Deepavali - தீபாவளித் திருநாள்

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#1

இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். சூரியன் ஐப்பசி மாதம் துலாராசியில் நுழைகிறார். அப்போது திரயோதசி இரவு சதுர்தசி அதிகாலையில் தீபாவளித் திருநாள் கொண்டாடுகிறோம். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகளு‌க்கு கொ‌ண்டா‌ட்ட‌ம்தா‌ன். ப‌ட்டாசு வெடி‌த்து ஆன‌ந்த கூ‌த்தாடு‌ம் அவ‌ர்க‌‌ளி‌ன் ம‌கி‌ழ்‌‌ச்‌‌சி‌க்கு எ‌ல்லையே ‌கிடையாது. பெ‌‌ரியவ‌ர்க‌ள் வரை ப‌ட்டாசு வெடி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடைவா‌ர்க‌ள்.

கொண்டாடும் முறை:

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய் குளியல் செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தி விஷ்ணுவையும், லஷ்மி தேவியையும், குபேரனையும் வழிபடுவர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். எண்ணெய் பலகாரங்களும், இனிப்புகளும் உண்பதால் செரிமானத்திற்காக தீபாவளி லேகியம் உண்பது மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வர். ஏனெனில், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடையில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத் தான் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர் நிலைகளிலும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம்.

இவ்வாறு பல மகிழ்ச்சிகரமான விஷயங்களை உள்ளடக்கிய தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? பல காரணங்கள் விடைகளாகக் கூறப்படுகின்றன.

 • மேற்கு வங்காளத்தில் காளியை வழிபடுவதற்கான நாளாக கொண்டாடுகின்றனர்.
 • இலங்கை யுத்தத்தில் ராவணனை வென்று ராமபிரான் அயோத்தியா திரும்பிய நாளை கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.
 • பதினான்கு வருடங்கள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், நாடு திரும்பிய நாளை, தீபங்கள் ஏற்றி மகிழ்ந்த நாளை, தீபாவளி எனச் சொல்கிறார்கள்.
 • மகாபலியின் கர்வத்தை அடக்கி, மூன்று உலகங்களையும் வாமன அவதாரம் எடுத்து அளந்து அந்த அரசனின் பிடியிலிருந்து தேவர்களைக் காத்த நாளே தீபாவளியாகச் சொல்கிறார்கள்.
 • ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.
 • சீக்கியர்களின் மத குருவான குருநானக் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
 • ஜைனர்கள் தங்கள் மதத் தலைவரான மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளாகத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
 • ராஜபுதன வீரர்கள் இந்நாளை ஸ்ரீராமனை வழிபடும் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
 • மகாராஷ்டிரத்தில் நரக சதுர்த்தி என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
 • உத்திரப்பிரதேசத்தில் அன்னபூரணியை வணங்கி, புதுக்கணக்கு தொடங்குவர். மூன்று நாள் தீபாவளியைக் கொண்டாடுவர்.
 • பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய மூதேவி, ஸ்ரீதேவியில் மூதேவியை உத்தாலகர் என்ற முனிவர் மணந்து, ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு மணந்த நாளே தீபாவளி எனச் சொல்கிறார்கள்.
 • தென்னிந்தியாவில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து இப்பூலோக மக்களை காப்பாற்றிய நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

புராண வரலாறு எதுவானாலும், தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited:

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,222
Likes
17,019
Location
chennai
#8
Marudhani ittukanum Kaa.. Amma va Parichu arachu thara Soliruken.. ;)[/QUOTE]

Nee dhool killappuda karti, enjoy,, happy deepavali dear.
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,222
Likes
17,019
Location
chennai
#9
[h=1]தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா?[/h]


சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல. தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி.

வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி. அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல. கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள். நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.