Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் கல&#3

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#1
சேவல் கூவி எழுந்த தலைமுறையைக் கடந்து, அலாரத்தையும் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு, இரவு செல்போனில் தூங்கி, காலை செல்போனில் விழிக்கிறோம்.

காலம் கடப்பதைப் போலவே காதலும் கல்யாணமும் டிசைன் டிசைனாக மாறிக்கொண்டிருக்கின்றது. அந்தக் காலத்து காதல், கல்யாணங்களில் இருந்து இந்தக் கால ‘லவ்’, ‘வெட்டிங்’ வரை ஒரு ரவுண்ட் அடித்துப் பார்க்கலாம் வாருங்கள்...

நம் தாத்தா, வருடா வருடம் நடக்கும் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டிப்போய், உறியடி போட்டியில் கலந்துகொண்டு, பாட்டி மனதில் இடம் பிடிப்பார். இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தைக்கெல்லாம் இடமே இல்லை.கண்களாலேயே காவியம் படைப்பார்கள். சில தூதுவர்கள் அமையப் பெறுவார்கள். பல காதல்கள் தோற்கும், வெகு சில காதல்கள் ஜெயிக்கும்!

இன்னொரு பக்கம், பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களின் பெண் பார்க்கும் படலம், செம ரகளை! தலை நிறைய மல்லிகைப் பூவும் தட்டு நிறைய காபி டம்ளர்களுமாக குனிந்த தலை நிமிராமல் வரும் பெண்ணைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒருவர், ‘ஏம்மா, ஒரு பாட்டுப் பாடேன்’ என்று நேயர் விருப்பம் வைப்பார். பெண் ணுக்கு பயத்தில் பாட்டா வரும், `கீச் கீச்’தான் வரும். ‘குரல் சரியில்லையே’ என்று ஒரு அக்கா, அப்பாத்தா காதில் ஓதும். ‘வீட்டுக்குப் போயி கடுதாசி போடுறோம்’ என்று சொல்லிவிட்டுப் போனவர்களுக்காக, போஸ்ட்மேனுக்கு மாசக்கணக்கில் காபி, டீ எல்லாம் கொடுத்து கவனித்தாலும் கடுதாசி எதுவும் வராது.

ஆக, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பாட்டு கற்றுக்கொள்ளும் தலைமுறையின் முன்னோடி, இந்தப் பெண் பார்க்கும் படலம்!அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் கல்யாணங்களில் முக்கியமாக இடம் பிடித்த ஒரு கேரக்டர், புரோக்கர். ‘பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?’, ‘மாப்பிள்ளைக்கு என்ன செய்வீங்க?’, ‘கார் இல்லைன்னாலும், பைக்காவது வாங்கிக் கொடுத்துடுங்க’ என்று ஒரு பட்டியலை மாப்பிள்ளை வீட்டார் கூசாமல் இவர்கள் மூலமாகக் கேட்டார்கள். இதெல்லாம் இப்போதும் தொடர்கதை என்பதால், பக்கத்தில் ஒரு `சோக ஸ்மைலி’ போட்டுக்கொள்ளலாம்!

வரதட்சணை, முதிர்கன்னி பிரச்னைகளை எல்லாம் உடைக்க, காதல் கல்யாணங்கள் பெருக வேண்டும் என்று பட்டிமன்றங்களில் புரட்சித் திருமணங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் ‘புரட்சி’யை தவறாகப் புரிந்துகொண்ட பலர், மாமன் மகள், அத்தை மகன் என உறவுக்குள்ளேயே டாவடித்து, ‘புரட்சி’ செய்தனர். சிலர் சாதிவிட்டு சாதி காதலித்து... வீச்சரிவாள், வேல்கம்பு என தங்கள் திருமணங்களை வரலாற்றுச் சம்பவங்களாக்கினார்கள்.

90-களுக்குப் பிறகு காதல் கல்யாணங்கள் அதிகமாகின. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் உழைத் தார்கள். ஒரு பெண்ணை அவள் கடக்கும் சாலையின் ஒரு புள்ளியில் இருந்து பார்ப்பதில் ஒரு வருடம், ஃபாலோ செய்வதில் ஒரு வருடம், காதலைச் சொல்ல ஒரு வருடம், சம்மதம் வாங்க ஒரு வருடம் என, கிட்டத்தட்ட `35 ப்ளஸ்’-ல் தான் திருமணம் முடித்தார்கள்.

காதலி கோலம் போட வரும் நேரம் பார்த்து கரெக்டாக, ‘வாசலி லே பூசணிப் பூ வச்சுப்புட்டா வச்சிபுட்டா’ பாட்டை டேப் ரெக்கார் டரில் ஓட்டினார்கள். பாட்டும் டைமிங்கும் சரியாக செட்டானால், அந்தப் பெண் ஒரு புன்னகை உதிர்க்கும்; அதற்குத்தான்... அதற் காகத்தான் எல்லாம்! மிஞ்சிப்போனால் ஏரிக்கரை, குளத்தங்கரை, கோயில்... இதெல்லாம்தான் லவ் ஸ்பாட்.இவர்களின் லவ் புரொபோசல் பற்றிச் சொல்ல வேண்டுமே! நண்பன்/தோழி மூலமாக கடிதம் அனுப்பப்படும். ‘என்னை உனக்குப் பிடிச்சிருந்தா, நாளைக்கு பச்சைப் புடவை கட்டிட்டு கோயிலுக்கு வா... இல்லைன்னா சிவப்புப் புடவையில் வா!’ - இதுதான் சங்கதி. பச்சை புடவை கட்டிவிட்டால், சீரியஸாக லவ்வ ஆரம்பித்தார்கள்.

கள்ளிச்செடி, மரங்களில் எல்லாம் ஜோடியாகப் பெயரை எழுதி மகிழ்ந்தார்கள். காதலியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தினார் கள். இந்தக் காலத்திலும் பல காதல்கள் தோற்றன; சில காதல்கள் ஜெயித்தன...

இன்று..?!

காதலின் பரிணாம வளர்ச்சியால் பீச், பார்க் சந்திப்புகள் எல்லாம் போய், தியேட்டர், காபி ஷாப், தீம் பார்க் என்று காதல் ஸ்பாட்களை காஸ்ட்லியாக்கினார்கள். பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், ஒருதலைக் காதல், கடிதக் காதல், டெலிபோன் காதல் என்று தினுசு தினுசாக டெவலப்பாகி... செல்போன் காதல், ஃபேஸ்புக் காதல், இப்போது `வாட்ஸ் அப்’ காதலாகி வாய்பிளந்து நிற்கிறது. காதலியின் ஒரு புகைப்படம் கிடைக்குமா என்று ஏங்கிய காதலர்கள் போய், காதலர்களுக்காகவே செல்ஃபி எடுத்து வாய்நிறைய பூந்தி போல அள்ளிக் கொடுக்கிறார்கள் காதலிகள்.

இணையம் மூலம் இணைந்தே கிடக்கிறார்கள். செல்போனில் மெசேஜ் டைப் செய்து விரல் வலித்த குரூப் கூட `வாட்ஸ் அப் ஸ்மைலி’களைப் போட்டு `ஹாய்’ காட்டுகிறார்கள். சிரிக்கலாம், அழலாம், திட்டலாம், சாப்பிடலாம், தூங்கலாம், மிரட்டலாம், துரத்தலாம் என்று எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர்ஸில் அதிரி புதிரி யாக அதகளம் செய்கிறார்கள்.புரொஃபைல் பார்த்து புரொபோஸ்; சேட்டிங்கில் காதல். பிடித்தால் கல்யாணம்; பிடிக்காட்டி ஃப்ரெண்ட்ஸ்... இப்படியும் சில காதல். தினசரியில் மணமகன்/மணமகள் தேவை என வரிவிளம்பரம் ஒரு பக்கம், மேட்ரிமோனி சைட்டுகளில் முன்பதிவு ஒருபக்கம். பெண் பார்க்க வீட்டுக்கெல்லாம் வர வேண்டாம்; குடும்பத்தோடு ரெஸ்டாரன்ட் போகலாம்; பிடித்தால் கல்யாணம், பிடிக்காட்டி அடுத்த வரன்... இப்படி சில குடும்பங்கள். காதலும் கல்யாணமும் கூட ஃபாஸ்ட்ஃபுட் யுகத்தில் பரபரத்துப் போய்விட்டன!

பறவையானாலும் சரி, மனிதனாலும் சரி... இரவின் தூக்கம் அவன் கூட்டில் மட்டுமே. அந்தக் கூட்டைத் தேர்ந்தெடுப்பதில் வேண்டும் பக்குவம்!

- பொன்.விமலா (நன்றி : விகடன்)
 

Attachments

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,181
Location
delhi
#3
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#2994

very nice savee akka...........
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,736
Location
Chennai
#4
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#2994

very nice saveetha........
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#5
Re: டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் கல்யா&amp

Thanks Sumathika...

Very good analysis about different types of Love Savitha :).
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#6
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#

Thanks Karthi...

very nice savee akka...........
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#7
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#

Thanks Selvika...

very nice saveetha........
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#8
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#2994

நல்ல அலசல் சவீதா .
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#10
Re: Different Types of Love - டிசைன் டிசைனாக மாறிவரும் காதலும் க&#

Thanks kaa...

நல்ல அலசல் சவீதா .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.