சுற்றுகின்றன. நீள்வட்ட பாதையில் கிரகங்கள் சுற்றுவதால் ஒரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அருகே வரும், மற்றொரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அதிகத் தொலைவில் இருக்கும். நீள்வட்டப் பாதையில் கிரகமும் சூரியனும் அருகருகே வரும் புள்ளிக்கு `பெரிஹெலியான்' (Perihelion) என்று பெயர். சூரியனுலிருந்து அதிகத் தொலைவில் கிரகம் இருக்கும் புள்ளிக்கு `அப்ஹெலியான்' (Aphelion) என்று பெயர். `அப்போசிஷன்' நிகழும்போது செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதன் பெயர் `பெரிஹெலிக் அப்போசிஷன்' (Perihelic Opposition). இந்த நிகழ்வினால் செவ்வாய் கிரகமானது சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும்.

சராசரியாக செவ்வாய் கிரகமானது பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது பூமியிலிருந்து வெறும் 35.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இதனால் எப்போதும் இல்லாத வகையில் செவ்வாய் அதிகப் பிரகாசமாகக் காணப்படும்.வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வியாழன் கோளை விட 1.8 மடங்கு அதிகப் பிரகாசமானதாகக் காணப்படும். இதன் மூலம் சூரியன், நிலா, வெள்ளிக்குப் பிறகு செவ்வாய் நான்காவது பிரகாசமான கோளாகத் தோன்றும்.

வானத்தில் தென்கிழக்கு திசையில் சாஜிட்டேரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே தென்படும். இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் காண இயலும். வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குச் செவ்வாய் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. குறிப்பாக அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. ஆனால், தென் அரைக்கோளத்தில் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகக் காணலாம். தெற்கு கனடா, ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் செவ்வாயைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.



இந்த `பெரிஹெலிக் அப்போசிஷன்' என்ற நிகழ்வானது துல்லியமாக வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி நிகழவிருக்கிறது. இதனால் ஜூலை மாதம் முழுவதும் பிரகாசமாகவும் பெரிதாகவும் காணப்படும். செவ்வாய் வழக்கத்தை விட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும். கடந்த 2003ம் ஆண்டு இதே நிகழ்வு நடந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு செவ்வாயும் பூமியும் அருகில் வந்தன. செவ்வாயின் நீள்வட்டப்பாதை நாளாக நாளாக பெரிதாகிக்கொண்டே போகிறதாம். இதனால் வருங்காலத்தில் பூமியும் செவ்வாயும் இன்னும் மிக அருகில் வருமாம். 2003 ம் ஆண்டை விட ஆகஸ்ட் 27, 2287ம் ஆண்டு நடக்கவிருக்கும் `பெரிஹெலிக் அப்போசிஷனின்' போது செவ்வாயும் பூமியும் மிக மிக அருகில் வருமாம். வெல்கம் சூப்பர்மார்ஸ்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.