Daily Tech news

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
[h=2]ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் ஜியோ சர்ப்ரைஸ்[/h]












ஐபிஎல் 2018 கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் ஏர்டெல் போன்றே அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேக 4ஜி டேட்டா வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.




பாரதி ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோவுன் MIMO பிரீ-5ஜி தொழில்நுட்பத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரில் இந்த தொழில்நுட்பம் கொண்டு அதிவேக இண்டர்நெட் வழங்க இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.


அந்த வகையில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் கிரிகெட் மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்பட இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பிரீ-5ஜி மேசிவ் MIMO யூனிட்களை நிறுவி அதன்மூலம் நெட்வொர்க் திறனை ஐந்து மடங்கு வரை அதிகரிக்க இருக்கிறது.


புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவப்பட இருக்கிறது. இங்கு நடைபெற இருக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதேபோன்று டெல்லி, மும்பை நகரங்களின் குறிப்பிட்ட இடங்களில் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட இருக்கிறது.





மேசிவ் MIMO தொழில்நுட்பம் முப்பறிமான பீம்களை பயனர் இருக்கும் திசைகளில் பீய்த்தடிக்கும். இதனால் நெட்வொர்க் சம அளவில் பரப்பப்பட்டு, எவ்வித குறுக்கீடும் இன்றி அதிவேக இணைய வசதியை பெற முடியும். இதனால் பயனர் அனுபம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ போன்றே ஏர்டெல் நிறுவனமும் மேசிவ் MIMO தொழில்நுட்பத்தை ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்களில் நிறுவ இருக்கின்றன. அதன் படி சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொகாலி, இன்டூர், ஜெய்பூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்படுகின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் அம்பலம்

1524414768810.png


‘ஸ்மார்ட் போன்’ உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடிப்பேர் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது.

வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட்டின் அதிரடி திட்டம்

1524836266996.png


அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் வியக்க வைக்கும் சலுகைகளை வழங்கும் விற்பனை திருவிழாவினை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் வர்த்தக துறையை சார்ந்த வல்லுநர்கள் அளித்திருக்கும் தகவல்களில் இரு நிறுவனங்களும் கிட்டதட்ட 70 முதல் 80% பொருட்களை வாங்கி குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள், தொலைகாட்சி, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து வித பொருட்களுக்கும் சிறப்பு விற்பனை, அதிரடி தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்க பிளிப்கார்ட் மற்றும் அமேசான் திட்டமிட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்பட்ட பொருட்களின் விலையை தள்ளுபடி காலத்தில் மட்டும் குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.


கோப்பு படம்

கோடை கால சிறப்பு விற்பனையில் ஆடைகளுக்கு 70 முதல் 80% வரையிலான தள்ளுபடி, ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் மின்சாதங்களுக்கு 10 முதல் 20% வரை கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இந்திய ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் மட்டும் சுமார் 60% பங்கு வகிக்கிறது.

இத்துடன் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவனை முறை வசதி உள்ளிட்டவற்றை வழங்கவும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்கள் திட்டமிட்டுள்ளன. விற்பனை திருவிழா நடைபெற இருப்பதை பிளிப்கார்ட் அதிகாரி உறுதி செய்திருக்கும் நிலையில், மற்ற விவரங்களை வழங்கவில்லை.

புதிய விற்பனை திருவிழா மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். இது எங்களின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் சிறிய வெர்ஷனாக இறுக்கும் என அவர் தெரிவித்தார். இந்த விற்பனை திருவிழாவில் கோடை காலத்திற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் தொலைகாட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் இதர பிரிவுகளில் உள்ள சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,438
Location
India
தினமும் 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

1524836343278.png

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.219 புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.199 சலுகையை போன்றே புதிய சலுகையும் அமைந்துள்ளது. இரண்டு சலுகைகளிலும் சமஅளவு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வழங்கப்படும் நிலையில், புதிய சலுகையில் அன்லிமிடெட் ஹெல்லோ டியூன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை தங்களது மொபைல் நம்பருக்கு காலர் டியூன்களை வைத்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு காலர் டியூன்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஏர்டெல் ரூ.219 சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் வலைத்தளம் செல்ல வேண்டும். காலர் டியூன்கள் வேண்டாம் என்போர் ரூ.199 சலுகையை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.



ஏர்டெல் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 39.4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஏர்டெல் ரூ.219 சலுகையை போன்று ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 மற்றும் ரூ.198 விலையில் இரண்டு சலுகைகளை வழங்குகிறது.

இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 1.5 ஜிபி மற்றும் ரூ.2 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவற்றை ஜியோ வழங்குகிறது.

சமீபத்தில் ஏர்டெல் ரூ.49 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் ரூ.49 விலையில் அறிவித்த சலுகையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வந்த ரூ.349 சலுகையை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கியது. முன்னதாக ரூ.349 சலுகையில் வழங்கப்பட்ட 2 ஜிபி டேட்டா அளவு 3ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. ரூ.249 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
18 கோடி வாடிக்கையாளர்கள் ரூ.7,128 கோடி வருவாய் - அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

1524894848274.png

இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 31, 2018 வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. இதில் ரூ.7,128 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இது முந்தைய காலாண்டை விட 3.6% வளர்ச்சியுடன் ரூ.510.44 கோடி லாபம் பெற்றிருக்கிறது. மூன்றாவது காலாண்டில் மட்டும் 1.2% வளர்ச்சியை ஜியோ பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் ரூ.652.30 கோடி நஷ்டமடைந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.66 கோடியை கடந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 2.65 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ளது. முந்தைய காலாண்டில் சுமார் 2.15 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்திருந்தனர்.



- குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் மாதம் 137.1 ஆகும். முந்தைய காலாண்டில் மாதம் 154 ஆக இருந்தது.

- வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 506 கோடி ஜிபி ஆக இருக்கிறது. (மாதம் ஒரு வாடிக்கையாளர் 9.6 ஜிபி)

- சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றிற்கு 37,218 கோடி நிமிடங்களாக இருக்கிறது. (ஒரு வாடிக்கையாளர் மாதம் 716 நிமிடங்கள்)

- ஒரு வாடிக்கையாளரின் மாதாந்திர வீடியோ பயன்பாடு 240 கோடி மணி நேரம். (மாதம் 13.8 மணி நேரம்)

இதே காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோமியூசிக் மற்றும் சாவன் மியூசிக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநிறுவனங்கள் இணைந்து மியூசிக், மீடியா மற்றும் கலைஞர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சேவையாக உருவெடுக்க முடிவு செய்தன.

ஜியோமியூசிக் மற்றும் சாவன் நிறுவனங்களின் ஒப்பந்த மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிக மதிப்பு கொண்டது என கூறப்பட்டிருந்தது. இதில் ஜியோமியூசிக் மதிப்பு மட்டும் 67 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
ஆன்லைன் ஷாப்பிங்: மூன்று பேரில் ஒருவருக்கு போலி பொருட்கள்

1525145108398.png

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவர் போலி பொருட்களையே பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களின் வாழ்க்கை இயந்திரமயமாக மாறியுள்ள நிலையில், அவர்களும் தங்களது தேவைகளை இருந்தஇடத்தில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ள தயாராகி விட்டனர். முன்பு, உயர் மதிப்பு கொண்ட பொருட்கள் மட்டுமே, ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் என்ற நிலை மாறி, தற்போது பலசரக்கு பொருட்களும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் முதல், துடைக்க பயன்படும் துடைப்பம் உள்ளிட்டவைகள் வரை தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கிடைக்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வர்த்தகமாகும் பொருட்களின் நம்பகத்தன்மை குறித்து வேலாசிட்டி எம்ஆர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், சென்னை, ஆமதாபாத் மற்றும் புனே நகரங்களில் உள்ள மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




மூன்றில் ஒருவருக்கு போலி :


இந்த ஆய்வின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவர் போலி பொருட்களை பெறுவது தெரியவந்துள்ளது.




வர்த்தகம் சரிவு :


போலி பொருட்களை பெறும் வாடிக்கையாளர்கள், அதை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் தெரியப்படுத்துவதால், யாரோ ஒரு போலி நிறுவனம் செய்த தவறுக்காக, ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம், ஆண்டிற்கு 4 முதல் 5 சதவீதம் சரிவடைய வாய்ப்பிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டரும் சிக்குகிறது

1525145600030.png

வாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது.

பேஸ்புக்கிடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர், மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இதே பிரச்னையில் டுவிட்டரும் சிக்கியுள்ளதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் வரை டுவிட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் அதிர்ந்து போன டுவிட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில், விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
`ட்விட்டர் பாஸ்வேர்டு கோமாளித்தனம்' - அல்லல்படும் பயனீட்டாளர்..!

சமீபகாலமாக, சமூக வலைதளங்கள் தங்களுடைய பயனீட்டாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவருகிறது. அந்த வகையில், ட்விட்டர் ஒரு புதிய கோமாளித்தனத்தைச் செய்துள்ளது. இன்று அதிகாலை, ட்விட்டர் தனது அதிகாரபூர்வ பயனீட்டாளர் சேவை மையப் பக்கத்தில், ``ட்விட்டர் பாஸ்வேர்டு பின்னணியில் ப்ராசஸ் செய்யும் மாஸ்க்கிங் வசதியில் சிறு 'பக்' ஒன்று உருவாகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். எனினும் யார் மூலம் தொழில்நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.





தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, ட்விட்டரில் செலுத்திய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படியும், அதே பாஸ்வேர்டை வேறு ஏதாவது இடத்தில் உபயோகித்திருந்தால் அதை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்" என ட்வீட் செய்துள்ளது.


இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் தனது பிளாக்கில், ``நாங்கள் பயன்படுத்தும் ஹாஷிங் என்னும் தொழில்நுட்பத்தில் இந்த 'பக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டுக் கோளாரை ட்விட்டரே கண்டுபிடித்துள்ளது. இதனால், பாஸ்வேர்டை மாற்றுவதுடன் லாக் இன் வெரிஃபிகேஷன் ஆப்ஷனையும் பயன்படுத்தும்படி கேட்டுள்ளது."


பல ட்விட்டர் யூஸர்கள், 'தங்களுக்கு பாஸ்வேர்டை மறந்துவிட்டது' என்று கமென்ட் பாக்ஸில் கூறிவருகின்றனர்.

இருக்கிற பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரிய வேலையாக உள்ளது. இதில் ஒவ்வொரு சைட்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு வைக்கச்சொல்வது சற்றே பெரிய காரியம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 3 விற்பனை துவங்கியது

1526050070183.png



ஆப்பிள் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது.

இந்தியாவில் மே 4-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பேஸ் மாடல் விலை ரூ.39,080 முதல் துவங்குகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.





அறிமுக சலுகைகள்:




ஏர்டெல் சார்பில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.5000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.





பல்வேறு நாடுகளில் விற்பனை:




இந்தியா மட்டுமின்றி ஸ்வீடன், டென்மார்க் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 9ஜிபிஎஸ் + செல்லுலார்) ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.



ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:




புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.