Different faces of spirituality - ஆன்மிக த்தின் பல முகங்கள்

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
Brahma

1526885504778.png


Brahma is the Hindu god of creation and one of the Trimurti. The others two Hindu Gods in the Trimurti are Vishnu and Shiva. Brahmas consort is Saraswati, the goddess of learning.

Lord Brahma Mantras

Chanting the Brahma Mantra helps us to fulfill the four aims of life righteousness, Prosperity, Pleasures and Liberation. Brahma Mantras are also good for those who wish to gain knowledge. Given below are the Mantras of Lord Brahma.

“Aum Satchit Ekam Brahma

Om Eim Hrim Shrim Klim Sauh Satchid Ekam Brahma”
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
ஆழித்தேரில் அருள்மிகு தியாகராஜர் ஆழித்தேரோட்டம்





திருவாரூரில் ஆழித்தேர் அருகில் அம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள்.

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி, அருள்மிகு தியாகராஜர், அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினார்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. நிகழாண்டுக்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் மே 27 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த தியாகராஜர், ஆழித்தேருக்கு எழுந்தருளினார். முன்னதாக அஜபா நடனத்துடன், பாரி நாயனம், சுத்த மத்தளம், சிவ வாத்தியங்கள் முழங்க தேவாசிரிய மண்டபத்திலிருந்து புறப்பட்டார். பின்னர், பக்தர்கள் புடைசூழத் தேருக்கு எழுந்தருளினார். இவருடன், விநாயகர், சுப்பிரமணியர்,

நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர்ஆகியோரும் அவர்களுக்குரிய தேரில் எழுந்தருளினர்.
தேரோட்ட நாள் வரை தியாகராஜர், தேரில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம். தேரோட்டத்துக்குப் பிறகு தியாகராஜர், ராஜநாராயண மண்டபத்துக்குச் செல்வார்.

சுவாமி தேருக்கு வந்ததையொட்டி, வெடிகுண்டு பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாள்களில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ஆலயங்களில் உற்சவம் ஏன்?

உற்ஸவம் என்பது ஆலயங் களில் ஏற்படும் நித்ய நைமித்திகக் குறைவுகளைத் தீர்க்கவும், எல்லோ ருக்கும் நன்மை உண்டாகவும் செய்யப்படும் வைபவம் ஆகும். இது சாகல்யம், பாவனம், சாந்தம், மாங்கல்யம் என நான்கு வகைப்படும்.





சாகல்யம்:
துவஜாரோகணம் முதல் தீர்த்தவாரி வரையிலும் நடைபெறும் உற்சவம்.

பாவனம்:
துவஜாரோகணம் மட்டும் செய்யப்படுவது.

சாந்தம்:
துவஜாரோகணமும், காலை உற்சவமும் இல்லாமல் இரவில் மட்டும் உற்சவம் நடத்துவது.

மாங்கல்யம்:
காலையில் மட்டுமே நடைபெறும் உற்சவம். இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்ட சாகல்யம் ஒன்பது வகையாகத் திகழ்கிறது. அவை: கவுரம், சாந்திரம், சாவித்திரம், கௌமாரம், தைவீகம், பவுநம், பௌதிகம், கணம், சைவம். (ஒரு சில இடங்களில் மாறுபட்ட நியதிகள் உண்டு)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
அலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன?

ந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் பெயர், 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்படவிருக்கிறது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம்கொண்ட 13-வது மாவட்டமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரம், இந்துக்களின் புனிதத் தலம். இங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. `திரிவேணி சங்கமம்’,` பிரயாக்’ என்றெல்லாம் அழைக்கப்படும் அலகாபாத் நகரம், வேதங்களும், ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் கொண்டாடும் புண்ணிய பூமி!








நீண்ட நெடுங்காலமாக, 'பிரயாக்' அல்லது 'பிரயாகை' என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் 1580-ம் ஆண்டு, மாமன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு `இலாஹாபாத்’ என்று பெயரிட்டார். பின்னர், ஷாஜகான் காலத்தில் `அலகாபாத்’ என்று மாறியதாக வரலாறு குறிப்பிடுகிறது.


மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் இந்தப் புண்ணிய பூமியில்தான் உலகப் புகழ்பெற்ற `கும்பமேளா’ திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடி, திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள். ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் நகரங்களில் கும்பமேளா நடைபெற்றாலும்கூட, அலகாபாத் கும்பமேளா மிகவும் விசேஷமானது. அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு, யுனெஸ்கோவின் பாரம்பர்ய கலாசார விழாவுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதே இதற்குச் சான்று.


தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. சாகா வரமளிக்கும் அமுதத்தை அடைவதில் தேவ - அசுரர்களிடையே மோதலும் தொடங்கியது. அப்போது திருமால், கருடனோடு இணைந்து, அசுரர்களை வீழ்த்தி, அமுதத்தை மீட்டு வந்தார். விரைவாக வந்த வேளையில், அமுதத்தின் துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன என்றும், அதில் பிரயாகையும் ஒன்று என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரிவேணி சங்கமத்தில் நீராடினால், அப்போது அங்கு பொங்கிப் பெருகும் அமுதம், நீராடுபவர்களை சகல பாவங்களிலிருந்து விடுவிப்பதாக ஐதீகம். மேலும், நீண்ட ஆயுளையும் நீங்காத புகழையும் பெறுவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. லட்சோப லட்சம் மக்களின் அபிமானத்தைப் பெற்ற நகரம் அலகாபாத்.






ஆகாய வாகினியாகக் கரை புரண்டோடிய கங்கை, பகீரதனின் வேண்டுதலுக்காக பூமிக்கு வர, ஈசனின் திருமுடியை அடைந்தாள். பின்னர், ஈசனின் திருமுடியிலிருந்து இமயத்தில் இறங்கி, வழியெங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கியபடி அலகாபாத் வருகிறாள்.
சூரியனின் மகளாகவும், யமதர்மராஜரின் தங்கையாகவும் பிறந்தவள், யமுனை. அந்த யமுனை நதியில் நீராடினால் மரண பயம் நீங்கும், வியாதிகள் போகும் என்பது நம்பிக்கை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மகிழ்ந்து விளையாடிய பெருமைக்கு உரியவள் யமுனை. எனவேதான் கண்ணனைப் பாடும் ஆண்டாள், 'தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்' என்று யமுனையைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறாள். இமயத்தின் யமுனோத்ரி பகுதியிலிருந்து கிளம்பும் யமுனை நதியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைல்களைக் கடந்து அலகாபாத் வருகிறாள்.



சரஸ்வதி நதி, ரிக் வேதம் கொண்டாடும் புண்ணிய நதி. நான்முகனின் தேவி சரஸ்வதியின் பிரவாகமே இந்த நதி. ஆகாயவாகினியாக தேவர்களுக்கு மட்டுமே அருள்பாலித்த இந்த நதி, வேத காலத்தில் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக இமயத்தில் இறங்கித் தவழ்ந்தோடினாள். பின்னர் கால மாற்றத்தால் வெகுகாலத்துக்கு முன்னரே சுருங்கி மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், அந்தர்வாகினியாக வரும் சரஸ்வதியும் பிரயாகையில் கங்கை, யமுனையுடன் சங்கமிப்பதாக ஐதீகம். அதன் காரணமாகத்தான் இந்தப் பகுதி `திரிவேணி சங்கமம்’ என்று போற்றப்படுகிறது.




இப்படி புராண, வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட அலகாபாத் நகரமும், அது அமைந்திருக்கும் மாவட்டமும் மீண்டும் அதன் புராணப் பெயரான 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌர்யா அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அர்த்த கும்பமேளா (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது மகா கும்பமேளா; ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது அர்த்த கும்பமேளா) விழாவுக்குள் பெயர் மாற்றப்படும் என்றும், விழாவுக்கான அழைப்பிதழ், பேனர்கள் எல்லாமே புதிய பெயரில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
Unusual temples to visit outside India

Borobudur Temple, Indonesia
1527427142473.png

The temple is located in Java, and also the largest Buddhist temples around the world. Having built in the 9th century, it was abandoned in the 14th century. It is built up of over 2 million blocks of stone, over a small hill.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
Arulmigu Sri Rajakaliamman Glass Temple, Malaysia

1527427237003.png

The temple stands among the Malaysia’s oldest Hindu temple. The temple has been made up of 300,000 tiny mosaic pieces of coloured glass, which creates a bright blaze.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
Hanging Temple, China

1527427315952.png

The temple hangs mysteriously upon a cliff side in the mountains near Datong. It was built about 1,500 years ago, while this monastery is the only place of worship, for the combination of three traditional Chinese religions – Buddhism, Confucianism, and Taoism.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை:





கருடசேவையில் நகர் முழுவதும் திருவீதியுலா வந்த வரதர். (வலது) விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவ கருடசேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 31ஆவது திவ்ய தேசமாக, காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவராஜ சுவாமி எனும் வரதராஜப் பெருமாள் கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஹம்சம், சிங்கம், சூர்யப் பிரபை உள்ளிட்ட விசேஷ வாகனங்களில் தாயாருடன் வரதர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிகாலை 4 மணி முதல் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாசுரங்கள் முழங்க கருட வாகனத்தில் வரதர் எழுந்தருளினார்.

அப்போது, கோயில் கோபுர தரிசனம் முடிந்து, உற்சவரைத் தூக்கியபோது கட்டையில் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. பின்பு, மாற்றுக்கட்டை கொண்டு வரப்பட்டு சரி செய்யப்பட்டது.
இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வரதர் திருவீதியுலா புறப்பட்டார். அப்போது, உற்சவருக்கு முன்பாக வேதபாராயண கோஷ்டியினர் வேதபாராயணம் செய்தபடி, திருக்கச்சி நம்பி தெரு, ரங்கசாமி குளம் வழியாக விளக்கடி கோயில் தெருவை வந்தடைந்தார். அங்கு வரதருக்கு தேசிகர் கோயிலில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு, குரு கோயில், பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெரு, புத்தேரித் தெரு வழியாக, கச்சபேஸ்வரர் கோயில் அருகே உள்ள மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வீதிகளின் இரு மருங்கிலும் நின்று வரதரை 'கோவிந்தா கோவிந்தா' எனும் பக்திப் பரவச கோஷத்துடன் வழிபட்டனர். மேலும், தொலைவில் இருந்தபடியே உற்சவரை நோக்கி பக்தர்கள் தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
கச்சபேஸ்வரர் கோயிலில் சிறிது நேரம் நின்றவாறு காட்சியளித்த வரதர் பின்பு, இரு திருக்குடைகளின் கீழ் கருட வாகனத்தில், மேற்கு ராஜவீதி, செங்கழுநீர் ஓடை வீதி, பூக்கடைச் சத்திரம், கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம், காமராசர் சாலை, மூங்கில் மண்டபம், காந்தி சாலை வழியாகச் சென்று கோயிலை அடைந்தார்.

கருட சேவை உற்சவத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக, பல்வேறு தொண்டு அமைப்பினர், ஆர்வலர்கள், கட்சி அமைப்பினர் ஆங்காங்கே நின்று நீர், மோர் வழங்கியும், அன்னதானம் செய்தும் உதவினர். கருட சேவையையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பணியில் டிஎஸ்பி முகிலன், பாலுசெட்டிசத்திரம், விஷ்ணுகாஞ்சி, சிவகாஞ்சி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும், ரங்கசாமி குளம் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால், போலீஸார் பெண் பக்தர்களுக்கு 'சேப்டி பின்' வழங்கி, கவனமாகச் செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். கருட சேவை உற்சவத்தால், காஞ்சி நகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
Devotees Offer Chocolates to Munch Murugan in Kerala

1528621708404.png

If you happen to visit the Chemmoth Sree Subramaniya Swami Temple in Kerala, make sure to offer Munch chocolates to the deity Munch Murugan. How the deity, the son of Lord Shiva, came to be known as Munch Murugan is one of the interesting stories of India. The deity developed a sweet tooth for chocolates since a Muslim boy offered a Munch to him. One day the boy rang the temple bell for fun and got scolded for doing so. He fell sick that night and kept chanting Murugan’s name unconsciously. The next morning, his parents took him to the temple. When the boy felt better, the priest asked him to offer something to the deity as it is a tradition. The boy took a Munch out of his pocket and put it on the altar. Since then Munch Murugan has been receiving loads of Munch chocolates from children who visit the temple to pray for good marks in examinations.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.