Dangerous things in our kitchen - சமையல் அறையில் கொலைகாரர்கள்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
இன்று கண்ணுக்குத் தெரியாத கொலை காரர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் பல வீடுகளின் சமையல் அறையில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பணம் தந்து விரும்பி வாங்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் தரப்படுகின்றது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி மகிழ்கின்றனர். இந்தக் கொலைகாரர்கள் மெதுவாகக் கொல்கின்றனர். இரத்தம் வெளிப் படாமல் கொலை செய்கின்றனர். இந்தக் கொலை காரர்கள் பரவலாகி வருகின்றனர். உயிரில்லாத இந்தக் கொலைகாரர்கள் மனித உயிர்களை மென்மை நிலையில் மாய்க்கின்றனர்.

வசதி படைத்தவர்கள் வீட்டில் இன்று பிளாஸ்டிக் புட்டிகள் அலமாரிகளில் அலங்கார மாக அமர்ந்திருக்கும். அவை, தமக்குள் சில உணவுப் பொருள்களைக் கொண்டிருக்கும். இந்தப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தர வரிசை எண் உள்ளது. இந்த எண் 1 முதல் 7 வரை இருக்கின்றது. இந்த எண்கள் பிளாஸ்டிக் பொருளின் நச்சுத் தன்மையின் அளவைக் குறிக்கின்றன. மூன்று என்ற தரவரிசை எண்ணுக்குரிய பிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கினால் டையாக்சின் ஹைட்ரஜன் குளோரைடு ஆகிய நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருள்கள் வெளிப்படும். இவை உடல் நலத்தைக் கெடுக்கக்கூடியவை. டையாக்சின் புற்று நோயைத் தரக்கூடியது. இது இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கும் தன்மை கொண்டது. பொதுவாகப் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் உடல் நலத்தைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தோசை சுடுவதற்குக் கடாய் எனப்படும் பாத்திரம் பயன்படுகிறது. தற்போது எண்ணெய் தடவப்படாமல் - தோசை மாவு ஒட்டாத - புதுமையான கடாய் கடைகளில் விற்கப்படுகிறது. இது மிகப் பலரால் விரும்பப் படுகிறது. இதனால் எண்ணெய் மிச்சமாகிறது. எண்ணெய் தடவும் நேரம் மிச்சமாகிறது. இந்தக் கடாயின் மேல் வேதியியல் பூச்சு படிந்துள்ளது. அடுப்பின் மேல் வைத்துக் கடாயைச் சூடாக்கும்போது, அந்த வேதியியல் பூச்சு டாக்சின் (நச்சுப்பொருளை) வெளிப்படுத்துகிறது. இது, மனிதனின் கணையம், கல்லீரல் முதலியவற்றைப் பாதிக்கிறது. இது உடல் நலத்தைக் கெடுக்கிறது. மெல்ல மரணத்தை அழைக்கிறது.

பீங்கான் கோப்பைகள் நாகரிகத்தின் சின்னமாகப் போற்றப்படுகின்றன. இவை பள பளப்புடன் காணப்படுகின்றன. பார்ப்பவரின் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. இவற்றின் தயாரிப்பில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரீயக் கலப்பு, முறைப்படி நடை பெறாவிட்டால், உடல் நலம் கெடும் நிலை அமையும். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பையில் சூடான பானம் ஊற்றப் பட்டால் இளகும். காரீயம், மெதுவாகப் பானத்துடன் கலக்கும். குடிப்பவர் உடலைக் கெடுக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாக்கும்.

அலுமினியப் பாத்திரங்கள் முறையான அழுத்தம் பெறாத (Anodized Aluminium) ஆகாத அலுமினியப் பாத்திரம் உடம்பைக் கெடுத்துவிடும். அல்ஹிமர் (Alzhemer) நோய்க்கு வரவேற்பு மாலை போடும்.

வசதியற்றவர்களின் வீட்டில் போதிய இடப்பரப்பு இல்லாதவர் வீட்டில் சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வீற்றிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்து அடி தூரத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். குடிசைக்குள் அல்லது மிகச் சிறிய வீட்டில் இது நடைபெறுவதில்லை. இதனால், முதல் நிலையில் கண்பார்வை கெடுகிறது. உடல் பயிற்சி செய்யமுடியாத நிலை ஏற்படுவதால், உடல் நலமும் பாதிக்கிறது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோ என்று பரபரப்போடு படிக்க தொடங்கினேன். படிக்கப் படிக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள கொலைகாரர்கள் உண்மையான கொலைகாரர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிந்து மிகவும் வியந்து போனேன் மிகவும் நல்ல தகவல். மிக்க நன்றி
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#3
very nice info sree.mann panai than best .thanks for sharing.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
Ithil varuntha thakka ondru....ithai therinthea palar payanpaduthukindranar
Thank you sumitra mam


தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோ என்று பரபரப்போடு படிக்க தொடங்கினேன். படிக்கப் படிக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள கொலைகாரர்கள் உண்மையான கொலைகாரர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிந்து மிகவும் வியந்து போனேன் மிகவும் நல்ல தகவல். மிக்க நன்றி
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
அனைத்தும் நிஜமே
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.