Diabetes and Infertility in female - நீரிழிவும் மலட்டுதன்மையும்

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
ht2196.jpg

பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு. தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பைத் தடுப்பதையும் விட்டு வைப்பதில்லை. தவறான உணவுப்பழக்கம். உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறைகளால் இப்போது இளம் வயதிலே நீரிழிவு தாக்குகிறது. நீரிழிவுக்கும் மலட்டுத் தன்மைக்குமான நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

குடும்ப பின்னணில நீரிழிவு இருந்தா அந்த வழில வர்றவங்களுக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்ப ‘பிசிஓடினு’ சொல்லற சினைப்பை நீர்கட்டி பிரச்சனை இருக்கு. அதன் விளைவா உடம்பு முழுக்க முடி வளர்றது. எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போறதுனு அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்திப்பாங்க. இவங்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம்.
தைராய்டு ஹார்மோன், சினைப்பைகள் லேர்ந்து சுரக்கிற எஃப்.எஸ்.ஹெச், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின்…இதெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரக்கிறதுல ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவா சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு வரலாம். நீரிழிவு இருக்கிற பெண்கள் கருத்தரிக்கிறதே கஷ்டம். அப்படியே கருத்தரிச்சாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்துல நீரிழிவு வரும்.

பிரசவமானதும் அது தானா போயிடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பிசிஓடி பிரச்சனையோட உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிஞ்சதும் நீழிரிவு நிரந்தரமா உடம்புல தங்கலாம். நீரிழிவோட கருத்தரிக்கிறப்ப அது அம்மாவை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும். பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடம்பு ஊதின மாதிரி குண்டா இருக்கும். முறையற்ற மாதவிலக்கு உடம்பெல்லாம் முடி வளர்ச்சி தாறுமாறா எகிறும் உடற்பருமன். இதெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்னாடியே ஸ்கேன் மூலமா பிசிஓடி பிரச்சனை இருக்கானு தெரிஞ்சுக்கிறது நல்லது. எடைக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் மகேஸ்வரி.

நன்றி-தினகரன்


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
மிகவும் உண்மை .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.