Dark Circles under eyes - உடல், மன நிலையை எடுத்துக் காட்டும் கர&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல், மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்


பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல்நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.

இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம்.

அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும்.

இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும்போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.

சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

புரதம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.
சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து TV பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், பதட்டமும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.சிலருக்கு இரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது.

இரும்புச் சத்துள்ள உணவுகளையும், இரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு இரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும்.

கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்.
 
Last edited:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: உடல், மன நிலையை எடுத்துக் காட்டும் கருவள&a

Nice sharing, friend.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,178
Likes
83,730
Location
Bangalore
#3
Re: உடல், மன நிலையை எடுத்துக் காட்டும் கருவள&a

பகிர்வுக்கு மிக்க நன்றி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.