Days which has highest chance of getting pregnant - கருத்தரிக்கும் நாள்கள்... கண்டறி&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,551
Location
chennai
#1
கருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி?

ஹேமாவதி, மகப்பேறு மருத்துவர்``

வ்வொரு மாதமும், கருத்தரிக்க உகந்த நாள்கள் என்று சில நாள்கள் இருக்கின்றன. அந்த நாள்களில் இல்லற வாழ்வில் இணைந்தால், கருத்தரித்தலின் சாத்தியம் அதிகமாகும்'' என்ற மருத்துவத் தகவலைச் சொல்லும் மகப்பேறு மருத்துவர் ஹேமாவதி, அதற்கான ஆலோசனைகளைத் தந்தார்.

இவைதான் அந்த நாள்கள்!


இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாள்கள், 28 - 30 என இருக்கும் சீரான சுழற்சி உள்ள பெண்களுக்கு, கருத்தரிக்க உகந்த நாள்களை இப்படிக் கணக்கிடலாம். மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளை ‘நாள் 1' என்று கொள்ள வேண்டும். அந்த வரிசையில் 12-வது நாளிலிருந்து 18-வது நாள்வரையிலான தினங்கள், கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளவை.


என்ன நடக்கும் அந்த நாள்களில்?


பெண்களின் சினைப்பையில் உருவாகும் ஃபாலிக்கிளின் உள்ளேதான், கருமுட்டை இருக்கும். சாதாரண நாள்களில் ஏழு அல்லது எட்டு மி.மீ அளவில் இந்த ஃபாலிக்கிளின் இருக்கும். ஆனால், மாதவிடாய் ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 18-வது நாள் வரை, இந்த ஃபாலிக்கிளின் வளர்ச்சி 20, 21 மி.மீ அளவுக்குப் பெரிதாகி, அது உடைந்து, அதிலிருந்து செயல்திறன்மிக்க கருமுட்டை வெளியில் வந்து கருக்குழாய் வழியாகப் பயணிக்கும். இந்தக் கருமுட்டையின் செயல்திறன் 12 மணிநேரம் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். இந்தக் காலகட்டத்தைதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம் என்கிறோம். இந்நேரத்தில் தாம்பத்யத்தில் இணைந்தால், கருவுருதல் சாத்தியமாகிவிடும்.
சீரற்ற சுழற்சி உள்ளவர்களுக்கு!

சிலருக்கு, ஒவ்வொரு மாதமும் 20, 22, 25 நாள்கள் இடைவெளியிலேயே மாதவிடாய் நிகழும். அவர்கள் மாதவிலக்கான முதல் நாளிலிருந்து 8, 9 நாள்களில் தாம்பத்யத்தில் இணைந்தால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். சிலருக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை போன்ற முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அவர்கள் சிறுநீர்ப் பரிசோதனை மூலமாக இதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனையில் LH என்கிற ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும் நாளை, கருத்தரிக்கச் சிறந்த நாள் என்று முடிவுசெய்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அதற்கான பரிசோதனை கிட் (kit) மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இது தவிர, மருத்துவர்கள் ஃபாலிக்குலர் ஸ்டடி டிராக்கிங் (Follicular Study Tracking) என்கிற பரிசோதனை மூலமாகவும், கருத்தரிக்க சாத்தியமுள்ள நாள்களைக் கண்டறிந்து சொல்வார்கள்.

கவனிக்கவேண்டிய உடல் மாற்றங்கள்!

கருத்தரிக்க உகந்த நாள்களில் உடல் சற்றுக் கதகதப்பாகக் காணப்படும். அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்றில் வலி மற்றும் அசௌகர்யம் போன்றவை தென்படும். சிலருக்கு மிகக் குறைந்த அளவில் ஸ்பாட்டிங் என்று சொல்லப்படுகிற உதிரப்போக்கும் இருக்கும். வெள்ளைப்படுதலில்கூட மாற்றங்கள் இருக்கும். தண்ணீர்போல, நீர்த்துப்போய் வெள்ளைப்படும். அதை எடுத்துக் கட்டைவிரலில் அழுத்திப்பார்த்தால் நூல்போல இழுத்துக்கொண்டுவரும். இந்த அறிகுறிகள், உங்களது உடல் கருவுருதலுக்குத் தயாராகிவிட்டது என்பதை உணர்த்துபவை. நோய்க்கான அறிகுறிகள் என நினைக்க வேண்டாம்.

இப்படியாக, உடல் அறிவியலின் துணையுடன் குவா குவா கேட்கவைக்கலாம்!"

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.