Details about Abortions - கருச்சிதைவு பற்றிய விவரங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க[/h][h=3]இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...[/h]
அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன.

ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.
contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

தொடர்ச்சி

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?

ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]கருக்கலைப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்[/h]இந்தியாவில் ஆயிரம் கர்ப்பிணிகளில் பதின்மூன்று பெண்களுக்குஅபோர்ஷன் ஆகிவிடுகிறது. இந்த பதின்மூன்றில் ஐந்து பெண்களுக்கு தானாகவே அபோர்ஷன் ஆகிறது. ஆனால், மீதி எட்டுப் பெண்கள் தாங்களாகவே முன் வந்து அபோர்ஷன் செய்கிறார்கள். இப்படி அபோர்ஷன் செய்ய முன் வரும் பெண்களில் அதிக மானோர் 25 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் பலர் கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள் என்பதையும் யு.கே.விலுள்ள University of Aberdeen நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

இதுபோன்ற பல ஆய்வுகளில் திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்களே அதிகமாக அபோர்ஷன் செய்ய முன் வருகிறார்கள் என்ற ஆய்வுத் தகவல்கள் அதிர்ச்சி யூட்டுகின்றன. அப்படி அடிக் கடி அபோஷன்கள் செய்வதால் இளம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
“இன்றைய வாழ்க்கைச் சூழலில் அபோர்ஷன் என்று சொல்லக்கூடிய கருக்கலைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு பெண்ணுக்கு தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதை மருத்துவ சிகிச்சைகளின் மூலம் தீர்த்து விடலாம். ஆனால், தானாகவே முன் வந்து கருவை கலைக்கச் செய்வது கொலை செய்வதற்குச் சமம். மருத்துவ உலகில் பலவிதமான தடுப்பு முறைகள் வந்துவிட்டாலும் கூட திருமணமான பெண்களைவிட திருமணமாகாத இளம்பெண்கள் செய்யும் அபோர்ஷன்கள் மிக மிக வேதனைக்குரியது; வெட்கக் கேடானதும் கூட”

பெண்களுக்குத் தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதற்கு என்ன காரணம்?

“சில காரணங்களைக் கூறலாம். குறிப்பாக, மரபணு பிரச்சனைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாடு, தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாயின் உடம்பில் நோய்த் தாக்குதல், தாயின் உடம்பில் திடீர் கிருமித் தாக்குதல் ஆகிய காரணங்களால் அபோர்ஷன் ஆகிவிடுவதோடு அளவுக்கு அதிகமான ட்ராவல், அதிக எடை, பலம் குறைந்திருப்பது, அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் கூட கர்ப்பம் தானாகவே கலையக் கூடிய வாய்ப்பு உள்ளது.”

இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யவேண்டும்?
“மரபணு பிரச்சினைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாட்டை மரபணுச் சோதனையின் மூலம் கண்டு பிடித்து அதற்கேற்ற சிகிச்சையுடன் குழந்தைப் பேற்றை கவனமாக எதிர் நோக்க வேண்டும். அதனால்தான் இரத்த சொந்தத்தில் (அக்காவின் மகள், மாமனின் மகள், இரத்தம் சார் ந்த உறவினர்) திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அதே போல் கணவனுக்கு RH பாஸிட்டிவ் மனைவிக்கு RH நெகடிவ் என்ற இரத்த குரூப் இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதை முன் கூட்டியே அறிந்து ஆன்டி-D போன்ற மருந்துகள், ஊசிகள் கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம். 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாகும்போது கூட கரு கலைந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் மிகக் குறைந்த வயதும் இல்லாமல் அதிக வயதும் ஆகாமல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது.
கர்ப்பப்பை பிரச்சினைகள் என்று எடுத்துக் கொண்டால்… கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் சிறியதாக காணப்படுவது, கர்ப் பப்பை பிளவுபட்டு அல்லது நாக்கு மாதிரி சவ்வு வளர்ச்சி அடைந்து தொ ங்கிக் கொண்டிருப்பது, ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை தளர்ந்து காணப்படுவது, காது போன்று இரு பக்கமும் இறக்கை விரித்தாற்போல் காணப்படுவது என எந்த மாதிரி குறைபாடு என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற் போல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல்நிலை பாதிப்புகள் என்பது பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை வியாதி, கர்ப்பகால சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்தசோகை, தைராய்டு மற்றும் சிறுநீரக வியாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். கர்ப்பகாலத்தில் சரியான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை வியாதியையும், இரத்த அழுத்தத்தையும் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவு மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு கொடிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் இரத்த சோகையை விரட்ட வேண்டும். சிறுநீரக வியாதிகளுக்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.
“அக்யூட் இன்ஃபெக்ஷன்ஸ்” எனப்படும் திடீர் தொற்று வியாதிகளில் ஏற்படும் தாக்குதல். அதாவது… வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அம்மைத் தொற்று. இதற்கும் மருத்துவரின் உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவை எல்லாவற்றையும் மீறி தானாகவே அபோர்ஷன் ஆகிவிடுவதை நினைத்து கவலைப்படவேண்டாம். கடவுளே நன்மை செய்வதற்காக அந்தக் கருவை கலைத்து விட்டார் என்று மன திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மேற்கண்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தாயின் கருவை எடுத்து பரிசோ தனை செய்து பார்த்த போது, அது ஏதோ ஒரு குறைபாடு கொண்ட கருவாக இருந்திருக்கிறது. ஒருவேளை அந்தக் கரு குழந்தையாக பிறந்தாலும் ஏதோ ஒரு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சில நல்ல குழந்தைகளும் ஆகிவிடுவதும் உண்டு. எனவே, அபோர்ஷன் ஆகாத அளவுக்கு முன் கூட்டியே பரிசோதனைகள் செய்து மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி வாழ்வது உத்தமம்.”

சரி, தானாகவே முன் வந்து கருவை கலைத்துக் கொள்ளும் முறை பற்றி கூறுங்களேன்?
“நாம் இருவர் நமக்கு இருவர்… நாம் இருவர் நமக்கொருவர் என்ற நிலைகள்கூட மாறி நாம் இருவரும் குழந்தை நமக்கு ஏன்? என்கிற அளவுக்கு மாறி விட்ட காலம். இதற்கு அதிநவீன வாழ்க்கை, பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வு எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் காரண மெல்லாம் திருமணமான தம்பதிகள் சம்பந் தப்பட்ட காரணங்கள். நாகரீக உலகத்துக்குள் புகுந்து பண்பாட்டைச் சீரழிக்கும் வகையில் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறையற்ற வாழ்விலும் பல கொலைப் பிரசவங்கள் (அபோஷன்) அரங்கேறிக் கொண்டிருப்பது மற்றொரு காரணம்.
contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

தொடர்ச்சி


அபோஷன் என்கிற அபாய கட்டத்திற்கு செல்லாமல் இருக்க தற்காப்பு முறை கள் என்னென்ன?

“ஆணாக இருந்தால் ஆணுறை அணிந்து கொண்டோ, பெண் பெண்ணுறை அணிந்தோ செக்ஸில் ஈடுபடலாம். கணவன் மனைவியாக இருந்தால் முதல் குழந்தை பிறந்தவுடன் காப்பர்-டி அணிந்து தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். அதுவும், நார்மல் டெலிவரி என்றால் பத்து நாட்கள் கழித்தும், சிசேரியன் டெலிவரி என்றால் மூன்று மாதம் கழித்தும் காப்பர்-டி அணிவது நல்லது. திரும்பவும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டு மெனில் காப்பர்-டியை எடுத்துவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். காப்பர்-டி அணிந்து கொள்ளாத பெண்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
பீரியட்ஸ்க்கு (மாதவிடாய்) பிறகு முதல் ஏழுநாட்களும் கடைசி ஏழு நாட்களும் கரு உருவாகும் வாய்ப்புக் குறைவு. எனவேதான் கரு உருவாகும் வாய்ப்பு அதிக முள்ள அந்த இடைப்பட்ட (21 நாட்களில்) காலத்தில் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவே கிராமப்புற பெண்களாக இருந்தால் பீரியட் ஸீக்குப் பிறகு முப்பது நாட்களுக்கும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கும் கார ணம் உண்டு. கணக்கு வைத் துக்கொண்டு சரியான நாளில் சாப்பிடமாட்டார்கள் என்பதால் முதல் ஏழு மாத்திரை களிலும் கடைசி ஏழு மாத்திரைகளிலும் கருத்தடை மருந்துள்ள மாத்திரைக்குப் பதிலாக சாதாரண சத்துமாத்திரைகள் இருக்கும்.
இந்தக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் “அவசரநிலை கருத்தடை மாத்திரை” (Emergency Contrace- ptive)களை செக்ஸ் வைத்துக் கொண்ட 24 மணிநேரத்துக்குள் போட்டுக் கொண்டால் கரு உருவாவதைத் தடுத்துவிடலாம். இல்லையெனில், இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தப்படும் இன்ஜக் டபுள் கருத்தடை மருந்து வந்து விட்டது. அதை உடம்பினுள் செலுத்திக் கொண்டால் அதிலுள்ள கருத்தடை மருந்துகள் இரத்தத்தில் கலந்து கருத்தரிப்பை தடுக்கும்.
நிரந்தரமாக கருத்தரிப்பு ஏற்படாமல் இருக்க… ஆண்களுக்கு “வேஜக்டமி”. பெண்க ளுக்கு “ட்யூபக்டமி” என குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை செய்து கொள்வது சிறந்த வழி.
இதில் பெண்களைவிட ஆண்களுக்குச் செய்யும் வேஜக்டமி ஆபரேஷன் மிகமிக சுலபமானது. ஆனாலும், இன்றைய காலகட்டத்தில் அந்த ஆபரேஷனை செய்து கொள்வதால் “ஆண்” என்ற அந்தஸ்தே போய்விடும் என்று ஆண்கள் அலறுகிறார்கள். அதற்கு திரைப்படங்களில் இதுபற்றி சித்திரிக்கப்படும் நகைச்சுவைக் கா ட்சிகளும் அடங்கும். ஆண் கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்வதால் எந்த விதமான பிரச்னையும் இல்லை. வழக்கம்போல் மனைவியோடு இல்லற வாழ்க்கையை இன்பமாக ஆக்கிக் கொள்ளலாம். இப்படி பல வழிகள் இருந்தும் இதையெல்லாம் முறையாக கடைப் பிடிக்காமல் அபோஷன் என்ற நிலைக்கு திருமணமான பெண்களைவிட திருமணமாகாத இளம் பெண்கள் அபோஷன் அபாயத்துக்குத் தள்ளப்படுவதுதான் வேத னையிலும் வேதனை.”

இப்படி அடிக்கடி அபோஷன் செய்வதால் பெண்கள் பாதிப் புகளை சந்திக்க வேண்டி வருமா?
“அடிக்கடி அபோஷன் செய்துகொள்ளும் பெண்கள் தொற்று நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும். சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்படுவதோடு வலியும் அதிகரிக்கும். சில நேரங்களில் ஃபெலோஃபியின் ட்யூப்களில் அடைப்பு ஏற்பட்டு வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். அதனால்தான் முதல் குழந்தையை அபோஷன் செய்ய வேண்டாம் என்று மருத் துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு அபோஷன் என்கிற நிலைக்குப் போகலாம்.
contd.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

தற்காப்பு முறைகள் என்று சொல்லக்கூடிய கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், கருத்தடைசாதனங்களால் பாதிப்புகள் இல் லையா?

“நிச்சயமாக பாதிப்புகள் உண்டு. இன்றைய அதிநவீன மருத்துவ உலகத்தில், உருவான கருவைக் கரைக்கும் மாத்திரைகள் கூட வந்துவிட்டன. இவையெல்லாம் பாதிப்புகளிலி ருந்து மீள்வதற்குத்தான். நல்லவற்றிற்காக பயன்படுத்தப்படும் இவை பள்ளிக் கல்லூரி மாணவிகளும் திருமணமாகாத இளம்பெண்களும் தவறாக பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருவதுதான் அதிர்ச் சிக்குரிய விஷயம். இயற்கைக்கு மாறாக செய்யக் கூடிய எந்த ஒரு விஷயமும் ஆபத்துதான். அதுவும் அளவுக்கு மீறினால் அதிகப்படியான ஆபத்துகள்.
கருத்தடை மாத்திரைகளில் அதிகமான ஹார்மோன்கள் இருப்பதால் அதை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன் அதிகரிக்கும். உடலில் நீர் கோத்துக் கொள்ளும். அதிக படபடப்பு, மனநிலை பாதிப்புகள், இடைப்பட்ட உதிரப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு கேன்சர் வரும் அபாயமும் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
காப்பர்-டியை பயன்படுத்துவதால் அதிகப்படியான உதிரப் போக்கு, வலி, கிருமித் தொற்றுகள் ஆகியவை ஏற்பட்டு அவதிப்பட வேண்டி யிருக்கும். இன்ஜக்டபுள் ஊசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு எடை அதிகரித்து விடும். பயம், படபடப்பு, டென்ஷன், எப்போதும் பதட்ட நிலையிலேயே காணப்படுவார்கள். அதுவும் திருமண மாகாத பெண்ணாக இருந்தால் இந்த பாதிப்புகளோடு சேர்ந்து சமூக ரீதியாகவும் மனரீதியாகவும் பிரச்சினைகள் உண் டாகும்.”

அபோஷன் செய்வதிலும் பாதிப்பு, தற்காப்பு முறைகளிலும் ஆபத்து என்றால் வேறு என்ன தான் செய்வது?
“ஒன்றும் செய்யாமல் இருந்தாலே எந்த பாதிப்பும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தது போல திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கருத்தரிப்பு நல்லது. இது பண்பாடு மட்டுமல்ல; இளைய சமுதாயங்களின் உடல் நலத்தில் கொண்டுள்ள அக்கறையும் கூட. சிற்றின்பம் முக்கியம்தான். அதை திருமணத்துக்குப் பிறகு முறையாக வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவின்மூலம் பேரின்பமாக்கிக் கொள்ளலாம். ஆணாதிக்கத்தை எதிர்க்க வரம்பு மீறுவது நாகரிகம் அல்ல. கற்போடு இருப்பது நல்லது. கருவை அழித்து கலாச்சாரத்தை அபோஷன் செய்யவேண்டாம். இதைத் தான் “பெண் சக்தி” இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு கல்லூரியிலும் சென்று ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்[/h]கருவுற்ற பெண் முதல் 3 மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கரு வளராமல் அழிந்து விடும். கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் ரத்த போக்கு ஏற்படும். நஞ்சு கீழே இறங்கி இருக்க கூடாது.

இது போன்ற பிரச்சனைகள் துவக்க காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் கை கால்கள் ஊனத்துடன் குழந்தை பிறக்கும். மூளை வளர்ச்சி குன்றியதாக இருக்கும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களை திருமணம் செய்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 30 வயதுக்கு மேல் கருவுற்றால் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இப்பிரச்சனையை கவனிக்காவிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

இது போன்ற பிரச்சனைகளை என்டி ஸ்கேன் மூலம் அறிந்து அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளித்தால் தாய்- சேய் இருவரையும் காப்பாற்றி விடலாம். கருவுற்ற 12 வாரங்களில் கருப்பையில் இருக்கும் குழந்தை மூளைவளர்ச்சி அடைந்து விடும்.

கருவுற்ற பெண் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்து குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். முதல் மூன்று மாதங்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பஸ், ஆட்டோ, கார் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள கூடாது.

பயணம் செய்வதாக இருந்தால் ரெயிலில் மேற்கொள்ள வேண்டும். 20-30வயதுக்குள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பருவ காலத்தில் தான் பிரச்சனைகள் என்பது மிகவும் குறைவாக இருக்கும். பிறக்கும் குழந்தையும் நல்ல ஹெல்த்தாக இருக்கும்.

19 வயதுக்கு கீழும், 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் முடிந்த தம்பதிகள் குழந்தை பிறப்பதை தள்ளிப்போடக்கூடாது. லேட்டாக குழந்தை பெற்று கொள்ளலாம் என்று பலர் நினைப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும்.

22 வயதில் இருந்து 29 வயதுக்குள் இரு குழந்தைகளை பெற்றால் அந்த குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும். 4 மாதம் முதல் 7 மாதம் வரை கருப்பையில் உள்ள கரு முழு வளர்ச்சி பெற்று விடும். 22- 24 வாரங்களில் இருதயம் வளர்ச்சி பெற்று குழந்தையின் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
இந்த காலத்தில் தான் பிரசர், சுகர் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். மாதம் ஒரு முறை உரிய மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு இரு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். 5வது மாதத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை 500 கிராம் இருக்கும்.
8வது மாதத்தில் தான் குழந்தை முழு வளர்ச்சி பெற்று இருக்கும். 7வது மாதத்தில் இருந்து பிரசவமாகும் வரை எந்தவிதமான பயணத்தையும் மேற்கொள்ள கூடாது. கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி தேவைப்பட்டால் மட்டுமே பயிற்சி செய்யலாம்.

மற்றபடி நடைபயிற்சி தான் சிறந்தது. நஞ்சு கொடி சுற்றிஇருந்தால், துடிப்பு குறைந்து காணப்பட்டால் சுகபிரசவம் ஏற்படுவதில் பிரச்சனை உருவாகும். இதனை சிசேரியன் ஆப்ரேசன் மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும். 7வது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்வது நல்லது.

பிறக்கும் குழந்தையின் சாதாரண எடை என்பது 2.8 முதல் 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்தவித பாதிப்பும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் செக்கப் செய்து கொள்ளலாம்.

கருவுற்ற பெண்கள் உப்பு, இனிப்பு, ஊறுகாய் உட்கொள்ள கூடாது. இனிப்பு அதிகமாக உட்கொண்டால் எடை அதிகரிக்கும். இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி உண்டானால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 4வது மாதத்தில் இருந்து இருந்து ரத்தம் விரித்தியாக்கும் மாத்திரை, அயன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் தலா ஒரு மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். அயன் மாத்திரைகளை உட்கொண்டால் குழந்தை கறுப்பு நிறத்தில் பிறக்கும் என்பது தவறானது. கரு உருவாகி 3 மாத்திற்கு மேல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை இவற்றினை உட்கொள்ளலாம். தாய் பால் நன்றாக சுரக்கும்.

குழந்தையின் எலும்பு வளர்ச்சியும் நன்றாக இருக்கும். மீன், முட்டை, சோயா பீன்ஸ், சிக்கன் போன்ற புரத சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளலாம். ஜூஸ் வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உயரம் குறைவான பெண், இடுப்பு அளவு மிகவும் குறுகியதாக இருந்தால் சுகபிரசவம் ஏற்படுவதில் சிரமம் இருக்கும். ஆண், பெண் குழந்தை ஆகியவை உரிய காலத்தில் தான் பிரசவமாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]நம்மை அறியாமல் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் செயல்கள்…[/h]கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கருத்தரித்து விட்டால், வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அவையே அளவுக்கு அதிகமாக போனால், அதுவே கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். யாரும் இந்த உலகில் கருச்சிதைவு ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படமாட்டார்கள். இருப்பினும் சிறு கவனக்குறைவினால், இத்தகைய கருச்சிதைவு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் தான், இத்தகைய கருச்சிதைவு ஏற்படும். இப்போது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் சில செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

தவறான உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் உடற்பயிற்சியில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது அனைத்து உடற்பயிற்சிகளுமே பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் சில உடற்பயிற்சிகள், வயிற்றை இறுக்கமடையச் செய்யும். எனவே எந்த ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்வது நல்லது.

மருந்து மாத்திரைகள்
மருந்து பொருட்களான ஆஸ்பிரின் போன்றவற்றை கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் எந்த வகையான ஸ்டெராய்டுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. அதிலும் இதனை தேவையில்லாமல் அடிக்கடி எடுத்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும்.

புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால்
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராகவோ அல்லது ஆல்கஹால் பருகினாலோ, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் ஆல்கஹாலில் உள்ள பொருள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, நஞ்சுக்கொடிக்கு ஆபத்தை ஏற்படுத்தி, கருச்சிதைவை எளிதாக்கிவிடும்.

மன அழுத்தம்
மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் இறுக்கத்தை உருவாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஆபத்தான விளையாட்டுக்கள்
கர்ப்பமாக இருக்கும் போது வேகமாக சைக்கிள் ஓட்டுவது, குதிரை பந்தயம், ஸ்கேட்டிங், தண்ணீர் பூங்காக்களில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

போதிய ஓய்வு இல்லாமை
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கமும், 2 மணிநேர ஓய்வும் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை உடலுக்கு போதிய ஓய்வு இல்லாவிட்டால், அவை உடலுக்கு தேவையான பலத்தைக் கொடுக்காமல், தடுமாற்றத்தை உண்டாக்கிவிடும்.

பயணம்
கர்ப்பமாக இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். ஏனெனில் சிறிது தடுமாறினாலும், கீழே வழுக்கி விட நேர்ந்து, இறுதியில் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

உணவுப்பழக்கம்

உணவுகளை சாப்பிடும் போது பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழங்களை சாப்பிட வேண்டும். ஏனெனில் அழுகிய பழங்களையோ அல்லது அசுத்தமான பழங்களையோ சாப்பிட்டாலும், அவை கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா ?[/h][h=1]கர்ப்பமாவதைத் தவிர்க்க அல்லது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உலகெங்கும் 7 கோடி பெண்கள் மாத்திரைகள் உபயோகிக்கிறார்கள். கருத்தடை மாத்திரையைப் பற்றி அனேக பெண்களுக்கும் குழப்பங்கள் உண்டு. அது பாதுகாப்பானதா, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா, நிறுத்திய பிறகு குழந்தை பிறக்குமா? என ஆயிரம் கேள்விகள்... கருத்தடை மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதை முதலில் தெரிந்து கொண்டாலே இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘உங்கள் கருப்பையில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை போலவே செயற்கை (சிந்தெடிக்) ஹார்மோன்களால் ஆனது மாத்திரை. கருப்பை வேலை செய்வது போல எண்ணி, உங்கள் உடலை ஏமாறச் செய்கிறது மாத்திரை. ஆகவே அவை ஒரு முட்டையை உண்டாக்கவில்லையானால் நீங்கள் கர்ப்பமுற முடியாது. கருப்பை வாயில் உண்டாகும் கொழகொழவென்ற திரவத்தையும் மாற்றுகிறது மாத்திரை.

இந்த கொழகொழ திரவத்தின் வழியே விந்து, கருப்பையை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும். அதை நிறுத்த முடிவு செய்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை உண்டாகும். மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான மாத்திரைகள் 21 நாட்கள் டோஸ் திட்ட முறையாகும்.

முதல் தடவை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, சிலருக்கு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளன்று முதல் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தத் திட்ட முறையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். பேக்கேஜ் மீது கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி, மாத்திரைகளை தினமும் அதே நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடுத்தடுத்த பேக்கும், 7 நாட்கள் மாத்திரை இன்றி விடப்பட்டு 29-ம் நாளில் ஆரம்பிக்க வேண்டும். கடைசி மாத்திரைக்கு 2-3 நாள்களுக்குப் பிறகு மாதவிடாய் தொடங்குகிறது. அடுத்த பேக் ஆரம்பிக்கும் முன், மாதவிடாய் முடிந்திருக்காது.

முதலில் மாத்திரை சாப்பிடத் தொடங்கும் போது உங்களுக்கு ஒரு சிறிது ரத்தக் கசிவு ஏற்படலாம். அது உங்களுக்கு வழக்கமாக மாதவிடாய் வருவது போன்றதே. தலைவலி, வாந்தி, குமட்டல், கான்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொள்வதில் சிரமம் போன்ற வேறு சில ஆரம்ப சிறு பக்க விளைவுகளும் இருக்கலாம். மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒருநாளும் தவறவிட வேண்டாம்.

முதல் 3 மாதங்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் மறைந்து விடுகின்றன. மறையாவிட்டால் மருத்துவரைப் பார்க்கலாம். சிறந்த முறையில் வேலை செய்யும் மற்றொரு மாத்திரையை அவர் உங்களுக்கு மாற்றித் தருவார். பக்க விளைவுகளுக்குப் பயந்து கொண்டு மாத்திரைகளை நிறுத்திவிட வேண்டாம்.

மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தவறினால் நீங்கள் கர்ப்பமுறக் கூடும். தினமும் அதே நேரத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மாத்திரை வேலை செய்யாமல் போகலாம். நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த தினத்தை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளத் தவறினால், எப்போதும் கைவசம் ஆணுறை மாதிரியான வேறு கருத்தடை சாதனங்களை வைத்திருப்பது பாதுகாப்பானது...’’ என்கிறார்.
[/h]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.