Discuss here about politics - 2. தினமும் அரசியல் பேசலாம் வாங்க - 2.

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
வீடுதேடி வரும் வெளிமாநில மதுபாட்டில்கள்?



மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுச்சேரி மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து வீடுகளுக்கு அருகாமையில் வைத்து சிலர் விற்று வருகின்றனர்.



புதுச்சேரியில் தமிழகத்தை விட மதுபானங்கள் விலை மிகவும் குறைவு. மேலும் பல்வேறு உயர் ரக மதுபானங்களும் அங்கு கிடைக்கும். இதனால் அங்கிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அவ்வப்போது மதுபானங்கள் கடத்தி வரப்படும். இவ்வாறு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் தற்போது மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.



மதுராந்தகம் அருகே உள்ள சூரைகுட்டை, மாம்பாக்கம், காந்திநகர், விநாயகநல்லூர், அண்டவாக்கம், மொறப்பாக்கம், தேவாதூர், வீராணகுண்ணம் ஆகிய பகுதிகளில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இந்த மதுபாட்டில்கள் இருசக்கர வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வீடுகளுக்கு அருகாமையில் ஒரு மறைவான இடத்தில் வைத்து விற்கப்படுகின்றன. அதேபோல் சிலரது வீடுகளிலும் இதுபோல் மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன.



இதுபோல் மது விற்கப்படுவதைத் தடுக்க அவ்வப்போது சோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால், அவை காவல்துறையினரால் வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



மதுராந்தகம் பகுதியில் வெளிமாநில மதுபாட்டிகள் கிடைப்பதால் மாணவர்கள், இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகும் ஆபத்து உள்ளது. இதனை போலீஸார் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
கர்நாடகாவில் இழுபறி

பெங்களூரு:கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, 40 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது.


பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி ,
பா.ஜ., 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.29 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.

தினமலர்
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
கர்நாடக தேர்தல்: ‘நோட்டா’விடம் தோற்ற அதிமுக

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக கட்சியின் வேட்பாளர்கள் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள்கூட பெறாமல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 12-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் அஇஅதிமுக கட்சியின் சார்பில் காந்திநகர், ஹனுர், கோலார்தங்கவயல் ஆகிய 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 3 வேட்பாளர்களும் சென்னையில் ஆர்கேநகர் தொகுதியில் பாஜக பெற்ற தோல்வியைப் போல் மிக மோசமான தோல்வியைச்சந்தித்துள்ளனர்.

இதற்கு முன் கர்நாடக மாநிலத்தில் அதிமுக கட்சியின் மாநிலச் செயலாளராக புகழேந்தி இருந்துவந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைக்குச் சென்றது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் சேர்ந்தது ஆகியவற்றால் டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக யுவராஜ் மாநிலச் செயலாளராக அதிமுக கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில அதிமுக செய்லாளர் யுவராஜ் 545 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2,074 வாக்குகள் கிடைத்தன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமார் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவர் 503 வாக்குகள் மட்டுமே படுதோல்வி அடைந்தார். ஆனால் இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,373 வாக்குகள் கிடைத்தன.

அதேபோல தமிழர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட எம்.அன்பு 1,024 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,750 வாக்குகள் கிடைத்தன.

ஒட்டுமொத்தமாக 3 தொகுதிகளிலும் சேர்த்து அதிமுகவுக்கு 2,072 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், நோட்டாவுக்கு 5,197 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு

கர்நாடக அரசியலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதைத் தடுத்து, குதிரைபேரம் அரங்கேற பிரதமர் மோடிதான் காரணம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியுள்ளது. அதேசமயம், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பிடித்த பாஜகவும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளன.

இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை பிரிக்கும், குதிரைபேரம் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்றஜனதா தளம் ஆகியவை தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடக மக்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே தீர்ப்பளித்து இருக்கிறார்கள். ஆனால், எங்கள் இரு கட்சி கட்சிகளையும் ஆட்சி அமைக்க விடாமல், பாஜக தடுத்துவருகிறது.

குறிப்பாக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்.

ஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அணைப்பதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அப்படி எந்த எம்எல்ஏக்களும் காணாமல்போகவில்லை. அல்லது பாஜக பக்கமும் செல்லவில்லை.

எங்களின் எம்எல்ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம்.அவர்கள் பாஜக பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்கள். பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்களில் 8 பேர் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.

நாங்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம், முதல்வராக குமாரசாமியும், புதிய அரசும் பதவி ஏற்க இருக்கிறது. எங்களிடம் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்ஏல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆதலால், ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
சூடேறும் கர்நாடக அரசியல் களம்: நீதிமன்றத்தை நாடுவோம்; குமாரசாமி எச்சரிக்கை; என்ன முடிவெடுக்கப்போகிறார் ஆளுநர்?

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் அனுமதிக்கக் கோரி ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க மாளிகை முன் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் திரண்டுள்ளனர்.

பெரும்பான்மை இல்லை

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக உருவானது. ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கூடாத வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இதனால், இரு கட்சிகளும் 118 எம்எல்ஏக்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

ஆட்சி அமைக்க உரிமை

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது, 12 பேரைக் காணவில்லை. அதேபோல, ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.

ஆளுநருடன் சந்திப்பு

இதற்கிடையே பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவும் ஆளுநர் வாஜுபாய்வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆளுநர் உரிய முடிவை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார்.

இதனால், மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவியது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்கும் குதிரைபேரமும் ஒருபக்கம் ரகசியமாக நடக்கத் தொடங்கியது.

ஆளுநர் மாளிகைமுன் கூடிய எம்ஏல்ஏக்கள்

ஆளுநர் வாஜுபாய் வாலா எந்த முடிவும் எடுக்காதநிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்தனர். இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகை நோக்கி மாலை சென்றனர்.

ஆனால், ஆளுநர் வாஜுபாய் வாலா அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியின் 78 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 37 எம்எல்ஏக்கள் கையொப்பம் இட்ட கடிதத்தைமட்டும் எடுத்துக்கொண்டு குமாரசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்தனர். தான் ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும் படி ஆளுநரிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை நாடுவோம்

ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேவந்த குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் பெரும்பான்மை இருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது. அதற்கு ஏற்றார்போல் ஆளுநரும் தாமதித்து வருகிறார். எங்களுக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறேன். அதேசமயம் தொடர்ந்து ஆளுநர் தாமதித்தால், நீதிமன்றத்தை நாடி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை

காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆளுநருடனான சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசியலமைப்புச்சட்டப்படி முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிக்கு விரோதமாக அவர் நடக்கமாட்டார் என நம்புகிறோம். எங்களிடம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க கோரவில்லை, போதுமான எண்ணிக்கை இருக்கிறது. பாஜக ஆட்சி அமைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ எனத் தெரிவித்தார்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்கள் அவைத் தலைவருமான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருந்தும் ஆளுநர் வாஜ்பாய்வாலா எங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்காவிட்டால், நாளை காலை, ஆளுநர் மாளிகை முன் அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.

சொகுசு ஹோட்டல் ‘ரெடி’

இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக தங்கவைக்க பெங்களூருவில் சொகுசு ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது, எம்எல்ஏக்கள் பெங்களூரிவில் உள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அந்த சொகுசு ஹோட்லில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களையும் தங்கவைக்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை

எடியூரப்பா பதவியேற்பதற்கு எதிரான எந்த வித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வழங்க மறுத்து விட்டது, மேலும் இது தொடர்பான மறுவிசாரணையை மே, 18, 2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.

எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கர்நாடகத்தில் அருதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார், இதனையடுத்து நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தை அணுகியது காங்கிரஸ் மற்றும் மஜத.

இதனையடுத்து இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன், மற்றும் எஸ்.ஏ.போப்தே தலைமையில் விசாரணையை நள்ளிரவு 1.45 மணிக்கு நடத்தியது.

இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்க விடிய விடிய விசாரணை நடந்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிக்காக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கர்நாடகா ஆளுநர் எடுத்த முடிவை எதிர்க்கிறோம் என்றும் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரது முடிவைத்தான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.

முகுல் ரோஹத்கி தன் வாதத்தை முன் வைக்கும்போது ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதிகத் தொகுதிகளில் வென்ற தனிப்பெரும் கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பது தொடர்பான எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்றும் எடியூரப்பா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.

கர்நாடகத்தில் அருதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

பதவி ஏற்பு விழாவில் பாஜகவின் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு எடியூரப்பா மூன்றாவது முறையாக கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

கர்நாடகத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்தது.

காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் நேற்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.

அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனைத் தொடர்ந்து பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
கர்நாடகத்தில் அரசியல் திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

உருக்கமாகப் பேசிய எடியூரப்பா அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி எடியூரப்பா முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். தேவைப்படும்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார்.

முன்னதாக...

கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 உறுப்பினர்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இன்றுமாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கைவாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் எடியூரப்பா அரசுக்கு 104 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 7 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதையடுத்து இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திலேயே கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகருடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. ஆதலால், வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பதவி விலகிக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டதாகக் கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறுகையில், எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. நிச்சயம் அவர் நம்பிக்கைவாக்கெடுப்பில் தோல்வி அடைவார்.ஆனால், அதற்கு முன்பாகவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் எனத் தெரிவித்தார்.

இன்னும் ஒரு மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நேரத்தில் எடியூரப்பா, ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். இதனால், பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது வேறு ஏதாவது ஆலோசனையில் ஈடுபடப்போகிறாரா என்றபரபரப்பான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் 2 தொகுதிகளுக்கு தேர்தல்: காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரம்

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 இடங்களுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமார் மாரடைப்பால் காலமானார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதேபோல ஆயிரக்கணக்கில் வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொகுதியில் வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த இரு தொகுதிகளை கைப்பற்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 12 -ம் தேதி நடக்கிறது.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறும்: புதின் தகவல்

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான செய்தியை சிரிய அரசு ஊடகமான சனா வெளியிட்டுள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் திடீர் ரஷ்ய சந்திப்பில் புதின் இதனை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து புதின் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கிடைந்த வெற்றிகளையும், பயங்கரவாதத்துக்கு எதிரான சிரிய ராணுவத்தின் வெற்றிகளையும் நாங்கள் தொடர்புப்படுத்தியே பார்கிறோம். விரைவில் வெளிநாட்டுப் படைகள் சிரியா பிராந்தியதிலிருந்து வெளியேறும்” என்றார்.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வந்தனர்.

கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு போர் தீவிரமானது, இதில் சிரிய ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இன்னும் எஞ்சிய பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

சிரியா உள் நாட்டு போரில் ரஷ்ய படைகளின் உதவியுடன் பஷார் தலைமையிலான அரசு குறிபிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ் ஹிந்து
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.