Deworming medicine for kids

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#1
அன்புத் தாய்மார்களே! நம் அன்புக் குழந்தைகளை புழுவின் பிடியிலிருந்து மீட்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. இரசாயின மருந்து உதவாது: குடல் மற்றும் வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற ஆங்கில மருத்துவம் கொடுக்கும் ஆல்பிண்டசால் (Albindasol) மருந்து உண்மையில் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்களேயாயின் , அதைக் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வீர்கள். இந்த புழு விரட்டி உண்மையில் மூலிகை புழு விரட்டிகளைவிட விரைவாக குடல் மற்றும் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றுகிறதுதான். அதே சமயம், அப்படி புழு விரட்டியால் புழுக்கள் வெளியேறும் முன் ஆயிரக் கணக்கில் பாதுகாப்பான தோல் கொண்ட முட்டைகளை (Cyst form) இட்டுவிட்டுதான் வெளிவருகினறன. இந்த அழுத்தத் தோல் கொண்ட முட்டைகளெல்லாம் குழந்தையின் வயிறு மற்றும் குடல் சுவற்றில் பதிந்து பத்திரமாக இருக்கும். பின்னர், இந்த முட்டைகளெல்லாம், ஒரு அற்புத தருணத்தில் (குழந்தை மீண்டும் இனிப்பு சாப்பிட ஆரம்பித்தவுடன்) புழுக்களாக பொரிந்து புத்தம் புதிய புழுக் காலனியை உருவாக்குகிறன. இப்பொழுது போட்டி போட முதிர்ந்தப் புழுக்கள் இல்லாததால், முன்னிலும் விரைவாக அவை வளர்ந்துவிடுகிறன. பிறகு மீண்டும் ஆல்பிண்டசால் கொடுக்க, மீண்டும் மீண்டும் தவனை முறையில் புழு வளர்ப்பானது குழந்தையின் வயிற்றுப் பானையில் நிகழ்த்தப்படுகிறது. நாம் செய்ய வேண்டியது புழு வளர்ப்பா? அல்லது குழந்தை வளர்ப்பா?

2.
வேப்பெண்ணை அல்லது விளக்கெண்ணை கொடுத்தல்: அன்புத் தாய்மார்களே! நம் குழந்தைகளுக்கு அரை சிட்டிகை வேப்பெண்ணை அல்லது விளக்கெண்ணை கொடுப்பதன் மூலம் புழுக்களெல்லாம் ஒரு தீர்மானத்திற்கு வருகின்றன. அது என்னவென்றால், இந்த கசப்பு சூழலில் நாம் உயிர் வாழ்தல் சாத்தியமில்லை என்று முடிவு செய்கின்றன. ஆகையால், புழுக்கள் யாவும் முட்டையிடாமல் வெளியேறி விடுகின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இரசாயன கசப்பிற்கும் மூலிகை கசப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை. இரசாயன கசப்பானது குழந்தையின் உடல், குடல் மற்றும் இரத்தத்தையும், புழுவின் உடலையும் கெடுக்கச் செய்கிறது. புழுவானது தான் அழியும் முன் தன் பதிவாக முட்டைகளை இட்டுச் சென்றுவிடுகிறது. ஆனால் மூலிகைக் கசப்பானது குழந்தையின் குடல் மற்றும் இரத்தத்தை வலுவாக்கி, புழுவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க உதவுகிறது. மேலும் புழுவின் வாழ்வாதாரம் இனிப்பு நொதித்தலில் இருக்கிறது. இதனால், நாம் மூலிகை கசப்பைக் கொடுக்கும் போது அவற்றை கிரகித்து வாழ்வது என்பது ஒரு சவாலான விஷயமாக புழுக்களுக்கு தோன்றுகிறது. இந்த சவாலான சூழலை வைத்து, இது நாம் வாழ்வதற்கான இடமல்ல என்று முடிவு செய்து புழுக்களானது முட்டையிடாமல் வெளியேறி விடுகின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இரசாயிண மருந்தில் புழுக்களை கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால், மூலிகைக் கசப்பால் புழுக்களை வெளியேற செய்கிறோம். வன்முறை எங்கேயும் வேலைக்கு ஆகாது. அகிம்சையே எப்பொழுதும் வெல்லும். அன்புத் தாய்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு கசப்பை கொஞ்சமேனும் கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வில் இனிமையானது நிகழும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

3
. மூலிகைக் கசாயம்: வேப்பிலைக் கொழுந்து, வெற்றிலை, மிளகு, தூதுவாளை, தும்பைப் பூ, மற்றும் கற்பூர வள்ளி ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து கசாயமாக வாரம் ஒரு முறை நம் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிறு மற்றும் குடலில் புழுக்கள் தங்காது ஆரோக்கியமாக வாழ்வார்கள். வேப்பிலையில் உள்ள கசப்பு புழுவிரட்டியாகவும், வெற்றிலையில் உள்ள காரல் கல்லீரல் டானிக்காகவும், மிளகில் உள்ள நெருப்பு மண்ணீரல் டானிக்காகவும், தூதுவாளையில் உள்ள தாவரச் சத்து நுரையீரல் உசுப்பியாகவும் தும்பைப் பூவில் உள்ள தாவரச் சத்து நரம்பு ஊக்கியாகவும், கற்பூர வள்ளியில் உள்ள தாவரச் சத்து இரத்த சுத்தியாகவும் செயல்பட்டு குழந்தைக்கு ஆரோக்கியத்தை நிலை நிறுத்த உதவியாக இருக்கின்றன.


---FB
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Thanks Durga for sharing this.
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,391
Likes
28,893
Location
London
#4
TFS Durga.......
 
Thread starter Similar threads Forum Replies Date
silentsounds General Health Problems 1
premabarani Studies in Abroad 0
gkarti Health 1
U Ask Question 1
U Ask Question 7

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.