Details about Menstrual problems, Sanitary napkins and others

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]பெண்களின் பெரும்பாடு[/h]


பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள்.

ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.
பல விதமாக சொல்லலாம்

மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் சாணிடரி பேடுகளை நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு மெனோராகியா எனலாம்.

டைஸ்மெனோரியா
இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில் அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் என்டோமெட்ரியாசிஸ் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல், கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.

மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா என்பார்கள்.

மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது பாலி மெனோரியா எனப்படும்.
அசாதரமான, காரணங்களன்றி, உதிரப்போக்கு ஏற்படுவதை டையஸ்ஃபங்சனல்
யுட்ரின் பிளிடிங் என்பார்கள். இதில் மேற்கண்ட நான்கு பிரிவுகளும் அடங்கும்.

முதலில் இந்த கோளாறுக்களான காரணங்களை பார்ப்போம்
ஹார்மோன்கள் கோளாறு மாதவிலக்கை கன்ட்ரோல் செய்யும் ஹார்மோன் மாறுபடுதல். பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த அதிக அளவான எஸ்ட்ரோஜனை சீர் செய்வது ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன். இந்த ஹார்மோன் கோளாறுகளால் பெண்ணின் சினை முட்டை வெளிவருவது நின்று விடும். இதனால் கர்பப் பையின் சுவர்கள் தடித்து விடும். கர்பப் பையின் சுவர்கள் என்டோமெட்ரியம் என்பார்கள். இந்த வீக்கத்தை என்டோமெட்ரியல் ஹைபர்பிளாசியா என்பார்கள். கர்பப்பை சுவர்களின் லைனிங் தொடர்ந்து, அடிக்கடி உதிர்ந்து விடும். இதனால் ரத்தப் போக்கு ஏற்படும்.

கர்பப்பையில் ஃபைராய்ட் வீக்கங்கள் இருந்தாலும் அதிக உதிர போக்கு நேரிட்டாலும். இந்த ஃபைராய்டுகள் நார்களினாலும், தசையினாலும் ஆனவை. முக்கால்வாசி உதிரப்போக்கு கோளாறுகளுக்கு பைப்ராய்ட் தான் காரணம். இதில் ஏற்படும் புதிய சதை வளர்ச்சி புற்று நோயில்லாத வீக்கம். இந்த பைப்ராய்ட் கர்பப் பையில் உண்டாகும் காரணங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஈஸ்ட்ரோஜன் இந்த தசை நார்கட்டிகளை ஊக்குவிக்குகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் பெரிதாகி, மெனோபாஸ் வந்தவுடன் சுருங்கி விடும். இலை சின்னதாகவும் இருக்கும், பெரியதாகவும் மாறும். கர்பப்பையில் சுவற்றில் குடியிருக்கும் பைப்ராய்ட் ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். இவைகளிருந்தால் உதிரப்போக்கை உண்டாக்கும். மலக்குடலை அழுத்தி வேதனையை உண்டாக்கும். பெரிய கட்டிகள், வலி, அழுத்தம் உண்டாகலாம். பைப்ராய்ட்ஸ் மூத்திரப்பையை அழுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்யும்.
கர்பப்பை கழுத்தில் பாலிப்ஸ் சீதமும் சளியும் உள்ள இடத்திலிருந்து தோன்றும் வளர்ச்சி. இவை சிறியவை – கர்பப்பையின் கழுத்தில் ஏற்படும் இந்த பாலிப்ஸ் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம் தெரியவில்லை. தொற்றுநோய் கர்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் அடைபடுதல், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோளாறு இவை காரணமாக இருக்கலாம். இந்த கட்டினை, எளிமையான அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் நீக்கலாம்.

கர்பப்பை சுவற்றில் பாலிப்ஸ் கர்பப்பையின் சுவற்றில் உள்ள ஈரமான, சளியுள்ள லைனிங். இந்த லைனிங்கிலிருந்து நீட்டிக் கொண்டு வரும் பாலிப்ஸ் உண்டாக ஹார்மோன் கோளாறுகளே காரணமாக சொல்லலாம்.
இடுப்பெலும்பு கட்டில் தோன்றும் தொற்றுநோய்கள் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கலாம். கர்பப்பையின் கழுத்தையும் பாதிக்கலாம். இந்த இடுப்பு எலும்பு தொற்று, கர்பப்பை கழுத்து, கர்பப்பை, ஃபலோப்பியன் குழாய்கள் இவைகளையும் பாதிக்கும்.

கர்பப்பை கழுத்தில் உண்டாகும் புற்றுநோய், கர்பப்பை அல்லது அதன் சுவர்களில் உண்டாகும் புற்றுநோய்.
குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.லூப் போன்றவை.
சில ரத்தக் கோளாறுகள் ரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போதல்.

ஆயுர்வேத சிகிச்சை
பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ‘ப்ரக்ருதி’ முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை களைந்து எடுக்கப்படும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
வெள்ளைப்படுதலா...? வெட்கம் வேண்டாமே!

டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு வெட்கம் வேண்டாமே..!
வெள்ளைப்படுதல் என்பது என்ன?

நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்கவேண்டியதிருக்கிறது. அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகிவிடும்போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.

வயதுக்கு வரப்போகும் பெண்களுக்கும், சமீபத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும்தான் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல! பெண்களின் எல்லாப் பருவத்திலும் இது வரக்கூடும். குறிப்பாக 15 வயது முதல் மாதவிலக்கு இறுதியாக நின்று போகும் காலம் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கம். கருப்பையில் நோய் ஏதாவது இருந்தால் மாதவிலக்கு நின்றுபோகும் காலத்திற்குப் பிறகும் வெள்ளைப்படுதல் நீடிக்கும்.

எப்போது வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்?
சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியாகி கருப்பைக்கு வரும் காலத்தில், மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும்- பின்பும், கர்ப்பகாலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்ய உறவின் போது பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

நோய்த்தன்மையாகும் வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் என்னென்ன?
நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது அறிகுறியாகும். பிறப்பு உறுப்பில் அரிப்பும் ஏற்படும். உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கும் இருந்தால் அது உடனடியாக கவனிக்கத்தகுந்த அறிகுறியாகும்.

வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?
யோனிக்குழாயில் கிருமித் தொற்று இதற்கு முக்கிய காரணம்.
ஆண் உறுப்பின் நுனித்தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில் 'டிரைக்கோமோனஸ் வெஜைனாலிஸ்' என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்ய தொடர்பின்போது எரிச்சல், வலி ஏற்படும். மாதவிலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப்படும். யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்டகாலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.
கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் கருப்பையில் தொற்றிக்கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால் பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொருமுறையும் தண்ணீ*ரால் கழுவுவதும் அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையைப் பொறுத்து வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.


கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிடவும்கூடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மாத்திரைகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்புகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.
சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால் தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெறவேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன. வெட்கமும், அலட்சியமும் கொண்ட பெண்களை வெள்ளைப்படுதல் அதிகம் பாதிக்கிறது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]இளவயது மெனோபாஸ்[/h]பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம்.

சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம்.

மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும். சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும்.

50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும்.

இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம் என வலியுறுத்துகிறார் மருத்துவர் மாலா ராஜ்..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா?[/h]கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

தொடர்ச்சி

முதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’’
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]அதிக ரத்தப் போக்கு ஆபத்தானது.[/h]மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம் வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும். அதிகப்படியான ரத்தப்போக்கை மெனரேஜியானு சொல்றோம்.

13-14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறுகிற ரத்த போக்கின் அளவுல மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதுவே 18-19 வயதிலும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாட்கள்ல அந்தப்பெண் ரொம்பக் களைச்சு சோர்ந்து போனாலோ அலட்சியப்படுத்தாம மருத்துவரை பார்க்கணும். அதிக படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

ரத்த தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம். சிலர் இதய நோய்க்கு மருந்துகள் எடுப்பாங்க. ரத்தம் உறைதலை தடுக்கிற அந்த மருந்துக்களோட பக்க விளைவாக இருக்கலாம். கர்ப்பபையோட உள்பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போது தான் அது ரத்தப்போக்கா வெளியேறும். பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி, காப்பர்டி யோட விளைவு, என்டோமெட்ரியாசிஸ்னு சொல்லக்கூடிய கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம்.

வயசான, நாலஞ்சு பிள்ளைங்க பெற்றெடுத்த, குண்டான உடல்வாகுள்ள பெண்களுக்கு இப்படி இருந்தா அது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாங்குறதையும் சோதிக்கணும். கர்ப்பபைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம் கர்ப்பப்பை வாய் கட்டி, மற்றும் தொற்று தைராய்டுனு இன்னும் சில காரணங்களையும் குறிப்பிடலாம். அதனால ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறப்ப சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம். உடனடியாக மகப்பேறு மருத்துவரை பார்த்த பரிசோதிக்கிறது நல்லது.

முதல்ல கர்ப்பப்பையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும் பிறகு ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராயிடும் சரி பார்க்கப் படணும். அளவுக்கதிக ரத்தப்போக்கு இருந்தா, தேவைப்பட்டா டி அன்ட் சி செய்து திசுக்களை பயாப்சி சோதனைக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, ஹார்மோன் கலக்காத அருமையான மருந்துகள் இப்ப நிறைய இருக்கு என்கிறார் மருத்துவர் மகேஸ்வரி.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Re: Endometriosis - Details & Treatments

[h=3]மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!!![/h]பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.

மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக முயற்சி எடுக்காத வரை, அவர்களுக்கு மாதவிடாய் தவறிப்போவதை விட, மற்ற எந்த விஷயமும் பெண்களின் இதயத்திற்கு அச்சத்தை கொடுப்பதில்லை.

ஏனெனில் மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது என்று கேட்டால், அது தான் இல்லை. ஆம், மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு அவற்றில் 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம்
வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

உடல்நலக் குறைவு
திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.

அட்டவணை மாற்றம்
மாறிவரும் கால அட்டவணைகள், உண்மையில் உடல் கடிகாரத்தின் ஓட்டத்தை மாற்றிவிடும். இது குறிப்பாக பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் ஏற்படும். இது போன்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.

மருந்துகள் மாற்றம்
தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

அதிக எடையுடன் இருப்பது
அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.
எடை குறைவாக இருப்பது

உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. முக்கியமாக அதிக வேலை பளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும், இந்த தவறுதல் காரணமாகிறது.
தவறான கணித்தல்

மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள். அது தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியாக கணிக்க உதவும்.

பெரி-மாதவிடாய்
பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.இந்த கால கட்டத்தில் மாதவிடாய் இலேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இன்னும் சிறிது காலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.

இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.

கர்ப்பம் தரித்தல்
இறுதியாக தான்! கர்ப்பமாக இருப்பதால், மாதவிடாய் தவறி இருக்கலாம்! இதற்கு ஒரு எளிய கர்ப்ப பரிசோதனை செய்வதன் மூலம், அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் கர்ப்ப சோதனை மற்றும் இரத்த கர்ப்ப சோதனைகள் ஹார்மோன் ஹெச்.சி.ஜியை கண்டறிய உதவும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் சோதனையை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கான சோதனை கிட் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#9
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

அருமையான பகிர்வு லெட்சுமி.வெளியே சொல்ல வெட்கப் பட்டுக் கொண்டே, பெண்கள் தங்களின் பிரச்சனைகளை வெளியே சொல்வதில்லை. இது போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது உறுதி.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#10
Very useful details Lakshmi. Thanks a lot for sharing. Please share more if any
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.