Dangers posed by Tight fitting dresses-ஆடைகளால் வரும் ஆபத்து!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆடைகளால் வரும் ஆபத்து!

அழகா, ஆரோக்கியமா? எது உங்கள் சாய்ஸ் எனக் கேட்டால் பெரும்பான்மை இளம்பெண்களின் தேர்வு அழகு என்பதாகவே இருக்கும். அழகு என்பது தற்காலிகமானது. ஆரோக்கியம் என்பது ஆயுள் வரை அவசியமானது என்பதை உணராதவர்கள் அவர்கள். அழகுக்காகவும் கவர்ச்சிக்காகவும் அவர்கள் பின்பற்றும் பல விஷயங்களும் ஆரோக்கியத்தை ஆட்டம் காணச் செய்பவைஎன்பதையும் அறியாதவர்கள்.

ஒல்லியாக காட்டும் பென்சில்ஃபிட் ஜீன்ஸ், இடுப்பை இறுக்கிப் பிடிக்கும் ஸ்கர்ட், உயரமாக காட்டும் ஹைஹீல்ஸ் செருப்புகள், தோளில் இருந்து இடுப்பு வரை தொங்கும் ஹேண்ட்பேக் என அவர்கள் உபயோகிக்கிற உடைகளும் அணிகலன்களும் அழகானவை மட்டுமல்ல... ஆபத்தானவையும்கூட.

இவற்றை அணிவதால் பெண்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, நரம்பு பாதிப்பு என பல பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது உண்மையா? முதுகுத் தண்டுவடம் மற்றும் வலிகளுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் பாபுநடராஜனிடம் கேட்டோம்.

‘‘பெண்களுக்கு ஃபேஷன் உடைகள் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. இன்றைய மாடர்ன் பெண்களை இந்த உடைகளை போடவேண்டாம் என்று சொல்லவும் முடியாது. இருப்பினும், நாகரிக ஆடைகளை அணிவதால் வரும் பிரச்னைகளை அவர்கள் அறிந்து கொள்வது அவசியம். டைட் ஜீன்ஸ், டைட் டீ ஷர்ட் அணிந்தால் பெண்கள்ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் காணப்படுவார்கள். வயதை குறைத்துக்காட்டவும் இத்தகைய உடைகள் பயன்படுகின்றன.

இறுக்கமானஉடைகள் அணியும் பெண்கள் சரியான முறையில் மூச்சுவிட முடியாது. மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சில பெண்கள் இது மாதிரியான உடைகளை அணியும் போது வயிறு பெரிதாகதெரியக்கூடாது என உள்ளிழுத்துப் பிடித்தபடி இருப்பார்கள். இப்படி செய்வதால் வயிற்று வலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடலின் இயக்க செயல்பாடுகளையும் இறுக்கமான உடைகள் கடுமையாக பாதிக்கும்.

இடுப்பை இறுக்கும் ஸ்கர்ட்டுகள், ஜீன்ஸ் என அனைத்தும் முதுகு தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகுவலி எளிதாக வர வழிவகுக்கின்றன. இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்தில் 8-9 மணி நேரம் அமர்ந்து வேலை பார்த்தால் முதுகு சார்ந்த பிரச்னைகள் பலமடங்கு அதிகமாகும். அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நவநாகரிக உடைகள் ஏற்றவையல்ல. கோடைக்காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதால் சருமம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்.

உடலை இறுக்காத, பருத்தி உடைகளை அணிவதே நல்லது.ஹைஹீல்ஸ் என்பது இன்னொரு லேட்டஸ்ட் டிரெண்ட். இதையும்பெண்கள் விரும்பி அணிகிறார்கள். பொதுவாக ஹைஹீல்ஸ் செருப்புகள் பெண்களின் முதுகில் உள்ள லார்டோஸிஸ் வளைவை அதிகமாக்குகிறது. லார்டோஸிஸ் வளைவு இயற்கையாகவே ஆண்களை விடபெண்களுக்கு அதிகமாக இருக்கும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களுக்குஇன்னும் அதிகமாகிவிடுகிறது.

இதனாலும் முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தம் அதிகமாகி முதுகுவலியை கொண்டுவந்துவிடுகிறது. ஹைஹீல்ஸ் போடுபவர்கள் அதிகபட்சம் ஒரு இஞ்ச் மட்டுமான உயரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு அதிகமான உயரம் போடும் போது கால் மூட்டுகளில் விழும் உடல் எடையானது கால் விரல்களிலும் விழ ஆரம்பிக்கும்.

இதனால் கால் விரல்கள் தடித்து மெல்லட் டோ, கிளா டோ போன்ற விரல் மாறுபாடு பிரச்னைகள் ஏற்படும். அப்படியே ஹைஹீல்ஸ் போட்டாலும் சமமாக இருக்கும் படி போடவேண்டும். குதிகால்களை மட்டும் உயர்த்திக் காட்டுமாறு போடக்கூடாது. முடிந்தவரை ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியாமல் தவிர்ப்பதே பெண்களுக்கு நல்லது.

ஸ்டைலான ஹேண்ட்பேக்குகளை விதவிதமாக தோளில் மாட்டிக்கொண்டு செல்வதும் இன்றைய பெண்களிடம் ஃபேஷனாக உள்ளது. அதில் அளவுக்கதிகமான பொருட்கள் நிரப்பிக்கொண்டு ஒருபக்கமாக நெடுநேரம் மாட்டியிருந்தால் கழுத்து வலி, முதுகு வலி இரண்டும் ஏற்படும்.

ஆகவே சிறிய ஹேண்ட்பேக்குகளில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். இருபக்கமும் தோள்களில் மாட்டிக்கொள்ளும் பேக்குகளை பயன்படுத்தினால் பளுவானது சமமாக பகிர்ந்து விடுவதால் உடல் வலிகளை ஏற்படுத்தாது.’’ எச்சரிக்கிற டாக்டர் கார்த்திக் இது போன்ற வலிகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் பேசுகிறார்...

‘‘உடலை அழகாக காட்டுகிறது என இறுக்கமான டீ ஷர்ட்டுகள், டைட் ஜீன்ஸ்கள், ஸ்கர்ட்டுகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. அணிய விரும்புபவர்கள் மாதம் ஓரிரு முறைஅணியலாம். அடிக்கடி அணியக்கூடாது. எடை அதிகமுள்ள ஹேண்ட்பேக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு இஞ்ச்சுக்கும் அதிக உயரம் உள்ள ஹைஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்தக்கூடாது. முதுகிலோ அல்லது கழுத்திலோ வலி வந்துகுறையாமல் இருந்தால் உடனடியாக வலிக்கான சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

சரிவிகித உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி, தேவையான உடற்பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின்அடியோடு விட்டுவிடுவது நல்லது. புகையிலையில் உள்ள வேதிப்பொருட்கள் முதுகுத் தண்டுவடத்தை சுற்றியுள்ளநுண்ணிய ரத்தக்குழாய்களில் உள்ள ரத்த ஓட்டத்தை தடை செய்து முதுகு வலியை கொண்டுவரும்...’’இடுப்பை இறுக்கும் ஸ்கர்ட்டுகள், ஜீன்ஸ் போன்றவை முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்திமுதுகு வலி எளிதாக வர வழிவகுக்கின்றன.ஒரு இஞ்ச்சுக்கும் அதிக உயரம் உள்ள ஹைஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்தக் கூடாது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.